Nov 8, 2015

இஸ்லாம் ஆட்சிமுறையை பெற்றுள்ளதா? – பாகம் – 4




கலீஃபாவை தேர்வுசெய்யும் தேர்தல் :

     புதிய கலீஃபாவை தேர்வுசெய்வதில் மஜ்லிஸ் அஷ்ஷுரா உறுப்பினர்களில் குறைந்தபட்சம் பெரும்பான்மையினரின் ஓப்புதலையேனும் கலீஃபா வேட்பாளர் பெறவேண்டியது கட்டாயம் என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.

     கலீஃபா வேட்பாளர் மஜ்லிஸ் அஷ்ஷூராவில் உள்ளவராகவும் சிறந்த இஸ்லாமிய பண்புகளை பெற்றவராகவும் இருக்கும்பட்சத்தில் ஒரேயொரு ஓட்டு அடிப்படையில் கூட தகுதியுள்ள நபருக்கு கலீஃபா பதவியை அளிக்கலாம் என்று அல்அஷரி(ரஹ்) கருதுகிறார். இவ்வாறு செய்யும்போது முறையான ஆதாரம் அல்லது சாட்சிகள் ஆகியவற்றின் அடிப்படை யிலுள்ள சட்டரீதியான ஆட்சேபனைகள் எதுவும் இருக்கக்கூடாது என்று அவர் கூறுகிறார்.

     சிறந்த முஸ்லிம்களாக உள்ள மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுப்பினர்கள் இருவரின் ஓட்டுக்களை கலீஃபா வேட்பாளர் கட்டாயம் பெற்றிருக்கவேண்டும் என்று அறிஞர்களிலுள்ள மற்றொரு குழுவினர் அபிப்ராயம் கூறுகிறார்கள் (ஏனெனில் மஜ்லிஸ் அஷ்ஷூரா என்பது ஒரு ஜம்ஆ என்ற முறையில் அதில் மூன்று நபர்கள் இடம்பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும்)

       கலீஃபா வேட்பாளருக்கு எதிரான ஆட்சேபனைகள் எதுவும் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் நான்கு ஓட்டுகளை கட்டாயம் பெற்றிருக்கவேண்டும் என்று நான்காவது அபிப்ராயம் கூறுகிறது, ஏனெனில் இஸ்லாத்தில் விபச்சாரம் தொடர்பான குற்றத்தை நிரூபனம் செய்வதற்கு நான்கு சாட்சிகள் கட்டாயமாக இருக்கிறது.

     ஒரு ஜம்ஆவின் குறைந்தபட்ச பலத்தை பெற்றிருக்கும் வகையில் கலீஃபா வேட்பாளர் குறைந்தது மூன்று ஓட்டுக்களை பெற்றிருக்கவேண்டியது கட்டாயமாகும் என்று ஐந்தாவது அபிப்ராயம் கூறுகிறது.

     வலுவான முறையில் தீர்மானிக்கும் விதமாக கலீஃபா வேட்பாளர் குறைந்தபட்சம் ஐந்து ஓட்டுக்களை பெற்றிருக்கவேண்டும் என்று ஆறாவது அபிப்ராயம் கூறுகிறது.

     இறுதியாக, புதிதாக தேர்வுசெய்யப்படும் கலீஃபா வேட்பாளர் மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுப்பினர்களின் 40 ஓட்டுக்களை பெற்றிருக்கவேண்டும் என்று அறிஞர்களிலுள்ள ஏழாவது குழுவினர் கருதுகிறார்கள், ஏனெனில் (சில அறிஞர்களின் அபிப்ராயத்தின்படி) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை சட்டரீதியாக செல்லுபடியாக வேண்டும் என்றால் அதற்கு 40 பேர்கள் இணைந்து தொழுகையை நிறைவேற்றவேண்டும்.

கலீஃபாவை பதவிநீக்கம் செய்தல் :

     அல்மாவர்தி(ரஹ்) கூறுவதாவது : ‘கலீஃபா குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சி செய்யும்போது அவரை பின்பற்ற வேண்டியதும் அவருக்கு ஆதரவு அளிக்கவேண்டியதும் கட்டாயமாகும். இதற்குமாறாக, அவர் அநீதமானவராகவோ அல்லது (குருட்டுத்தன்மை அல்லது உடலுறுப்புகள் துண்டிக்கப்படுதல் ஆகியவற்றின் காரணமாக) உடல் ஊனமுள்ளவராக ஆகிவிடும் பட்சத்தில் அவரை பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்’

