தலைப்புகள் :
  • பாரிஸ் தாக்குதல்: இந்த தாக்குதலுக்கு ஹோலன்ட் இஸ்லாமிய அரசு (IS) மீது பழிசுமத்தல்.
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அப்கானிஸ்தானிய கைதிகள் மீது சர்வதேச கூட்டுப்படையினர் அத்துமீறல் செய்ததற்கான ஆதாரம் இருப்பதாக சுட்டி காட்டுகிறது.
  • ரஷ்யா இஸ்லாமிய போராளிகளுக்கு புதிய தளமாக விளங்குகிறது.
 பாரிஸ் தாக்குதல்: இந்த தாக்குதலுக்கு ஹோலன்ட் இஸ்லாமிய அரசு (IS) மீது பழிசுமத்தல்
 
பிரஞ்சு அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹோலன்ட் பாரிஸ் நகரில் தொடர் தாக்குதல் நடத்தி 128 உயிர்கள் வரை கொன்ற சம்பவம் இஸ்லாமிய அரசால்(IS) ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தியவை என குற்றம் சாட்டியுள்ளார், எட்டு துப்பாக்கி ஏந்திய நபர்கள் மற்றும் தற்கொலை படையினருடன் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் “வெளியிலிருந்து ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட்டதாகும்’ என பிரஞ்சு அதிபர் ஃபிரான்கோஸ் ஹோலன்ட் கூறியுள்ளார். மதுபான விடுதிகள், உணவு விடுதிகள், இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடம் மற்றும் மிகவும் பிரசித்தி பெற்ற கால்பந்தாட்ட போட்டி நடந்த மைதானம் இவைகளை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் இவை. இந்த தாக்குதலுக்கு IS பொறுப்பேற்றுள்ளது. பெல்ஜியத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர், பிரான்சில் இரண்டாம் உலகப்போருக்கு பின் அமைதிக்கு எதிராக நடந்த மிக மோசமான தாக்குதல் இது, இதன் விளைவாக ஒரு அவசர நிலையை திரு் ஹோலன்ட் ஏற்படுத்தியுள்ளார் என நீதியமைச்சார் கூறியள்ளார், மேலும் ஐரோப்பாவில் 2004 ல் மேட்ரிட் நகரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பிற்கு பின் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். 300 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவம் அதில் 80 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய அரசு (IS) சனிக்கிழமை அன்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது அதில் ” எட்டு சகோதரர்கள் மூலம் வெடிகுண்டுகளை கொண்ட இடுப்புவார்களை அணிந்தவாரும் துப்பாக்கிகளை ஏந்தியவாரும்” இந்த தாக்குதலை “மிகவும் ஜாக்கிரதையாக” தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை நோக்கி தொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இத்தாக்குதல் சிரியா மற்றும் ஈராக்கில் IS போராளிகள் மீதான தாக்குதலில் பிரான்ஸ் பங்களிப்பதன் எதிரொலியாக தொடுக்கப்பட்டது என வெளியிட்டுள்ளது. அதற்கு சற்றுமுன் அதிபர் ஹோலன்டு பிரான்ஸ் மீது “ஒரு கோழைத்தனமான வெட்கப்படக்கூடிய மற்றும் கோர தாக்குதல்” தொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே பிரான்ஸ் இதற்கு பதிலடி கொடுக்கும் போது இஸ்லாமிய அரசின்(IS) போராளிகளுக்கு எவ்வித கருணையும் காட்டாது என கூறினார். மேலும் சட்டத்திற்குட்பட்டு அனைத்து உபகரணங்களையும்…..அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போர்க்களங்களிலும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து உபயோகிப்பதற்கு உறுதியுடன் இருப்பதாக கூறினார். [மூலம்: BBC]
பிரான்சில் இதுவரை யாரும் பிரஞ்சு மக்களை காக்க தவறிய ஹோலன்டை பார்த்து எந்த கடிணமான கேள்விகளையும் கேட்கவில்லை. 2015 ஜனவரியில் நடந்த சார்லி ஹெப்டோ தாக்குதலிலிருந்து 10500 பேரகள் கொண்ட படையை நிறுவியுள்ளது மேலும் பாதுகாப்பை மேம்படுத்த பல மில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது, மேலும் அது ஏற்படுத்திய பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக எளிதாக மீறப்பட்டுள்ளது. ஹோலன்டு மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரியின் ராஜினாமாவை கோருவதற்கு பதிலாக, சிரியாவில் ராணுவ படையெடுப்பு எடுக்க கோரும் சத்தம் தான் அதிகமாகி கொண்டிருக்கிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அப்கானிஸ்தானிய கைதிகள் மீது சர்வதேச கூட்டுப்படையினரின் அத்துமீறல்களுக்கான ஆதாரம் இருப்பதாக சுட்டி காட்டுகிறது.
 
