சிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் விஷயத்தில்
அமெரிக்க அதிகாரிகள் தங்களுக்கு இந்த விஷயம் முக்கியமற்றது எனவும் தங்களுக்கு அந்த
நாட்டிற்கென எந்தவொரு செயற்திட்டமும் இல்லை எனவும் தொடர்ந்து வலியுறுத்தி
வருகின்றனர். அதனடிப்படையில் அன்மையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஜெர்மனியில்
ஜூன் 8ம் தேதி நடந்த எழுவர்(7) குழு (G7) உச்சி மாநாட்டில் ஒரு செய்தி
அறிவப்பின்போது இவ்வாறு கூறினார்: “பயிற்சியளிப்பதையும் உதவி புரிந்து வருவதையும்
அமெரிக்கா தொடர்ந்து செயல்படுத்தும்,” என கூறி அதன் பின்னர் “எங்களிடம் இன்னும் ஒரு
முழுமையான செயற்திட்டம் இல்லை” என ஒப்புக்கொண்டார்.[1] அமெரிக்காவின் பாதுகாப்பு
அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டரும் ஜான் கெர்ரியும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ எதிர்கொள்ள ஒரு
முழுமையான செயற்திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை என அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் சிரியா மற்றும் ஈராக்கின் நோக்கத்தை மேலும் சிக்கல்
ஏற்படுத்தக்கூடிய அளவு வெளிதோற்றத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பெருமளவு சக்தியுடையதாக தோற்றம்
அளித்தாலும், உண்மையில் அமெரிக்க அதிகாரிகள் அவர்களுடைய செயற்திட்டத்தை வெளி
உலகிற்கு தெரிவிக்காமல் இருக்கின்றனர் இது அவர்களுடைய உண்மையான செயற்திட்டத்தை
நடைமுறை படுத்துவதற்கு கால அவகாசம் எடுத்து கொண்டிருக்கின்றனர், இந்த உண்மை சிரியா
எனும் அரங்கில் பங்கு கொண்டிருக்கும் அனைவருக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும்
நடவடிக்கைகளை உற்று நோக்கினால் நமக்கு தெரியவரும்.
பஷார் அல்-அசாதின் அரசை பொறுத்தவரை அமெரிக்கா
எப்போதும் ஒரே நிலைபாட்டை கொண்டிருக்கிறது, இது அதற்கென ஒரு தெளிவான செயற்திட்டத்தை
கொண்டிருப்பதை காட்டுகிறது. மார்ச் 2011ல் புரட்சி முழுவீச்சில் தடைபெற்று
கொண்டிருந்த சமயம், அமெரிக்காவின் திட்டத்தை மேற்கோள் காட்டி ஹிலாரி கிளிண்டன்
இவ்வாறு கூறினார்: “சிரியாவின் உள்ளே நடைபெற்று கொண்டிருப்பவை ஆழ்ந்த கவலையை
ஏற்படுத்தி வருகிறது, நான் அறிவது என்னவெனில் ஒரு மறு சீரமைப்பிற்கான திட்டத்தை
கொண்டு வரும் வாய்ப்பு அவர்களிடம் உள்ளது. சிரியாவில் முன்னேற்றத்திற்கான வழி
இருப்பதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆகவே நாங்கள் எங்களுடைய அனைத்து
நேசர்களுடன் தொடர்ந்து கை கோர்ந்து இந்த விஷயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவோம்.”
[2] இந்த புரட்சி மாதக்கணக்கிலிருந்து வருடக்கணக்காக நடைபெற்று கொண்டிருக்கிறது,
அமெரிக்க அதிகாரிகள் அல்-அசாதை கண்டித்தார்களே தவிர அவரையோ அல்லது அவரது அரசை
நீக்கவோ எதையும் செய்யவில்லை. பல நேரங்களில் உபயோகப்படுத்தப்பட்ட ரசாயன ஆயுதங்கள்,
கணக்கில்லாமல் போடப்பட்ட குழாய் வெடிகுண்டுகள், புரட்சி படைகளை உபயோகித்தது மேலும்
பொது மக்களை ராணுவத்தை கொண்டு சுற்றி வளைத்தது மற்றும் அவர்கள் மீது குண்டு மழை
பொழிந்தது இவ்வனைத்து செயல்களுக்கும் கண்டனத்தை தவிர அமெரிக்கா வேறு எதையும்
செய்யாதததை காண்கிறோம், இது அல்-அசாதின் அரசு தொடர்ந்து பதவியில் நீடிக்க செய்யவும்
மேலும் அவர் அந்த நிலையை தக்க வைத்து கொள்வதற்கான பாதுகாப்பு அரணாகவும் அமைந்தது.
