எயிட்ஸ் ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறுபட்ட சிபாரிசுகள் இங்கே முன்மொழியப்படுகின்றன. இது குறித்த பல நிபுணர்கள் பேசுகிறார்கள். ஊடகங்கள் எழுதுகின்றன. இந்த சூழ்நிலையில் இந்த ஆட்கொல்லி நோய் தொடர்பாகவும், அது சமூகத்தில் ஏற்படுத்தும் பிரச்சனைகள் தொடர்பாகவும் இதுவரை முன்வைக்கப்பட்டுவரும் தீர்வுகள் சரியானவைதானா? குறிப்பாக மேற்குலகால் இந்தப் பிரச்சனையை அணுவும் விதம் சரியானது தானா? என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டியிருக்கிறது. மேலும் இஸ்லாம் இதற்கு என்ன தீர்வை முன்வைக்கிறது என்பதை முஸ்லிம் சமூகம் தெளிவாக புரிந்து கொள்வதும் இன்றியமையாதது என்பதால் அது குறித்த ஒரு சுருக்கமான புரிதலை ஏற்படுத்துவதற்காக இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.
 
 
HIV எயிட்ஸின் யதார்த்தம் என்ன?
 
HIV எயிட்ஸினால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்ற பீதி ஏனைய தொற்றுகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகம். அது ஒரு மிகக்கொடிய உயிர்கொல்லியாக இருப்பதும்; அது ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய சமூக வடுக்கள் பாரியது என்பதும் இதற்கான பிரதான காரணங்களாகக் கொள்ளப்படலாம்.
 
அதேபோல HIV எயிட்ஸ் பரவும் முறையும் தனித்துவமானது. அது பொதுவாக ஏனைய நோய்கள் பரவுவதை போல சாதாரணமாக தொற்றிவிடுவதில்லை. அது பொதுவாக ஒரு மனிதரிடமிருந்து இன்னுமொரு மனிதருக்கு பரவும் முறை சற்று வேறுபட்டது. சாதாரணமான உறவாடலின் ஊடாக இது பரவுவதில்லை. மாறாக ஒருவரிடமிருந்து வெளிவரக்கூடிய  பாலியல் திரவங்களினூடாகவோ அல்லது குருதியினூடாகவோதான் இது பரவுவதால் அது விசேட தொற்றாக அடையாளப்படுத்தப்படுகிறது.
 
குருதியினூடாகவோ, இந்திரியத்தினூடாகவோ ஒருவரிடமிருந்து ஒருவருக்கு ஒரு நோய் தோற்ற வேண்டுமானால் அதற்கென வாய்ப்புக்கள் விசேடமான சில நடவடிக்கைகளில் ஒருவர் ஈடுபடாமல் இருக்கின்ற நிலையில் சாத்தியமற்றது. அத்தகைய செயற்பாடுகள் மனிதர்கள் தவிர்ந்து கொள்ளக்கூடியவைகளே. அந்தவகையில் வயது வந்தவர்களைப் பொருத்தமட்டில் HIV எயிட்ஸால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் உடலுறவில் ஈடுபடுவதன் ஊடாகவும், HIV இனால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஏற்றிய ஊசியை அவரைத்தொடர்ந்து இன்னொருவருக்கு ஏற்றுவதன் ஊடாகவும் இத்தொற்று பரவுகின்றது. அதிலும் குறிப்பாக நடைமுறை ரீதியாக நோக்கினால் இந்த ஊசிகள் ஊடாக பரவும் செயற்பாடு போதைப்பொருள் பாவணையின்போது பயன்படுத்தப்பட்ட ஊசிகளை இன்னொருவர் திரும்பப் பாவிப்பதன் ஊடாகவே பெரும்பாலும் ஏற்படுவதை நாம் காண்கிறோம். இத்தகைய அதியுயர் ஆபத்தான சில நடவடிக்கைகளை தவிர்ந்து கொள்வதன் ஊடாக, மக்கள் இந்த நோயின் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படலாம். ஓர் ஆணும், பெண்ணும் திருமண பந்தத்தின் ஊடாக மாத்திரம் தமது தாம்பத்திய உறவை ஏற்படுத்திக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் விசுவாசமான முறையில் வாழ்கின்ற காலாசாரத்தை ஒழுகுவார்களானால் HIV பாதிப்பு கணிசமானளவில் குன்றிவிடும்.
 