     அல்பாக்தாதி(ரஹ்)ஹ கூறுவதாவது : ‘கலீஃபா நீதி தவறி செயல்படும் பட்சத்தில் அவர் நேர்வழிக்கு திரும்பும் வகையில் உம்மா அவரை முதலில் எச்சரிக்கை செய்யவேண்டும், இதற்கு பலன் ஏற்படவில்லை என்றால் பிறகு அவரை பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்’

     அல்ஜுவைனி(ரஹ்) கூறுவதாவது : ‘உம்மாவின் இலட்சியம் இஸ்லாமாக இருப்பதால் இந்த இலட்சியத்திலிருந்து விலகிச்செல்லும் எவரையும் கலீஃபா பதிவியிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்பது கட்டாயமாகும்’

     அஷிகிஸ்தானி(ரஹ்) எழுதியிருப்பதாவது : ‘கலீஃபா அறியாமை உடையவராகவோ அநீதம் இழைப்பவராகவோ அலட்சியம் செய்பவராகவோ இருக்கும் பட்சத்தில் அல்லது பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பின்னர் காஃபிராக ஆகிவிடும் பட்சத்தில் உடனடியாக அவரை பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்’

     அல்கஸ்ஸாலி(ரஹ்) கூறுவதாவது : ‘கலீஃபா அநீதம் இழைப்பவராக இருக்கும்பட்சத்தில் தனது குற்றத்திலிருந்து விலகிக்கொள்ளும்படி அவருக்கு அறிவுறுத்தல் செய்யவேண்டும், அவர் அவ்வாறு செய்யவில்லை என்றால் பிறகு அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்துவிவேண்டும்’

     அல்இஜி(ரஹ்) கூறுவதாவது : ‘கலீஃபாவை பதவிநீக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட காரணங்கள் தொடர்பான திட்டவட்டமான பட்டியல் உம்மாவிடம் இருக்கிறது’

     அல்அஸ்கலானி(ரஹ்) எழுதியிருப்பதாவது : ‘கலீஃபா நிராகரிப்பவரை போல செயல்பட ஆரம்பிக்கும் பட்சத்தில் அவருக்கு கீழ்ப்படிவது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதோடு அவருக்கு எதிராக போரிடுதல் வாஜிபாகும். ஒருவருக்கு ஆற்றல் இருக்கும் என்றால் அவரை எதிர்த்து நிற்கவேண்டியது வாஜிபாகும் & இதற்கு மகத்தான நற்கூலி இருக்கிறது. இத்தகைய சூழல் ஏற்படும்போது அதை கண்டுகொள்ளாமல் விலகியிருப்பதை ஒருவர் தேர்வுசெய்தால் பிறகு அவர் பாவத்தில் வீழ்ந்துவிடுவார், அதேவேளையில் அவருக்கு எதிராக போரிட ஆற்றல் இல்லாதவர்கள் (அவரை எதிர்த்து போரிடுபவர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு) ஹிஜ்ரத் செய்யவேண்டும்’

அல்அஸ்கலானி(ரஹ்) தனது அபிப்ராயத்திற்கு ஆதரவாக குர்ஆனின் இரண்டு வசனங்களை மேற்கோள் காட்டுகிறார்.

     அல்அஹ்ஸாப்  அத்தியாயத்தின் 67&68வது வசனங்கள் முதல் ஆதாரமாகும் : அன்றியும் எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியவர்களுக்கும் வழிபட்டோம். நாங்கள் தவறான வழியில் செல்லும்படி அவர்கள் செய்துவிட்டார்கள். எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இருமடங்கு வேதனையை கொடுத்து அவர்கள்மீது மாபெரும் சாபத்தை ஏற்படுத்துவாயாக! என்று கூறுவார்கள். இரண்டாவது ஆதாரம் அல்பகரா அத்தியா யத்தின் 167வது வசனமாகும் : அன்றியும் (அவர்களை) பின்பற்றிய இவர்கள், ‘நாம் மற்றொரு முறை (உலகத்திற்கு) திரும்பிச்செல்ல கூடுமாயின் எங்களை இவர்கள் கைவிட்டபடியே நாங்களும் இவர்களை கைவிட்டுவிடுவோம்’ என்று கூறுவார்கள். இவ்வாறே (அவர்களுடைய நெஞ்சங்கள் துயரமடையும் பொருட்டு) அவர்களுடைய (தீய) செயல்களை அல்லாஹ் அவர்களுக்கு கைசேதமாக எடுத்துக்காட்டுவான். அன்றியும் அவர்கள் நரக நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள்.

