செய்தி பார்வை 10.02.16

தலைப்பு செய்திகள்:
 
 
 - நயவஞ்சக மெர்கல் மற்றும் செல்லப்பிராணி எர்துகான்.
 

- சிரியாவில் நடைபெறும் இனச்சுத்திகரிப்பு.
 

- அலெப்போவின் மீது படையெடுப்புக்கான நேரம் நெருங்கிவிட்டது
.

 நயவஞ்சக மெர்கல் மற்றும் செல்லப்பிராணி எர்துகான்.
 

 2016 பிப்ரவரி 8ம் நாள் திங்கட்கிழமை அன்று துருக்கி மற்றும் ஜெர்மனி நாடுகளின் அதிகாரிகள் “சட்டத்திற்கு புறம்பாக குடியேறுபவர்களை” கட்டுப்படுத்த போவதாக அங்காராவில் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கலின் துருக்கி பயணத்தை தொடர்ந்து விடப்பட்டது. ரஷ்யா சிரியாவின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருவது என்னை ஆச்சரியப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் என்னை திகிலடைய வைத்துள்ளது என மெர்கல் குறிப்பிட்டார், இந்த சமீபத்திய அலெப்போவின் மீதான தாக்குதல் நடவடிக்கை 35,000 புதிய அகதிகளை துருக்கியின் எல்லைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த வெடிகுண்டு தாக்குதல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள அகதிகளின் படையெடுப்பு அதிகரித்தல் ஆகியவற்றை தொடர்பு படுத்தும் அதே வேளையில் ஜெர்மனி சிரியாவில் நிலைகொண்டு அதன் மீது வெடிகுண்டுகளை வீசி அங்குள்ள மக்களை விரட்டியடித்து இன்னும் அதிகமான அகதிகளை உருவாக்கி வரும் அதன் நேச நாடுகளின் விமானங்களை காப்பாற்றி வருகிறது. நிச்சயமாக அறிவார்ந்த செயல் என்னவாக இருக்கும் என்றால் ஐக்கிய ஐரோப்பிய நாடுகளை நோக்கி மிக ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் அகதிகளை உருவாக்காமல் தடுக்க அந்நாட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல்களை தடுத்தாலே போதுமானது. எர்துகானும் பழிக்கு உள்ளாவதிலிருந்து தப்பித்தவர் கிடையாது ஏனெனில் அவர் அமெரிக்கா சிரியாவின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க விமானங்களை துருக்கி விமானத்தளத்திலிருந்து இயக்க அனுமதி அளித்தவர். துருக்கி பில்லியன் கணக்கில் அகதிகளுக்கு தஞ்சம் கொடுப்பதற்காக செலவு செய்யலாம் ஆனால் இந்த சிரியாவின் பிரச்சினையை தனது இராணுவத்தை அனுப்புவதன் மூலம் ஓரிரு வாரங்களில் தீர்த்து வைத்துவிட முடியும். துருக்கி தனது அனைத்து வெளியுறவு கொள்கைகளில் வெறுமனே மேற்கத்திய தீர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்து அதற்கு உதவும் நிலைப்பாட்டையே கொண்டுள்ளது, அது தன்னிச்சையாக தான் எடுக்கவிருக்கும் தீர்வுகளை நடைமுறை படுத்துவதற்கும் அதனை செயலாற்றுவமற்குமான ஆற்றல் அதிகாகவே இருந்தபோதிலும்  அது என்றும் அதற்கென ஒரு தன்னிச்சையான தீர்வுகளை உருவாக்குவதில்லை.
 

 சிரியாவில் நடைபெறும் இனச்சுத்திகரிப்பு.
 

