ஜூலை 17 ஞாயிறு அன்று ராணுவ சதிப்புரட்சியானது அதிகாரப்பூர்வமாக துருக்கி நேரப்படி மாலை 4.30 மணிக்கு முடிவுற்றது என துருக்கி ராணுவப்படை ஒரு செய்தி வெளியிட்டது. இந்த ராணுவ சதிப்புரட்சியை செயலிழக்க செய்ய உதவி புரிந்த மக்களின் ஒத்துழைப்பிற்கு இந்த செய்தி குறிப்பின் மூலம் நன்றியையும் தெரிவித்தது. 

ரெசெப் தாய்யிப் எர்துகான் அரசை கவிழ்க்கும் முயற்சியில் இஸ்தான்புல் மற்றும் அங்காரா நகரங்களில் ராணுவ பீரங்கிகள் மற்றும் ராணுவ விமானங்கள் சீறி பாய்ந்ததை பார்த்து பெருவாரியான உலகம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. தங்களின் தரப்பிலிருந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ராணுவ சதிப்புரட்சியை மேற்கொண்டவர்கள் முக்கிய நகரங்களில் படையெடுப்பு நடத்தி அதை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றனர். 

ஆனால் எர்துகான் கைப்பேசி மூலம் தனது ஆதரவாளர்களை நோக்கி தெருக்களில் இறங்கி நாட்டை மீட்டெடுங்கள் என்று செய்தி அனுப்பிய உடன் பெருங்கூட்டத்தினர் வீதிகளில் பொங்கி எழுந்ததால் இந்த புரட்சியாளர்களை தடுத்து நிறுத்த முடிந்தது எர்துகான் அதிலிருந்து போர் புரியும் வண்ணமாக வெளிவந்து ராணுவ சதிப்புரட்சியாளர்களை நோக்கி தெளிவாக குறிப்பிட்டார் “இவ்விஷயத்திற்காக அவர்கள் பெரும் விலை கொடுக்கப்போகிறார்கள்” [1] என்று நேரடியாக ஒரு பெரும் தேடுதல் வேட்டை நடத்த தொடங்கியது, 34 ஜெனரல்கள் மற்றும் இன்சிர்லிக் விமானத்தளத்தின் கமான்டர் உட்பட பல்வேறுபட்ட நிலையிலுள்ள 6000 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர், 
ஆனால் இதன் களையெடுப்பு இதைவிட மிக ஆழமானது: 

 இந்த ராணுவ புரட்சியை தொடர்ந்து 2,745 துருக்கிய நீதிபதிகள் தங்களது கடமைநிலருந்து நீக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுளனர்.[2] இந்த ராணுவ புரட்சி தோல்வி அடைந்த உடன் எர்துகான் அவரது ஆதரவாளர்களை கொண்ட ஒரு பெரும் கூட்டத்தாருக்கு தனது செயற்திட்டம் மற்றும் நடைபெற்று கொண்டிருக்கும் போக்கு குறித்து விளக்குகையில் இவ்வாறு கூறினார்: “இந்த புரட்சி நமக்கு இறைவனிடமிருந்து வந்த அன்பளிப்பாகும் ஏனெனில் இது நமது ராணுவத்தை தூய்மையாக்க காரணமாக விளங்கும். [3]

1923 ல் துருக்கிய குடியரசு உண்டான போது ராணுவ அதிகாரியான முஸ்தஃபா கமால் உண்மையான ஆட்சியாளராக செயல்பட்டார் அவர் கிலாஃபத்தை நிர்மூலமாக்கிய பின்னர் ராணுவ படையிலிருந்த இஸ்லாமிய ஆதரவாளர்களை அப்புறப்படுத்த தொடங்கினார். முஸ்தஃபா கமாலின் காலத்தில் துருக்கிய ராணுவம் தனது துப்பாக்கிகளை ஐரோப்பிய எதிரிகளை நோக்கி இருந்த நிலையை மாற்றி சொந்த மக்களை நோக்கி திருப்பியது, அவர்களை அவர் அடிப்படைவாதிகளாக நாட்டின் மதசார்பின்மையை எதிர்ப்பவர்களாக கருதினார்.