குழந்தைகளைப் பொருத்தமட்டில் தாய் HIV தொற்றினால் பாதிப்புற்றிருந்தால் கற்பக்காலத்திலோ, பிள்ளைப்பேறின் போது, தாய்ப்பால் வழங்கும் காலத்திலோ தாயுடைய தொற்று சிசுவுக்கும் பரவி விடுகிறது. இவ்வாறு பரவும் முறையை தடுப்பதற்கான வழிமுறைகள் சில இருந்தாலும், அடிப்படையில் பெற்றோர் HIV யால் பாதிப்புறாத நிலையில் இருப்பதே சிசுவின் ஆரோக்கியமான வாழ்வுக்கு உண்மையான உத்தரவாதமாகும் என்ற பார்வையே ஆராக்கியமானதாகும்.
 
உலக சுகாதார நிறுவனத்தின் 2014ஆம் ஆண்டிற்கான புள்ளி விபரம் உலகில் ஏறத்தாழ 36.9 மில்லியன் மக்கள் HIV எய்ட்ஸ் உடன் வாழ்ந்து வருவதையும், அவர்களில் 2.6 மில்லியன் பேர் 15 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. 2014 இல் மாத்திரம் 2 மில்லியன் மக்கள் HIV இனால் பாதிப்புற்றிருப்பதையும் அவர்களில் 220,000 பேர் சிறுவர்கள் என்பதையும் குறிப்பிடுகிறது. உலகில் HIV எயிட்ஸ் உடன் தொடர்புபட்ட நோய்களினால் இதுவரை 34 மில்லியன் மக்கள் இறந்துள்ளார்கள். 2014 இல் மாத்திரம் 1.2 மில்லியன் மக்கள் மரணத்தை சந்தித்துள்ளார்கள் என உலக சுகாதார நிறுவனம்(WHO) தெரிவிக்கின்றது.
 
இலங்கையை எடுத்துக்கொண்டால் 2014 முடிந்த ஆண்டிற்கான இலங்கை சுகாதார சேவை திணைக்களத்தின் புள்ளிவிபரத்தின்படி ஏறத்தாழ 3200 பேர் HIV இனால் பாதிப்புற்ற நிலையில் வாழ்ந்து வருவதாகவும் ஒவ்வொரு வாரமும் மேலும் 4 பேர் பரிசோதனைகளின் போது HIV தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களாக இனம்காணப்படுவதாகவும் உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றமை எமது நாட்டில் HIV பாதிப்பின் விபரீதத்தை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த உயர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது தொடர்பாக இன்று பிரபலமாக பின்பற்றப்படும் அணுகுமுறை மேற்குலகின் அணுகு முறையாகும். அது குறித்து இனிப் பார்ப்போம்.
 
மதச்சார்பற்ற சடவாத நாடுகள் HIV எயிட்ஸ் பாதிப்பை அணுகும் முறை
 
சுதந்திரம் (CONCEPT OF FREEDOM) என்ற எண்ணக்கரு முதலாளித்து சித்தாந்தத்தில் மிக முக்கிய விதியாக போற்றிப் பாதுகாக்கப்படுவதால் மேற்கூறிய தகாத பாலியல் உறவுகள், போதைப்பொருள் பாவணை போன்ற பழக்கவழக்கங்களிலிருந்து தவிர்ந்து நடக்குமாறு மக்களை அவர்கள் கோருவதில்லை. மாறாக இத்தகைய பழக்கங்களில் ஈடுபடும்பொழுது எவ்வாறு பாதுகாப்பான முறையில் ஈடுபடலாம், அதனூடாக HIV எயிட்ஸ் தொற்றைத் தவிர்ந்து கொள்ளலாம் என ஆலோசனை வழங்குவதையே வழிமுறையாகக் கொள்கின்றனர்.
 
கொன்டொம்(ஆணுறை) பாவணையை தூண்டுதல், தூய ஊசிகளை வழங்குவதன் ஊடாக போதைப்பாவணையின்போது HIV எயிட்ஸ் பரவாமல் தடுத்தல் போன்ற உத்திகளையே முதலாளித்துவ மேற்குலகு தமது நாடுகளில் முக்கிய உபாயமாக நடைமுறைப்படுத்துகிறது. மேலும் வளர்முக நாடுகளில் இந்த உபாயங்களை HIV தடுப்புக்கான சிறந்த தீர்வுகளாக பரப்புரையும் செய்து வருகின்றது.
 
