Jan 28, 2016

சவூதி அரேபியா இஸ்லாமிய அரசா அல்லது குஃப்ர் அரசா – பாகம் – 1

 
எந்தவொரு நாட்டிலேனும் தன்னுடைய தீன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதா என்பதை அறிந்துகொள்ளவேண்டியது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயமாகும், ஏனெனில் அல்லாஹ் (சுபு)வுடைய தீனின் சட்டங்கள்ஹ அடிப்படையில் ஆட்சிசெய்யும் அரசிற்கு முஸ்லிம்கள் பைஆ செய்யவேண்டியது கட்டாயமாக இருக்கிறது. வேறுவகையில் கூறினால், இஸ்லாமிய அகீதா மற்றும் ஷரீஆ சட்டங்கள் அடிப்படையில் கலீஃபாவின் தலைமையில் இயங்குவதுதான் கிலாஃபா அரசாகும், அதற்கு நாம் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று அல்லாஹ்(சுபு) நமக்கு கட்டளையிட்டுள்ளான். ஆகவே கிலாஃபா அரசின் தோற்றம் என்பது கற்பனையானதும் அல்ல யூககோட்பாட்டின் அடிப்படையில் உள்ளதும் அல்ல! வேறுவகையில் கூறுவதென்றால், மன்னர் சல்மான் முஸ்லிம்களின் கலீஃபாவா? சவூதி அரேபியா இஸ்லாமிய அரசா? என்பதுதான் கேள்வியாகும்! சவூதி அரேபியா இஸ்லாமிய அரசுதான் என்று நாம் முடிவு செய்தால் பிறகு இஸ்லாமிய அரசை மீண்டும் நிறுவவேண்டும் என்ற கட்டாயக்கடமை நம்மைவிட்டு நீங்கிவிடும்! (அன்றியும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்ட குறிக்கோளின் பொருட்டு இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் நேரத்தையும் ஆற்றல்களையும் வீணாக செலவிட்டு வருகின்றன என்பதுதான் இதற்கு பொருளாகும்!)

முஸ்லிம்களின் பார்வை :
 
சவூதி அரேபியா ஓர் இஸ்லாமிய அரசு என்ற கண்ணோட்டத்தை பல முஸ்லிம்கள் கொண்டுள்ளார்கள். ஓர் அரசு இஸ்லாமிய அரசா அல்லது இல்லையா என்பதை தீர்மானிக்கும் அளவுகோலை பெற்றிராத காரணத்தாலும், சவூதி அரசு பொய்யான தோற்றத்தை தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்டுள்ள நிலையில் அதன் எதார்த்தநிலை குறித்த அறிவு இல்லாத காரணத் தாலும் முஸ்லிம்களில் பலர் இவ்வாறு கருதிக்கொண்டிருக்கிறார்கள்! ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரசு லட்சக்கணக்கான சங்கைமிக்க குர்ஆன் பிரதிகளையும் இஸ்லாமிய நூற்களையும் நன்கொடையாக அளித்துவருவதோடு உலகம் முழுவதிலும் மஸ்ஜிதுகளை கட்டுவதற்கு ஏராளமான பணத்தை அள்ளி வழங்குகிறது! இதன்காரணமாக மக்கள் அதை ஓர் இஸ்லாமிய அரசு என்று நம்புகிறார்கள்! எனவே அதன் உண்மைநிலையை மக்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்!
 
இஸ்லாமிய அரசிற்குரிய அளவுகோல் :
 
ஓர் அரசு இஸ்லாமிய அரசாக இருக்கவேண்டும் என்றால் அதன் அரசியல் சாஸனம், சட்டங்கள், விதிமுறைகள், கட்டமைப்புகள், அந்நியநாட்டு உறவுகள் ஆகியவற்றிற்கும் அதன் விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கும் இஸ்லாமிய அகீதாவை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். ஓர் அரசு இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் ஆட்சிசெய்யவில்லை என்றால் அல்லது அதன் எந்தவொரு விவகாரத்திலும் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட ஆதாரமூலங்களிலிருந்து சட்டங்களை எடுத்துக்கொள்கிறது என்றால் அது இஸ்லாமிய அரசாக இருக்காது மாறாக குஃப்ர் அரசாகவே இருக்கும்.
 