சிரிய அரசு பற்றிய அமெரிக்காவின் உண்மை நிலையை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன்
பேனெட்டா சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் மூலம் ஊர்ஜிதமாக்குகிறது,
அதில் அவர் இவ்வாறு கூறினார்: “அசாத் வெளியேறும்போது முக்கிய விஷயமாக நான்
கருதுவது-நிச்சயமாக அவர் வெளியேறுவார்-அந்த நாட்டில் நிலைத்தன்மையை பாதுகாக்க முயல
வேண்டும். மேலும் அந்த வகையான நிலைத்தன்மை நீடித்து இருக்க அதிக அளவிளான
ராணுவத்தையும், காவல்துறையையும் பாதுகாப்பு படையினருடன் சேர்த்து நிலை நிறுத்த
வேண்டும், மேலும் அவர்கள் ஜனநாயக முறையிலான அரசை ஏற்படுத்துவதற்கு முன் வருவார்கள்
என நம்புகிறேன்.” [3] அமெரிக்கா இந்த புரட்சியின் முடிவு எதுவாகினும் இந்த அரசு
தொடர்ந்து நீடிக்க விரும்புகிறது, ஒன்று அசாத் இருக்கும் நிலையில் அல்லது அசாத்
இல்லாத நிலையில்.
சிரியாவின் புரட்சியானது மக்களை பல படை பிரிவுகளாக
ஒருங்கிணைக்க வைத்தது, நாட்டின் வெளியே இருந்தும் பலர் தங்களுடைய சகோதரர்களுடன்
சேர்ந்து அந்நாட்டிற்காக போராடத்தில் கலந்து கொண்டனர். அல்-அசாத் தேவை ஏற்படின்
கொடூரமான முறைகளை கையாளக்கூடிய வழக்கத்தை கொண்டிருப்பவர் என்பதால் பெரும்பாலான
உலகம் இந்த புரட்சியை அந்த அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என
நம்பினர். ஆனால் புரட்சியாளர்கள் நாட்டின் அனைத்து முனைகளிலிருந்து அரசுக்கு எதிராக
போராடி வருவதால், குறிப்பாக ராணுவத்திலிருந்து பல அதிகாரிகள் வெளியேறியதால், இந்த
அரசு இந்த புரட்சியை தோற்கடிக்கும் திறனை முழுமையாக பெற்றிருக்கவில்லை; இந்த
போராட்டம் வெகுவிரைவில் ஒரு இக்கட்டான நிலையை அடைந்தது. இங்கு தான் அமெரிக்கா
பேச்சுவார்த்தை நடத்தவும், ஆயுத உதவி செய்வதற்கும் மற்றும் சர்வதேச மாநாடுகளில்
சிரியாவின் எதிர்காலம் குறித்து அவர்களுடைய கருத்தை கேட்பதற்கு தோதுவான ஒரு
எதிரணியை உருவாக்கும் முயற்சியை தொடங்கியது. அமெரிக்கா மற்ற குழுக்களை விடுத்து சில
குறிப்பிட்ட குழுக்களிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதிலிருந்து அதன்
செயற்திட்டம் தெளிவாக தெரிகிறது. அதே போல் அந்த நாட்டின் நிலைப்பாட்டை மாற்றக்கூடிய
அளவிற்கான எந்த குழுவிற்கும் போதிய ஆயுதத்தை அது வழங்கவில்லை. நான்கு வருடங்கள்
ஆகின்றது, ஃபிரீ சிரியன் ஆர்மி(FSA), தி சிரியன் தேஷனல் கோஅலிஷன் (SNA) போன்ற
அமைப்புகளை அமெரிக்கா வியாபாரம் செய்ய விரும்பாத அமைப்புகள் மறைக்க செய்தது.
இஸ்லாமிய அமைப்புகள் உட்பட உண்மையான அமைப்புகளை விட மதசார்பற்ற அமைப்புகளை
ஊக்கப்படுத்துவதே அமெரிக்காவின் செயற்திட்டமாகும். இந்த முயற்சி முற்றிலும் தோல்வி
அடைந்தது இதன் காரணமாகவே அமெரிக்கா சிரியா அரங்கில் குழுக்களுக்கு நேரடியாக பயிற்சி
அளிக்கப்போவதாக அறிவித்தது.[4] இவையனைத்தும் சிரியாவிற்கென அமெரிக்கா ஒரு தெளிவான
செயற்திட்டத்தின் அடிப்படையில் செயலாற்றி கொண்டிருப்பதை காட்டுகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸின் வருகை சிரியாவில் நடைபெற்று
கொண்டிருக்கும் புரட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதே தவிற எந்த விதத்திலும்
அதற்கு உதவியாக இருக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் விஜயமானது போராட்டக்காரர்கள்
நாட்டின் தலைநகரான டமாஸ்கஸில் தாக்குதல்கள் நடத்தி கொண்டிருக்கையில் நடைபெற்றது.