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் உலகில் இந்த உபாயங்கள் இதுவரையில் படுதோல்வியையே கண்டுள்ளன. கொன்டொம்களும், தூய்மையான ஊசிகளும் ஓரளவுக்கு தொற்றபாயத்தை கட்டுப்படுத்தினாலும், கொன்டொம்கள் முழுமையான பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்காது என்பதும், பெரும்பாலும் போதைக்கு அடிமைப்பட்டவர்களில் அதிகமானவர்கள் படிப்பறிவில்லாத நிலையிலேயே  இருப்பதால் அவர்கள் எப்போதும் தூய ஊசிகளை பாவிப்பார்கள் என  எதிர்பார்ப்பது என்பதும் நடைமுறைச் சாத்தியமற்றது.
 
HIV எயிட்ஸ் பரவுவதற்க்கான அடிப்படைக்காரணி
 
உலகில் எல்லையில்லாது வியாபித்துள்ள தவறான பாலியல் பழங்கங்களும், போதைப்பொருள் பாவணைகளும் சுதந்திரம் என்ற எண்ணக்கருவின் விளைவால் வந்த வினை என்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதன் தான்தோன்றித்தனமாக தனது உணர்வுகளை, இச்சைகளை தீர்த்துக்கொள்வதை அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளும் இந்த எண்ணக்கரு உலகில் ஒழுக்கம் எனக் போற்றப்படும் அனைத்து வரம்புகளையும் தரைமட்டமாக்கி விடுகிறது. ஒழுக்கமின்மையும், பாலியல் முறைகேடுகளும் சமூக வழக்கமாகி விட்ட மேற்கை எடுத்தாலும், விழுமியங்கள் வரட்சி கண்டுவரும் எம்மைப்போன்ற கிழக்குக் கலாசாரங்களை எடுத்தாலும்; சுதந்திரம் சுகத்தைப்பெற்றுத்தரவில்லை என்பதே உண்மை.
 
இறைவேதங்களை உலகியல் விவகாரங்களில் தலையிட அனுமதிக்காத முதலாளித்துவம் சுதந்திரத்தினூடாக மனிதனுக்கு பூரண விடுதலையை பெற்றுத்தந்ததாக நினைக்கிறது. இதன் விளைவாக நான்கு வகையான சுதந்திரங்களை அது மனிதனுக்கு வழங்குகிறது. 1) நம்பிக்கைச் சுதந்திரம், 2) கருத்துச் சுதந்திரம், 3) உடைமைச் சுதந்திரம், 4) தனிநபர் சுதந்திரம் என்ற இந்த நான்கில் தனிநபர் சுதந்திரம் என்பதே எமது தலைப்புடன் நேரடியாக சம்பந்தப்பட்டதால் அது குறித்து சிறிது நோக்கலாம்.
 
தனிநபர் சுதந்திரம் - PERSONAL FREEDOM

முதலாளித்துவ வாழ்வமைப்பு  தனிநபர் சுதந்திரத்தை பரிபூரணமாக எட்டுவதற்கும், பாதுகாப்பதற்கும் அனுதினமும் உழைத்துவரும் ஒரு சமுதாய அமைப்பு. அங்கே ஒரு தனிநபர் தனது தனிப்பட்ட வாழ்வில் தான் விரும்பியவாறெல்லாம் வாழ்வதற்கு பூரண உத்தரவாதம் வழங்கப்படும். அவருக்கு இருக்கின்ற ஒரேயொரு நிபந்தனை அவர் பிறரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அத்துமீறாதிக்க வேண்டும் என்பதுவே. அவருக்கு திருமணம் செய்துகொள்ளவும் உரிமை இருக்கிறது. திருமண பந்தமின்றியே ஒரு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபடவும் உரிமை இருக்கிறது. அதற்கு அந்த பெண்ணின் ஒப்புதல் மாத்திரமே அவருக்கு தேவைப்படுகிறது.
 
சிறுவர்களை தனது உணர்வுகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனை தவிர, அசிங்கமாக, அறுவறுப்பாக விதம் வி;தமாக தனது பாலியல் உணர்வுகளை பிரயோகிக்க அவர் உரிமை பெற்றிருக்கிறார்,  பொதுச் சட்டத்திற்கு கட்டுப்படுவதைத்தவிர, எதைவேண்டுமானாலும் புசித்து, எப்படி வேண்டுமானாலும் உடுத்து அவரால் வாழமுடியும். ஹராம், ஹலால் என்ற ஒரு அளவுகோல் அவருக்கு கி;டையாது. முதலாளித்துவ உலகப்பார்வைக்கு இசைந்த “சட்ட ஏற்புடைய நடத்தை”களை மீறாதிருக்கும் வரை அவர் எச்செயலிலும் ஈடுபடலாம். இந்த சட்ட ஏற்புக்கூட காலத்திற்கு காலம், சமூகத்திற்கு சமூகம் மாற்றமடையவும் அனுமதிக்கபடுகிறது.
 
