Nov 8, 2015

இஸ்லாம் ஆட்சிமுறையை பெற்றுள்ளதா? – பாகம் – 3

கிலாஃபாவின் உட்பிரிவு விவகாரங்களில் அறிஞர்கள் கருத்துவேறுபாடுகள் கொண்டுள்ளார்கள் என்பதற்கு இஸ்லாத்தில் அரசியல் இல்லை என்று அர்த்தமா?!
 
 
 

     கிலாஃபா தொடர்பான உட்பிரிவு விவகாரங்களில் பாரம்பரிய உலாமாக்கள் பல்வேறு கருத்துவேறுபாடுகளை கொண்டுள்ளார்கள் என்பதால் அது இஸ்லாத்தில் திட்டவட்டமான விவகாரமாக இல்லை என்பது மற்றொரு விந்தையான கண்ணோட்டமாக இருக்கிறது. அதாவது அரசியல் தொடர்பான அனைத்து விவகாரங்களும் திட்டவட்டமற்றது என்பதால் இஸ்லாத்தின் ஆட்சியமைப்பு அம்சங்கள் திட்டவட்டமானதாக இல்லை என்பது இதன் பொருளாகும்!

     தொழுகையின் உட்பிரிவு விவகாரங்களில் அறிஞர்கள் பல்வேறு கருத்து வேறுபாடுகளை கொண்டுள்ளார்கள் என்பதால் தொழுகையின் வாஜிபை தள்ளுபடி செய்துவிடலாம் என்பதை போன்றதுதான் இந்த கண்ணோட்டமாகும். வாஜிபு தொடர்பான உட்பிரிவில் கருத்து வேறு பாடுகள் இருந்தபோதும் அதன் முக்கியமான அடிப்படைகள் திட்டவட்டமானவையாக இருக்கின்றன என்பதால் அதை தள்ளுபடி செய்யவேண்டும் என்பது கேலிக்கும் நிந்தனைக்கும் உரிய கருத்தாகவே இருக்கிறது.

     ஆட்சியமைப்பு தொடர்பான கண்ணோட்டமும் இதுபோன்றதுதான். சொல்வழக்கு தொடர்பான கருத்து வேறுபாடுகள் மற்றும் சட்டரீதியான இக்திலாஃப் (கருத்து வேறுபாடுகள்) ஆகியவை எத்தகையதாக இருந்தபோதும் ஆட்சியமைப்பு தொடர்பாக தெளிவான திட்ட வட்டமான அஹ்காம் ஷரீஆ இருக்கின்றன, அதை தரீக்கா (இஸ்லாத்தின் வழிமுறை – method) என்று அல்லது நிழாம் (இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு system of Islam) என்று அழைக் கிறீர்களா அல்லது வேறுவிதமாக அழைக்கிறீர்களா என்பது இங்கு முக்கியமல்ல மாறாக, இந்த அஹ்காம் ஷரீஆவைஹ இன்றைய முஸ்லிம் நாடுகளின் அரசுகள் நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் கவனத்திற்குரிய விஷயமாகும்!

     ஆட்சியமைப்பு தொடர்பான சில திட்டவட்டமான அஹ்காம் ஷரீஆவை இப்போது நாம் ஆய்வு செய்வோம், இந்த சட்டங்களின் உட்பிரிவுகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருக்கக்கூடும் என்பது உண்மையே. இந்த சட்டங்கள் குறைந்தபட்சம் திட்டவட்டமான அர்த்தத்தை கொண்டுள்ளன, அவற்றில் சில அறிவிப்பு ரீதியாக திட்டவட்டமானமானவையாக இருக்கின்றன. அவற்றிற்கு மத்தியிலுள்ள வேறுபாடுகள் தெளிவாக அறியப்பட்டதுதான், அவற்றில் சிலவற்றை ஒருவர் மறுக்கும் பட்சத்தில் அது வெளிப்படையான பாவத்தின்பால் இட்டுச்செல்லும், இன்னும் திட்டவட்டமான அறிவிப்பாகவும் (Qata’i subooti – definite in transmission) திட்டவட்டமான அர்த்தத்தை கொண்டதாகவும் (Qata’i Dalalah – definite in meaning) உள்ளவற்றை மறுத்தால் அது குஃப்ரின்பால் இட்டுச்செல்லும். ஆட்சியமைப்பு தொடர்பான திட்டவட்ட மான அஹ்காம் ஷரீஆ பின்வருமாறு :

  • கலீஃபாவை பெற்றிருக்கவேண்டியது வாஜிபாகும்.

