- உஸ்தாத் சஈத் ரித்வான் !
சிரியாவில் புரட்சி வெடித்த சந்தர்ப்பத்திலிருந்து இன்றுவரை ஏனைய சர்வதேச சக்திகள் சிரிய விவகாரத்தில் மூக்கை நுழைப்பதை தடுப்பதற்காக அமெரிக்கா கடுமையான பிரயத்தனத்தை எடுத்து வருகிறது. இதுவரை காலமும் எவரேனும் அதற்குள் தலையிட்டு இருப்பார்களேயானால் அது அமெரிக்காவின் அனுமதியுடனோ அல்லது கடைசியாக ரஸ்யா தலையிட்டதைப்போல அமெரிக்காவில் வேண்டுதலின் பேரிலோதான் அவை இடம்பெறுகின்றன.
பேச்சுவார்த்தைகள் போன்ற அரசியல் வழிமுறைகளினூடாக, அல்லது ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டிப் படுகொலைகளினூடாக சிரியப் புரட்சியில் பாரிய அலுத்தத்தை பிரயோகித்து அமெரிக்கா வழங்குகின்ற தீர்வுக்கு இணங்கச் செய்யும் அமெரிக்காவின் அனைத்து முயற்சிகளும் படு தோல்வியில் முடிந்துள்ளன.
சிரியப்புரட்சி அனைத்து பிரதான தரப்புக்களையும் கதிகலங்கும் ஓர் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. குறிப்பாக யாருடைய கையில் களத்தின் கயிறுகள் இருக்கின்றனவோ அந்த அமெரிக்காவையே அது விழிபிதுங்கச் செய்துள்ளது.
பாவித்த அனைத்து துரும்புகளும் கை கொடுக்காத நிலையில் இந்த நெருக்கடி நிலையிலிருந்து வெறியேறும் பாதையாக துருக்கியை பயன்படுத்த அமெரிக்கா கண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அதன்படி அதனது நாசத்திட்டத்தை தனது முக்கிய முகவரான அர்துகானின் கரங்களால் அமூல்படுத்த அது காத்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய பிரபல்யத்தை தன்னகப்படுத்தியிருக்கும் அர்துகானுக்கு சிரியாவுக்குள் இயங்கும் சில குழுக்களிடையே காணப்படும் ஏற்பு நிலையை அது பயன்படுத்த நினைத்திருக்கிறது. குறிப்பாக சிரியாவுக்குள் ஈரானிய வகிபாகம் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு விடயமாக தோற்றம் பெற்றுள்ள நிலையிலும், சிரியாவுக்குள் ரஸ்ய - ஈரானிய கூட்டணி முயற்சி இனி பலிக்க போவதில்லை என்ற நிலை உருவாகியிருக்கின்ற நிலையிலும் அமெரிக்காவின் கவனம் துருக்கி மீது குவிந்துள்ளமை தவிர்க்கப்பட முடியாததே.
எனவே அது வரவிருக்கின்ற அரங்கிற்கு ஏற்றவாறு அனைத்தையும் தயார்படுத்த களத்திற்குள் குதித்துள்ளது. அவற்றில் முக்கியமானவை,
1. எதிர்கால சிரியா இஸ்ரேலுடன் விரோதத்தைப் பேண மாட்டாது என்பதற்கான உத்தரவாத்தை வழங்குவதற்காக துருக்கியின் சியோனிச யூதர்களுடனான உறவை சுமூகப்படுத்துவது.
2. “அஷ்ஷாமின் கொடுங்கோலன் பஷாரின் முழுமையான வெளியேற்றமே சிரியாவின் தீர்வுக்கான நிபந்தனை” என இதுவரை காலமும் பேரளவுக்காவது முன்வைத்து வந்த அர்துகானின் உறவை பஷாருடன் சுமூகப்படுத்தி பலப்படுத்துவது.
3 சிரியாவில் துருக்கியின் தலையீட்டால் ஈரானுக்கும் அதன் நலன்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்தி ஈரானுடனான உறவை மேம்மடுத்துவது.
4. துருக்கியின் தலையீட்டால் ஈராக்கின் உள்ளரங்கில்; ஏற்படக்கூடிய பாதிப்பை விளக்கி ஈராக்குடனான உறவை மேம்படுத்துவது.
5. திட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் அதனுடன் ஒருங்கிணைப்புடன் செயற்படவும், ஐரோப்பியத் தலையீட்டை தொடர்ந்து தள்ளி வைத்துக் கொள்வதற்கும் ரஸ்யாவுடனான உறவை சுமூகப்படுத்துவது
6. அண்மையில் இஸ்ரேலுடன் சமூகமான நல்லுறவை ஏற்படுத்திய கேவலமான செயலினால் அர்துகானின் பிரபல்யம் துருக்கிக்குள் சரிவடைந்து செல்வதை தடுத்து நிறுத்துவது. துருக்கிய இராணுவத்திற்குள் அர்துகானுக்கு எதிராக உருவாகி வரும் எதிர் சக்திகளின் விவகாரத்தை தீர்;த்து வைப்பது...
