இது ஒரு குருட்டுத்தனமான வாதம்


Dr. ஜாகிர் நாயிக் மற்றும் அவரது Peace TV இரண்டையும் தடைசெய்யக்கோரி இந்தியாவின் ஊடகத்துறை ஓலமிட ஆரம்பித்துள்ளது.
காரணம்?
அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற வண்முறைகளோடு தொடர்புபட்ட இரு இளைஞர்கள் Dr. ஜாகிர் நாயிக்கின் சமூகவலைத்தளங்களில் அவரை follow பண்ணியவர்களாம்.
இது ஒரு குருட்டுத்தனமான வாதம் என்பதை அநேகர் புரிந்துகொள்வார்கள். எனினும், இது தொடர்பான ரியாக்ஷன் என்று வரும்போது பங்களாதேஷில் இடம்பெற்ற வண்முறைகளைக் கண்டிப்பதிலேயே நம்மவர்கள் கூடிய கவனம் செலுத்துவார்கள். இவ்வாறன வன்முறைகள் எவ்வாறு நாங்கள் நேசிக்கும் Dr. ஜாகிர் நாயிக் மற்றும் அவரது Peace TV இரண்டையும் பாதிக்கின்றன என்று நியாயம் பேசுவார்கள்.
இங்குள்ள பிரச்சினை என்னவெனில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களதும் எதிரிகள் எப்படி இவ்வாறன பயங்கரவாதப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நசுக்க முற்படுகின்றார்கள் என்பதே. இவ்வாறன குருட்டுவாதங்களைக் கோடிட்டுக்காட்டுவதிலேயே நாங்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும்.
வெறுமனே வன்முறைகளைக் கண்டிப்பதிலேயே கூடிய கவனம்செலுத்துவது பெரிய அளவில் நன்மை பயக்கப்போவதில்லை. 1.7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இருக்கின்ற ஒரு சமூகத்தில் ஓரிருவர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதை எம்மால் தடுக்க முடியாது.
அத்துடன் இஸ்லாத்தின் எதிரிகளே தங்களின் அரசியல் இலாபங்களுக்காக முஸ்லிம்களுக்கு மத்தியில் சில பயங்கரவாதக் குழுக்களை வளர்க்கின்றார்கள் என்பதும் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்லாத்தின் எதிரிகள் எந்தவொரு முஸ்லிம் வன்முறையைக் கண்டும் அஞ்சுவதில்லை. மாறாக அவ்வன்முறைகளைக் காரணமாகக்காட்டி அவர்கள் தங்களின் இலக்குகளை இலகுவாக அடைந்துகொண்டே முன்னேறிக்கொண்டிருக்கின்றார்கள்.

பேனா / al qalam