இங்கே வேதங்களிலிருந்து ஒழுக்க மாண்புகள் பேசுவது காலாவதியான குப்பைகளாக பார்க்கப்படுகிறது. பெண்கள் உரத்துப்பேசுவதும், கட்டுடைந்த வெள்ளம்போல் மேழும் கீழும் துள்ளுவதும் முன்னேற்றங்களாக பேசப்படுகின்றது. பெண்ணீயம் என்ற போதை வார்த்தைக்குள் பெண்கள் துகிலுரிப்பை உரிமைப்போராட்டமாக சித்தரிக்கும் நாடகம் நாகரீகமாக நடக்கிறது. ஓரினச்சேர்க்கையும், வேரினச்சேர்க்கையும்(மிருகங்களுடன்) உச்சகட்ட விடுதலையாக போற்றப்படுகிறது. மதத்தை அரசிலிருந்து பிரித்தல் என்ற முதலாளித்துவ சடவாத தேசங்களின் அடிப்படை கொள்கையிலிருந்து நோக்கும்போது இந்த அசிங்கங்களை மறைக்க “தனிநபர் சுதந்திரத்தை பாதுகாத்தல்” என்ற கடப்பாட்டை அரசே மிக்க பொறுப்புணர்வுடன் மேற்கொள்கிறது.
 
பல ரில்லியன் பெறுமதியான போனோகிரபிக் தொழிற்துறையும், நிர்வாண பார்களும், பச்சை விரசத்தை கொப்பளிக்கும் அழைப்பு வசதிகளும் இவர்களின் பாலியல் விடுதலைக்கு சில உதாரணங்கள்.
 
ஒரு முஸ்லிம் “தனிநபர் சுதந்திரத்தை” ஒரு கோட்பாடாக ஏற்றுக்கொள்ளமாட்டார். ஏனெனில் அது மனிதனின் செயல்கள் தொடர்பான அல்லாஹ்(சுபு) ஷரீயத்தை இரண்டாம் பட்சமாக்கிவிடுகின்றது.
சமூகச்சீரழிவுக்கு அதுதான் மூலவாய். பச்சையாகச் சொன்னால் தனிநபர் சுதந்திரம் என்பது விபச்சாரச்சுதந்திரம், போதைச்சுதந்திரம். எனவே இஸ்லாம் எவ்வாறு அதனை மதிக்கும்? ஏற்றுக்கொள்ளும்?
 
அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.  (அந்நூர்:39)

முஹம்மத்(ஸல்) சொன்னார்கள், “நான் இன்னும் காணாத இரு வகைப்பட்ட மக்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒரு சாரார் மாட்டின் வாலைப்போன்ற சவுக்குகளை வைத்துக்கொண்டிருப்பார்கள். அதனை மக்களை அடிப்பதற்காக பயன்படுத்துவார்கள். அடுத்தவர்கள் ஆடை அணிந்தும்; அரை நிர்வாணிகளாக இருக்கின்ற பெண்கள். அவர்கள் ஆண்களின் பார்வை அவர்கள் பக்கம் வலையும் வண்ணம் (தமது உடலை) வலைப்பவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய தலை ஒட்டகத்தின் திமிழ்களைப்போல இருக்கும். இத்தகைய பெண்கள் சுவனம் புகமாட்டார்கள். அதன் நறுமணத்தைக்கூட நுகர மாட்டார்கள். அதன் நறுமணம் பல நாட்கள் பயணத்தூரம் வரைக்கும் வீசக்கூடியதாக இருந்தாலும்கூட (முஸ்லிம்)
 
இஸ்லாம் சொல்லும் மாற்றுத் தீர்வு
 
இஸ்லாமிய சமூக முறைமையை சரியாகவும், குறிப்பிட்ட காலத்திற்கும் அமூல்படுத்தும்போது ர்ஐஏ க்கான தீர்வு சர்வ சாதாரணமாக எட்டப்பட்டு விடும். இஸ்லாம் உருவாக்கும் சமூகத்தில் திருமண பந்தத்திற்கு வெளியேயான பாலியல் உறவுகள் முற்றாக தடுக்கப்பட்டிருக்கும், அந்த வழமையை மீறும் சிலருக்கும் மிகக் கடுமையான தண்டைகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைந்த ஒரு
சமூகம் இன்று நாம் பரவலாகக் காணும் சமூகங்களிலிருந்து தனித்துவமானது. அந்த சமூகம் சில அடிப்படைகளை தனது அத்திவாரமாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கும்.
 
