Mar 21, 2016

நவீன வீட்டு மின்னனு உபகரணங்களை வேவு பார்ப்பதற்காக உபயோகிப்படுத்துவோம்!!!!

செய்தி பார்வை 14.02.16


தலைப்பு செய்திகள்:

நவீன வீட்டு மின்னனு உபகரணங்களை வேவு பார்ப்பதற்காக உபயோகப்படுத்துவோம் என்பதை அரசு இப்போது ஒப்புக்கொண்டுள்ளது.

ரஷ்யா சிரியாவில் உலக யுத்தம் நடைபெறுவதற்கான சூழ்நிலைகளை உண்டாக்கி வருகிறது

8 எஃப்-16 ரக விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யப்போவதாக அரசவை  கூறியுள்ளது.


நவீன வீட்டு மின்னனு உபகரணங்களை வேவு பார்ப்பதற்காக உபயோகிப்படுத்துவோம் என்பதை அரசு இப்போது ஒப்புக்கொண்டுள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்களால் மக்கள் அனுப்பும் செய்திகளை மேற்கொள்ளப்பட்டு வரும் குறியீட்டுச் சொற்களால் மறைப்பதின்(encryption) உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணத்தால் அமெரிக்க புலனாய்வு துறை  தனது கண்காணிக்கும் திறமையை இன்னும் இழந்துவிடவில்லை என்பதற்கான ஆதாரம் உங்களுக்கு வேண்டுமானால், தேசிய புலனாய்வு இயக்குனர், ஜேம்ஸ் கிளாப்பர் செவ்வாய் கிழமை அன்று அளித்த வாக்குமூலத்தை விட வேறு எதுவும் தேவையில்லை. ஒன்றுக்கு ஒன்று பிணையப்பட்டு செயல்படுத்த போகும் செயல்கள்  குறித்து கிளாப்பர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் வெப்பநிலை காப்பான்(thermostats), புகைப்பட கருவி மற்றும் இதர சாதனங்கள் அதிகமாக இப்போது இனையத்துடன் பினையப்பட்டுள்ளது – இது புலனாய்வு நிறுவனங்களுக்கு தாங்கள் குறி வைத்திருக்கும் குறிப்பாக அனேகமாக பொது மக்களை வேவு பார்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த உபகரணங்களை வாங்கும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் இது பற்றி எதுவும் அறியாமல் இருக்கின்றார்கள் என்பது தான் மிகுவும் ஆபாயகரமானதாக இருக்கின்றது. “வரும் காலங்களில், புலனாய்வு துறை இதை (இணையதள விஷயங்களை) அடையாளத்திற்காகவும், வேவு பார்ப்பதற்காகவும், கண்காணிப்பதற்காகவும், இருப்பிடத்தை அறிந்து கொள்வதற்காகவும் அல்லது தொடர்புகளுடன் இணைப்பை ஏற்படுத்தி கொள்வதற்காகவும் மற்றும் அவர்களக்காக வேலை செய்யக்கூடியவர்ளை தேர்ந்தெடுப்பதற்காகவும் அல்லது பயன்படுத்துபவரின் தகவல்களை அறிந்து கொள்வதற்காகவும் உபயோப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.” என கிளாப்பர் அரசவையில் “அமெரிக்கவிற்கு எதிரான அச்சுறத்தல்களின் ஆய்வு”(assessment of threats) எனும் வருடாந்திர ஆய்வின் ஒரு பகுதியாக இதை அறிவித்தார். கிளாப்பர் உண்மையில் கூறுவது கடந்த வாரம் ஹார்வர்டின் பெர்கமான் சென்டர் வெளியிட்ட ஒரு மாபெரும் கருத்துக்கணிப்பை ஒத்துப்போவதாகவே உள்ளது. இது எஃப்.