Aug 8, 2016

இன்றைய துருக்கியில் நடைபெறும் ஆட்சி கிலாஃபத் கிடையாதா?


இன்றைய துருக்கியானது இஸ்லாமிய கட்சியால் ஆளப்பட்டு வருகிறது என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். அது தன்னகத்தே நிச்சயமாக ஒரு இஸ்லாமியரை அதிபராகவும் இன்னொரு இஸ்லாமியரை பிரதம அமைச்சராகவும் கொண்டுள்ளது. 

இதன் காரணத்தால் இந்த துருக்கிய மாதிரி அரசாங்கம் பொருமளவில் பிரபல்யம் அடைந்துள்ளது மற்றும் மக்களது பார்வையையும் ஈர்த்துள்ளது. இந்த மாதிரியை கொண்ட அரசாங்கமானது அதாவது சில இஸ்லாமிய சட்டங்கள் மதசார்பின்மையோடு கலந்திருப்பதை விரும்பும் பல மேற்கத்திய அரசியல்வாதிகள் மற்றும் மதசார்பின்மை வாதிகளின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது ஏனெனில் அவர்கள் தாங்கள் இது மாதிரியான அரசாங்கத்துடன் எளிதில் உறவு கொள்ள முடியும் என்பதோடு இது போன்ற நிலையை ஏனைய முஸ்லிம் உலகில் பார்க்க விரும்புகின்றனர். 

முஸ்லிம் உலகில் பெரும்பாலோர் துருக்கி என்பது கிலாஃபத்தின் ஆட்சி முறையை கொண்டதாகவே அறிந்து வைத்திருக்கின்றனர் – இந்த கிலாஃபத்தானது ஒரு போர் குழுவை உலகின் சக்ரவர்த்திகளாக மாற்றியது. தாங்கள் இஸ்லாமிய ஆட்சி முறை படி ஆட்சி செய்கிறோம் என்ற ஏ.கே.பி கட்சியின் கூற்றினை ஆராய்ந்து பார்க்கையில் அதன் திட்டங்களில் இஸ்லாம் எவ்வகையிலும் பங்கு பெற்றிருக்கவில்லை என்றும் அது பொது மக்களிடம் அளித்து வரும் வெறும் வாய்ஜாலமே அன்றி வேறெதுவும் இல்லை. பொருளாதாரம் மற்றும் வெளியுறவு கொள்கைகள் ஏ.கே.பியின் பிரதான அடையாளங்கள் ஆகும் இரண்டுமே இஸ்லாம் அல்லாத பிற அடிப்படைகளை கொண்டு செயல்படுவதாக உள்ளது.

ஏ.கே.பி விற்கு ஆதரவு திரட்டுவதற்காக எர்துகான் சில பெரு வியாபாரிகள் பயன் பெரும் வகையில் துருக்கிக்கு உள்ளே பணம் கொண்டு வரும் வகையில் பொருளாதார கொள்கைகளை வகுத்துள்ளார். இஸ்லாம் இதை தடுத்துள்ளது மற்றும் அது சில பெரு முதலைகளிடம் சொத்துக்கள் சேரும் வகையிலான மேற்கத்திய மாதிரியிலான பொருளாதார விநியோக முறையிலிருந்து விலகி செல்லும். அதே போன்று துருக்கியின் வெளியுறவு கொள்கையில் இஸ்லாம் எந்த வகையிலும் பங்கு பெறவில்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக எர்துகானின் துருக்கி் அரசாங்கம் இஸ்ரேலுடனான உறவை தொடர்ந்து நீடித்து வருவது இதை இஸ்லாம் முற்றிலுமாக தடுக்கின்றது. ஏ.கே.பி தன்னுடைய வெளியுறவு கொள்கையில் இஸ்லாமை எந்த விதத்திலும் உபயோகிக்கவில்லை. இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் ஆட்சியாளர்களை ஒன்று திரட்டுவதற்கு பதிலாக (சலாஹுதீன் அய்யூபி செய்தது போன்று) அல்லது அல் குத்ஸை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கவும் இல்லை இதை செய்யும் ஆற்றல் துருக்கிக்கு இருந்த போதும், எர்துகான் வாய் சவடால் விடும் ஒரு குறுகிய சந்தர்ப்பவாத கொள்கையை இஸ்லாமிய வார்த்தைகள் பூசி தொடர்ந்து பேசி வருகிறார். துருக்கி ஒரு இஸ்லாமிய மாதிரி அரசாங்கத்தை பிரதிநிதித்துவ படுத்தவில்லை, அது உண்மையில் மேற்குலக நாடுகளை போன்று மதசார்பின்மை மற்றும் தேச நலன் அடிப்படையை கொண்டதாகும்.

http://sindhanai.org/

No comments:

Post a Comment