Jan 28, 2016

சவூதி அரேபியா இஸ்லாமிய அரசா அல்லது குஃப்ர் அரசா – பாகம் – 2

 
சவூதி அரசு மற்றும் அரபுநிதியம் (Arab Monetary Fund) :
 
அபூதாபியை மையமாக கொண்டு இயங்கும் அரபு நிதியம் என்ற நிதியியல் அமைப்பு வட்டி அடிப்படையில் இயங்கும் மிகப்பெரிய நிறுவனமாகும், 4-/7/76 ல் மொரோக்கோவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அது நிறுவப்பட்டது. சவூதி அரசுதான் அதன் மிகப் பெரிய பங்குதாரராக இருக்கிறது, மற்ற அனைத்து பங்குதாரர்களை விடவும் அதன் பங்குத் தொகை மதிப்பில் சராசரியாக 3.2 சதவீதத்தை வட்டியாக பெற்றுவருகிறது!
 
சவூதி மற்றும் சர்வதேச நிதியம் (International Monetary Fund) :
 
சர்வதேச நிதியம் எனும் மேற்கத்திய நிதி நிறுவனத்தின் மிகப்பெரும் பங்குதாரர்களில் சவூதி ஆறாவது பெரிய பங்குதாரராக விளங்குகிறது! இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குத் தொகையில் சவூதி 3.5 சதவீதத்தை முதலீடு செய்துள்ளது, இதன்காரணமாக அந்நிறுவனத்தின் நிர்வாக செயற்குழுவில் நிரந்தர உறுப்பு நாடாக சவூதி திகழ்கிறது!
எனவே, வட்டி அடிப்படையில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதை நிரந்தர கொள்கை யாக கொண்டுள்ள ஓர் அரசு எவ்வாறு இஸ்லாமிய அரசாக இருக்கமுடியும்? ஆயிரக்கணக் கான அல்குர்ஆன் பிரதிகளை நன்கொடையாக அளிப்பதின் காரணமாகவா? அல்லது அல்&ஸவ்து ஆதரவாளர்களான அறிஞர்கள் அவ்வாறு கூறுவதின் காரணமாகவா?!
 
சவூதி மற்றும் அதன் அந்நிய உறவுகள் : நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் :
 
ஐக்கியநாட்டு சபையில் சவூதி உறுப்பினராக இருப்பது அனைவராலும் அறியப்பட்ட ஒன்றுதான். ஐ.நா. சபையின் அரசியல் சாஸனம் விதிமுறை 92 அடிப்படையில் நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் ஐ.நா.வின் பிரதான நீதித்துறை அமைப்பாக விளங்குகிறது. ஐ.நா. சபையின் அரசியல் சாஸனத்தின் ஒருபகுதியாக விளங்கும் செயலாக்கஅமைப்பு அடிப்படையில் நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் தனது கடமைகளை நிறைவேற்றிவருகிறது. உறுப்பினராக உள்ள ஒவ்வொரு அரசும் இந்த செயலாக்க அமைப்பை மதித்து நடக்கவேண்டியதும் அதை அங்கீகரிக்க வேண்டியதும் கட்டாயமாகும். விதிமுறை 94 கூறுவதாவது : “ஐ.நா-. சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் தான் தொடர்பு கொண்டுள்ள வழக்குகளில் நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளவேண்டும்”
சர்வதேச சட்டங்கள் அல்லாஹ்(சுபு)வின் வேதத்திலிருந்தும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னாவிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளதா? சவூதி அரசு அதற்கு கட்டுப்பட்டு நடப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? இஸ்லாத்தை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே ஐ.நா-. சபை உருவாக்கப்பட்டுள்ளது. சவூதி அரசு ஐ.நா-.வின் உறுப்பினராக மட்டும் இல்லை அதை ஆதாரிப்பதில் முன்னோடியாகவும் திகழ்கிறது! அது ஐ.நா-. சபையை நிறுவிய நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது என்று சிலர் கூறும் அளவுக்கு சவூதி அரசு அதற்கு நெருக்கமாக இருந்து வருகிறது. சவூதியின் அன்றைய வெளிவிவகார அமைச்சராக இருந்த இளவரசர் ஃபைஸல் இப்னு அப்துல் அஸீஸ் 1945ல் ஸான் ஃபிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் கூறியதாவது : “காகிதத்தில் எழுதியுள்ள இந்த விதிமுறைகளுக்கு நாம் கட்டுப்பட்டு நடந்து கொள்வோம் . . . இந்த அரசியல் சாஸனம் நமக்கு அடித்தளமான அமையட்டும்! அதன்மீது நமது சிறந்த புதிய உலகத்தை உருவாக்குவோம்!”
 