பி.ஐ யின் சமீபத்திய கோரிக்கையான நாங்கள் ” இருட்டில் இருக்கிறோம்” – குறியாட்டுச்சொற்களை மாற்றி அமைப்பதன் காரணமாக  சந்தேகத்திற்குரியவர்களை வேவு பார்க்கும் திறனை இழந்து வருகிறோம் – என்பது அதிகமாக ஊதி பெரிதாக்கப்பட்ட விஷயமாகவே இருக்கின்றது, குறிப்பாக ஏனெனில் விசாரணை நிறுவனங்களுக்கு வேவு பார்ப்பதற்கு பல தரப்பட்ட வழிகள் இருக்கின்றன. இது பல புலனாய்வு அறிஞர்களிடமிருந்து கருத்தை எதிரொலிக்க செய்திருக்கின்றது,  இவர்கள் தெளிவாக ஒரு விஷயத்தை எதிரொலிக்கின்றனர், அதாவது “இருட்டில் இருக்கின்றோம்” என்பதை விட நாம் இப்போது “உளவு பார்ப்பதின் பொற்காலத்தில் இருக்கின்றோம்”. தனியுரிமைக்காக வாதாடுபவர்கள் இணையதளத்தை அரசு தனக்கு சாதமாக பயன்படுத்துவதற்கு எந்த அளவு ஆற்றல் உடையது என்பதை பல வருடங்களாகவே அறிந்திருக்கின்றனர். சட்ட நிறுவனங்களும் இதை அறிந்து வைத்திருக்கின்றன, அவை இணையதள நிறுவனுங்களுக்கு விவரங்களை கேட்டு வரும் நீதிமன்ற ஆணைகளுக்கு இணங்க தாங்கள் கடத்தும் விவரங்கள் பொதுமக்களுக்கு தெரியாத அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. காவல்துறை கூகுல் நிறுவனத்தால் நடத்தப்படும் டிராப்கேம் (Dropcam) நிறுவனத்திடம் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க பொதுமக்களின் வீடுகளில் உள்ள நிகழ்பதிவு கருவிகளில் உள்ள காணொளி பதிவுகளை கேட்டு வருகிறது. வேவு பார்த்து தகவல்களை சேகரிக்கும் நிறுவனமான ஃபிட்பிட்(Fitbit)டிடமிருந்து தகவல்களை பிரதிவாதிகளுக்கு எதிராக பலமுறை உபயோக படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தனியுரிமைக்கான மீறல்களுக்கான சாத்தியக்கூறுகள் தற்போது பல கோடி கணக்கான வீடுகளை சென்று அடைந்துள்ளது: சாம்சங் நிறுவனம் கடந்த வருடம் வீடுகளில் நடைபெறும் உறையாடல்கள் அனைத்தையும் கேட்கும் தன்மை கொண்ட தொலைக்காட்சி பெட்டி ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது, அது தனது பொருளின் அச்சு பிரதியில் பொதுமக்களை தங்களது அதிமுக்கிய விஷயங்களை இத்தொலைக்காட்சி பெட்டி முன்பு  வைத்து பேச வேண்டாம் என எச்சரித்துள்ளது. {Source: The Guardian}