இப்னு உமர்(ரளி) அறிவித்திருக்கும் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது,

     அமீர்கள் தீயவற்றை ஏவினால் தவிர அவர்களுக்கு முஸ்லிம்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (தீயவற்றை ஏவும்) இந்த விவகாரத்தில் முஸ்லிம்கள் அவர்களுக்கு கட்டுப்படவும் கூடாது செவிசாய்க்கவும் கூடாது. (நூல் : முஸ்லிம்)

இப்னு மாலிக்(ரளி) அறிவித்திருக்கும் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது,

 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

     சிறந்த அமீர் யாரெனில் அவரை நீங்கள் நேசிப்பீர்கள் அவரும் உங்களை நேசிப்பார்; மோசமான அமீர் யாரெனில் அவரை நீங்கள் வெறுப்பீர்கள் அவரும் உங்களை வெறுப்பார். எனினும் உங்களுடைய அமீர் அநீதம் இழைப்பவராக இருந்தாலும் அவர் தொழுகையை நிறைவேற்றும் வரையில்,  வெளிப்படையான குஃப்ரை ஏவாத வரையில் அவருக்கு எதிராக போரிடுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. (முஸ்லிம்)

உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரளி) அறிவித்திருக்கும் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது,

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

     அனைத்து காரியங்களிலும் அனைத்து சூழல்களிலும் நீங்கள் உங்கள் அமீருக்கு கட்டுப் பட்டு நடந்துகொள்ளுங்கள், வெளிப்படையான குஃப்ரை ஏவாத வரையில் அவரை பதவிநீக்கம் செய்யாதீர்கள்.

  அறிஞர்களின் வேறுபட்ட கண்ணோட்டங்கள் தொடர்பாக விரிவான விளக்கம் தே¬ப் பட்டால் http://www-personal.umich.edu/~luqman/Belief/Khilafah/eleven.html என்ற இணையதளத்தை பார்க்கவும்

     அல்மாவர்தி(ரஹ்) இஸ்லாமிய ஆட்சியமைப்பு சட்டங்கள் தொடர்பாக ‘அல்அஹ்காம் அஸ்ஸுல்த்தானியா’ என்ற நூலை எழுதியுள்ள போதும் அவரை போன்ற அறிஞர்களின் கூற்றுகளை மேற்கோள் காட்டும் அதேவேளையில் இஸ்லாத்தில் ஆட்சியமைப்பு சட்டங்கள் எதுவுமில்லை என்று கூறுபவர்கள் அறிவுரீதியாக உண்மையற்றவர்களாக இருக்கிறார்கள் என்றே கருதத்தோன்றுகிறது!

சட்டங்களை ஏற்று அமல்படுத்துதல் அரசிற்கு வாஜிபு அல்ல எனும்போது இஸ்லாமிய அரசை பெற்றுக்கொள்ளும் வகையில் ஆட்சியாளர் முஸ்லிமாக இருந்தால் அதுவே போதுமானதாகும்!

     மேற்கண்ட கூற்றிற்கு விரிவான பதில் கூறத்தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். உட்பிரிவு விவகாரங்களில் கலீஃபா சட்டங்களை ஏற்று அமல்படுத்தலாம் அல்லது (ஆளுநர்கள், ஆமில்கள், நீதிபதிகள் ஆகியோர் இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்கும்வரை) அவர்களுடைய சொந்த இஜ்திஹாத் அடிப்படையில்ஹ சட்டங்களை ஏற்று அமல்படுத்துவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கலாம்.

மக்களிடமிருந்து இல்மை பெற்றுக்கொள்ளும்போது தக்வாவை மட்டுமே அடிப்படையாக கொள்ளவேண்டும் :

ஹதீஸ்கலையின் பிதாமகர் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி(ரஹ்) கூறியிருப்பதாவது,

     எவரிடமிருந்து இல்மை பெற்றுக்கொள்கிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் ஏனெனில் அது உங்களுடைய தீனாக இருக்கிறது!

     நமது தீனுடைய விளங்கிக்கொள்ளுதலை சிதைப்பதற்கும் திரித்துக்கூறி பிரச்சாரம் செய்வதற்கும் இஸ்லாத்தின் எதிரிகள் தங்களுடைய அனைத்து ஆற்றல்களையும் செலவிட்டு வரும் இந்த தருணத்தில் இது அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்கிறது. அறிஞர்களும், குர்ஆனை ஓதும் காரீகளும், முன்னாள் இஸ்லாமிய அரசியல்வாதிகளும், கல்வியாளர்களும், எழுத்தாளர்களும், இமாம்களும் இஸ்லாத்திற்கு எதிரான ஆயுதங்களாக பிரயோகப்படுத்தப் படுகிறார்கள்!

