சார்ல்ஸ் டாவினின் கூர்ப்புக் கொள்கையும் தொடரும் குரங்குச் சேட்டைகளும் !!


குரங்கு கையில் பூமாலை எனும் வார்த்தை பிரயோகத்தை நாம் அடிக்கடி கேட்டிருப்போம் . அதன் அர்த்தம் ஒரு நல்ல விடயம் ஒரு மோசமான ஜந்துவின் கையில் கிடைத்தால் நடக்கும் விளைவு குறித்து சுட்டிக்காட்டுவதாகும். 

சரி இப்போது விடயத்துக்கு வருவோம்.யார் இந்த சார்ல்ஸ் டாவின் ? அடிப்படையில் இவன் ஒரு யூதன் .அதனால் தான் என்னவோ இவன் மனித தோற்றம் , விருத்தி சம்பந்தமாக அல்லாஹ் (சுப) வுடன் சவால் விடும் தரத்தில் ஒரு கொள்கையை வெளியிட்டான் .
 

அதுதான் மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் எனும் கூர்ப்புக்கொள்கை !! இதன்படி நாமெல்லோரும் எமது பாட்டன் முப்பாட்டனை நோக்கி' ரிவேர்சில் ' சென்றால் காணப்போவது வாலில்லா குரங்குக் கூட்டத்தையே ! இது நீங்கள் பாடசாலைக்காலத்தில் அறிந்த விடயம்தான் .
 

இந்த கொள்கையை விலாவாரியாக எமது கல்வித்திட்டமும் விளங்கப்படுத்த' சயின்ஸ் ' பாடம் முடிந்து இஸ்லாம் பாடம் படிக்கும் போது ஆதம் (அலை ), ஹவ்வா (அலை ) என விளங்கப்படுத்த ஒரு விகார உருவங்கள் சிலவேளை எம் சிறுவயதில் நிழலாடி சென்றிருக்கலாம் .(அல்லாஹ்(சுப ) நம்மை பாதுகாக்க வேண்டும் ). ஆனால் அல்லாஹ்(சுப )மனிதனை ஒரு சிறந்த உயர்ந்த படைப்பாக குறிப்பிட்டு அவனது செயலின் காரணமாகவே தாழ்ந்தோரிலும் தாழ்ந்தோர் ஆக்குவதாகவும் தனது திருமறையிலேதெளிவு படுத்துகின்றான் . 


மேலும் மனிதனை அவனது (கலீபா எனும் ) பிரதிநிதி என்ற மிகப்பெரியகௌரவத்தையும் கொடுத்து இந்த பூமியை வளப்படுத்தும் ,பரிபாலனம் செய்யும் அதிகாரத்தையும் கொடுத்து ;அதை எவ்வாறு செய்ய வேண்டும் எனும் சட்டதிட்டங்களை காலத்துக்கு காலம் அந்த மனிதர்களுக்கு மத்தியில் இருந்தே அவன் விசேட தூதர்களை தேர்வு செய்து அவர்களை மனிதர்களுக்கு ஆட்சியாளர்களாகவும் ஆக்கினான் . அந்த வகையில் இறுதியாக வந்த தூதரே ரசூல் (ஸல் ) என்பதும் நீங்கள் அறிந்த விடயங்கள்தாம் . அதே போல அந்த ரசூல் (ஸல் ) அவர்கள் குறிப்பிடும் பிரதான விடயம் தனக்குப் பின்னால் நபிமார்கள் வரமாட்டார்கள் என்பதும் ஆனால் கலீபாக்கள் தோன்றுவார்கள் என்றும் இந்த இஸ்லாம் மார்க்கத்தை அவர்கள் அமுல் நடாத்தும் வரை அவர்களுக்கே கட்டுப்படவேண்டும் என்பதும் அவர்களது கட்டளை (அபூ ஹுரைரா (ரலி ) அறிவிக்க புஹாரி ,முஸ்லிமில் இந்த விடயம் தெளிவாக வருகின்றது ) இது முஸ்லீம்களாகிய எமது நம்பிக்கை மற்றும் தெளிவான முடிவு . ஆனால் இந்த மகத்தான பணியை முஸ்லீம்களாகிய நாம் கைவிட்டோம் சிதைவடையச்செய்தோம் ! இஸ்லாத்தின் எதிரியின்சதிகள் இதில் கணிசமாக இருந்தாலும் எம் பங்கும் மறுக்க முடியாததஇப்போது உலகம் இஸ்லாத்தின் எதிரிகளின்கைகளில் அவர்களில் அதிகமானோரின் நம்பிக்கை இந்த சார்ல்ஸ் டாவினின் கூர்ப்புக் கொள்கை !

எனவேதான் இந்த உலகம் அவர்கள் கையில் என்பதை நான் குரங்கு கையில் பூமாலை என்கிறேன் .

"குடி குடியை கெடுக்கும் "என்பார்கள் வருடா வருடம் 'லைசன்ஸ்' கொடுத்து 'பார்கள் ' திறக்க வழியும் செய்வார்கள் , குடித்து விட்டு வண்டி ஓட்டினால் மட்டும் வழக்குப் போடுவார்கள் !
 
 இது குரங்குச் சேட்டை போல் தெரியவில்லையா ?!
 
 "புகைத்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிற்கும் " என சிகரெட் பெட்டியிலே எழுதி அதை விற்க சட்டம் அனுமதிக்கும் !
 
(இந்த மக்கள் நலன் )உங்களுக்கு குரங்குச்சேட்டை போல் தெரியவில்லையா ?!
 
விபச்சாரத்துக்கென விடுதி கட்டி சட்டப்பாதுகாப்போடு மருத்துவ உதவியாக (சில நாடுகளில் ) இலவச 'கொண்டோம்' கூட (குடும்பம் சிறக்க ) வழங்குவார்கள் !
 
இது குரங்குச்சேட்டை போல் தெரியவில்லையா ?!
 
இந்த சேட்டைகள் எல்லாவற்றையும் தொங்கி , தாவி நியாயப்படுத்த சுதந்திரம் ,விடுதலை , மனித உரிமை போன்ற பலத்த கொப்புகளை உடைய ஜனநாயகம் எனும் சாத்தானிய மரம் அவர்களிடம் உள்ளது .
 
              ஓஹ் முஸ்லிமே நீயும் அந்த மரத்தில் தாவித்திரிந்து குரங்காவதா?!!! சற்று சிந்தித்து பார் உன்னை புனிதனாக்கும் இறைவன் வழி உனது வஹி உனக்காகவேதான் .
 
வாழ்ந்தால் அந்த சத்தியத்தோடு வாழ் மரணித்தால் சஹீதுகளாக மரணிக்க போராடு .
 
புரிந்து கொள் உயர்ந்த ஜிஹாத் அநியாயக்கார ஆட்சியாளனை சத்தியத்தை முன் நிறுத்தி தட்டிக்கேட்பதே .


இதோ உனக்கு முன்னாலும் சுவனத்தின் வாசனை .............                                                                                                                                                                       
ஹந்தக் களம்