மேற்கத்திய அரசாங்கங்கள் தங்களது நாகரிக்கதரதின் சரிவு ஏற்பட இருப்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கின்ற காரணத்தால் அதற்கு தனது சொந்த மக்களை வேவு பார்க்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இது மக்களின் நலனுக்கு எதிராக அவர்களின் நலன்களை பறித்து தங்களது சொந்த நலன்களை பாதுகாப்பதற்காக பெரும் பணக்காரர்களால் கடத்தப்பட்ட தாராளமய ஜனநாயக கொள்கைக்கு எதிராக கிளர்ச்சி செய்வதை தடுக்க எடுக்கப்பட்ட ஒரு நிர்பந்தமான முயற்சி தான் இது.

 
ரஷ்யா சிரியாவில் உலக யுத்தம் நடைபெறுவதற்கான சூழ்நிலைகளை உண்டாக்கி வருகிறது 


ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ்  அனைத்து சக்திகளும்  சிரியாவில் “இன்னொரு உலக யுத்தத்தை ஏற்படுத்துவதற்கு” பதிலாக ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்ச்சை நடத்தி நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என கூறினார். “அமெரிக்கர்களும் நமது அரபு கூட்டாளிகளும் அங்கு  நிரந்தரமான போர் நடைபெறுவதை விரும்புகின்றனரா என நன்கு சிந்திக்க வேண்டும்”. என்று ஜெர்மனியின் ஹேன்டுல்ஸ்பிளாட் (Handlesblatt) எனும் செய்தித்தாளுக்கு பேட்டியளிக்கையில் கூறினார். இவ்வகையான போரை உடனடியாக வெல்வது என்பது முடியாத காரியமாகும், குறிப்பாக எல்லோரும் எல்லோருக்கும் எதிராக சண்டையிட்டு கொண்டிருக்கும் அரபு உலகில் இது அறவே முடியாத காரியமாகும்.” என கூறினார். இன்னொரு புதிய உலக யுத்தத்தை கட்டவிழ்த்து விடுவதற்கு பதிலாக அனைத்து தரப்பினரையும் கட்டாயமாக பேச்சுவார்த்தை மேஜையில் உட்கார வைக்க வேண்டும்” என கூறினார். அமெரிக்காவும் ரஷ்யாவும் பிரச்சினையில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தரப்பினரிடமும் போர் திறுத்தத்தை கொண்டு வருவதற்காக அழுத்தம் தர வேண்டும். ரஷ்யா அலெப்போ நகரை சுற்றியுள்ள பகுதிகளில் பஷார் அல்-அசாதிற்கு ஆதரவான படைகள் முன்னேற்றம் அடைவதற்கு உதவும் விதமாக குண்டுகளை வீசி வருகிறது. அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்திய ஆகாயப்படைகளும் சிரியாவின் வட பகுதிகளில் வான் வழி தாக்குதல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன. [Source: Al Arabiyya]

மெட்வடேவ் நிச்சயமாக தவறாக புரிந்து வைத்துள்ளார்! சிரியாவில் மூன்றாம் உலக யுத்தம் சில வருடங்களுக்கு முன்னரே ஐ. நா பாதுகாப்பு அமைப்பின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் அசாதின் பிராந்திய அண்டை நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கொண்ட எதிர்ப்பாளர்கள் மீது மறைமுக மற்றும் நேரடி ஆதரவு அளித்து தாக்குதல்கள் மேற்கொண்ட போதே தொடங்கிவிட்டது. இந்த யுத்தத்தில் பங்கு பெறும் இரு தரப்புகள் தெளிவாகிவிட்டது: ஒன்று மதசார்பற்ற அடிப்படைவாதவாதிகள் மற்றும் அதற்கு எதிராக இஸ்லாம்.


