மார்ச் மாதம் 3ஆம் நாள் 1924 ஆம் ஆண்டு

 
மார்ச் மாதம் 3ஆம் நாள் 1924 ஆம் ஆண்டு துருக்கி இஸ்தான்புல்லில் இஸ்லாமிய அரசான கிலாஃபா இஸ்லாத்தின்  எதிரிகளான மேற்கத்தியர்களால் வீழ்த்தப்பட்டது.
 
நபி (ஸல்) கூறியதாக முஸ்னத் அஹமதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸில் வருவதாவது.
 
இஸ்லாத்தின் முடிச்சுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்படும், ஓவ்வொரு முறையும் முடிச்சுகள் அவிழ்க்கப்படும்போது முஸ்லிம்கள் அடுத்த முடிச்சை பற்றிக்கொள்வார்கள். இதில் அவிழ்க்கப்படும் முதல் முடிச்சானது இஸ்லாமிய அரசு, இறுதி முடிச்சானது தொழுகை..
 
இஸ்லாமிய அரசின் வீழ்ச்சிக்கு பிறகு இஸ்லாத்தில் இருந்த விஷயங்கள் (முடிச்சுகள்) ஒன்றன் பின் ஒன்றாக சென்று விட்டதை நம்மால் தெளிவாக காண முடிகிறது. அதில் ஒருசில பின்வருமாறு..
 
1. ஒரு முழுமையான மார்க்கமாக சமூக வாழ்வில் இஸ்லாம்(பள்ளி, கல்லூரி, வணிகம், நீதிமன்றம், வங்கி, பாராளுமன்றம்) செயல்படுத்தப்பட்டதிலிருந்து.
தனிமனித ஆன்மீக விஷயங்களில் (தொழுகை, நோன்பு, ஹஜ்) மற்றும் பின்பற்றப்படும் மதமாக குறைந்துவிட்டது.
 
2. குர்ஆன், ரஸூலுல்லாஹ் (ஸல்), மற்றும் அவர்களின் மனைவியர்களின் (முஸ்லிம்களின் தாய்மார்களின்) கண்ணியம் குஃப்பார்கள் இழிவு படுத்தும் விஷயமாக மாறிவிட்டது.
(சார்லீ ஹெப்டோ, இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ், பித்னா)
 
3. ஒரே அரசு, ஓரே மார்க்கம், ஒரே அடிப்படை நம்பிக்கை மற்றும் ஒரே நிலப்பரப்பு என்று  ஒன்றுபட்ட இந்த ஒரே உம்மத், இப்போது நபி (ஸல்) காட்டித்தராத தனித்தனி தேசிய கீதம், தனித்தனி தேசிய கொடி, தனித்தனி அரசாங்கம் என்று ஏறத்தாழ 55 நாடுகளாக பிரிந்து நிற்பது.
 
4. முஸ்லிம்களின் உயிர், உடைமை, கண்ணியம் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்து மதிப்பற்ற ஒருவிஷயமாக மாறிப்போனது. (பாலஸ்தீனம், காஷ்மீர், சேச்சேன்யா, ஈராக், ஆப்கானிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள்)
 
5. இறுதியாக தொழுகை என்ற இபாதத் ஒரு தனிமனித விருப்பமாக மாறிப்போனது.
 
இந்த மோசமான நிலை மாறும் என்றும் மீண்டும்  கிலாஃபா உருவாகும் என்ற முன்னறிவிப்பை நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
 
...பின்பு நபித்துவத்தின் வழிமுறையில் மீண்டும் கிலாஃபா
உருவாகும் (முஸ்னத் அஹமத்)
 
மேலும் இஸ்லாமிய அரசின் (அமீர்) கலீஃபாவுக்கு பையத் செய்யாமல் மரணிப்பதன் விளைவையும் நபி (ஸல்) எச்சரித்துள்ளார்கள்.
 
....கலீஃபாவிடம் (பையத்) உடன்படிக்கை செய்யாத நிலையில் அடையும் மரணம் ஜாஹிலிய்யாவின் மரணம்.. (சஹீஹ் முஸ்லீம்)
 
இப்போது கிலாஃபாஹ் இல்லை  என்பதால் நம்மால் கலீஃபாவிற்கு பையத் செய்யமுடியாது என்பது எதார்த்தம். அப்படியானால் ஜாஹிலிய்யாவின் மரணத்தில் இருந்து எப்படி தப்புவது?
 
 
ஒரு கடமையான (அமல்) விஷயத்தை நிறைவேற்ற மற்றோறு விஷயமும் தேவைப்படுமாயின் அந்த விஷயமும் கடமை என்பது இஸ்லாமிய ஷரீயத்தின் அடிப்படை.
 
ஆதலால் கிலாஃபாவை ஏற்படுத்துவதும் பிறகு கலீஃபாவிற்கு பையத் செய்வதும் நம் மீது கடமை.
 
அதுமட்டுமல்லாமல் அல்லாஹுத்தாலா கூறுகிறான்..
 
மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், அனைத்து நல்லதைக் கொண்டும் (மக்களை)  ஏவுபவர்களாகவும் அனைத்து தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
(அல்குர்ஆன் : 3:104)
 
நன்மையை ஏவி தீமையை தடுக்கும் ஜமாத்தானது அரசாங்கத்தை நிறுவாமல் அதை செயல்படுத்த முடியாது.
 
நபி (ஸல்) கூறிய  கிலாஃபா பற்றிய முன்னறிவிப்பை இந்த பூமியில் உண்மைப்படுத்துவதற்கான அழைப்புபணியில் நாம் அனைவரும் இணைவோமாக.
 
கிலாஃபாவை நிலைநாட்டி இந்த மார்க்கத்தை மேலோங்க செய்யும் உம்மத்தாக உருவெடுக்க அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு அருள் புரிவானாக. ஆமீன்...