 இவ்விவகாரம் தொடர்பாக இடம்பெற்றுள்ள பன்முக ஆதாரங்களையும் அறிஞர்களின் மேற்கோள்களையும் மீண்டும் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை என்பதால் ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடுதல் போதுமானதாக இருக்கும். கலீஃபாவிற்குரிய நிபந்தனைகளில் சிலவற்றில் அறிஞர்கள் கருத்துவேறுபாடுகள் கொண்டுள்ளார்கள், அவற்றில் அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பது போன்ற சில நிபந்தனைகள் திட்டவட்டமானதாக இருக்கின்றன.

 இமாம் அந்நவவி(ரஹ்) (கி. பி. 1278ல் மரணமுற்றார்) கூறியிருப்பதாவது :

 ‘கலீஃபாவை தேர்வுசெய்ய வேண்டியது முஸ்லிம்கள்மீது வாஜிபாக இருக்கிறது என்பதில் அறிஞர்கள் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளார்கள்’ (அந்நவவியின் ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம் பாகம் 12 பக்கம் 205)

  ‘இஸ்லாத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை வெட்டவெளிச்சமாக்குதல்’ என்ற நூலின் இரண்டாம்   பாகத்தில் இது தொடர்பான மற்ற ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன.

  • கலீஃபாவிற்கு பைஆ செய்வது வாஜிபாகும்.

     இந்த விவகாரத்தின் உட்பிரிவுகள் தொடர்பாக அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் இருப்பது உண்மையே. http://www-personal.umich.edu/~luqman/Belief/Khilafah/eleven.html என்ற இணைய தளத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

  • மாகாணங்களை ஆட்சிசெய்யும் வாலி (ஆளுநர்கள்) மற்றும் நகரங்களை ஆட்சிசெய்யும் ஆமில் (மேயர்கள்) ஆகியவர்களை நியமிப்பதற்கு கலீஃபாவிற்கு அதிகாரமுண்டு என்பதற்கு சுன்னாவிலும் இஜ்மா அஸ்ஸஹாபாவிலும் ஆதாரம் இருக்கிறது.

  • அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு ஆட்சிசெய்தல் (இதுகுறித்து ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது) இது கலீஃபா, வாலி, ஆமில் ஆகிய அனைவர்மீதும் வாஜிபாகும்.

  • ஒருகலீஃபாவிற்கு அதிகமாக இருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது (இதுகுறித்து ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது)

  • ஷரீஆ சட்டங்களின் அடிப்படையில் வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு கலீஃபாவிற்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்கு சுன்னா மற்றும் இஜ்மா அஸ்ஸஹாபா ஆகியவற்றில் தெளிவான ஆதாரம் இருக்கிறது. எனினும் நீதித் துறையின் தூணாக விளங்கும் பல்வேறு வகையான நீதிபதிகளின் தகுதிகள் போன்ற உட்பிரிவுகள் தொடர்பாக அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன.

  • குற்றவியல் தண்டனை சட்டங்களை (hudud) நடைமுறைப்படுத்தவேண்டியது வாஜிபாகும். பல்வேறு தண்டனை சட்டங்களும் கிஸாஸ் தொடர்பான சட்டங்களும் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன.

  • ஜிஹாது மேற்கொள்ளுதல் வாஜிபாகும். குர்ஆனில் ஜிஹாது தொடர்பாக 119 வசனங்கள் அருளப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் அது நன்கு அறியப்பட்ட விஷமாக இருக்கிறது.

  • ஸகாத் வசூலித்து அதற்கு உரிமையுள்ளவர்களிடம் விநியோகம் செய்யவேண்டியது வாஜிபாகும். ஸகாத்தை பெறுவதற்கு உரிமையுள்ள எட்டு பிரிவினர்களில் அரசின் சார்பாக ஸகாத் வசூலிப்பவர் ஒருவராக இருக்கிறார் என்பது குர்ஆனில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இதற்கு சுன்னாவிலும் இஜ்மா அஸ்ஸஹாபாவிலும் ஆதாரம் நிறுவப்பட்டுள்ளது. ஸகாத் கொடுக்க மறுத்தவர்களுடன் அபூபக்கர்(ரளி) போரிட்டார் என்பது பிரபலமாக அறியப்பட்ட செய்தியாகும்