அந்த சமூகம் இறைவிழிப்புணர்வுடன் அதாவது தக்வாவுடன் நிறைந்து காணப்படும்.
 
எந்நேரமும் அவ்விழிப்புணர்வை வியாபிக்கும் சூழல் அந்த சமூகத்தின் அடிப்படை இலக்காகக் கொள்ளப்படும். இஸ்லாமிய ஷரீஆவின் விதிமுறைகள், தவறான சமூக உறவுகளைத் தடைசெய்து பாதுகாப்பான உறவுகளை மாத்திரமே அனுமதிக்கும். அங்கே உடுத்தும் முறை தொடக்கம் வாழும் கட்டிடம் வரை ஒழுக்க மாண்புகளை பாதுகாக்கும் விதத்தில் அமைந்திருக்கும்.
 
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (அந்நூர்:30-31)

“ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபடும்போது ஈமான் அவரை விட்டகன்றி அவரது தலைக்கு மேலால் நிற்கிறது. அந்தச்செயலிலிருந்து அவர் வெளியேறும்போதுதான் அது மீண்டும்  அவரை சென்றடைகிறது (திர்மிதி, அபுதாவூத்)

”எந்தவொரு பெண் நறுமணங்களை பூசிக்கொண்டு பிற ஆண்கள் அதன் நறுமணத்தை நுகரவேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்களைக் கடந்து செல்கிறாளோ அவள் விபச்சாரியாவாள்” (திர்மிதி, அபுதாவூத்)

ஷரீஆ குல்வா(தனித்திருத்தலை) வை முற்றாகத் தடை செய்கிறது.
 
அதாவது ஒரு அந்நிய ஆணும், பெண்ணும் மறைவான முறையில் தனித்திருப்பதை ஷரிஆ முற்றாகத் தடுக்கிறது. ஒரு ஆணும், பெண்ணும் யாரும் பார்க்க முடியாத விதத்தில் தனித்திருப்பது தவறுகள் இடம்பெறுவதற்கான அடிப்படை வாய்ப்பை வழங்கி விடுகின்றது. அந்த வாய்ப்பை உருவாக்காமல் தடுப்பதன் ஊடாக ஷரீஆ தவறின் வாசலை ஆரம்பத்திலேயே அடைத்து விடுகிறது.
“எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் ஈமான் கொண்டிருக்கிறாரோ அவர் தனக்கு மஹ்ரம் இல்லாத ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுடன் மூன்றாமவனாக சைத்தான் இருக்கின்றான்” (அஹ்மத்)
 
கடுமையான தண்டனையும், இறையச்சமும்
 
உமர்(ரழி) சொன்னார்கள், “இறையச்சத்தால் திருந்தாதவர்கள், சுல்தானினால்(அதிகாரத்தினால்) திருத்தப்படுவார்கள்”
 
அந்தவகையில் இஸ்லாமிய குற்றவியல் முறைமையை அமூல்செய்வதன் ஊடாக இத்தகைய
சமூகத்தீமைகள் மிக இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.
 
விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அந்நூர்:2)
 
பனீ அஸ்லம் கோத்திரத்;தைச் சேர்ந்த ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடத்தில்(ஸல்) வந்து  தான் விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டேன் எனக்கூறி தனக்கெதிராக தானே நான்கு முறை சாட்சியம் கூறினார். ரஸ}ல்(ஸல்) அவர்கள் அவர் திருமணமானவர் என்பதால் அவரை கல்லால் எறிந்து கொல்லும்படி கட்டளையிட்டார்கள். (புஹாரி)