     நயவஞ்சகர்களும் (முனாஃபிகூன்), மார்க்கத்திலிருந்து வெளியேறியவர்களும் (முர்த்ததூன்), வெளிப்படையாக பாவம் செய்பவர்களும் (ஃபாஸிகூன்), இன்னும் நிராகரிப்பவர்களும் (காஃபிரூன்) கூட இஸ்லாத்தில் மிகுந்த அறிவுடையவர்களாக இருக்கலாம் என்பதை நாம் நமது முந்தைய வரலாற்றிலிருந்து உணர்ந்துகொள்ளவேண்டும். நாம் அவர்களிடமிருந்து மார்க்க அறிவை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான் இதற்கு பொருளாகும். நேசத்திற்குரிய நமது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இதுகுறித்து நம்மை எச்சரிக்கை செய்துள்ளார்கள்!

எனது உம்மாவின் விஷயத்தில் குர்ஆனை கொண்டு விவாதம் செய்யும் நாவன்மை பெற்றுள்ள நயவஞ்சகர்கள் குறித்துதான் நான் மிகுந்த அச்சம் கொண்டுள்ளேன் (நூல் : அஹ்மது, அல்பஸார், இப்னு அப்து அல்பர்&பக்கம் 439)

     முஸ்லிம்கள் ஒருகலீஃபாவை பெற்றிருக்கவேண்டியது வாஜிபாகும். மனித சட்டங்களை கொண்டு ஆட்சிசெய்வது தடைசெய்யப்பட்டுள்ளது போன்ற இஸ்லாத்தின் திட்டவட்டமான அஹ்காமில் பூசல்களை ஏற்படுத்துபவர்கள் இவர்களில் இருக்கிறார்கள். இவர்கள் ஏற்படுத்தும் பூசல்கள் எத்தகைய விளைவை ஏற்படுத்தியுள்ளது என்றால், இஸ்லாத்தில் ஓரினசேர்க்கை தடை செய்யப்பட்டுள்ளது என்பதில் இவர்கள் சர்ச்சை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

     அறிஞர்களின் பலவீனமான அபிப்ராயங்களையும் பூசல்களை ஏற்படுத்தும் வன்மமான அபிப்ராயங்களையும் மேற்கோள் காட்டுவதில் எப்போதும் குறியாக இருந்து வருகிறார்கள் என்பதால் இவர்களை குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளவேண்டும்!

இமாம் அல்பைஹகீ அறிவித்திருப்பதாவது :

     ‘இஸ்மாயீல் அல்காதி கூறினார், ‘ஒருநாள் நான் அப்பாஸித் கலீஃபாக்களில் ஒருவரான அல்முஃதாதித் அவர்களை சந்திப்பதற்காக சென்றிருந்தேன். உடனடியாக அவர் ஒரு நூலை என்னிடம் காண்பித்து அதை படிக்கும்படி கூறினார். அந்த நூலில் அதன் ஆசிரியர் அனைத்து உலாமாக்களும் கூறிய விநோதமான கூற்றுகளை தொகுத்திருந்தார். எனவே இந்த நூலின் ஆசிரியர் பொதுவான மார்க்க கொள்கைகளுக்கு புறம்பாக தீய கோட்பாடுகளை பின்பற்றும் மனிதர் (லீமீக்ஷீமீtவீநீ) என்று நான் கலீஃபாவிடம் கூறினேன். அவர் ஏன் இவ்வாறு செய்துள்ளார் என்று கலீஃபா என்னிடம் வினவினார், இந்த நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ள முறையில் எந்த அறிஞர்களும் கருத்து கூறவில்லை என்று நான் கூறினேன். மனக்கொடையுடன் (முஃதா) கூடிய திருமணத்தை சட்டரீதியானதாக ஆக்கிய அவன் இசை பாடுவதை சட்டரீதியானதாக ஆக்க வில்லை, ஒரு செயலை சட்டரீதியானதாக ஆக்கிய அவன் மற்றொரு செயலை சட்டரீதியான தாக ஆக்கவில்லை! ஒவ்வொரு ஆலிமும் சில விநோதமான அபிப்ராயத்தை கூறியிருப்பார்கள், எனவே அனைத்து இமாம்களின் வன்மமான கருத்துக்களை ஒருவர் தொகுத்து அவற்றை ஏற்று செயல்பட எண்ணினார் என்றால் பிறகு தீன் அழிந்துபோகும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே அந்த நூலை எரித்துவிடும்படி கலீஃபா கட்டளையிட்டார்’ .

