ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُم بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ
 மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.
(அல்குர்ஆன் : 30:41)

 2015 ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி, சென்னை தனது வரலாற்றில் நூறு வருடங்களில் கண்டிராத அளவுக்கு மிக அதிகமான மழைப்பொழிவை சந்தித்தது. 1918 ம் ஆண்டு 108 செ.மீ மழை பெய்தததாகவும், 2015 ஆண்டில் மட்டும் டிசம்பர் 1ம் தேதி வரை 120 செ.மீ. ரை தாண்டிவிட்டதாகவும் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் மழைக்காலங்களாக அறியப்படுகின்றன இப்பருவ காலம் தமிழ்நாட்டிற்கு  புயல், மழை மற்றும் வெள்ளம் கொண்டு வருவது நன்கறிந்த விஷயமாகும். ‘Monsoon’ என்கிற ஆங்கில வார்த்தை போர்த்துகீசிய வார்த்தையான மான்காவ் (mancao) விலிருந்தும் அரபிய வார்த்தையான மவ்ஸிம் (mawsim) மற்றும்/அல்லது ஹிந்தி மவ்ஸம் (mawsam) வழியாகவும் மற்றும் ஆரம்ப கால நவீன டச்சு வார்த்தையான மான்ஸன் (monsun) மூலம் தோன்றியது (1).
 
 வடகிழக்கு பருவநிலை 2015 அக்டோபர் 28ம் தேதி ஆக்ரோஷத்துடன் துவங்கிய அன்றிலிருந்து ஏற்பட்ட சில புயல்களினால் ஏற்கெனவே பலமாக இருந்தது. நவம்பர் மாதம் முழுவதும் தொடர்ந்து ஓயாமல் பெய்த மழையால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலுள்ள சென்னை மாநகரம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பெரும்பான்மையான பெரிய மற்றும் சிரிய நீர்நிலைகள் பெருமளவு நிரம்பியிருந்தது. 2015 டிசம்பர் 1ம் தேதி இந்நூற்றாண்டின் அதிகமான மழை பொழிந்த நாளாக விளங்கியது (2), இதன் விளைவாக அனைத்து நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி மக்கள் வாழும் பகுதிகளில் வடிந்தோடியது. இதன் காரணமாக வீடுகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 2 அடி முதல் சில இடங்களில் 30 அடி வரை தண்ணீர் தேங்கும் அளவிற்கு தண்ணீர் வெள்ளத்தால் சூழப்பட்டது. சில இடங்களில் மிக நெருக்கமான வீடுகளை கொண்ட அடுக்கு மாடி கட்டிடங்கள் அரசாங்கத்தால் குடியிருப்பு திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட குடியிருப்புகள் இந்த ஆற்றங்கரைகளில் அமைந்துள்ளது – இவை பல ஆண்டுகளில்  இது போன்ற ஒரு வெள்ளப்பிரளயத்தை கண்டதில்லை. இந்த குடியிருப்புகளில் தண்ணீர் இரண்டு மாடி அளவிற்கு தேங்கியிருந்தது இதனால் இங்கு வாழ்ந்த மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்தது மேலும் இவர்களுடைய உயிர், வாழ்வாதாரம் மற்றும் சொத்துக்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.  அரசு அதிகாரபூர்வ தகவலின்படி இதுவரை 269 பேர் உயிர் இழந்துள்ளனர் (4) கணக்கில் வராத உயிரிழப்புகள் அதிகமாக இருக்கக்கூடும். தகவல் தொழில்நுட்ப துறை, வாகன உற்பத்தி துறை, தகவல் தொடர்பு துறை போன்றவற்றன் பொருளாதார நஷ்டம் மட்டும் 15,000 கோடி (USD 2.3Bn)  என புள்ளி விவரங்கள் நமக்கு விவரிக்கின்றன (3), பல பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பொருளாதார ரீதியாக எவ்வளவு சொத்துக்களை இழந்திருப்பார்கள் என்பது நமக்கு தெரியவில்லை.
 
 இந்த நூற்றாண்டின் இவ்வாறான ஒரு சவாலை எதிர்கொண்டு இம்மாநகரத்தின் 43 லட்ச மக்கள் (2) தங்களது சகஜ வாழ்வு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கையில், நாம் இந்த நிகழ்வை பற்றி நமது சிந்தனையில் அசை போடுவோம்.
 