பாகிஸ்தானுக்கு 8 எஃப்-16 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய இருக்கிறோம், என அரசவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளியன்று ஒபாமா நிர்வாகம் பாகிஸ்தானுக்கு 8 எஃப்-16 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய இருப்பதாக அரசவைக்கு தெரிவித்தது. இந்த முன்மொழிதல் ஒப்பந்தம் முப்பது நாள் அறிவிப்பு காலத்தில் இருக்கும் அதன் பின்னர் இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்படும். இந்த வாரத்திற்கு முன்னர், அமெரிக்க அரசுத்துறை அரசவைக்கு அது பாகிஸ்தானின் தாக்குதல் திறமையை மேம்படுத்த போவதாக அறிவித்திருந்தது, எஃப்-16 ரக போர் விமானம் சம்மந்தமான ஒப்பந்தங்கள் திறைமறைவாக நடைபெற்றிருக்க கூடும் என்பதற்கான சான்றாகும். மேலும் வியாழனன்று, அரசுத்துறை செய்தி தொடர்பாளர், மார்க் டோனர், ஒரு செய்தி குறிப்பில் அமெரிக்காவின் பாகிஸ்தானுக்கான ஆயுத விற்பனை என்பது தீவிரவாத்த்திற்கு எதிரகவும் மற்றும் அமெரிக்க வெறியுறவு கொள்கையின் நலன்களை பாதுகாப்பதற்கு பெரிதும் உதவும் என கூறினார். இந்த கருத்துக்களை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எஃப்-16 போர் விமானங்களை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட ஒபாமா நிர்வாகத்திற்கு கோரிக்கை விடும் வண்ணமாக சில அமெரிக்க சட்ட வல்லுனர்கள் சில செயல்களையும் அமெரிக்க ஊடகங்கள் அதற்கான பரப்புறையை மோற்கொண்டனர். அரசவை இந்த முன்மொழியப்பட்ட விற்பனையை தாமதித்தாலும், நிர்வாகம் அமெரிக்காவின் அதிமுக்கிய விவகாரங்களின் நலனுக்காகவே என்று வலியுறுத்தி இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றும் எண்ணம் கொண்டுள்ளது. அரசு நிர்வாக செய்தி வெளியீட்டின் போது ஒரு இந்திய ஊடகவியலாளர் செய்தி தொடர்பாளர் மார்க் டோனரிடம் ஒருவேளை குடியரசு கட்சியை சார்ந்த பாப் கார்க்கர் அமெரிக்க வெளயுறவு அதிகாரி ஜான் கெர்ரிக்கு செவ்வாய் அன்று பாகிஸ்தானுக்கு செய்ய உள்ள இந்த விற்பனையை நிறுத்தக்கூறி கடிதம் எழுதினால் என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு. “இது கொள்கை சம்பந்தமாக இருப்பதால் நடக்கவிருக்கும் ஆயுத விற்பனை  சம்பந்தமாகவோ அல்லது இடமாற்றம் செய்வது பற்றியோ அல்லது கேபிடல் ஹில்லுடன் நாங்கள் நடத்திய முதல் ஆலோசனை பற்றியோ எந்தவித அதிகாரப்பூர்வ அரசவை அறிவிப்பு வெளி வருவதற்கு முன் நாங்கள் எந்தவிதமான கருத்தும் கூற முடியாது,” என டோனர் பதிலளித்தார். ஆனால் அவர் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவி அளித்து வருவது பற்றிய விரிவான விஷயங்களுக்கு பதிலளித்து பேசுகையில் இவ்வாறு கூறினார்: “அமெரிக்க வெளியுறவு கொள்கை நலன்களுக்காக நாங்கள் அரசவையுடன் இணைந்து எங்களின் கூட்டாளிகள் மற்றும் கூட்டணி நாடுகளுக்கு  பாதுகாப்பில் உதவும் வண்ணமாக அவர்களின் தாக்குதல் திறனை அதிகரித்து  பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொள்வோம் என நம்புகிறோம்.”

இந்த விஷயத்தில் பெரும்பாலான பாகிஸ்தானியர்களின் கொழுந்து விட்டு எறியும் கேள்வி என்னவென்றால் பாகிஸ்தான் எஃப்-16ஐ பெறுமா என்பதல்ல ஆனால் அது எவ்வாறு உபயோகப்படுத்தப்படும் என்று தான். ஒரு வேளை பாகிஸ்தான் இந்த எஃப-16 கள பாகிஸ்தானின் எல்லை கட்டுப்பாட்டை மதிப்பிழக்க செய்யும் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு எதிராக உபயோக படுத்த போகிறதா அல்லது பழங்குடி பகுதியில் உள்ள முஸ்லிம்களின் உதிரப்போக்கை இன்னும் அதிகமான அளவில் ஏற்படுத்துவதற்காக உபயோக படுத்த போகிறதா?

No comments:

Post a Comment