இந்த அளவுகோலின் அடிப்படையில் இப்போது நாம் சவூதி அரசை ஆய்வுசெய்வோம் :
 
சவூதி அரசும் மனிதர்கள் உருவாக்கிய சட்டங்களும் :
 
சவூதி அரசு கலப்படமான சட்டங்களை கொண்டு ஆட்சிசெய்கிறது, அவற்றில் சில இஸ்லாமிய சட்டங்களாகவும் மற்றும் சில மனிதர்கள் உருவாக்கிய சட்டங்களாகவும் உள்ளன. எனினும் இஸ்லாமிய பார்வையை தன்மீது நிலைநிறுத்திக்கொள்ளும் வகையில் அவற்றை சட்டங்கள் என்று அழைப்பதிலிருந்து அது தவிர்ந்துகொள்கிறது! இஸ்லாமிய சட்டங்களையும் மனிதர்கள் உருவாக்கிய சட்டங்களையும் வேறுபடுத்திக்காட்டும் வகையில் குறிப்பிட்ட மொழியியல் சொல்வழக்கை அந்த அரசு பயன்படுத்திவருகிறது. ‘அரபு நாடுகளின் அரசியல் சாஸன சட்டங்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ள அரபி நூலில் ‘சவூதி அரேபிய அரசாட்சியின் அரசியல் சாஸனம்’ என்ற உட்பிரிவு அத்தியாயத்தில் அதன் ஆசிரியர் பின்வருமாறு கூறியுள்ளார் : ‘கானூன் (சட்டம்) மற்றும் தஷ்ரீ (சட்டவடிவங்கள்) ஆகிய வார்த்தைகள் இஸ்லாமிய சட்டங்களை குறிப்பிடுவதற்கு மட்டுமே சவூதி அரசால் பயன் படுத்தப்படுகின்றன . . . செயலாக்க அமைப்புகள் போன்ற மனிதர்கள் உருவாக்கியுள்ளவை அல்லது அறிவுறுத்தல்கள் (தஃலிமாத்) அல்லது அரசாணைகள் (அவாமிர்) ஆகியவற்றை பொருத்தவரை . . .’ டாக்டர் மஹ்மூது அல்மக்ரிபி எழுதிய அல்வஜீஸ் ஃபீ தாரீக் அல் கவானீன் (அரசாணைகள் பற்றிய வரலாற்று சுருக்கம்) என்று பெயரிடப்பட்டுள்ள அரபு நூலின் 443 வது பக்கத்தில் கடந்தகாலத்தில் இருந்த சட்டங்கள் எளிமையான இஸ்லாமிய சட்டங்களாக இருந்தன என்று குறிப்பிட்டுவிட்டு சவூதி அரசை புகழந்துகூறும் வகையில் அதில் கூறப்பட்டிருப்பதாவது : சவூதி அரசும் அதன் இயற்கை வளங்களும் தோன்றிய பின்னர் இந்த சூழலில் மாற்றம் ஏற்பட்டது. இந்த புதிய சூழலுக்கு சீர்திருத்தங்களும் மாற்றங்களும் தேவைப் பட்டன. இந்த மாற்றங்களின் காரணமாக புதிய சட்டங்களின் தேவை ஏற்பட்டது. இதன் விளைவாக கீழ்க்கண்ட விவகாரங்களில் சட்டங்கள் உருவாக்கப்பட்டன : நீதிமன்றங்கள், வர்த்தம், குற்றவியல் சட்டங்கள், தொழிலாளர்கள், வரிவிதிப்பு மற்றும் இதர துறைகளில் புதிய சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன’
 