சவூதி மற்றும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) :
 
1946ல் ஐக்கியநாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு என்ற சர்வதேச நிறுவனம் உருவாக்கப்பட்டபோது சவூதி அரசு அதற்கு 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியதின் மூலம் அதன் உருவாக்கத்தில் பெரும்பொறுப்பை எடுத்துக்கொண்டது. இத்தகைய பெருந்தொகையை வட்டியில்லா கடனாக அளித்ததோடு 5000 டாலர்களை அதன் திட்டங் களுக்கு நன்கொடையாக வழங்கியது. இஸ்லாத்தை திரித்து பிரச்சாரம் செய்தல் மற்றும் மேற்கத்திய சிந்தனைகளை பரப்புதல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. உதாரணமாக, இந்த நிறுவனம் வெளியிட்ட ‘மனித இனத்தின் வரலாறு மற்றும் அதன் அறிவியல் முன்னேற்றங்கள் தொடர்பான தகவல்களஞ்சியம்’ (Encyclopedia on the History of Human Race and its Development)  என்ற கலைக்களஞ்சியம் தொடர்பான நூலின் பாகம் 3 அதிகாரம் 10ல் கூறப்பட்டிருப்பதாவது :
  • இஸ்லாம் என்பது இட்டுக்கட்டப்பட்ட ஒரு மதமாகும், அது யூதம், கிருஸ்த்தவம் மற்றும் அரபியாவின் பலதெய்வ கோட்பாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக் கப்பட்டுள்ளது.
  • குர்ஆன் என்பது சகிப்புத்தன்மையற்ற ஒரு நூலாகும்
  • இறைத்தூதருக்கு பின்னர் நீண்டகாலத்திற்கு பிறகு இறைத்தூதர் பெயரால் அவரை பற்றிய ஹதீஸ் அறிவிப்புகளை சிலர் உருவாக்கினார்கள்
  • ரோமர்கள், பாரசீகர்கள், கிருஸ்த்தவ தேவாலய சட்டங்கள் மற்றும் பைபிளின் பழய   ஏற்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் முஸ்லிம் சட்ட அறிஞர்கள் இஸ்லாமிய சட்டவியலை ஏற்படுத்தினார்கள்
உள்ளபடியே, தலா நூர் அத்தர் என்பவர் ‘சவூதி மற்றும் ஐ. நா. சபை’ என்ற தமது நூலில் சவூதியை புகழந்து கூறும் வண்ணம், ‘சவூதி அரசு யுனஸ்கோ (UNESCO) நிறுவனத்திற்கு 17,040,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்தது’ என்று கூறியுள்ளார்.
இஸ்லாத்தை குறித்து அவதூறு பரப்பும் வண்ணம் யுனஸ்கோ நிறுவனம் எழுதியுள்ள கருத்துக்கள் குறித்து சவூதி அரசாங்கம் அறியாமை கொண்டுள்ளதா அல்லது அதுகுறித்து ஒருபோதும் கேள்விப்படவில்லையா?! அல்லது இதன்பொருட்டுதான் அது மாபெரும் தொகையை நன்கொடையாக அளித்ததா?!
 