 1. மனிதர்களாகிய நாம் வரக்கூடிய மழையை தடுக்க முடியாது, ஆனால் நீர்த்தொட்டிகளையும், ஆறுகளையும் சரியாக பராமரிப்பது நமது கட்டுப்பாட்டில் உள்ளது. உதாரணமாக சென்னையில், அதிகப்படியான பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் கூவம் மற்றும் அடையாறு ஆற்றோரம் அமைந்த பகுதிகளாகும். இந்த ஆறுகளில் விடப்படும் கழிவுகளால் ஏற்பட்ட குப்பைகளை தூர் வாரி சுத்தம் செய்திருந்தால் அதில் பாய்ந்த தண்ணீரை அதிவிரைவில் கடலில் கொண்டு சேர்க்கும் ஆற்றல் பெற்றிருக்கும – எனவே முதற்கட்டமாக இந்த ஆறுகள் குப்பைகள் அற்றதாக இருக்க வேண்டும். கோட்டூர்புரம் பாலத்திற்கு அருகே அமைந்திருக்கும் வீட்டுவாரிய குடியிருப்பில் 2 மாடி அளவுக்கு தண்ணீரில் மூழ்கி இருந்தது மிகவும் வேதனை அளிக்க கூடிய விஷயமாகும, குப்பைகளாலும் பாலத்தின் உயரத்தாலும் நீரோட்டம்  தடைபட்டதால் குடியிருப்பு பகுதியில் வேகமாக தண்ணீர் பரவியதை நம்மால் நன்கு உணர முடியும்.  நீர்நிலைகளை சுத்தம் செய்வது போன்ற சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியிருந்தும் அரசு அந்த திட்டங்களை செயல் படுத்துவதில் மெத்தனமாக இருந்திருக்கிறார்கள்,  அவர்கள் எந்த அளவுக்கு மெத்தனமாக இருந்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இது போன்ற ஒரு பேரழிவு ஏற்பட்டுள்ளது என மாநிலத்தின் பல்வேறு தரப்பிலிருந்து குற்றம் சாட்டுகின்றனர். முதற்கட்டமாக இது போன்ற ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கும் இடங்களில் குடியிருப்புகள் அமைக்க அனுமதித்ததின் ஞானத்தை பற்றி  நிச்சயம் கேள்வி எழுகிறது.
 
 2. நகரத்தின் அபரிதமான வளர்ச்சியின் காரணத்தால் ஒரு காலத்தில் இயற்கை நீர்நிலைகளாக இருந்தவைகள் எல்லாம் உருமாறி  இப்போது வீடுகளாகவும் வியாபார நிறுவனங்களாகவும் வளர்ந்து நிற்கின்றது. வளர்ச்சி என்பது வரவேற்கத்தக்கது தான்-  தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் வெவ்வேறு அரசுகள் பெருநகர/நகர/பஞ்சாயத்து கட்டமைப்பை திட்டமிடும்போது வெள்ளம் ஏற்படாதவாறு இயற்கையாக பாய்ந்து செல்லும் நீரோட்டத்திற்கு எந்த இடையூறுகள் ஏற்படாத வண்ணம் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தார்களா? இக்கட்டமைப்புகளுக்கான திட்டத்திற்கு ஒப்புதலை பெறுவதற்காக நடந்த ஊழலினால் ஏற்பட்ட தவறுகள் இப்போதைய நிலைமையை மிகவும் மோசமாக்கியுள்ளது. இந்த செயலை எந்த அரசு செயல்பாட்டில் இருந்தாலும் பாகுபாடு இல்லாமல் இதே ஆற்றலுடன் தான் செயல்பட்டிருக்கிறது.
 
