Jun 22, 2016

இந்திய தளங்களைில் காலூன்ற முயலும் அமெரிக்க இராணுவம்....!! பகுதி - 01

 
 
அமெரிக்க இராணுவம் மீள் எரிபொருள் நிரப்புவதற்கும், பழுது பார்ப்பதற்கும் மற்றும் நிறுத்தி வைப்பதற்கும் உரிய இடமாக இந்திய விமானத் தளங்களை மற்றும் துறைமுகங்களை வழமையாக பிரயோகிக்க அனுமதிப்பதற்கு புது டெல்லி கோட்பாட்டுரீதியில் உடன்படுகிறது என்ற கடந்த மாத அறிவிப்பை இந்திய உயரடுக்கு மனதார வரவேற்றுள்ளது.
 
 
அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டரின் சமீபத்திய இந்திய விஜயத்தின் இறுதி நாளான ஏப்ரல் 12 அன்று ஒரு கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில், அவரும் அவரது இந்திய சமபலமான மனோகர் பாரிக்கரும் அறிவிக்கையில், புது டெல்லியும் மற்றும் வாஷிங்டனும் தளவாடங்கள் பரிவர்த்தனை புரிந்துணர்வு உடன்படிக்கையை (LEMOA) இறுதி செய்ய "கோட்பாட்டுரீதியில்" உடன்பட்டிருப்பதாக அறிவித்தனர்.
 
அத்தகைய ஒரு உடன்படிக்கை ஒரு தசாப்தமாக அல்லது அதற்கும் அதிகமான காலத்தில் அமெரிக்காவின் ஒரு பிரதான நோக்கமாக இருந்துள்ளது. இது சீனாவை மூலோபாயரீதியில் தனிமைப்படுத்த, சுற்றி வளைக்க மற்றும் அவசியமானால் அதற்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலில் இந்தியாவை ஒரு "முன்னிலை" நாடாக ஆக்குவதை நோக்கிய ஒரு பிரதான படியாகும்.
 
மே 2014 இல் பதவிக்கு வந்ததில் இருந்து, இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) தலைமையிலான அரசாங்கம் முன்பினும் அதிகமாக முழுமையாக அமெரிக்காவின் சீன-விரோத "ஆசிய முன்னெடுப்புக்குள்" ஒருங்கிணைந்துள்ளது.
 
 "கடல் போக்குவரத்து பாதுகாப்புக்கும்" மற்றும் கிழக்கு ஆசியாவில் "சுதந்திர கடல் போக்குவரத்து" மற்றும் "விமான போக்குவரத்துக்கும்" சீனாவை ஒரு அச்சுறுத்தலாக சித்தரித்து, தென் சீனக் கடல் மீதான வாஷிங்டனின் ஆக்ரோஷமான தொனியையே பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது அரசாங்கமும் மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளையைப் போல கூறி வருகின்றனர். மோடி அரசாங்கம் அமெரிக்காவுடன் மற்றும் ஆசிய-பசிபிக், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் அதன் பிரதான கூட்டாளிகளுடனான இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ பாதுகாப்பு உறவுகளையும் அதிகரித்துள்ளது. 
 
 இதில் வருடாந்தர இந்தோ-பசிபிக் கடற்படை பயிற்சியில் (மலபார் பயிற்சி) ஜப்பானை ஒரு பங்காளியாக ஆக்கியமை, மற்றும் இந்தோ-பசிபிக் "கடல் போக்குவரத்து பாதுகாப்பு பேச்சுவார்த்தையைத்" தொடங்கியமை ஆகியவையும் உள்ளடங்கும். இந்தியாவின் கிழக்கை நோக்கிய நடவடிக்கை (Act East) கொள்கையை (அதாவது தென்கிழக்கு ஆசியாவுடன் பொருளாதார மற்றும் இராணுவ-பாதுகாப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கான அதன் உந்துதலை) அமெரிக்காவின் "முன்னெடுப்பு" அல்லது "மீள்சமன்படுத்தலுடன்" ஒருங்கிணைக்கவும் மற்றும் இராணுவ தளவாட அமைப்புமுறைகளைக் கூட்டாக உற்பத்தி செய்வது மற்றும் கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான வாஷிங்டனின் முன்வரலையும் பிஜேபி அரசாங்கம் ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளது.
 