சிரியாவில் கைதிகளை ‘அடியோடு அழிக்கும்’ வேலை நடந்து வருவதாக ஐ.நா வின் குறிப்பிட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிறைக்கைதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், மரணம் ஏற்படும் அளவு அடித்துள்ளதாகவும் அல்லது சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில் சிக்கி மரணிக்கும் விதமாக அவர்களை  கண்டு கொள்ளாமல் அங்கேயே விட்டு விட்டதாகவும் சர்வதேச விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள், இவ்வகையான செயல்கள் சர்வதேச சட்டப்படி “இனச் சுத்தகரிப்பு” என்னும் வகையை கொண்டது. அதிபர் பஷார் அல்-அசாதின் அரசால் கொல்லப்பட்ட சிறைக்கைதிகளை பற்றிய 25 பக்கங்களை கொண்ட அறிக்கையை ஐ.நா வின் அங்கீகாரம் பெற்ற விசாரணை குழு சமர்ப்பித்தது. இந்த அறிக்கை 2011 மார்ச் முதல் 2015 நவம்பர் வரை எடுக்கப்பட்ட 621 நேர்காணல்களிலிருந்து தொகுக்கப்பட்டதாகும். “அதிகமான அளவில் நடைப்பெற்ற சிறைக்கைதிகளின் மரணங்களை காணும்போது  மனிதநேயத்திற்கு எதிரான இனச்சுத்தகரிப்பு செய்யும் இந்த அளவிற்கான குற்ற செயல்களை செய்த்தற்கு சிரிய அரசாங்கமே முழு பொறுப்பு,” என இந்த விசாரணை குழுவின் தலைவர் பால் பின்ஹெய்ரோ, கூறினார். மேலும் அவர் ” இப்போது உயிரோடிருக்கும் ஒவ்வொரு சிறைக்கைதியும் நினைத்து பார்க்க முடியாத அளவு சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.” என கூறினார்.
 


அலெப்போவின் மீது படையெடுப்பபுக்கான காலம் கணிந்துவிட்டது.
 

சிரியாவின் மிகப்பெரிய மற்றும் வர்த்தக நகரம் இப்போது பஷார் அல்-அசாதின் அரசு முழு அளவிலான படையெடுப்பு நடத்த ஆயத்தமாகி வருவதால் பெரும் பிரளயத்தில் சிக்கி உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த அரசின் முற்றுகை நடத்த இருப்பதன் காரணமாக தங்களது உணவு மற்றும் இதர வாழ்வாதார தேவைகள் கிடைக்காமல் போக்க்கூடிய அபாயமான நிலையில் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் தான் தமஸ்கஸின் அரசு அலவிகளின் கோட்டையான லதாகியாவில் போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பின்வாங்கும் நிலையிலிருந்தது. ஆனால் தக்க சமயத்தில் நடத்தப்பட்ட ரஷ்யாவின் தாக்குதலால் அல்-அசாத் அரசு கவிழ்ந்து விடாமல் பாதுகாக்கப்பட்டது. ரஷ்யாவின் தாக்குதல் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தாலும், பின்னர் அது அசாத் அரசுக்கு பலன்களை தர தொடங்கியுள்ளது. இந்த வாரம், ரஷ்ய வான்வழி தாக்குதல் அல்-அசாத் மற்றும் அவருடைய ராணுவப்படைகள் போராளிகள் வசம் இருந்த துருக்கி எல்லையையும் அலெப்போவையும் இணைக்கும் “அஜாஜ் (Azaz corrider) சாலையை நெருக்க உதவியது. அரசின் படைகள் ஷி’ஆ வீரர்களுடன் கூட்டு சேர்ந்து  இந்நகரை தெற்கு, மேற்கு மற்றும் வடக்கிலிருந்து இந்தகரை நோக்கி நகர்ந்து வருவதால் இந்நகரை சுற்றிவளைக்கும் வாய்ப்புகள் இவர்களுக்கு பிரகாசமாக உள்ளது. போராளிகள் வசம் இருக்கும் இப்பகுதி வீழ்ந்து விட்டால் இது அசாதிற்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமையும் மற்றும் போராளிகளுக்கு இது 2011 ல் இந்த கிளர்ச்சி ஏற்பட்ட காலம் முதல் இதுவரை அது சந்தித்ததில் மிக மோசமான பின்னடைவாக அமையக்கூடும்.