     இமாம் அல்அவ்ஸயி(ரஹ்) கூறியிருப்பதாவது, ‘அறிஞர்களின் கூற்றுகளில் விநோதமான அபிப்ராயங்களை தேடுபவர் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவிடுகிறார். குறிப்பிட்ட ஓர்அறிஞர் மிகுந்த அறிவு பெற்றவராகவும் மிக்க மதிப்பு உடையவராகவும் இருக்கும் அதேவேளையில் வன்மம் நிறைந்த சில கருத்துக்களை கூறுபவராகவும் இருக்கக்கூடும். எனவே ஒவ்வொரு அறிஞர்களும் கூறிய வன்மமான கருத்துக்களை திரட்டி அதை புதிய மத்ஹபாக ஆக்குவதற்கு ஒருவர் முனைந்தால் பிறகு அதிலிருந்து நீங்கள் எத்தகைய இல்மை பெற்றுக்கொள்ள முடியும்!’(நூல் : இஜ்திஹாத் மேற்கொள்வதற்கு எவருக்கு உரிமையிருக்கிறது, ஆசிரியர் : ஸல்மான் அல் உதஹ்)

 குறிப்பிட்ட சிலர் நன்கு படித்தவர்களாகவும் சிறந்த நினைவாற்றல் உள்ளவர்களாகவும் அறிவுத்திறன் நிறைந்தவர்களாகவும் இருக்கக்கூடும், எனினும் அவர்களிடமிருந்து நாம் இல்மை  பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர்களிடம் விஸ்வாசம் கொள்ளலாம் என்றும் இதற்கு அர்த்தம் கிடையாது. கடந்த காலத்தில் மகத்தான அறிவை பெற்றிருந்தவர்களும் பெரும்பெரும் ஃபிக்ஹ் நூற்களை எழுதியவர்களும்கூட இஸ்லாத்தைவிட்டு விலகிச்சென்றுவிட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்! அவர்களுடன் ஒப்பிடும்போது இன்றைக்கு விந்தையான கருத்துக்களை கூறும் அறிஞர்கள் கற்றுக்குட்டிகளாகவே இருக்கிறார்கள்!ஹ

     இப்னு ருஷ்த் அவார்ரிஸ் (கி. பி. 1126-1198) மாலிக் மத்ஹபை பின்பற்றும் அறிஞராக இருந்தார், அவர் ‘பிதாயத் அல்முஜ்தஹித் வ நிஹாயத் அல்முக்தாயித் ’ என்ற பிரபலமான ஃபிக்ஹ் நூலை எழுதியிருந்தார், எனினும் அது தத்துவ நூலாக ஆகிவிட்டதால் இஸ்லாத் திலிருந்து விலகிச் சென்றுவிட்டது என்பதை அனேகமானவர்கள் அறிவார்கள். பிரபலமான விஞ்ஞானியாகவும் சிந்தனையாளராகவும் விளங்கிய இப்னு ஸினா போன்றவர்கள் இறுதியில் இந்த உலகம் அழிவற்றது என்றும் என்றென்றும் நிலையானது என்றும் சிந்தித்ததின் மூலமாக மார்க்கத்தைவிட்டு வெளியேறிவிட்டவர்களில் (முர்தத்) ஆகிவிட்டார்கள்!

     அறிவில் மிகைத்தவர்களை நாம் காணலாம், எனினும் தக்வா என்ற நிபந்தனையை அவர்கள் நிறைவுசெய்தால் ஒழிய அவர்களிடமிருந்து அறிவை பெற்றுக்கொள்வதில் நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மற்றவர்களிடமிருந்து அறிவை பெற்றுக்கொள்ளுதல் என்ற விவகாரத்தில் கீழ்க்கண்ட சில முக்கியமான கருத்துக்கள் ஒருவரின் தக்வாவை அறிந்து கொள்வதற்கு உறைக்கல்லாக பயன்படுகிறது :

  • அவர் இஸ்லாத்தின் திட்டவட்டமான விஷயங்களுக்கு எதிராக இருக்கக்கூடாது

  • அவருடைய பேச்சுக்களுடன் அவருடைய செயல்பாடுகள் முரண்படக்கூடாது

  • அவர் இரட்டை முகம் கொண்டவராக இருக்கக்கூடாது. நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்திருப்பதாவது : இரட்டை முகம் கொண்டவர்கள்தான் மனிதர்களில் மிகவும் தீயவர்கள் ஆவார்கள்! இத்தகையவர்கள் இவர்களிடம் ஒரு முகத்தையும் அவர்களிடம் ஒருமுகத்தையும் காண்பிப்பார்கள் (நூல் : புஹாரி, முஸ்லிம்)