ஓரினச்சேர்க்கை
 
எயிட்ஸின் தோற்றத்திற்கும் ஓரினச்சேர்க்கைக்கும் இடையே நேரடித் தொடர்பிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்hகவிலுள்ள லொஸ் ஏன்ஜெல்ஸில் வசித்த ஐந்து ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களிடமிருந்தே எயிட்ஸிற்கான கிருமி முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு 1981 ஜுன் 5ஆம் திகதி அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டுக்கும், தடுப்புக்குமான நிலையத்தினால்தான் உலகில் முதன்முதலில் எயிட்ஸ் தொற்றுநோய் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்று எயிட்ஸின் பரம்பலுக்கு ஓரினச்சேர்க்கையும் அடிப்படைக் காரணமாக கொள்ளப்பட்டாலும் அந்தக் காரணத்தை மையப்படுத்தாமல் பொதுவாகவே ஓரினச்சேர்க்கையை மிகக்கொடிய பாவமாக இஸ்லாம் ஏற்கனவே தடைசெய்து விட்டது. லூத்(அலை) அவர்களின்
சமூகத்தை வேறெந்த சமூகத்தையும் அதைப்போன்று அழிக்காத முறையில் அல்லாஹ்(சுபு) மிகப்பயங்கரமாக அழித்ததும் இந்த தீயசெயலுக்காகத்தான் என்பதை அல்குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது.
 
இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிப்பதாக இக்ரிமா(ரழி) ஒரு நபிமொழியை அறிவிக்கிறார்கள், “ லூத்தினுடைய மக்கள் செய்த செயலை (ஓரினச்சேர்க்கை) எவராவது செய்வதை உங்களில் யாராவது கண்டால் அதனைத் செய்தவரையும், செய்யப்பட்டவரையும் கொலை செய்து விடுங்கள்”
 
ஸஹாபாக்களைப் பொருத்தமட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களை எவ்வாறு கொலை செய்வது என்பதில் கருத்துவேறுபாடு கொண்டிருந்தார்களேயொழிய அவர்களை கொலைசெய்யும் விடயத்தில் அவர்கள் இஜ்மாவுடன்(ஏகோபித்த கருத்துடன்) உடன்பட்டிருந்தார்கள்.
 
அல் பைஹக்கி (ரஹ்), அலி(ரழி) அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களை கற்களால் அடித்துக்கொன்றார்கள் எனக்குறிப்பிடுகிறார்கள். மேலும் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் ஓரினச்சேர்;க்கையாளர்களுக்கான தண்டனை பற்றி கேட்கப்பட்ட போது அவர்கள் ” நகரத்தில் இருக்கின்ற உயரமான கட்டிடம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து தலைகீழாக அவர் தள்ளப்பட்டு, பின்னர் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும்” என்று சொன்னார்கள். மேலும் அலி(ரழி) அவர்கள் ”அவரின் பாவச்செயலின் கொடூரம் காரணமாக அவர் வாளால் கொல்லப்பட்டு பின்னர் எறிக்கப்பட வேண்டும்” என்றார்கள். உமர்(ரழி) மற்றும் உத்மான்(ரழி) போன்றோர்கள் இப்பாவத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒரு பாரிய சுவர் தள்ளி வீழ்த்தப்பட வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தார்கள். இவ்வாறு கொல்லும் விதத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் கொலைத்தண்டனையில் அவர்கள் உடன்பட்டிருந்தார்கள் என்பதையே இந்த அபிப்பிராயங்கள் காட்டுகின்றன.

ஆண் - பெண் உறவில் திருமண பந்தத்தை அடிப்படையாக்கல்
 
இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துவதுடன், அதனை இளம் வயதில் மேற்கொள்வதை மிகவும் வரவேற்கிறது. அதற்கு தடையாக இருக்கும் சமூக வழமைகளை முற்றாகக் களையச் சொல்கிறது.

“இளைஞர்களே! உங்களில் திருமணமுடிக்க வசதியுள்ளவர்கள் திருமணம் முடித்துக்கொள்ளுங்கள். அது உங்களை ஏனைய பெண்களை பார்ப்பதை விட்டும் தடுக்கும். மேலும் உங்கள் கற்பைக் காக்கும். மேலும் யார் திருமண முடிக்க வசதியில்லாதிருக்கிறாரோ அவர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும். அது அவரை பாதுகாக்கக் கூடியது. (முஸ்லிம்)

அபு ஹீரைரா(ரழி) அறிவிக்கிறார்கள், அல்லாஹ்(சுபு) உதவி பெரும் உரிமை மூன்று சாராருக்கு இருக்கின்றது. அல்லாஹ்(சுபு) பாதையில் போராடும் ஒரு முஜாஹித், தனது கற்பைப் பாதுகாக்கும் நோக்கில் திருமண முடிக்க நாடுபவர், தன்னை விடுவித்துக்கொள்ள நிதியினை எதிர்பாக்கும் ஒரு அடிமை”
 
இஸ்லாமிய சமூக முறைமை இளையோர்கள் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக  பழகுவதற்கு முன்னர் திருமணம் என்ற ஒரு பொறுப்புணர்வுள்ள அலகுக்குள் நுழைவதற்கு வழிகாட்டுகிறது. இந்த பாதுகாப்பான பாலியல் வடிகாலினூடாக HIV தொற்று முளையிலேயே கிள்ளியெறியப்படுகிறது.
 
