ஆப்பிள் சந்தை versus பங்குச்சந்தை


வாங்கிய ஐந்து ஆப்பிள்கள் இன்னும் கடைக்கு வந்து சேரவில்லை இதற்குல் ஐந்து பற்று சீட்டுக்களை தயாரித்து விநியோகம் செய்கிறார் வியாபாரி. ஒவ்வொன்றும் 50 ரூபா அளவில் இதனை 5 பேர் கொள்வனவு செய்கின்றனர்.

இப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்
1.இவ் ஐந்து பேருக்கும் சொல்லப்படுகிறது இரண்டு மாதங்களில் இவை வந்தடைந்தவுடன் 80 ரூபா பெறுமதியில் விற்கப்படும் என்று!

2.இதனை அறிந்து சிலர் 65 ரூபாய்க்கு வாங்க விருப்பம் தெரிவிக்கவே ஐந்து பேரில் இருவர் உடனே விற்று விடுகின்றனர்.

3.தகவல் ஒன்று வெளிவருகிறது 2 மாதங்களில் ஆப்பிள் இற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்றும் ஒரு ஆப்பிள் 120 ரூபா அளவில் விற்பனை செய்யப்படும் என்றும் உத்தேசிக்கப்படுகிரது. உடனே சிலர் 100 ரூபா கொடுத்து அனைத்து சிட்டுக்கலையும் வாங்கி கொண்டனர்.

4.இப்போது இன்னும் ஒரு தகவல் வெளிவருகின்றது ஆப்பிள் உண்ணுபவர்களின் எண்ணிக்கை இரண்டு மாதங்களில் இரட்டிப்பாகும் என்று ! இப்போது சிலர் 200ரூபா படி வாங்கி கொள்கின்றன்ர்.

இறுதியாக இப்போது ஆப்பிள் வந்தடைகிறது ஒரே ஒரு ஆப்பிள் மாத்திரமே உகந்ததாக உள்ளது மற்ற அனைத்தும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதன் உண்மை பெறுமதி தற்போது 35 ரூபாயே எனக்கொள்வோம்.

200 ரூபாய் படி ஐந்து சிட்டுக்களையும் வாங்கியவர்களின் நிலை என்ன?

இந்த ஆப்பிள் சந்தையை போன்றதுதான் தற்போது உத்தேச அடிப்படையில் இயங்கும் பல நிதிச்சந்தைகள், இதில் பங்குச்சந்தையும் மிக முக்கியமானது!

அண்மையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய செய்தி உலக பங்கு சந்தையில் ஒரே நாளில் ஏற்படுத்திய நட்டம் எவ்வளவு தெரியுமா? 12 00 000 000 000 டாலர்கள்.

இதற்கு முன்னரும் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடிக்கு இப்படி உத்தேச அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட bubbles ஏ காரணம்!

உத்தேச வியாபாரம் தொடர்பான இஸ்லாமிய பார்வை பின்வருமாறு

1.இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
”நபி(ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர்! ”இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!)” என்று செய்யப்படும் வியாபாரமே இது!”

2. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது; மேலும் விற்பனைப் பொருள்கள் சந்தைக்கு வந்து இறங்கு முன் வாங்காதீர்கள்.”
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இந்த முதலாளித்துவ ஒழுங்கில் பெரும்பாலான வியாபாரம் உத்தேச அடிப்படை யிலே காணப்படுகிறது இது பற்றிய தெளிவு நம்மிடயே குறைவாகவே உள்ளது.

சிறிய முதலீட்டாளர்கலின் பணத்தை பண முதலைகள் உறிஞ்சுவதற்கான தளமாகவே இது இருக்கின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!!