அல்-அசாத் அரசு வெகு சில வீரர்களை மட்டுமே நம்பி இருந்தது மேலும் இந்த புரட்சியில்
தாக்குபிடிக்க அது ஈரானிய உதவியையும் ஆதரவையும் முழுமையாக நம்பி இருந்தது. இந்த
வசந்தத்தில் இஸ்லாமிய வாசம் வீசுவது தெளிவாக தெரிகின்றது, இந்த அரசை நீக்கி
இஸ்லாமிய அடிப்படையிலான ஒன்றை நிறுவ வேண்டியே போராட்டக்குழுக்களின் பெரும்பான்மையான
கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த சமயத்தில் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் விஜயமானது வந்ததோடு
இந்த புரட்சியை தடம்புரள செய்தது. ஜூன் 2014ல் மொசூலை வெற்றி கொண்டதிலிருந்து
ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் விரிவாக்கத்தை தொடக்கி வைத்தது. ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றுவதற்கு
உகந்த நிலையை ஏற்படுத்த உதவும் விதத்தில் ஈராக்கிய ராணுவத்திலிருந்து எண்ணிலடங்கா
அதிகாரிகளை தங்களின் பொறுப்பையும் நிலையையும் விட்டு செல்லுமாறு
கட்டளையிடப்பட்டதாக அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர் என்பதை நீண்ட நாட்களுக்கு
முன்பிருந்தே ரெவல்யூஷன் அப்சர்வரில் (www.revolutionobserver.com) நாம் இந்த
நிலைபாட்டை தெளிவாக விளக்கி வருகிறோம். ஈராக்கிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் சிரியா நோக்கி
விரிவடைந்து அங்குள்ள அனைத்து போராட்ட குழக்களுடன் நீடித்து நடைபெறக்கூடிய
யுத்தத்தில் நுழைந்தது. சிரியாவின் வட பகுதியில் போராட்ட குழுக்கள் வசமிருந்த பல
பகுதிகளை கைப்பற்றியது. பிரபலமான சர்வதேச பாதுகாப்பு நிறுவனமான ஜேம்ஸ்
இன்டெலிஜென்ஸ், 2014 ல் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய தாக்குதலில் 64% இதர
போராட்ட குழுக்களின் மீது நடத்தப்பட்டது எனவும் அதே நேரத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய
தாக்குதலில் வெறும் 13% அல்-அசாத் படையினரை நோக்கி இருந்தது என அறிவித்தது.[5]
இப்போது தெளிவாக்க்கூடிய விஷயம் என்னவெனில்
அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ அழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஐ.எஸ்.ஐ.எஸ் ஈராக்-சிரியா இடையே தன்னுடைய படைகள் மற்றும் ஆயுதம் தாங்கி
வாகனங்களுடன் தங்குதடையின்றி கடந்து செல்கின்றது, இந்த எல்லையோர பகுதியில்
எவ்விதமான விமான தாக்குதல்களையும் அமெரிக்கா மேற்கொள்ளவில்லை. பெறுவாரியான
நிலப்பரப்பில் இவர்கள் விரிவாக்கம் செய்தபோதும் எதிரிகளின் எண்ணிக்கை இவர்களை விட
30 மடங்கு அதிகம் இருந்த போதிலும் எப்படியோ எதிரணியினரை தோற்கடித்த போதிலும்,
டமாஸ்கஸ் அரசிற்கு நெருக்கமாக பாக்தாத் வந்தடையும் வரை அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ்
ஸிற்கு எதிராக எதையும் செய்யவில்லை. அமெரிக்க விமானப்படையின் இந்த நிலைபாடு பல
ஈராக்கியர்களையும் சிரியர்களையும் நிலைகுலைய செய்தது. அமெரிக்கர்கள் மற்றும் அதன்
நேச நாடுகள் இதுவரை தாங்கள் எங்கும் அனுப்பியராத ஆகாயத்திலிருந்து துள்ளியமாக
தாக்கக்கூடிய போர் விமானங்களை கொண்டுள்ளது, இருந்த போதிலும் சமீபத்தில் ரமாதியில்
நடந்த போரில் அமெரிக்க வெறும் 19 வான்வழி தாக்குதல்களை மட்டுமே நடத்தியது.[6]
மேஜர். முஹம்மத் அல்-துலைமி, அன்பார் பிராந்தியத்தை சார்ந்த ஒரு ஈராக்கிய அதிகாரி