  • அஹ்காம் ஷரீஆவில் அவர் வரம்புமீறக்கூடாது பின்வரும் ஹதீஸில் அறிவிக்கப்பட்டிருப்பது போல அவர் நிஃபாக் தன்மையை கொண்டவராக இருக்கக்கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்திருப்பதாவது : ‘நயவஞ்சகரின் அறிகுறிகள் மூன்றாகும் : பேசும்போது பொய்யுரைப்பார்; வாஹக்குறுதி அளித்தால் அதற்கு மாறுசெய்வார்; அமானிதமாக ஏதேனும் ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வார். அவர் நோன்பு நோற்றாலும் தொழுகையை நிறைவேற்றினாலும் தன்னை முஸ்லிம் என்று கூறிக்கொண்டாலும் (அவர் நயவஞ்சகரே!) (புஹாரி, முஸ்லிம்) நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர்(ரளி) அறிவித்திருப்பதாவது : ‘எவர் நான்கு (வகையான) தன்மைகளை பெற்றிருக் கிறாரோ அவர் நயவஞ்சகர் ஆவார், ஒருவர் இந்த நான்கு தன்மைகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்கும் நிலையில் அதிலிருந்து நீங்கிக்கொள்ளாத வரையில் அவர் நய வஞ்சகர்களில் ஒருவராகவே இருந்துவருவார் : பேசினால் பொய்யுரைப்பார்; வாக்குறுதி அளித்தால் அதற்கு மாறுசெய்வார்; ஒப்பந்தம் செய்தால் அதற்கு துரோகமிழைப்பார்; சச்சரவு செய்யும்போது கண்ணியக்குறைவாகவும் அவமரியாதையாகவும் நடந்து கொள்வார். (புஹாரி)

     நயவஞ்சக தன்மையில் இரண்டு நிலைகள் இருக்கின்றன; ஒன்று நம்பிக்கையுடன் தொடர்புடையது மற்றொன்று செயலுடன் தொடர்புடையது.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா இன்னு ஆமிர்(ரளி) அறிவித்துள்ள ஸஹீஹ் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது,

     எனது உம்மாவிலுள்ள நயவஞ்சகர்களில் பெரும்பான்மையினர் காரீகளில் (கிராத் ஓதுபவர்களில்) உள்ளவர்களாக இருப்பார்கள்! (அஹ்மது, தப்ரானி மற்றும் இதர ஹதீஸ் நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பார்க்கவும் – ஸஹீஹ் அல்ஜமீ# 1203)

இமாம் அல்மனாவி(ரஹ்) ஃபய்துல் கத்ர் என்ற தனது நூலில் இந்த ஹதீஸ் பற்றி குறிப்பிட்டிருப்பதாவது : ஹஹ

     ‘எது நோக்கமாக உள்ளதோ அந்த அசலான அர்த்தத்திற்கு அப்பாற்பட்டு இவர்கள் வியாக்ஞானம் அளிப்பார்கள், அன்றியும் அதன் அர்த்தத்தை தவறான கோணத்தில் காட்டு வார்கள். (ஷரீஆ) உரையில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளை அவர்கள் மனனம் செய்திருந்த போதும் அது சுட்டிக்காட்டும் அர்த்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) காலத்தில் இருந்த நயவஞ்சகர்கள் இத்தகைய தன்மைகளையே பெற்றிருந்தார்கள்’

இமாம் அஷ்ஷமக்ஷரி(ரஹ்) கூறியிருப்பதாவது :

     ‘நபி(ஸல்) அவர்கள் நிஃபாக் (நயவஞ்சகத்தன்மை) பற்றி குறிப்பிடும்போது ரியா (மற்றவர் களுக்கு காட்டவேண்டும் என்பதற்காக வணக்கவழிபாடு தொடர்பான செயல்பாடுகளை மேற் கொள்ளுதல்) என்ற அர்த்தத்திலேயே கூறியுள்ளார்கள். ஏனெனில் உள்ளரங்கமாக நம்பிக்கை மற்றும் வெளியரங்கமான செயல்பாடு ஆகியவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கின்றன என்பதை (நிஃபாக், ரியா ஆகிய) இந்த இரண்டு தன்மைகளும் சுட்டிக்காட்டுகின்றன’

     ‘நபி(ஸல்) அவர்கள் நிஃபாக் பற்றி கூறும்போது செயல்பாடுகள் தொடர்பான நிஃபாக் தன்மையை சுட்டிக்காட்டுவதை நோக்கமாக கொண்டிருந்தார்களே ஒழிய குஃப்ர் தொடர்பான நிஃபாக் தன்மையை சுட்டிக்காட்டுவதை நோக்கமாக கொள்ளவில்லை’