வர்த்தக சட்டங்கள் தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, “தரைவழி மற்றும் கடல்வழி வர்த்தகங்கள் தொடர்பான ‘வர்த்தக செயலாக்க அமைப்பு’ என்று அறியப்பட்ட சட்டங்கள் யாவும் சவூதி அரசின் வர்த்தக சட்டங்களில் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. கி.பி. 1931 ல் வெளியிடப்பட்ட இந்த சட்டங்கள் அரபு சட்டங்கள் என்றாலும் அல்லது ஐரோப்பிய சட்டங்கள் என்றாலும் நவீன வர்த்தக சட்டங்களுக்கு ஒப்பானவையாகும்’’ இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை பொருத்தவரை அவர் பின்வருமாறு கூறியுள்ளார் : “பொதுமக்களின் நலன்கருதி அவற்றில் சில மாற்றங்களை செய்வது அவசியமாக இருக்கிறது” மேலும் அதில் அவர் கூறியிருப்பதாவது : “பொதுமக்களின் நலன் அடிப்படையில் அரசின் வரிவிதிப்பு வருவாய் தொடர்பான சட்டங்களை உருவாக்கவேண்டியதும் அவசியமாக இருக்கிறது”
உள்ளபடியே நவீனகால வர்த்தக சட்டங்களுக்கு ஒப்பான சட்டங்களை சவூதி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என்று இந்நூலின் ஆசிரியர் நமக்கு எடுத்துக்கூறுகிறார். மேலும் பொதுமக்களின் நலன் கருதி சில இஸ்லாமிய சட்டங்களை மாற்றியதின் மூலம் அல்சவூது அல்லாஹ்(சுபு)வின் தீனில் மாற்றம் செய்துள்ளார் என்றும் அவர் நமக்கு எடுத்துக்காட்டுகிறார்!
உண்மையில் சவூதி அரசு பல்வேறு மனித சட்டங்களை பின்பற்றி வருகிறது, அவற்றை இந்நூலின் ஆசிரியர் குறிப்பிடவில்லை! அவற்றில் சில பின்வருமாறு :
  • வங்கிகள் கண்காணிப்பு செயலாக்க அமைப்பு (The system of observing banks) & மன்னரின் அரசாணை (the king’s edict # M/5) அடிப்படையில் ஹிஜ்ரி 1386 ல் வெளியிடப்பட்டது.
  • சவூதி அரபு குடியுரிமை செயலாக்க அமைப்பு (the system of Saudi Arab citizenship) & மந்திரிசபை தீர்மானம் (# M/4 )அடிப்படையில் 1974 ஜனவரி 25 ல் முடிவுசெய்யப்பட்டு உயர்மட்டக்குழுவில் மன்னர் ஆற்றிய உரையின் (High Council #8/5/8604) அடிப்படையில் 1974 பிஃப்ரவரி 22 ல் அங்கீகாரம் வழங்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
  • அச்சடிக்கப்பட்ட பிரதிகள் மற்றும் வெளியீடுகள் தொடர்பான செயலாக்க அமைப்பு & மன்னரின் அரசாணை (#M/17 (13-4-1402 AH)) அடிப்படையில் வெளியிடப்பட்டது.
  • தரிசுநிலங்களை பண்படுத்துதல் தொடர்பான சட்டங்கள். இஸ்லாத்தின் அடிப்படையில் ஒருவர் ஒருதுண்டு தரிசுநிலத்தை பண்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவந்தால் அது அவருக்கு உரிமையாக ஆகிவிடும். ஆனால் இந்த இஸ்லாமிய சட்டத்தை ரத்துசெய்யும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டு கி. பி. 1987 முதல் இதுதொடர்பான மனித சட்டங்கள் அமலுக்கு வந்தன.
  • சவூதி அரேபியா குடிமகளாக இல்லாத பெண்ணை திருமணம் செய்துகொள்ளுதல் தொடர்பான செயலாக்க அமைப்பு
  • வரிவிதிப்பு தொடர்பான பொதுச்சட்டங்கள் & மன்னரின் அரசாணை (#M/9 (4-6-1395 AH)) அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது
ஷரீஆ நீதிமன்றங்கள் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் :
மற்ற முஸ்லிம் நாடுகளை போலவே சவூதியில் ஷரீஆ நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்டு உரிமையியல் நீதிமன்றங்கள் அல்லது மனித சட்டங்கள் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் நீதி மன்றங்கள் இயங்கிவருகின்றன. இதற்கு முன்பு குறிப்பிடப்பட்டது போல் அங்கு வசிக்கும் முஸ்லிம்கள் அதிர்ச்சியடைவார்கள் என்பதற்காக அல்லது சவூதி அரசின் மிகப்பெரிய தூண்களாக விளங்கும் அந்நாட்டின் அறிஞர்கள் சங்கடம் அடைவார்கள் என்பதற்காக அவற்றை சவூதி அரசு உரிமையியல் நீதிமன்றங்கள் என்று அழைப்பதில்லை. சவூதி அரசை பொருத்தவரை, மனித சட்டங்கள் அனைத்தும் அநீதி செயல்பாடுகள் கவுன்ஸில் (Dewan of Mazhalim – council of injustice) போன்ற சட்டப்பேரவை மற்றும் தேர்வுக்குழு (legal forums council and committee) மூலமாக மட்டுமே அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த பேரவைக்குழு மற்ற நாடுகளில் இயங்கும் உரிமையியல் நீதிமன்றங்களை போன்றதாகும்.
 
