துருக்கி, ரஸ்ய விமானத்தை தாக்கயளித்த சம்பவத்திலிருந்து நாம் புரிய வேண்டிய 10 விடயங்கள்

1) இது ரஸ்ய யுத்த விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கிய விமானியின் படம். அவர் ஒரு வீர புருஷன். இதற்கு முன்னமே மாஸ்கோவின் கதவுகளை உரத்துத் தட்டிய உத்மானிய இராணுவத்தின் வழித்தோன்றல் அவர். அவர் இச்செலுக்காக பெருமைப்படவேண்டும்.
 
2) ரஸ்யா சிரிய முஸ்லிம்களுக்கு எதிரான கொடூர யுத்தத்தில் முன்னணியில் நின்று தாக்குதல் நடாத்தி  நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிர்களை இதுவரை குடித்திருப்பதால் இந்தச் செய்தி கேட்டு சிரிய முஸ்லிம்களும், உலகின் ஏனைய சொரணையுள்ள முஸ்லிம்களும் ஆறுதல் அடைந்திருப்பார்கள்.
 
3) இந்தத்தாக்குதல் மிகவும் தாமதமானதும், மட்டுப்படுத்தப்பட்டதும் என்றாலும் முஸ்லிம்கள் நீண்ட நாட்களாய் எதிர்பார்த்து நின்ற போற்றுதலுக்குரிய செயலாகும். இத்தாக்குதல்; கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எமது கண்ணியத்தையும், சுயமரியாதையையும் இழந்து நிற்கும் எமக்கு எமது புகழ்பெற்ற வரலாற்றை கண் முன்னே கொண்டுவந்து ஆறுதல் அளிக்கின்றது.
 
4) உத்மானியர்களின் தமது வரலாற்றில் எதனைச்செய்தார்களோ, தமது வீர வரலாற்றுடன் எதனை இணைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்களோ அந்த அளவீட்டின் படி இந்த சம்பவத்தை அளந்து பார்த்தால்; யார் தன்னை உத்மானிய கிலாஃபத்தின் உண்மையான வழித்தோன்றலாக கருதுகிறார்களோ அவர்களில் ஒருவனின் செயற்பாடாகவே இந்தத்தாக்குதல் கருதப்பட வேண்டுமெயொழிய இன்றைய சடவாத துருக்கியின் ஒரு விதி விலக்கான செயலாகப் பார்க்கப்படக்கூடாது.
 
5) ரஸ்ய விமானத்தை குறிவைத்து தனது ரிகரை அழுத்திய துருக்கிய விமானி தனது செயலுக்காக மிகுந்த உவகை கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்த மனோநிலைக்கும் முஸ்லிம் உலகிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் இராணுவ வீரர்களின் உணர்வுகளுக்கும் இடையில் எந்தவொரு வேறுபாடும் இல்லை என்பதை இந்த இடத்தில் நாம் மறந்துவிடலாகாது.
 
6) எதிரிக்கு எதிராக எமது சிப்பாய்களின் ரிகர் அழுத்தப்படுவதற்கு மேலிடத்திலிருந்து வரும் ஒரு கட்டளை மாத்திரம் போதுமானது என்பதையே இந்த சம்பவம் எமக்கு திரும்பவும் ஞாபகமூட்டுகிறது. எனவே எமது அடிப்படை பலகீனம் என்பது துணிச்சலான அரசியல் தீர்மானமின்மை என்பதேயொழிய அது இராணுவ வளம் தொடர்பானதாகவோ, மோசடியான இராணுவம் தொடர்பானதாகவோ எப்போதும் இருந்ததில்லை.
 