தமது அரசியல் தீர்மானப் பொறிமுறைக்கு வெளியே இடம்பெற்றதாக அர்துகானே ஏற்றுக்கொண்ட சம்பவமான ரஸ்ய தாக்குதல் விமானத்தை துருக்கிய விமானப்படை சுட்டு வீழ்த்திய சம்பவம் இந்த எதிர் சக்திகளின் வளர்ச்சியை தெளிவாகக் காட்டியது துருக்கிய நிகழ்வுகளை அவதானிப்போர் அறிந்த விடயமே.
7. சிரியக் களத்துக்குள் அர்துகான் முழுமையான நுழைவதாக இருந்தால் உள்நாட்டுக்குள் அவரை புறமுகுகில் குத்துகின்ற எந்தவொரு உறைவாளையும்; விட்டு வைக்க முடியாத நிலை உருவாகும். இத்தகைய உறைவாட்கள் இராணுவத்துக்குள் அவரை எதிர்க்கின்ற அணிகளில் பிரதிபலிக்கத் தொடங்கியிருந்ததால் அவற்றை முற்றாக அகற்றுவது.
மேலும் முக்கிய சில அவதானங்கள்...
முறியடிக்கப்பட்ட சதிப்புரட்சி, மக்கள் ஆதரவைத் திரட்டக்கூடிய விதத்தில் மக்களை விழித்து ஆற்றப்பட்ட எத்தகைய உரையையும் தாங்கி வராமலும், அர்துகானுக்கு எதிராக மக்களை தூண்டிவிடக்கூடிய விதத்தில் அவரது கொள்கைகளை அம்பலப்படுத்தாமலும், இன்னும் சொல்லப்போனால் சதியினை மேற்கொண்டவர்களின் இலக்குகளை சுட்டிக்காட்டக்கூடிய அல்லது சதிப்புரட்சியால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய நலனை சுட்டிக்காட்டக்கூடிய எத்தகைய சைக்கினையைக் கொண்டிராத வெறுமையாக ஒன்றாகவே காட்சியளிக்கிறது.
அதற்கும் மேலாக சதிப்புரட்சியின் இரு மருங்கிலுள்ளவர்களும் ஒரே திசையை பின்பற்றுபவர்கள். அர்துகானும், அவரது எதிராளிகளான பத்ஹ}ல்லாஹ் குலனும் அமெரிக்காவை பின்பற்றுவர்கள்!
மேலும் சதிப்புரட்சியினால் இராணுவத்துக்குள் தமக்கு இருக்கின்ற செல்வாக்கிற்கு என்னவாகும் என்பது பற்றி பிரித்தானியர்கள் வெளிப்படுத்திய ஆதங்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சதிப்புரட்சி தொடர்பாக பேசிய அமெரிக்க பேச்சாளர்களின் பேச்சுக்களில் சஞ்சலமற்ற நிலை தெரிகிறது.
மேலும்...
இந்த சதிப்புரட்சி அர்துகானினதும், அவரது அரசாங்கத்தினதும் பிரபல்யத்தை அதிகரிக்கும்.
மேலும் இராணுவத்தின் மீதான அவரது இறுங்குப்பிடியை உறுதிப்படுத்தும்.
அத்துடன் அவரது அரசியல் எதிராளிகளை மென்மேலும் பலகீனப்படுத்தும்.
இவை அனைத்தும் அர்துகானுக்கு கைகூடி வருமானால், சிரியாவில் அமெரிக்காவுக்காக சேவகம் செய்யும் துருக்கியின் வகிபாகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான வலிமையை அது அர்துகானுக்கு வழங்கும்.
முடிவாக,
சிரியா மீது துருக்கி செய்ய இருக்கின்ற தலையீடு சிரியப்புரட்சி தொடர்பான அமெரிக்காவின் அதிமுக்கியமானதும் ஆபத்தானதுமான செயற்திட்டங்களில் ஒன்றாகவே இருக்கப் போகிறது.
இந்தப் புரட்சிக்கு பலியாகிய துருக்கிய இராணுவம் அமெரிக்காவின் பலிக்கடாக்களாகியிருக்கின்ற அதேவேளை அரங்கேற்றப்பட்ட துருக்கிய சதிப்புரட்சியானது கொடியதொரு எதிர்காலத்திட்டத்திற்காக, காணப்படும் நிலைமைகளை கட்டுப்படுத்தவும், ஒழுங்கமைக்கவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்வாகவே தெரிகிறது. மாறாக அது ஏற்கனவே நடந்துகொண்டிருந்த முரண்பாடுகளின் ஒரு பகுதியாக தென்படவில்லை.
எனவே நிகழ்வுகள் எதை நோக்கி? எந்தளவு தூரத்திற்கு? எவ்வளவு காலத்திற்கு? நீளப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
Source : Darulaman.net
No comments:
Post a Comment