போதைப்பொருட்களை ஊசிகளால் உடலுக்குள் பாய்ச்சுவதைப் பொருத்தமட்டில் - போதைப்பொருள் பாவணை இஸ்லாத்தில் மிகக்கண்டிப்பாக தடுக்கபட்டுள்ளதால் இஸ்லாமிய சமூக முறைமை தனது குடிமக்கள் மத்தியில் போதைப்பொருட்களின் புழக்கத்தையும், அதன் பாவணையையும் முற்றிலுமாக ஒழிப்பதை தனது முக்கிய குறிக்கோளாகக் கொள்ளும். இந்தச் சீர்திருத்தம் ஈமானிய சூழலை சமூகத்தில் நிலைநாட்டுதலில் தொடங்கி, போதைப்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விநியோகிப்பவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது வரை தொடரும்.
 
HIV இனால் பாதிப்புற்றவரை களங்கம் கற்பித்தல்
 
HIV இனால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் நிச்சயம் இஸ்லாம் அனுமதிக்காத பாவ காரியத்தில்தான் ஈடுபட்டிருப்பார் என்ற முடிவுக்கு நாம் தீர்க்கமாக வந்துவிடமுடியாது. தடுக்கப்பட்ட காரியங்களில் ஈடுபடாத நிலையிலும் சிலருக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அது தொற்றியிருக்கக் கூடும். எனவே ஒருவர் HIV இனால் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு வகையான களங்கமாக எமது சமூகத்தில் நோக்கப்படலாகாது. ஒரு மனிதர் பாவமான காரியத்தில் ஈடுபட்டிருந்தால் அது தீர்க்கமாக நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாத நிலையில் சந்தேகத்தின் பேரிலும், ஊகத்தின் பேரிலும் அவர் மீது களங்கம் கற்பிப்பதும், தண்டனைகளை வழங்க எத்தனிப்பதும் இஸ்லாத்தால் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் HIV இனால் பாதிக்கப்பட்டிருப்பது இஸ்லாத்தின் பார்வையில் குற்றமாகாது. மாறாக அவர்கள் நோயாளிகளாக நோக்கப்பட்டு அவர்கள் மனிதாபிமான முறையில் நடாத்தப்பட்டு பூரண சுகத்திற்கான நிவாரணிகளை அவர்கள் பெறவேண்டும்.
 
நபி(ஸல்) சொன்னார்கள், “அனைத்து நோய்களுக்கும் மருந்துண்டு. ஆகவே அதனை பெற்றுக்கொள்ளுங்கள்.”
 
ஏனெனில்  HIV இன் பாதிப்பு முஸ்லிம் அல்லாத நாடுகளில் மாத்திரம் எதிர்கொள்ளப்படும் பிரச்சனை அல்ல. மிக அதிகளவான இஸ்லாமியச் சகோதரர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களை இஸ்லாமிய அணுகுமுறை கொண்டு பராமரிப்பது மிகவும் அவசியமாகும். மேலும் HIV இனால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற முஸ்லிம் நாடுகள் தமது
சமூகத்தில் இஸ்லாமிய சூழலை மிக ஆழமாக வேரூண்றச் செய்வதன் மூலம் மாத்திரமே HIV பரவுவதை குறைக்க முடியுமேயொழிய ஆசிய அபிவிருத்தி வங்கியின் வேலைத்திட்டங்களாலும், மேற்குலகத் தீர்வுகளாலும்  அதனை அடைந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

முடிவாக...
 
மேற்குலகு கவனத்தை குவிக்கின்ற எயிட்ஸ் தடுப்பு மருந்துகளுக்கான ஆய்வுகளும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் வழிமுறைகளைக் கையாள்வதும் அவசியமானதுதான். இருந்தாலும் அது பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வாக அமையாது. அவ்வாறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்றைய முதலாளித்துவ மருந்துற்பத்தி துறையின் சுரண்டல் மனோபாவம் அதனை குறைந்த விலைக்கு வழங்கி HIV இனால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு பயன்பட விடாது. எனவே மருத்துக் கம்பனிகளிடம் நாம் தீர்வை எதிர்பார்ப்பது கானல்நீர் நோக்கி நடப்பதற்கு ஒப்பானது.
 