 ஐ.நா வழக்குறைஞர்கள் 12.11.15 அன்று சர்வதேச படைகள் அப்கானிஸ்தானில் சிறைக்கைதிகளுக்கு உடலளவிலும் உள்ளத்தளவிலும் அத்துமீறி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2003 ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினர் மீது தொடுக்கப்பட்ட குற்றப்புகார்களை விசாரித்து வருகின்றது, ஆனால் இவ்விசாரணையின் நிலை குறித்த இதற்கு முந்தைய அறிக்கைகள் குற்றம் நடத்தப்படது குறித்தும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெளிவற்ற நிலையிலிருந்தது. இதன் சமீபத்திய ஆரம்பகட்ட விசாரணை குறித்த அறிக்கையில் இது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது, நீதிமன்றத்தின் விசாரணை அதிகாரி கூறுகையில் அமெரிக்க வீரர்களின் குற்றம்சாட்டப்பட்ட வழக்குகளை விசாரித்ததில் எவ்வித குற்றத்தையும் நிரூபிக்க முடியவில்லை அல்லது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கட்டளையிடும் உயர்ந்த பதவியிலுள்ளவர்களை சென்றடையவும் முடியவில்லை. இந்த கண்டுபிடிப்பு நீதிமன்றத்தின் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் விசாரணையை மேலும் முனைப்படைய செய்யும். இது இந்த நீதிமன்றத்தின் உறுப்பினர் அல்லாத மற்றும் முன்பு இந்த நீதிமன்றம் அமைவதற்கு பலத்த எதிர்ப்பை தெரிவித்த அமெரிக்காவிற்கு பிரச்சினைக்குரியதாக அமையக்கூடும். “அதிபயங்கர விசாரணை யுத்திகளை மேற்கொண்டதின் விளைவாக உடலளவிலும் உள்ளத்தளவிலும் மிகுந்த காயத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.” என விசாரணை அதிகாரிகள் எழுதியுள்ளனர். அவர்கள் சர்வதேச மற்றும் அமெரிக்க படையினர் மேற்கொண்ட அத்துமீறலின் ஆழத்தையும் அளவையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றோம் என கூறினர். NATO படையை சார்ந்த அனைவரும் கூட்டாக அப்கானிஸ்தானில் 2001 ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு படை திட்டத்தில் பங்கு கொண்டனர். அமெரிக்க மற்றும் இதர நாட்டு படைகள் தொடர்ந்து அப்கானிஸ்தானில் NATO பயிற்சி திட்டம் என்ற பெயரில் நீடித்து வருகின்றனர். [மூலம்: ரய்டர்ஸ்]
என்னதான் 12 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அப்கானிஸ்தானில் நடந்த ஆக்கிரமிப்பாளர்களின் கரங்களால் நிகழ்த்திய அத்துமீறல்களுக்கான ஆதாரத்தை கண்டுபிடித்தாலும். அமெரிக்க படையினரை தண்டிப்பதிலிருந்து பாதுகாக்கும் அப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையேயான இரு நாட்டிற்கு மத்தியில் ஏற்பட்ட ஒப்பந்தம் நீடித்து இருக்கையில் இந்த கண்டுபிடிப்பின் மூலம் இந்த குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்று தர முடியுமா என்பது கேள்விக்குறி.
 ரஷ்யா இஸ்லாமிய போராளிகளின் புதிய தளமாக விளங்குகிறது
 