 சவூதி மற்றும் அரபுலீக் :
 
இந்த தேசியவாத அமைப்பில் சவூதி உறுப்பினராக மட்டும் இருக்கவில்லை மாறாக அதன் நிறுவனர்களில் ஒருவராகவும் திகழ்கிறது! அரபுலீக் அரசியல் சாஸனத்தின் 8வது விதிமுறை கூறுவதாவது : ‘அரபுலீக்கில் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு நாடும் அதன் உறுப்பினராக உள்ள மற்ற நாடுகளின் நிலையான ஆட்சிமுறையை மதித்து நடந்துகொள்ளவேண்டும். இந்த அரசுகளின் உரிமை என்று அதை கருதவேண்டும் என்பதோடு அவற்றின் ஆட்சிமுறைகளை மாற்றும் நோக்கத்துடன் எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது என்பதை தனக்குத்தானே கடமையாக ஆக்கிக்கொள்ளவேண்டும்’
 
சவூதியை இஸ்லாமிய அரசு என்று ஒருவேளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், குஃப்ரை அங்கீகரிப்பதற்கும் அதற்கு ஆதரவு நல்குவதற்கும் அதை மாற்றுவதற்கு முயற்சிக்க மாட்டோம் என்று உறுதியளிப்பதற்கும் இஸ்லாத்தில் அனுமதியிருக்கிறதா? எனவே இராக்கின் பாத்திஸ்ட் அரசும், சிரியாவின் அலவைத் அரசும் மதிக்கப்படவேண்டுமா? சவூதி அரசு பிரச்சாரம் செய்துவரும் தேசியவாதம் தொடர்பான சட்டம் பரவலாக அறியப்பட்டது என்ற முறையில் அதுகுறித்து நாம் இங்கு குறிப்பிடவில்லை.
 
சாக்குப்போக்கு வாதங்கள் :
 
சவூதி அரசு சுயவிருப்பம் இல்லாத நிலையில் நிர்பந்தத்தின் காரணமாக இந்த நிலைப் பாட்டை எடுத்துள்ளது என்று சிலர் கூறுகிறார்கள்! குறிப்பிட்ட நிகழ்வுகளை பொருத்தும் சவூதி அரசின் குறிப்பிட்ட வாக்குமூலத்தை பொருத்தும் இவ்வாறு கூறலாம், ஆனால் பிரிட்டன் அரசால் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து சவூதி அரசு மேற்கூறப்பட்ட அடிப்படையில் தனது கொள்கைகளை வகுத்து செயல்படும்போது எவரும் இவ்வாறு கூறமுடியாது. எந்தநிலையிலும் மன்னர் ஃபஹது இதற்கு மாற்றமாகவே அறிவிப்பு செய்துவருகிறார், “ஒவ்வொரு குடிமகனும் தனது நாட்டை பொருத்து தலைநிமிர்ந்து நடக்கும் வகையில் செயல்படவேண்டும். சவூதி அரேபியாவின் அரசாட்சியில் அந்நிய நாடுகள் எவ்வகையிலும் தலையீடு செய்வதற்கு அனுமதிக்காத வகையில் பரஸ்ப்பர பயன்களின் அடிப்படையில் நட்புரீதியான உறவுகளை மற்ற நாடுகளுடன் நாம் கொண்டுள்ளோம் (ஹிஜ்ரி 1405 ஸஃபர் பிறை 8 வியாழன் அன்று மன்னர் ஆற்றிய உரையிலிருந்து)
ஆகவே சவூதி அரசு இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்பது தெளிவாகும். இதன்முடிவாக, கிலாஃபாவை மறுநிர்மாணம் செய்வதின் மூலமாக இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்காக பணியாற்றுதல் என்பது முஸ்லிம்கள்மீது வாஜிபாக இருக்கிறது.

No comments:

Post a Comment