மற்ற நாடுகளிலுள்ள உரிமையியல் நீதிமன்றங்களை சவூதி அறிஞர்கள் குஃப்ர் என்று குறிப்பிடுகிறார்கள் ஆனால் அவர்களுடைய நாட்டில் இயங்கும் சட்டப்பேரவை தேர்வுக் குழுவை பற்றி அவ்வாறு கூறுவதற்கு அவர்களுக்கு தைரியம் ஏற்படவில்லை! இந்த குழு வட்டி, மோசடி, லஞ்சம் போன்ற ஷரீஆ நீதிமன்றங்கள் விசாரிக்காத வழக்குகளை கையாளுகின்றன. இந்த சட்டப்பேரவை தேர்வுக்குழுவில் ஷைக்குகளும் ஸொர்போன் (Sorbonne) சட்டக்கல்லூரி போன்ற கல்லூரிகளின் வழக்கறிஞர்களும் இடம் பெற்றுள்ளார்கள், இஸ்லாத்திற்கு அந்நியமான சில விதிமுறைகள் அரசாணைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தீர்ப்புகளை அளித்து வருகிறார்கள்.
 
உதாரணமாக, இராணுவ நீதிமன்றங்கள் திவான் (Dewan of military courts) என்று அழைக்கப் படும் தனிப்பட்ட திவானின் அடிப்படையில் இராணுவ நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் 11/11/1366 கிபி ல் வெளியிடப்பட்ட சவூதி அரேபிய இராணுவத்தின் செயலாக்க அமைப்பு (the system of Saudi Arab Army) என்றழைக்கப்படும் மனித சட்டங்கள் பிரயோகிக்கப் படுகின்றன. இராணுவத்திற்கு மட்டும் தனிப்பட்ட முறையில் பிரயோகிக்கப்படும் இந்த சட்டங்களில் ஷரீஆ சட்டங்களும் அதற்கு அந்நியமான சட்டங்களும் அடங்கியுள்ளன. உதாரணமாக அவற்றில் ஹிராபா எனப்படும் மனித சட்டம் இடம்பெற்றுள்ளது, இதன் அடிப்படையில் அரசை கவிழ்ப்பதற்கு முயற்சிப்பவர்கள் கொல்லப்படுவார்கள். உண்மையில் இஸ்லாமிய இயக்கவாதிகளை ஒடுக்குவதற்காகவே இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக இராணுவம் அல்-ஸவ்து குடும்பத்தை நீக்கிவிட்டு மற்றொரு இஸ்லாமிய ஆட்சி யாளரை கொண்டுவரும் முயற்சிகளை தடுக்கும் பொருட்டே இந்த சட்டங்கள் கொண்டுவரப் பட்டன. திருட்டு குற்றத்திற்கு உரிய தண்டனையை பொருத்தவரை அது இஸ்லாத்தின் அடிப் படையில் நிறைவேற்றப்படும் என்று சவூதி அரசு கூறிக்கொண்ட போதும் அதுதொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை. திருட்டு குற்றம் புரிந்த நபர் குடிமக்களில் உள்ளவராக இருந்தாலும் இராணுவத்தினராக இருந்தாலும் கலீஃபா என்றாலும்கூட அவருடைய கையை துண்டிக்கவேண்டும் என்பதுதான் அறியப்பட்ட இஸ்லாமிய தண்டனையாக இருக்கிறது. எனினும் ‘சவூதி அரேபிய இராணுவ செயலாக்க அமைப்பு’ என்ற சட்டத்தின் 8 வது பிரிவு 12 வது விதிமுறையில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால் : ‘இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் ஆகியோர் மற்ற அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோரின் பொருட் களையோ அல்லது பணத்தையோ திருடினால் அந்த பொருள் நுகர்பொருளாக இருக்கும் நிலையில் அதை பயன்படுத்திவிட்டால் பிறகு அதற்குரிய பணத்தை கொடுத்துவிடவேண்டும் என்பதோடு ஒன்றரை மாதம் முதல் மூன்று மாதங்கள்வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் ஓர் அதிகாரி திருட்டு குற்றம் புரிந்துவிட்ட நிலையில் அதற்குரிய பரிகாரத்தையும் தண்டனையையும் ஏற்றுக்கொள்ள விரும்பினால் அவர் இராணுவ செயலாக்க அமைப்பு விதிமுறை 20 மற்றும் 22 பிரிவு 3ன் அடிப்படையில் தண்டிக்கப்படுவார். இராணுவ செயலாக்கஅமைப்பு அடிப்படையில் சில குற்றங்கள் ஷரீஆ நீதிமன்றங்களுக்கும் சில குற்றங்கள் விசாரணை குழுவிற்கும் (Council of trials) உட்பட்டதாகும்’
 