  • சட்டங்களை ஏற்று அமல்படுத்துவதற்கு கலீஃபா அதிகாரம் பெற்றுள்ளார்,  சட்ட ரீதியாக கருத்துவேறுபாடு உள்ள விவகாரங்களில் அவர் குறிப்பிட்ட சட்டத்தை ஏற்று அமல்படுத்தும்போது கலீஃபாவின் அபிப்ராயம் அனைவரையும் கட்டுப்படுத்தும். அதிகாரத்தை கொண்டுள்ளவர்களுக்கு (உலில் அம்ர்) கீழ்படியவேண்டும் என்பது குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது, அன்றியும் கலீஃபாவிற்கு கட்டுப்பட்டு நடப்பது வாஜிபு என்பதை பல்வேறு ஹதீஸ்கள் சுட்டிக்காட்டுகின்றன. சட்டத்தை ஏற்று அமல் படுத்துவதை பொருத்தவரை அதற்கு இஜ்மா அஸ்ஸஹாபாவில் ஆதாரம் இருக்கிறது.

     இவை அறிஞர்களின் ஒருமித்த கருத்து அடிப்படையிலுள்ள ஆட்சியமைப்பு தொடர்பான பல்வேறு சட்டங்களில் சிலவாகும். தொழுகை, நோன்பு, ஹஜ்ஜு, நிக்காஹ், ஒப்பந்தங்கள் மற்றும் இதர அஹ்காம் ஷரீஆவில் தங்களுடைய விளங்கிக்கொள்ளுதல் அடிப்படையில் வெவ்வேறு முஜ்தஹிதின்கள் வெவ்வேறு கண்ணோட்டங்களை கொண்டிருப்பது போலவே அரசு தொடர்பான சில விவகாரங்களிலும் மாறுபட்ட கண்ணோட்டங்களை கொண்டுள் ளார்கள். இவற்றில் கலீஃபாவிற்குரிய நிபந்தனைகள், ஷூரா மேற்கொள்ளுதல், மஹ்காமத் அல்மழாளிம்ஹ (அநீதி செயல்பாடுகள் தொடர்பான நீதிமன்றம்) போன்ற விவகாரங்கள் அடங்கும். ஆட்சியமைப்பின் உட்பிரிவுகள் தொடர்பாக பாரம்பரிய அறிஞர்களின் வேறுபட்ட கண்ணோட்டங்கள் கீழே குறிப்படப்பட்டுள்ளன :

மஜ்லிஸ் அஷ்ஷூரா :

     அல்மாவர்தி(ரஹ்) எழுதியிருப்பதாவது : ‘மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுப்பினராக உள்ள ஒவ்வொருவரும் மூன்று நிபந்தனைகளை நிறைவுசெய்ய வேண்டும் : அவர் நீதி செலுத்துபவராக இருக்கவேண்டும்; கலீஃபா நல்ல அம்சங்களை பெற்றவரா அல்லது தீயஅம்சங்களை பெற்றவரா என்பதை சீர்தூக்கிப்பார்த்து வேறுபாடுகளை அறிந்துகொள்வதற்குரிய அறிவுத்திறனை பெற்ற வராக இருக்கவேண்டும்; சிறந்த தலைவரை தேர்வுசெய்யும் அளவுக்கு அவர் போதுமான ஞானத்தையும் தீர்மானிக்கும் திறனையும் பெற்றவராக இருக்கவேண்டும்’

     அல்ஜுவைனி(ரஹ்) கூறியிருப்பதாவது : ‘மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுப்பினராக உள்ள ஒவ்வொருவரும் நான்கு நிபந்தனைகளை நிறைவுசெய்ய வேண்டும். அவர் ஆணாக இருக்க வேண்டும்; அறிவுத்திறன் பெற்றவராக இருக்கவேண்டும்; சராசரி மனிதரைவிட உயர்வானவராக இருக்கவேண்டும்;  முஸ்லிமாக இருக்கவேண்டும்’

     அப்துல் ஜப்பார்(ரஹ்) கூறியிருப்பதாவது : ‘மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுபப்பினராக உள்ள ஒவ்வொருவரும் எவரை கலீஃபாவாக தேர்வுசெய்ய வேண்டும் என்பதில் அறிவித்திறன் பெற்ற வராக இருக்கவேண்டும். குறிப்பாக இஸ்லாமிய அறிவு பெற்றவராகவும் பொதுவாக ஞானமும் தீர்மானிக்கும் திறனும் உடையவராகவும் இருக்கவேண்டும்’

     அல்பாக்தாதி(ரஹ்) கூறியிருப்பதாவது : ‘மதிநுட்பத்துடன் தேர்வுசெய்யும் திறன்பெற்றுள்ள மனிதர்களிலிருந்து கலீஃபாவும் மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுப்பினர்களும் தேர்வுசெய்யப்பட வேண்டும்’
 
Sources

No comments:

Post a Comment