7) ஒரு பேச்சுக்கு துருக்கிய வான்வெளிக்குள் இந்த ரஸ்ய விமானம் அத்துமீறாதிருந்து துருக்கியிலிருந்து சில மைல்களுக்கு அப்பால் சிரியாவின் வான்வரப்பில் முஸ்லிம்களை பலியெடுப்பதில் ஈடுபட்டிருந்தால், துருக்கி அந்த விமானத்தை தாக்கி அழித்திருக்குமா? சிரியாவில் சிந்தப்படும் முஸ்லிமின் இரத்தத்தைப் பாதுகாப்பது துருக்கியின் வான் எல்லையைப் பாதுகாப்பதை விட மகத்தானது என்பதில் எந்தவொரு முஸ்லிமுக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியுமா?அதற்காகத்தானே துருக்கி களமிறங்கியிருக்க வேண்டும்? உண்மையில் அதைத்தானே இஸ்லாம் அதன் மீது கடமையாக்கியிருக்கிறது? அது கஷ்டமான செயலா? என்று கேட்டால், பதில் 'கஷ்டமானதுதான்'.  ஆனால் முடியாத காரியமா? என்று கேட்டால் பதில் 'இல்லை' என்று தயங்காமல் கூறலாம்.
 
வரலாற்றின் முக்கிய திருப்பு முனைகள் அரிதாகவே வந்துபோகும். இது அப்படியான ஒரு திருப்பு முனை. பிராந்தியம் அதியுச்ச நிலையில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. உலகளாவிய மற்றும் பிராந்திய சக்திகள் முஸ்லிம் உலகில்(அது துருக்கிக்கும் பொருந்தும்) ஒரு முடிவு கண்டுதான் தீருவோம் என்று களமிறங்கியிருக்கின்றபோது களத்தில் துருக்கியின் விவேகமான முடிவே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
 
8) நவ காலணித்து வேட்டையிலிருந்து துருக்கி தப்பித்துவிடலாம் என்று பகற்கனவு காணுகிறதா? குப்பார்களும், பிராந்திய சக்திகளும் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கான பொறி பற்றக்கூடும் என எதிர்பார்க்கின்ற இந்தவொரு நிலத்தையும் விட்டுவைக்கப்போவதில்லை. இதனைப்புரிந்து கொள்ள துருக்கிய தலைமைகள் பெரிதாக சிரமப்பட வேண்டியதில்லை. வெறுமனவே ஈராக்கின் இன்றைய நிலையை பார்த்தால் போதுமானது. எனவே துருக்கி தனது கடப்பாட்டை புரிந்துணர்ந்து உண்மையான சவால்களை முகம் கொடுப்பதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.  இன்று அதனைச் செய்வதற்கு தயங்கினால் நாளை அதன்மீது சாபக்கேட்டின் மேகங்கள் சூழ்ந்து கொள்வதை தடுக்க முடியாது போய்விடலாம்.
 
9) இன்று சிரியாவிலே முஸ்லிம்களின் அழுகுரல் வானத்தை பிளக்கிறது. அவர்களின் குருதி ஆறாகப் பாய்கிறது. மேலும் இதையொத்த வேதனையிலும், சோதனையிலும் பலஸ்தீனிலும், ஈராக்கிலும், செச்னியாவிலும், காஸ்மீரிலும், பர்மாவிலும் எமது உம்மத் நீண்ட காலமாகத் தவிக்கிறது. இந்நிலையில் அல்லாஹ்(சுபு) உதவி மந்திரத்தால் மலரப்போவதில்லை. மாறாக அல்லாஹ்(சுபு) எம்முள்ளிருக்கும் துணிச்சலும், வாய்மையும், தக்வாவுமுள்ள தலைமைகளின் கரங்களாலேயே அந்த வெற்றியை  கொண்டு வருவான்.
 
முஸ்லிம்கள் அவரில் தேவையுடையவராக இருக்கின்ற நிலையில் எந்தவொரு தலைவர் முஸ்லிம்களை தவிப்பில் விட்டு விடுகின்றாரோ அவரை அல்லாஹ(சுபு) தவிப்பில் விட்டு விடுவான் என்பதை எமது மார்க்கம் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இது குறித்து பின்வரும் நபிமொழியில் தீர்க்கமாகச் சொன்னார்கள்.
 