“அன்பாரில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்கள் எங்களது படைகளுக்கு ஐஃஎஸ்.ஐ.எஸ்
ஐ எதிர்கொண்டு தடுத்து நிறுத்த எந்த வகையிலும் உதவவில்லை. அமெரிக்க தலைமையிலான
கூட்டணி வான்வழி தாக்குதல்களின் செயலற்ற தன்மையால் நாங்கள் பெருமளவிளான இடங்களை
இழக்க வைத்தது.” [7] என கூறினார். அன்பாரில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் தரைப்படை பலத்தை
சமாளிக்க போதுமான உதவிகளை சர்வதேச படைகள் அளிக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் வெற்றியை
கொண்டாட ரமாதியில் ராணுவ பேரணியை கூட நடத்தியது, அப்பேரணியில் அது கைப்பற்றிய
அமெரிக்க ராணுவ தளவாடங்களும் அடங்கும், இருந்தும் அதன் மீது எவ்வித வான்வழி
தாக்குதலும் நடத்தப்படவில்லை.[8] அமெரிக்க விமானப்படை கீழே வீசிய ராணுவ தளவாடங்கள்
பல முறை நேரடியாக ஐ.எஸ்.ஐ.எஸ் கைவசம் சென்றடைந்தது.[9] ஐ.எஸ்.ஐ.எஸ் அல்-அசாதிற்கு
எதிரான போராட்ட குழுக்களை திசை திருப்பும் விதமான போராட்டத்தை மேற்கொண்டதன் மூலம்
அவர்களிடம் உள்ள பொருட்களையும் ஊக்கத்தையும் குறைத்து அவர்களை பலவீனமாக்கி
வருகிறது. அமெரிக்காவின் கண்ணோட்டத்திற்கு ஒத்து போகும் வகையில் அமைந்திருக்கும்
ஐ.எஸ்.ஐ.எஸ் ன் கண்ணோட்டம் தற்சமயம் அமெரிக்காவிற்கு சாதகமாக இருப்பதன் காரணத்தால்
தான் அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் ஸிற்கு எதிராக குறைவான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது
என்பதை காட்டுகிறது.
புரட்சியின் உயிரோட்டத்தை வெளியேற்றும்
செயற்திட்டத்தை அமெரிக்கா மிகவும் ஜாக்கிரதையாக செயல்படுத்தி வருகிறது, ஆனால் அது
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பல வருடங்களாக நடத்திய போரில் நேரடியாக ஈடுபட்டு
தோற்றதை போன்றல்லாமல், அதன் செயற்திட்டமானது பிராந்தியத்திலுள்ளவர்கள் மற்றும்
உள்நாட்டினரை பெரும்பாலும் ஈடுபடுத்தி தூரத்திலருந்து அதன் நடவடிக்கைகளை
மேற்கொள்வதே ஆகும். அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை என்னவெனில்
போராட்டக்குழுக்களுக்கு எதிராக சில கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் மக்கள்
அவர்களுடன் சேர்ந்து தொடர்ந்து போராடி வருவது தான். அரசுடன் பேச்சுவார்த்தையில்
ஈடுபட அமெரிக்கா விரும்பும் குழுக்கள் மக்கள் மத்தியில் துளி அளவு நம்பிக்கை கூட
பெற்றிருக்கவில்லை. இதன் விளைவாக அமெரிக்கா சிரியாவில் ஒரு நெடிய போராட்டத்தை பல
ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறக்கூடிய அளவிலான போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்நிலை
சிரியாவில் அமெரிக்கா இன்னும் சில ஆண்டுகள் ஈடுபட்டிருக்கும் என்பதை சுட்டி
காட்டுகின்றது. அமெரிக்கா விரும்பிய முடிவு ஏற்படாததன் காரணத்தால் இந்த பிரச்சினை
முடிவுக்கு வர நீண்ட காலமாகும். அமெரிக்க அதிகாரிகள் தங்களுக்கு சாதகமான சூழல்
ஏற்படுவதற்குரிய நேரம் வரை காலம் தாழ்த்தப்பட வேண்டும் என்ற காரணத்தால் தான்
தொடர்ந்து தங்களிடம் எந்தவொரு முழுமையான செயற்திட்டம் இல்லை என்று கூறி
வருகிறார்கள்.
[9]
http://21stcenturywire.com/2015/02/18/in-plain-sight-coalition-forces-routinely-air-drop-military-supplies-to-isis-fighters-in-syria/
Sources: http://sindhanai.org/
No comments:
Post a Comment