 3. இயற்கை பேரிடர்களின் போது மக்கள் தங்களது தனிமையிலிருந்து விடுபட்டு ஒரு படி உயர்ந்து ஒன்று சேர்ந்து கூட்டாக ஒருவருக்கு ஒருவர் உதவி புரிந்து வருகின்றனர். இந்த மீட்புப்பணிகளில் பெருமளவில் சமயம் கடந்து  தன்னார்வ நிறுவனங்கள் ஈடுபட்டன இதில் மிகக் குறிப்பாக முஸ்லிம் அமைப்புகளின் ஈடு இணையற்ற செயல்பாடுகள் குறிய்ய. ஊடகங்கள் மற்றும் சமூக வளைத்தளங்கள் ஆக்கப்பூர்வமாக இச்செய்திகளை பகிர்வதற்கு உதவியதன் மூலம் இந்த மீட்புப்பணிகளை மேற்கொள்வதில் பெரும் உதவி உண்மையை அவர்களுக்கு உதவி புரிந்தது – இந்த செயல்பாடு ஏற்கனவே சென்ற வாரம் வரை முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற மக்கள் கொண்டிருந்த கண்ணோட்டத்தை மாற்றி முஸ்லிம்கள் மிகவும் தாராள உள்ளம் படைத்தவர்கள் என்ற உண்மையை அவர்களுக்கு உணர வைத்தது. சமூக வளைத்தளங்கள் இவ்வாறான அங்கீகாரத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றியது – முகநூலில் ‘Rains of Humanity’ என்ற பக்கத்தில் சங்கர ராம பாரதி என்பவர் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்ட மாற்று உறைவிடத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட செய்தி இவ்வாறு கூறுகிறது “இது போன்ற பயங்கரமான காலகட்டத்தில், நமது பிரபலமான ஊடகங்கள் அதிரடி கதாநாயர்களான அர்ஜுன், சரத்குமார், மற்றும் விஜயகாந்த் போன்றவர்கள் ஆபத்திலிருந்து மீட்பவர்களாகவும் தாடி வைத்த முஸ்லிம் இளைஞர்களை வில்லன்களாகவும் சித்தரித்து வந்தன. ஆனால் இன்று, வில்லன்களாக சித்தரிக்கப்பட்ட இதே தாடி வைத்த இளைஞர்கள் தான் மாநகரத்தின் மூளை முடக்குகள் எல்லா இடத்திலும் பரவி உள்ளனர் மேலும் இவர்கள் ராணுவம் மற்றும் அரசு நிர்வாகம் செல்லத்தயங்கிய இடங்களுக்கு தைரியத்துடன் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நான் இந்த இளைஞர்கள் பாதிக்கப்பட்ட பல ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரை மீட்டு வருவதையும் இறந்த பிரேதங்களை கரைக்கு கொண்டு வருவதையும் உணவு பொட்டலங்களை விநியோகித்து வருவதையும் நான் கண்டு வருகிறேன். நான் இப்போது மசூதி ஒன்றில் தஞ்சம் அடைந்தவனாக அமர்ந்திருக்கும் இவ்வேளையில் அல்லாஹ்விடம் நான் இந்த நல் உள்ளம் படைத்தவர்களை தீவிரவாதிகள் என பல முறை நம்பி வந்ததற்காக பாவமன்னிப்பு கோருகிறேன்”. உலகளாவிய பிரச்சனைகளில், அதாவது பாலஸ்தீனம், அப்கானிஸ்தான், ஈராக், சிரியா, பயங்கரவாதத்திற்கு எதிரான போர், சர்வதேச பொருளாதாரம், வருமை போன்ற நீண்ட பட்டியலை கொண்ட பிரச்சினைகளில் இதுபோன்ற  ஒரு ஆக்கப்பூர்வமான ஒருமித்த மனசாட்சி கொண்ட மக்களாக விளங்க வேண்டும் என இந்நேரத்தில் மக்களுக்கு ஞாபக படுத்துவது இன்றியமையாததாகும்.
 
 4. மக்களிடையே உள்ள பலதரப்பட்ட சக்திகள் – குறிப்பாக இளைஞர்களின் சக்தி – இதுபோன்ற சவாலான நேரத்தில் உதவ முன் வந்தது மிகவும் பாராட்டுதலுக்குரிய விஷயமாகும். எந்தவொரு அரசிடம் இது போன்ற சக்திகளை மெருகேற்றி அதை சரியான திசையை நோக்கி செலுத்த ஒரு அமைப்பு இல்லையோ, எப்போதும் அதன் பார்வை அக்கரையை நோக்கிய வண்ணமே இருக்கும். அரசு சரியான தொடர்பு ஏற்படுத்த தவறிவிட்டதாக செய்திகள் பல வந்துள்ளன, தேசிய இடர் மீட்பு படையிலும் இது அடங்கும். சரியான தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்பு இருந்திருந்தால் மீட்புப்பணியில் மிகுந்த பலன் அளித்திருக்கும்.
 
 5. பலத்த மழை பொழிந்த 2015 டிசம்பர் 1 ம் தேதிக்கு இரண்டு வாரத்திற்கு முன்னர் தான், சென்னை பலத்த புயலை எதிர்கொண்டு அதன் மூலம் பலத்த மழை பெய்து மாநகரத்தின் பல பகுதிகளை மூழ்கடித்தது. இக்காலத்தில் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுவதில் குறைபாடு காணப்பட்டது. மாநில மத்திய அரசுகளுக்கு இடையேயான அரசியல் வேற்றுமையே இதற்கான காரணமாக அமைந்திருக்கும், இருந்தபோதும் 2015 டிசம்பர் 1 ம் தேதி அவர்களின் நிலையிலிருந்த பின்வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுவுமில்லாமல் மாநிலத்தின் அரசியல் கட்சிகளுக்கு இடையே இருந்த வேற்றுமைகளும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. மாநிலத்தின் எதிர்கட்சிகள் தங்களுக்கு எந்தவொரு நன்மையும் ஏற்படாது என்றபோதும் வெறுமனே ஆட்சியாளர்களை கேள்வி கேட்கிறோம் என்ற அடிப்படையில் தங்களை நியாயப்படுத்தும் விதமாக ஆட்சியாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்திவருவதை நாம் காண்கிறோம். வெகுஜன மனிதனை பொறுத்தவரை, இது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் ஆட்சியை பிடிக்க போட்டியிடும் அமைப்பில் எவ்விதத்திலும் தங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி கொள்ளவதற்கான முயற்சி என்பதை நன்கு விளங்கி வைத்துள்ளனர். – அரசியல் ஆதாயத்தை மீறி மக்களின் நலன் மீது முதன்மையான அக்கறையை கொண்டிருக்கும் ஒரு அரசியல் அமைப்பு இக்கட்டான சூழ்நிலைகளில் மக்கள் எவ்விதத்திலும்  துன்புறாமல் பார்த்துக்கொள்ளும்.
 
