பங்களாதேஷ் முஸ்லீம் உம்மாவின் புதிய பலிபீடமா!? (ஒரு சிறு குறிப்பு )


எமது பழிவாங்கும் சிந்தனை, அவசியமற்ற அவசர முடிவுகள் போராட்டத்தை வழிநடாத்துமாக இருந்தால் எதிரிக்கு சாதகமான அரசியலை நாம் தொட்டு விட்டோம் என்பதை உணர வேண்டும்! சித்தாந்தவழி சிந்தனையில் இருந்து திட்டமிடலும் போராட்டமும் நெறிப்படுத்தப்படல் வேண்டும்.

மிலிட்டரி ரிபலியன்ஸ இலகுவாக நவ காலனிஸ்டுகள் தங்க கான்ரோல்ல எடுத்திடுவாங்க! ஒரு கொள்கை வழி அரசற்ற நிலையில அது மிக மிக ஆபத்தான பாதை என்பத மறந்திடக் கூடாது!

பங்களாதேஷ் தாக்குதல் சம்பவத்தின் பின் இந்தியன் ராவின் மறைகரம் தொழிற்பட்டிருக்குமா? என சிந்திக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு! இத்தகு உளவு அமைப்புகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை செய்வதன் ஊடாக ஒருவகை செயற்கை அவசர நிலையை இந்த பிராந்தியத்தில ஏற்படுத்தி அதில் தமக்கு சாதகமான அரசியல் இலாபங்களை அனுபவிக்கலாம்!

பாகிஸ்தானிலோ, இந்தியாவிலோ இப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் அது உலகின் கவணத்தை ஈர்த்திருக்காது! ஏன்னா ஏற்கனவே இந்தப் படமெல்லாம் ஓட்டியாச்சு! எனவே தான் புரஜக்டர பங்களாதேஷ் பக்கம் திருப்பிட்டாங்க!

ஏற்கனவே ஷசீனா அரசு இஸ்லாமிய சிந்தனா வாதிகள் மீது கடும்பிடி காட்டியதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்! பலியாடுகளும் பலிபீடங்களும் தயார் செய்யப் பட்டதாகவே நாம் ஊகிக்க முடியுது! எதிர்கால நடவடிக்கைகள் இந்த ஊகத்திற்கான ஆதாரங்களை தரலாம் இன்ஷாஅல்லாஹ்.