ரஷ்யா சிரியாவில் தனது பங்களிப்பை அதிகப்படுத்திவரும் நிலையில், அது தனது ராணுவத்தை புதை குழியில் சிக்க வைக்கக்கூடிய ஆபத்தான நிலையை எடுத்துள்ளது. அதன் படையெடுப்பு ஏற்கெனவே அதற்கு இருந்த உள்நாட்டு அச்சுறுத்தலை அதிகப்படுத்தியுள்ளது, அது முழு நாட்டையும் நிலைகுலைய செய்யக்கூடியதாக இருக்கின்றது. ரஷ்யாவில் ஒரு புது வகையான இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்ந்து வருகிறது, அதற்கு எரியூட்டும் விதமாக ரஷ்ய வீரர்கள் உள்நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த ஆர்வமுடையவர்களாக இருக்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த அளவிற்கு சாத்தியக்கூறுகளுடன் ஒரு தீவிரமான பயங்கரவாத குழு அமைவது என்பது நினைத்து பார்க்கக்கூடிய அளவில் கூட இருந்திருக்கவில்லை. அந்நேரத்தில் ரஷ்யா மண்ணில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களை வட காகேசிய பகுதியை சார்ந்த செச்நியா போராட்டக்காரர்களின் தூண்டுதலின் பெயரில் நடத்தப்பட்டது. 2009 ல் செச்சென்யாவில் தான் வெற்றி கொண்டதாக அறிவித்த ரஷ்யா அடிப்படைவாத பயங்கரவாதத்தின் அச்சத்தை பெருமளவில் கட்டுப்படுத்துவதற்கு உறுதியுடன் இருந்தது. ஆனால் பயங்கரவாத இஸ்லாம் காணாமல் போய்விடவில்லை. உண்மையில், அடிப்படைவாத கருத்துக்கள் செசன்யாவிலிருந்து ரஷ்ய மத்திய பகுதி முழுவதும் பரவியது. அவை மத்திய கிழக்கினால் பயிக்சியளிக்கப்பட்ட ரஷ்ய இமாம்கள் மூலம் பரப்பப்பட்டு அதற்கு நாட்டின் முஸ்லிம் குடிமக்கள் மற்றும் மாஸ்கோவிலுள்ள மத்திய ஆசியாவிலிருந்து குடி புகுந்தவர்கள் என புதிய ஆதரவாளர்களை கிடைக்கப்பெற்றது. மேலும் இளைஞர்கள் சிலர் மற்றும் நீண்ட காலமாக இஸ்லாத்தின் பால் ஈர்ப்பு கொண்ட முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளாக மாறி வருகின்றனர். அவர்களின் ஐரோப்பிய சகோதரர்களை போல இவர்கள் மேற்கத்திய ‘சிலுவை போராளிகளுக்கு’ எதிராக கோபத்தை வரவைக்கும் இணையதள காணொளிகளையும் சமூகதள செய்திகளையும் பார்க்கின்றனர். இது ரஷ்யாவிற்கு மிகவும் ஆபத்தாகும். நாடு பயங்கரவாத இஸ்லாத்திற்கு எதிரான போரில் புதிய முனையாக மாறிவிட்டது, ஐரோப்பாவின் அதிக முஸ்லிம் மக்கள் தொகையை கொண்ட நாடு இந்த போரை சந்திக்க தயார் செய்ய தவறிவிட்டது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி இஸ்லாமிய அரசுடன்(IS) கைகோர்ந்து 5000 ரஷ்ய மற்றும் முன்னால் சோவியத் நாடுகளை சார்ந்த மக்கள் போரிட்டு வருகின்றனர் ( தனிமனித குழுக்கள் 7000 மக்கள் வரை இருக்கலாம் என கூறுகின்றனர்). இன்றைய நிலையில் அரபு மற்றும் ஆங்கிலத்திற்கு அடுத்து இஸ்லாமிய அரசு (IS) மத்தியில் முகவும் பிரபலமான மொழியாக ரஷ்ய மொழி இருக்கின்றது. சிரியாவிலுள்ள தரய்யாவில் காணப்பட்ட துண்டு பிரசுரத்தில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் இவ்வாறு கூறுகின்றது:
 