 6. இயற்கை பேரிடரை பற்றிய விழிப்பணர்வும் எச்சரிக்கையும் நாம் ஏற்கனவே யூசுப் (அலை) அவர்கள் வாழ்வில் மூலம் அறிந்திருக்கிறோம், அப்போது அதற்கான முன் அறிவிப்பு கனவு வழியாக வந்தது – எவ்வாறிருப்பினும், இந்த பேரிடர் மேலாண்மையை எதிர்கொள்ள யூசுப் (அலை) அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்து 7 வருடம் நிலவி வந்த வறட்சியை சமாளித்தார்கள். கனவுகள் மூலம் முன் அறிவிப்பு வருவது பழங்கால வழக்கமாக இருக்கலாம், ஆனால் இன்று நம்மிடையே இருக்கும் அதி நவீன தொழில்நுட்பத்தை நம் கட்டமைப்பின் திட்டமிடுதலில் பயன்படுத்தி பேரிடர்களை சமாளிக்கலாம் – அல்லாஹ் (சுபு)வின் அனுமதியோடு.
 
 வரவிருக்கும் கிலாஃபாவானது  முஸ்லிம் மற்றும் முஸ்லிம்  அல்லாதவர்கள் என இஸ்லாத்தின் வரையறைக்கு உட்பட்டு மக்களின் நலனை மட்டுமே முதன்மையானதாக கொண்டிருக்கும், இது அல்லாஹ் (சுபு)வின் நிழலை இந்த பூமியில் பரவச்செய்யும் தெளிவான ஆற்றல் உடையதாக  இருக்கும். இக்கால அரசுகளை மாதிரியான அலட்சியபோக்கு உடையதாகவோ, ஊழலில் சிக்குவதையோ, அரசியல் ஆதாயத்திற்காக தன் நிலையை மாற்றிக்கொள்ளவோ அல்லது தொழில்நுட்ப பற்றாக்குறையாக இருப்பதையோ ஒருபோதும் அனுமதிக்காது. இந்த மாதிரியான அரசு பிரபஞ்சத்தை மதிக்கக்கூடியதாகவும் அதில் வாழும் உயிர்களை தனக்கு இறைவன் கொடுத்திருக்கும் பொறுப்பாக அதற்கு அவனிடம் பதிலளிக்க வேண்டும் என்ற கோணத்தில் பார்க்கும் எனவே சில தனி நபருக்காக அல்லது நிறுவனங்கள் அல்லது பிற தேசத்தின் நலனுக்காக சேவை செய்வதை ஒருபோதும் அனுமதிக்காது. மேலும் கலீஃபாவின் மீதான அரசியல் ரீதியாக தவறுகளை சுட்டிக்காட்டுவது மிகவும் முக்கியம் வாய்ந்த கடமையாகும் மேலும் இந்த காரியமானது புனிதமாக கருதப்படுகிறது எனவே இதிலிருந்து முஸ்லிம்கள் ஒதுங்கி கொள்வதற்கு அனுமதி கிடையாது – இவ்வாறு இருக்கையில் இதுபோன்ற தவறுகளை சுட்டிக்காட்டுவது அரசியல் ஆதாயம் பெறுவதற்காக செய்யப்படுவதல்ல மாறாக அல்லாஹ் (சுபு)வின் எல்லைகளை தாங்கி பிடிப்பதற்காக மட்டுமே என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
 
 References:
 3. The Hindu, 03 Dec 2015 Chennai edition
Reactions:

0 comments:

Post a Comment

வாசித்தவர்கள்

Blog Archive

தொகுப்புகள்

'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்
Powered by Blogger.

Map IP Address
Powered byIP2Location.com

Follow by Email

Enter your email address:

Delivered by FeedBurner

இஸ்லாமிய மறுமலர்ச்சி

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

About Me

My photo
“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com