பிரிட்டனினால் உருவாக்கப்பட்டு அமெரிக்காவினால் பராமரிக்கப்படும் இந்த அரசின் ஆதரவாளர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியவர்களிடம் நாம் கேட்கிறோம்! இஸ்லாத்தின் சட்டங்கள் சிலர் நடைமுறைப்படுத்தும் வகையிலும் சிலர் நடைமுறைப்படுத்த முடியாத வகையிலும் உள்ளனவா-? அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றின் அடிப்படையில் தண்டனை சட்டத்தை இயற்றுவது தொடர்பான இஸ்லாமிய சட்டம் என்ன?
சவூதி அரசு வட்டி வரவுசெலவுகளை மேற்கொண்டுவருகிறது! ஹரம் ஷரீஃபிற்கு அருகில் நடந்து செல்பவர்கள் பிரிடிஷ்-சவூதி வங்கி, அமெரிக்க-சவூதி வங்கி, அரபு-தேசிய வங்கி, கெய்ரோ-சவூதி வங்கி ஆகியவற்றை காணலாம். ஹிஜ்ரி 1386ல் வெளியிடப்பட்ட மன்னரின் அரசாணை (the king’s edict # M/5) அடிப்படையில் வங்கிகள் தொடர்பான விதிமுறை 1ல் இடம்பெற்றுள்ள சவூதி சட்டங்களுக்கு இணக்கமாக இந்த வங்கிகள் வட்டி அடிப்படையிலுள்ள கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுவருகின்றன. வட்டி மற்றும் வங்கி நடிவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை கையாளும் வகையில் நிதியியல் நிறுவன அமைப்பின் குறிப்பிட்ட தேர்வுக்குழுவிற்கு வழக்குகள் அனைத்தும் தானாகவே மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த வகை வழக்குகள் எதுவும் ஷரீஆ நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படாது! இந்த சட்டத்திற்கு முன்னதாக வங்கியிலோ அல்லது நிதித்துறை அமைப்புகளிலோ கடன் வாங்கிய ஒருவர் தவணையை தாமாதமாக செலுத்தும்போது அவர்மீது உபரியான வட்டி விதிக்கப்படும், அத்தகைய தருணங்களில் கடன் வாங்கியவர் ஷரீஆ நீதிமன்றத்தை நாடுவார், அவர்மீது விதிக்கப்பட்ட வட்டியை ஷரீஆ நீதிமன்றம் ரத்துசெய்து தீர்ப்பு அளிக்கும், இதனால் நிதியியல் சார்ந்த சச்சரவுகள் அங்கு ஏற்பட்டுவந்தன.
 
ஒரே நிலப்பரப்பில் ஒருபுறம் ஷரீஆ நீதிமன்றங்களும் மறுபுறம் வங்கிகளும் அவர்களுக்கு தேவையாக இருக்கின்றன என்பது நகைச்சுவை காட்சிகளுக்கு ஒப்பாக இருக்கின்றன என்றே தோன்றுகிறது. நிதியியல் தொடர்பான இந்த சச்சரவுகளுக்கு தீர்வுகாணும் வகையில் இது தொடர்பான வழக்குகளில் ஷரீஆ நீதிமன்றம் தலையிடுவதற்கு ‘சிறப்பு சட்டங்கள்’ வாயிலாக தடை விதிக்கப்பட்டது.
 
 
சவூதி அரசிற்கும் GCC (Gulf Cooperation Council) எனப்படும் நிதியியல் அமைப்பிற்கும் இடையிலுள்ள உறவு வட்டி அடிப்படையில் உள்ளதாகும். ஒருங்கிணைந்த பொருளாதார ஒப்பந்தத்தின் (Unified Economic Agreement) விதிமுறை 22ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது : “உறுப்பினர்களாக உள்ள அரசுகள் தங்களுடைய வங்கிநிதி தொடர்பான நிதியியல் நடிவடிக்கைகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பதோடு நிதியியல் நிறுவன அமைப்புகளுக்கு மத்தியிலுள்ள ஒத்துழைப்பை அதிகரிக்கவேண்டும்” இது வட்டி அடிப்படையிலுள்ள நடவடிக்கை என்பது தெளிவானதாகும் ஏனெனில் வங்கிகளும் நிதி நிறுவன அமைப்புகளும் வட்டியை அடிப்படையாக கொண்டே இயங்கிவருகின்றன.

2 comments:

  1. Abdulaziz,Saud,Faisal,Khalid,Fahd,Abdullah,Salman..are not khadim of haramain and sharifain But khadim of White house in washington Dc

    ReplyDelete
  2. Abdulaziz,Saud,Faisal,Khalid,Fahd,Abdullah,Salman..are not khadim of haramain and sharifain But khadim of White house in washington Dc

    ReplyDelete