எயிட்ஸ்க்கு புதுப்புது மருந்து கண்டுபிடிப்பதும், அதன் பரம்பலைத் தவிர்ப்பதற்கு விதம் விதமான உபாயங்களை முன்வைப்பதும் எயிட்ஸின் பாதிப்பிலிருந்து பல இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கு இதுவரை உதவவில்லை. காலத்திற்கு காலம் அதன் பாதிப்பு உலகில் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. HIV இனால் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள துணை-சஹாரா ஆபிரிக்காவில் மாத்திரம் 2013 ஆண்டில் 24.7 மில்லியன் மக்கள் HIV இனால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதேவருடம் 1.5 மில்லியன் மக்களுக்கு HIV தொற்றலாம் என்றும்,HIV இன் பாதிப்பினால் 1.1 மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என்றும் UNAIDS அறிக்கை தெரிவிக்கிறது என்றால் இந்நிலை இனியும் தொடர அனுமதிக்க முடியாது.
 
மனிதகுலம் வாழ்வதற்காக பிறக்கிறதேயொழிய விதம்விதமான கிருமிகளுக்கு பழியாகி மில்லியன் கணக்காக, பில்லியன் கணக்காக அநியாயமாக அழிவதற்கு பிறக்கவில்லை. மனிதர்களுக்கு நோய்கள் வருவதும், அதனால் அவர்கள் இறப்பேய்துவதும் பொதுவானதுதான். ஆனால் ஓர் ஒட்டுமொத்த மனித அவலமாக மாறும் போது அது சர்வசாதாரணமான விடயமல்ல. அது ஒரு விதிவிலக்கான நிலை. எயிட்ஸை பொருத்தவரையில் பெரும்பாலும் அது மனிதனின் துர்நடத்தையாலும், அதற்கு காரணமான சமுதாய மதிப்பீடுகளாலும் தோன்றிய கொடுமை என்பதை யாரும் மறுக்க முடியாது.
 
அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் முன்வைக்கும் கொன்டொம் பயன்பாடு, தூய ஊசிகளின் பாவணை, புதிய மருந்து உற்பத்தி என்ற திட்டங்கள் இதுவரை பயன்தராதது போலவே இனிவரும் காலங்களுக்கும் பயன்தரப்போவதில்லை. எனவே மேற்குலகின் போலித் தீர்வுகளுக்கு பின்னால் ஏதோ விமோஷனம் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் கண்ணைக் கட்டிக்கொண்டு காட்டில் நடக்கும் வழிமுறையை எமது நாடுகள் கைவிட வேண்டும். இந்தப்பிரச்சனைக்கெல்லாம் மூல காரணமான “சுதந்திரம்” என்ற முதலாளித்துவ கோட்பாடு   வாழ்வுக்குதவாதது என்ற ஞானம் எம்முள் பிறக்க வேண்டும். பிரச்சனையை நேர்மையாகவும், அறிவு பூர்வமாகவும் அணுகுவதற்கு நாம் இனியாவது பழக வேண்டும். உண்மையில் இந்த ஆட்கொல்லி நோயை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் அது தோன்றுவதற்கான உண்மையான சமூகக் காரணிகள் நிர்ணயிக்கப்படவேண்டும். அந்தப்புரிதலின் விளைவாக உலகில் அடிப்படைச் சமூகமாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றம் சத்தியமான ஒரு சித்தாந்தத்திலிருந்தே உதயமாக முடியும். அந்த வகையில் ஆரோக்கியமான சமூகக்கட்டமைப்பை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரேயொரு சித்தாந்தமான இஸ்லாமிய சித்தாந்தத்தினால் மாத்திரமே இன்று உலகில் HIV தோற்றுவித்துள்ள மனித அவலத்தை நேர்மையாய் எதிர்கொள்ள முடியும். இதற்கு முதலில் HIV இனால் பாதிப்புற்றுள்ள முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய முறைமையை அமூல்படுத்தி HIV ஒழிப்பில் முழு உலகுக்கும் முன்மாதிரியாய்த் திகழ்வது முதலாவது மைற்கல் என நினைக்கிறேன்.
Reactions:

0 comments:

Post a Comment

வாசித்தவர்கள்

Blog Archive

தொகுப்புகள்

'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்
Powered by Blogger.

Map IP Address
Powered byIP2Location.com

Follow by Email

Enter your email address:

Delivered by FeedBurner

இஸ்லாமிய மறுமலர்ச்சி

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

About Me

My photo
“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com