இன்றைய உலகில் எங்காவது இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறதா..??இன்றைய உலகில் எங்காவது இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறதா, அதாவது சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் (தாலிபானிற்கு கீழ்) போன்ற நாடுகளில்?


ல்லை
, தற்போதய முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய சட்டத்தின் சில பகுதிகளை மட்டுமே நடைமுறை படுத்தி வருகின்றன: அதிகப்படியாக அவை குடும்பவியல் சட்டங்களின் சில பகுதிகளை உபயோகித்து வருகின்றன, ஆனால் எந்தவொரு நாடும் முழுமையாக தன் சட்டங்களையும் கொள்கைகளையும் இஸ்லாமிய அடிப்படையில் பிரித்தியேகமாக அமைத்து கொள்ளவில்லை. பாகிஸ்தானில், இஸ்லாமிய சட்டத்தை குடும்ப பிரச்சினைகளை தீர்க்கவும் அல்லது இஸ்லாமிய உணர்வுகள் மீது தான் அக்கறை கொண்டுள்ளதாக அடையாள படுத்துவதற்காக மட்டுமே உபயோகித்து வருகிறது, ஹுதூத்(தண்டனை) சட்டத்திலும் இதே நிலை தான். இது தான் தகுதியற்ற ஊழலுற்ற அரசாங்கங்கள் மற்றும் அவைகளின் மேற்கத்திய எஜமானர்கள் மற்றும் ஊடகங்கள் இஸ்லாமிய சட்டம் செயலற்று இருப்பதாகவும் மேலும் அதனால் சமூகத்தை நிர்வகிக்க முடியாது என்று சித்தரிப்பதற்காக செயல்படுத்தும் திட்டமாகும்.3

பல லட்சக்கணக்கான திருக்குர்’ஆன் பிரதிகள் மற்றும் இஸ்லாமிய நூல்களை அன்பளிப்பாக வழங்கலாம் மற்றும் உலகெங்கும் பள்ளிவாயில்கள் நிர்மானிக்க அதிகப்படியான நிதிகளை சவூதி அரேபியா அன்பளிக்காக வழங்கலாம், எவ்வாறிருப்பினும் சில இஸ்லாமிய அடிப்படைகளை கொண்ட சட்டங்கள் மற்றும் சில மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களையும் கொண்டு சவூதி அரேபியா ஒரு கலப்படமான சட்டங்களையே பின்பற்றி வருகின்றது. எனினும் இஸ்லாமிய கண்ணோட்டத்தை தக்கவைத்துக்கொள்ள அவைகளை அது சட்டங்கள் என குறிப்பிடுவதில்லை. இஸ்லாமிய சட்டங்களையும் மனிதன் இயற்றிய சட்டங்களையும் வேறுபடுத்தி காட்ட சவூதி பிரத்தியேகமாக குறிப்பிட்ட சில வார்த்தைகளை உபயோகிக்கின்றது. அரசியலமைப்பு சம்மந்தமான ஒரு அரபி நூலில் அதன் ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார், “சவூதியில் விதி(ஆனூன்) மற்றும் சட்டம்(தஷ்ரீ’) போன்ற வார்த்தைகள் இஸ்லாமிய ஷரீஆவிலுருந்து எடுக்கப்பட்டவைகளை குறிப்பிடுவதற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது…4 மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களை பொறுத்தவரை அதாவது அமைப்புகள் (அந்திமா) அல்லது வழிமுளைகள (த’லீமாத்) அல்லது பிரகடனங்கள் (அவாமிர்)……. இது தவிர ஒரு பரம்பரை முடியாட்சியான சவூதி அரேபியா மார்க்க நிறுவனங்களை முதலாளித்துவ மற்றும் மேற்கத்திய உலகிற்கு ஆதரவான திட்டங்களுக்கான எதிர்ப்புகளை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக உபயோகித்து வருகிறது.

இதை போன்று தாலீபானும் இஸ்லாத்தின் சில அம்சங்களை நடைமுறை படுத்தி வந்தது. ஆப்கானிஸ்தானை தாலீபான்கள் ஆண்ட போது அவர்கள் ஒருபோதும் தாங்கள் இஸ்லாமிய அரசாங்க முறையான கிலாஃபத் முறையை பின்பற்றுகிறோம் என்று கூறியதில்லை, மாறாக தங்களை ஒரு அமீரகமாகவே அடையாள படுத்தியது அது வெளியுறவு கொள்கை அற்ற ஒரு சில சட்ட வறையறைகளை கொண்டு ஒரு எல்லைக்குள் மட்டுமே செயற்படும் ஒரு அரசியல் நிறுவனமாக தான் செயல்பட்டது. இஸ்லாமிய ஆட்சியமைப்பானது பொருளாதாரம், சமூகவியல், ஆட்சிமுறையாக இருக்கட்டும் மேலும் வெளியுறவு கொள்கை அமைத்து கொள்வது ஆகட்டும் இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் நடைமுறை படுத்தக்கூடியதாக இருக்கும், கிலாஃபத்தானது ஒரு தனித்து விடுபடக்கூடிய நாடு கிடையாது.

ஈரானிய அரசியலமைப்பு பல அம்சங்கள் இஸ்லாத்தோடு ஒத்து போகக்கூடிய வகையில் இருக்கின்றன அதேபோல மற்றவைகள் இஸ்லாத்திற்கு நேர் எதிராக உள்ளது. ஈரானிய அரசியல் சாசனத்தின் விதி 6 இவ்வாறு கூறுகின்றது: “ஈரானின் இஸ்லாமிய குடியரசு, நாட்டின் விவகாரங்களை ஜனாதிபதி, இஸ்லாமிய கலந்தாய்வு சபை உறுப்பினர்கள், கவுன்சில் உறுப்பினர்கள் போன்றவர்களை தேர்தல்கள் நடத்தி தேர்த்தெடுப்பது உட்பட பொதுஜன கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் நாட்டின் விவகாரங்களை மேற்கொள்ள வேண்டும், அல்லது பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் அதன் சில விவகாரங்களில் அரசியல் சாசனத்தின் இதர விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை தழுவி மேற்கொள்ள வேண்டும்.” இஸ்லாமிய அமைப்பை கொண்ட அரசியலமைப்பு – அதாவது கிலாஃபத்தானது முழுமையாக இஸ்லாமிய ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதாகும். ஈரானின் விஷயத்தில் இது பொருந்தாது ஏனெனில் அது தனது அரசியலமைப்பில் ” நாட்டின் விவகாரங்களை தேர்தல்கள் மூலம் வெகுஜன கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் செயல்படுவதாக” அறிவிக்கிறது”. இஸ்லாத்தை பொறுத்தவரை நாட்டின் விவகாரங்கள் வெகுஜன கருத்தின் அடிப்படையில் அல்லாமல் ஷரீ’ஆவின் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படும்.

Sources: sindhanai.org