     ‘நயவஞ்சகர்கள் உள்ளார்ந்த முறையில் ஈமான் கொண்டிராதபோதும் தங்களது உயிர்கள், உடமைகள் ஆகியவற்றை பாதுகாத்துக்கொள்வதற்காக ஈமான் கொண்டிருப்பதை போல வெளியில் காட்டிக்கொள்வார்கள். ரியா எனும் பகட்டுக்காட்டும் தன்மையை கொண்டுள்ள மனிதர் இம்மையில் குறிப்பிட்ட சில ஆதாயங்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் மறுமையில் நற்கூலியை பெற்றுத்தரும் செயல்பாடுகளை மேற்கொள்வார். (வழி கேட்டில் உள்ள) காரீ ஒருவர் தன்னுடைய அறிவையும் செயலையும் மக்கள் புகழ்ந்து கூற வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டிருந்தபோதும் தான் அல்லாஹ்(சுபு)வின் நற்கூலியின் பொருட்டே செயல்படுவதாக வெளியில் கூறிக்கொள்வார். இந்த மூன்று வகையான மனிதர்களும் பொதுவாக ஒருதன்மையை பெற்றிருப்பார்கள் & அவர்களுடைய உள்ளரங்கமான நோக்கமும் வெளியரங்கமான செயல்பாடும் வேறுபட்டதாக இருக்கும்’

     இதன்காரணமாகவே இமாம் அல்கஸ்ஸாலி(ரஹ்) பின்வருமாறு கூறியிருக்கிறார்,

     கீழ்க்கண்ட நான்கு தன்மைகளை கொண்டுள்ள காரீகளிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!

  • அல்&அமல் (உலக ஆதாயத்தை அதில் நோக்கமாக கொண்டிருப்பார்கள்)

  • அல்&அஜ்லா (தனது செயல்களுக்குரிய ஆதாயத்தை இம்மையில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசரப்படுவார்கள்)

  • அல்&கிப்ர் (தற்பெருமையும் பெரும் அகம்பாவமும் கொண்டவர்களாக இருப்பார்கள்)

  • அல்&ஹஸது (பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் பெற்றுள்ளவற்றை தான் பெறவேண்டும் என்றும் மற்றவர்கள் பெற்றுள்ளதை அவர்கள் இழந்துவிடவேண்டும் என்றும் விரும்புவார்கள்)

     உலக ஆதாயத்தை தேடுவதில் வழிகேட்டில் இருக்கும் காரீ இஸ்லாத்திற்கு முரண்பட்ட வற்றையும் ஒழுக்க மாண்புகளுக்கு புறம்பானவற்றையும் மேற்கொள்வார். பொய்யுரைத்தல், தூற்றுதல், இழிவுபடுத்துதல், ஏமாற்றுதல் போன்ற தீயசெயல்பாடுகள் அனைத்தையும் கொடுங் குற்றவாளிகள் வெட்கி தலைகுணியும் அளவுக்கு மோசமான முறையில் மேற்கொள்வார்.

இமாம் அந்நவவி(ரஹ்) கூறியிருப்பதாவது :

     ‘(வழிகேட்டில் இருக்கும்) காரீ, உலமா ஆகியவரை தவிர்த்து மற்ற எவரும் என்னை இழிவு படுத்துவார்கள் என்று நான் அஞ்சவில்லை’

     அவருடைய இந்த கூற்றை செவியுற்றவர்கள் தங்களுடைய வெறுப்பை வெளிப்படுத்தி னார்கள், அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் கூறியதாவது,

     ‘இந்த கூற்று அசலாக என்னுடையதல்ல, அது இப்ராஹிம் அந்நகய்(ரஹ்ஹ) கூறியதாகும்’

அத்தா(ரஹ்) கூறியிருப்பதாவது :

     ‘காரீகள் குறித்து எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்! (முக்கியத்துமற்ற சிறிய விஷயத்தில்) நான் அவர்களில் ஒருவருடன் கருத்துவேறுபாடு கொள்ளும் பட்சத்தில், உதாரணமாக ஒருபழத்தை பற்றி கூறும்போது ‘அது இனிப்பாக இருக்கிறது’ என்று நான் கூறினால் ‘அது அழுகிவிட்டது’ என்று அவர்கள் கூறுவார்கள்! பிறகு எனது இரத்தத்தை ஓட்டும் பொருட்டு (எனக்கு மரண தண்டனை அளிக்கும் பொருட்டு)ஹ கொடுங்கோலரான ஸுல்தானிடம் (சென்று) வழிவகை தேடுவார்கள்!’