“ஒரு மனிதனின்(முஸ்லிமின்) மரியாதைக்கு பங்கம் விளைவிக்கப்படுகின்ற இடத்தில் அல்லது அவனது கண்ணியம் களங்கப்படுத்தப்படுகின்ற இடத்தில் அந்த மனிதனை(முஸ்லிமை) கைவிடும் ஒருவருக்கு, அல்லாஹ்வின் உதவியை அவர் அதிகம் நாடுகின்ற சந்தர்ப்பத்தில் அல்லாஹ் அவரை கைவிடாமல் இருக்க மாட்டான். ஒரு மனிதனின் மரியாதைக்கு பங்கம் விளைவிக்கப்படுகின்ற இடத்தில் அல்லது அவனது கண்ணியம் களங்கப்படுத்தப்படுகின்ற இடத்தில் அந்த மனிதனுக்கு உதவும் ஒருவருக்கு, அல்லாஹ்வின் உதவியை அவர் அதிகம் நாடுகின்ற சந்தர்ப்பத்தில் அல்லாஹ் உதவாமல் இருக்க மாட்டான்.” (அபுதாவூத்)
 
10) இந்த தாக்கியளிப்பு சம்பவத்தை துருக்கி தன்னிச்சையாக செய்திருந்தாலும் சரி, அல்லது அமெரிக்கா துருக்கியினூடாக ரஸ்யாவுக்கு ஒரு செய்தியை அனுப்புவதற்காக இது இடம்பெற்றிருந்தாலும் சரி அல்லது துருக்கிய அரசியற் தலைமையின் உத்தரவே இல்லாமல் இராணுவத்தின் ஒரு சில ஜெனரல்களின் சொந்த முடிவாக இருந்தாலும் சரி உண்மை எதுவென காலம் விரைவில் பதில் சொல்லும். எனினும் அதனது எதிர்காலத்தில் துருக்கிக்கு உண்மையான அக்கறை இருந்தால் ஒரு அடிப்படை கேள்விக்கு அது தீர்க்கமாக பதில் தேட வேண்டும்.
 
மேற்குலக சக்திகளின் நலன்களுக்காக தன்னை தாரைவார்த்து, கைமாறாக சில குறுகிய நலன்களை பெற்றுக்கொள்கின்ற பாதையிலேயே துருக்கி தொடர்ந்து பயணிக்கப்போகிறதா? அல்லது யாரெல்லாம் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அணிதிரட்டு நிற்கிறார்களோ அவர்களுக்கு எதிராக முஸ்லிம் உம்மத்துடன் கைகோர்த்து முன்னேறப்போகிறதா? அவ்வாறு செய்வதன் ஊடாக பல மில்லியன் கணக்கான மக்கள்  அதன் பின்னால் அணிதிரள மீண்டும் முஹம்மத் அல் பாதிஹ், சுலைமான் அல் காநூனி, இரண்டாம் சுல்தான் அப்துல் ஹமீத் போன்ற மாபெரும் கலீஃபாக்களின் வரலாற்றை உயிர்ப்பிக்கப்போகிறதா? இந்தக் கேள்விக்கான நேர்மையான பதிலிலேயே உண்மையான துருக்கியின் எதிர்காலம் தங்கியிருக்கிறது என்பதை தூரநோக்குள்ள ஒரு முஸ்லிம் தலைவர் துல்லியமாகப் புரிந்து கொள்வார்!
 
யா அல்லாஹ்! ரஸ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய அந்த முஸ்லிம் விமானியின் கரங்களுக்கு அருள்பாலிப்பாயாக! மேலும் துருக்கியினூடாக இஸ்லாத்திற்கு கண்ணியத்தையும், வெற்றியையும் தந்தருள்வாயாக!