‘இன்று சிரியா, நாளை ரஷ்யா! செச்னிய மற்றும் டாடார்களே எழுந்திருங்கள்!
புதினே, நாங்கள் உனது மாளிகையில் தொழுவோம்!” ரஷ்ய அதிகாரிகள் அபாயத்தை உணர்ந்து விழித்து எழுந்திருக்கின்றனர். புதினின் தலைமை அதிகாரி, செர்ஜி இவாநோவ், இஸ்லாமிய அரசுடன் சேர்ந்து சண்டையிட்ட பல ரஷ்யர்கள் நாடு திரும்பிவிட்டனர், இது நேரடியான ஆபத்தை விளைவிக்கூடியதாக இருக்கின்றது என கூறினார். செப்டம்பர் மாதம் நடந்த ஐ.நா பொதுக்கூட்டத்தில் புதின் உறையாற்றுகையில் “சிரியாவில் ‘இரத்தத்தின் வாடையை’ நுகர்ந்த போராளிகள் ரஷ்யாவிற்கு திரும்பி “அவர்களுடைய பயங்கரவாத” செயல்களை இங்கு தொடர்வார்கள் என அறிவித்தார். ஆனால் ரஷ்யாவின் பாதுகாப்பு படை சிரிய பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அதிகமில்லாத வட காகசஸ் பகுதியில் தீவிரவாத்த்திற்கு எதிரான சிறிய அளவிலான தாக்குதல்களை மட்டுமே நடத்தும் வழக்கம் கொண்டிருந்தது. அடிப்படைவாதிகளாக மாறும் தாதர்களையும் பஷ்கிர்ஸ்களையும் எதிர்கொள்ளும் அளவு தயார் நிலையில் அவர்கள் இல்லை, இதனால் பெருதகரங்களில் வாழும் மத்திய ஆசியர்களிடமும் உள்நாட்டிலும் இஸ்லாமிய அரசின்(IS) ஊடுருவலை எந்தவகையிலும் பாதிக்கவில்லை. இந்த காரியம் மிகவும் சவாலானதாகும் ஏனெனில் இந்த புதிய ஜிஹாதானது பூலோக அளவில் பரப்பளவு மிகுதியானதாகும் (ரஷ்ய அதிகாரிகள் தீவிரவாதிகளை கிழக்கு சைபீரியாவில் கைது செய்த விவரத்தை செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்றன) மேலும் அது நகரங்களிலும் சிறகை விரித்துள்ளது. இதன் விளைவாக, தீவிரவாத அமைப்புகள் ஒருங்கினைவதற்கும் மற்றும் ஒளிவதற்கும் எவ்வித சிரமுமின்றி எளிதாக செயல்பட வித்திடுகிறது. ரஷ்யாவில் அஹ்லுஸ் சுன்னாவினர் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் புதின் சிரியாவில் உள்ள அஹ்லுஸ் சுன்னாவினருக்கு எதிராக காய் நகர்த்தியது தீவிரவாதத்திற்கு எதிரான ஆபத்தை மேலும் அதிகப்படுத்திக்கொண்டு விட்டார். ஏற்கெனவே, 55 வஹ்ஹாபிய அறிஞர்கள் சிரியாவின் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதளுக்கு எதிராக ஜிஹாத் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். (மூலம்: வாஷிங்டன் போஸ்ட்)
ரஷ்யாவும் மேற்குலகும் வேண்டுமென்றே அடிப்படைவாதத்திற்கான மூலக்காரணத்தை தீர்ப்பதற்கான காரியங்களை தவிர்க்கின்றன அதாவது
அ) முஸ்லிம் நாடுகளில் கண்டனத்திற்குரிய முறையிலான வெளிநாட்டு தலையீடு.
ஆ) பலவீனமான அறிவுடைய மேற்கத்திய சிந்தனை.

Reactions:

0 comments:

Post a Comment

வாசித்தவர்கள்

Blog Archive

தொகுப்புகள்

'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்
Powered by Blogger.

Map IP Address
Powered byIP2Location.com

Follow by Email

Enter your email address:

Delivered by FeedBurner

இஸ்லாமிய மறுமலர்ச்சி

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

About Me

My photo
“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com