முஸ்லிம் ஆட்சியாளர்களும் அவர்களது வழிமுறையும்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்!!! 
ட்சியாளர்களும் அவர்களது வழிமுறையும்:- ஆட்சியாளர்கள் என்பவர்கள் மக்களை நிர்வகிக்க கூடியவர்கள். ஆட்சியாளர்களின் சிந்தனையும், செயலும்தான் மக்களின் வாழ்க்கை முறைக்கு அடித்தளமாக விளங்குகிறது. ஆட்சியாளர்களின் அகீதாவும், தரீக்காவும் இஸ்லாமாக இருந்தால் மட்டும் அங்கு இஸ்லாமிய வாழ்வொழுங்கு கட்டமைக்கப்படும். மாறாக அது குப்ராக இருக்கும் பட்சத்தில் மக்களின் வாழ்வொழுங்கும் குப்ராகவே அமையும். 

அவ்வப்போது இஸ்லாமிய நாட்டு தலைவர்கள் யாராவது இஸ்ரேலை அழித்து விடுவோம்! அமெரிக்காவை சிதைத்து விடுவோம்! என வெற்று அறிக்கை விட்டால் அதை முஸ்லிம்கள் நம்பி பாராட்டுகிறார்கள், பரப்புகிறார்கள். 

நூற்றாண்டுகள் கடந்தும் யாரும் அதை செய்யவில்லை! இனியும் செய்யப் போவதில்லை! முஸ்லிம்களின் ஆதங்கம் இங்கு கவனிக்கதக்கது. யாராவது உம்மத்தின் நிலையை மாற்ற மாட்டார்களா? பாலஸ்தீன படுகொலையும், காஷ்மீர் கற்ப்பழிப்பும், இலங்கை இனப்படுகொலையும் ஓயாதா என்ற ஏக்கம்தான்??? 

கொஞ்சம் சிந்தியுங்கள் உலகில் 57 முஸ்லிம் நாடுகள் இருந்தும் ஏன் உம்மத்தின் இழிநிலையை அவர்கள் மாற்றவில்லை? காரணம் அவர்கள் கொண்ட குப்ரு கொள்கைதான். தேசியவாத கொள்கையில் அவர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள். உம்மத்திற்க்கு பணத்தை மட்டும் அனுப்புபவர்கள், படையை அனுப்ப மறுப்பதேன். இவர்களல் உம்மத்தின் நிலையை நிச்சயமாக மாற்ற முடியாது. 

இவர்கள் கொண்ட கொள்கைகள் குப்ரு ஜனநாயகமாகவும், இஸ்லாம் வழங்காத மதச்சார்பின்மை, தேசியவாதமாகவும் உள்ளது இவை எல்லாம் குப்ரு வழிமுறைகள் இவை உம்மத்திற்க்கு பயனற்றது மாறாக இஸ்லாம் வழங்கிய வழிமுறையான கிலாபத் மட்டுமே உம்மத்தின் அனைத்து இழிநிலைகளுக்கும் தீர்வு!!! கொஞ்சம் சிந்தியுங்கள் குப்ரு சிந்தனையில் வெற்றிகாண முடியுமா?????

Muhammad Noorulla
Via Facebook