இந்தியாவின் பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் எண்ணற்ற இராணுவ-மூலோபாய பகுப்பாய்வாளர்கள் அமெரிக்காவுடன் LEMOA உடன்படிக்கையை இறுதி செய்வதென்ற மோடி அரசாங்கத்தின் தீர்மானத்தைப் பாராட்டியுள்ளனர். அவர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஒரு விரிவாக்கப்பட்ட இராணுவ-மூலோபாய பங்காண்மையானது பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிராக இந்தியாவின் கரங்களைப் பலப்படுத்தும் என்றும் தெற்காசியா, இந்திய பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பாலும் அதன் வல்லரசாகும் அபிலாஷைகளைப் புது டெல்லி எட்டுவதற்கு உதவும் என்றும் வாதிடுகிறார்கள். அவர்கள் கூறியுள்ள ஒருசில ஆட்சேபணைகள், மத்தியக் கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் சட்டவிரோத போர்கள் நடத்துவதில் சர்வதேச சட்டத்தை அவமதிக்கும் அமெரிக்காவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளையோ அல்லது அணுஆயுத ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அதன் பொறுப்பற்ற மூலோபாய நடவடிக்கைகளுடனோ சம்பந்தப்பட்டதில்லை.
 
 
அதற்கு மாறாக அவர்களது கவலை எல்லாம், தசாப்தகாலமாக பாகிஸ்தான் இராணுவத்துடனான அமெரிக்காவின் பங்காண்மையின் மீதுள்ளது, பாகிஸ்தான் விடயத்தில் உண்மையில் வாஷிங்டன் இந்தியாவின் "கரங்களைச் சுதந்திரமாக விடாது" என்பதற்காக அவர்கள் சீறுகிறார்கள். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏப்ரல் 14 தலையங்கத்தில், “மூலோபாய மற்றும் இராணுவ விவகாரங்களில் அமெரிக்காவுடன் இன்னும் நெருக்கமாக ஈடுபடுவதற்கும் மற்றும் வேகத்தை அதிகரிப்பதற்கும் சரியாக முடிவெடுத்ததற்காக" மோடி அரசாங்கத்தைப் பாராட்டியது. “சமநிலைப்படுத்தும் நடவடிக்கை: அமெரிக்கா உடனான தளவாடங்களின் உடன்படிக்கை இந்தியாவின் மூலோபாய சுயஅதிகாரத்தை முடமாக்குவதைக் காட்டிலும் விரிவாக்குகிறது" என்று தலைப்பிடப்பட்ட அந்த தலையங்கம் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் விமர்சனங்களுக்கு ஒரு தெளிவான மறுமொழியாக இருந்தது. மிக முக்கியமாக, தளிர்விட்டுவரும் இந்தோ-அமெரிக்க இராணுவ-மூலோபாய கூட்டணியின் உண்மையான இலக்காக சீனாவை அடையாளம் காண்பதில் டைம்ஸ் மிகவும் ஒளிவுமறைவின்றி இருந்தது.
 
அமெரிக்காவுடனான நெருக்கமான பங்காண்மையானது, "சீனா இந்திய பெருங்கடலில் ஒரு கடல்போக்குவரத்து சக்தியாக வளர்வதற்கு ஏற்கனவே முயற்சித்து வருகின்ற நேரத்தில், இந்தியாவிற்குத் தவிர்க்கவியலாத நிர்பந்தமாகும்" என்றது வாதிட்டது. “சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 65 சதவீதம் இந்திய பெருங்கடல் வழியாக கடந்து செல்கின்றன. இப்பகுதியில், முக்கியமாக மலாக்கா ஜலசந்தியில், இந்தியா கடல் போக்குவரத்து மேலாதிக்கத்தைப் பேணுவது மத்திய காலத்திற்கு இந்தியாவின் மூலோபாய சுயஅதிகாரத்தைப் பேணுவதற்கு முக்கியமாகும்,” என்றது தொடர்ந்து குறிப்பிட்டது.
 
சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு இந்திய பெருங்கடல் மற்றும் மலாக்கா ஜலசந்தி முக்கியமானது என்ற குறிப்பானது, சீனாவுடனான ஒரு போர் நடவடிக்கையில் அல்லது போர் நெருக்கடி சமயத்தில் மலாக்கா ஜலசந்தி போன்ற முக்கிய இந்திய பெருங்கடலின் திணறடிக்கும் முனைகளைக் கைப்பற்றுவதன் மூலமாக சீனா மீது ஒரு பொருளாதார முற்றுகையைத் திணிப்பதற்கான வாஷிங்டனின் திட்டங்களுடன், இந்திய உயரடுக்கு, முழுமையாக இந்திய மக்களின் முதுகுக்குப் பின்னால், எந்தளவிற்கு அணி சேர்ந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
 
 
khaibarthalam.blogspot.ae

No comments:

Post a Comment