அல்ஃபுதைல் இப்னு இய்யாது(ரஹ்) தனது புதல்வரிடம் கூறியதாவது :

     ‘காரீகளிடமிருந்து வெகுதூரத்தில் அமைந்துள்ள ஒருவீட்டை விலைகொடுத்து வாங்கு வாயாக! அவர்களிடமிருந்து எனக்கு என்ன தேவை இருக்கிறது?! என்னிடமுள்ள ஒருகுறை வெளிப்பட்டால் அப்போது எனது மரணத்திற்கு அவர்கள் வழிவகை தேடுவார்கள்! என்னிடமுள்ள ஒரு நற்குணம் பற்றி மற்றவர்கள் வெளிப்படையாக பேசினால் அப்போது என்மீது பொறாமை கொள்வார்கள்! மக்களுடன் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும்போது நிச்சயமாக அவர்கள் அகம்பாவம் கொண்டவர்களாகவும் உதவி மனப்பான்மை அற்றவர் களாகவும் இருப்பதை நீ காண்பாய். மற்றவர்கள் அனைவரைவிடவும் தங்களுடைய தொழுகை சிறந்தது போன்று அவர்கள் எண்ணிக் கொள்வார்கள். சுவனம் செல்வதற்கும் நரக நெருப்பி லிருந்து விடுதலை அடைவதற்கும் நன்மராயம் கூறப்படும் வகையில் அவர்களுக்கு வஹீ அருளப் பட்டுள்ளதை போன்று நடந்துகொள்வார்கள். தங்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் நாடும் அதேவேளையில் மற்றவர்களுக்கு துன்பத்தையும் துயரத்தையும் நாடுவார்கள். தீவிரமான தற்பெருமைக்காரர்களாகவும் பெரும் அகம்பாவம் கொண்டவர்களாகவும் இருந்தபோதும் நைந்துபோன பழய ஆடையை அணிந்து கொண்டு அடக்கம் நிறைந்தவர்கள் போன்று எளிமையுடன் காட்சியளிப்பார்கள்!’  (அல்மனாவி எழுதியுள்ள விரிவுரை நூலின் பாகம் 2 பக்கம் 80-81)

      மதச்சார்பற்ற இஸ்லாத்தை முன்மொழிபவர்களின் தர்க்கவாதங்களை பின்பற்றுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து நாம் சிந்திக்கவேண்டும், நாம் அவர்களின் கண்ணோட்டங்களை பின்பற்றுவோம் எனில் இஸ்லாமிய உலகத்திலுள்ள கொடுங்கோண்மை ஆட்சியாளர்களையும், முஸ்லிம் நிலப்பரப்புகள் துண்டாடப்பட்டிருப்பதையும், காலனியாதிக்க குஃப்ஃபார் நமது நிலங்களை ஆக்கிரமித்திருப்பதையும் அங்கீகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்! அழைப்புப் பணி மேற்கொண்டுள்ள உண்மையான முஸ்லிம்களை கைது செய்வதையும் அவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்குவதையும் அங்கீகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்! இதன் விளைவாக நாம் இம்மையிலும் மறுமையிலும் பெரும் இழப்புகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும்!

ஸஹீஹ் அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டு, ஹஹஅத்தப்ரானியின் அல்கபீர் வல் பஸாரில் பதிவு செய்யப்பட்டுள்ள அவ்ஃப் இன்னு மாலிக்(ரளி) அறிவிப்பில்‎ கூறப்பட்டிருப்பதாவது :

 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

     எனது உம்மாவினர் எழுபதிற்கும் மேற்பட்ட பிரிவுகளாக ஆகிவிடுவார்கள்! அவர்களில் தங்கள்  சொந்த அபிப்ராயத்தின் அடிப்படையில் விவகாரங்களை மதிப்பிடும் மனிதர்கள்தான் எனது உம்மாவின் மீதுள்ள மிகப்பெரிய சோதனையாக இருப்பார்கள்! எனவே தடைசெய்யப் பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவையாகவும் அனுமதிக்கப்பட்டவற்றை தடைசெய்யப்பட்ட வையாகவும் அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்! இந்த ஹதீஸ் அல்ஹைஸமியின் மஜ்மா அஸ்&ஸவாயித் என்ற நூலின் கிதாபுல் இல்ம் என்ற முதற்பாகத்தில் அத்தக்லித் வல் கியாஸ் என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது)

அபூஸியாது இப்னு ஹுளைர் அறிவிப்புத்தொடர் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸை அபூஷமா பதிவுசெய்துள்ளார், அதில் கூறப்பட்டிருப்பதாவது :

     ‘இஸ்லாத்தை அழிக்கக்கூடியது எது என்பதை நீர் அறிவீரா?’ என்று உமர்(ரளி) என்னிடம் வினவினார். ‘இல்லை’ என்று நான் கூறினேன். ‘ஓர் அறிஞர் (சட்டத்தில்) ஒரு தவறு செய்கிறார், மக்களின் வழிகேட்டை நாடுகின்ற நயவஞ்சகர்கள் தங்களின் எழுத்தை கொண்டு அதில் விவாதம் செய்கிறார்கள்; அமீர்கள் அதை கொண்டு ஆட்சிசெய்கிறார்கள்!’ என்று கூறினார்.
 
 
Sources

No comments:

Post a Comment