ராணுவத்தினரை மதசார்பின்மையை முன்னெடுத்து செல்பவர்களாக ஆக்குவதே அவரது நோக்கமாகும். அவரது மரணத்திற்கு பின்னர், ராணுவம் அரசாங்கம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறையிலுள்ள இதர மதசார்பின்மை வாதிகள் எந்த விலை கொடுத்தேனும் மதசார்மையை பாதுகாப்பது தங்களது தலையாய பொறுப்பாக கருதினர். மிக குறிப்பாக ராணுவம் மதசார்பற்ற துருக்கியின் பாதுகாவலராக தன்னை கருதியது. 

மதசார்பின்மை அல்லது ராணுவத்தின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தல் எழுந்த அச்சமயங்களில் உதாரணமாக 1960, 1971 மற்றும் 1980 களில் அவர்கள் ராணுவ சதிப்புரட்சி மேற்கொண்டு அதிகாரத்தை தங்கள் வசம் எடுத்து கொண்டனர். 1997 ல் ராணுவம் அரசிடம் ஒரு நீண்ட கோரிக்கை வைத்தது அந்த கோரிக்கைகளை ஏற்று கொள்வதை தவிர அரசிற்கு வேறு வழி இல்லாமல் இருந்தது. அதன் பிரதம மந்திரி, நெக்மெட்டின் எர்பாகன், பல்கலைகழகங்களில் ஹிஜாப் அணிய தடை விதிப்பதற்கு சம்மதித்தார் பின்னர் அது தளர்த்தப்பட்டது, அவரது கட்சி 1998ல் முடக்கப்பட்டது, மேலும் எர்பாகன் அரசியலில் ஈடுபடவதிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. துருக்கி அரசியல் நிலப்பரப்பில் ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வந்தது மேலும் அது உருவாகிய மதசார்பின்மை அடித்தளத்திற்கும் நாட்டில் அது கொண்டிருக்கும் அதிகப்படியான நிலைக்கும் எந்தவொரு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பார்த்து கொள்கிறது.

1998ல் தடைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், எர்பாகனின் வெல்ஃபேர் கட்சியின் முன்னால் உறுப்பினர்கள் ஏ.கே.பி கட்சியை உருவாக்கினர் அதன் பின்னர் 2002 பொது தேர்தலில் இஸ்தான்புல்லின் முன்னால் மேயரான ரெசெப் தாய்யிப் எர்துகான் தலைமை ஏற்று பெறும் வெற்றிக்கு இட்டு சென்றார். 

21ம் நூற்றாண்டில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஏ.கே.பி பெரும்பான்மை வாக்கு பெற்று வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து எர்துகானிற்கு ராணுவம் துருக்கியில் வழக்கமாக கொண்டிருக்கும் பங்கை எதிர்க்கும் தைரியத்தை அளித்தது. (2015 ஜூன் மாதம் நடந்த தேர்தலில் பெரும்பான்மை பெறுவதில் ஏற்பட்ட இழப்பு 2015 நவம்பர் மாதம் நடந்த இடைத்தேர்தலில் ஏ.கே.பி மீண்டும் வெற்றி பெற்றது). 

பனிப்போரில் துருக்கி ஈடுபட்டிருந்த போதும், அதன் ராணுவம் பிரித்தானியருடன் நெருங்கிய உறவை மேற்கொண்டு வந்தது மேலும் ஐரோப்பிய கண்டத்துடன் நெருங்கிய உறவை மேற்கொண்டு அது எதிர்காலத்தில் தன்னை ஒரு ஐரோப்பிய நாடாக அடையாளம் காண விரும்பியது, ஆனால் எர்துகான் அமெரிக்காவுடன் உறவை மேற்கொள்ள ஆரம்பித்தார் அது ‘Shared Vision Document’ என்ற பெயரில் துருக்கி மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு இடையே அப்துல்லாஹ் குல் மற்றும் கான்டொலீசா ரைஸ் ஆகிய இருவரும் 2006 ல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் மூலம் உச்ச நிலையை அடைந்தது. 

இந்த ஒப்பந்தம் ஒரு பரந்த உலகளாவிய, பிராந்திய, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை உள்ளடக்கிய விஷயங்களில் அமெரிக்காவும் துருக்கியும் ஒத்துழைப்பு நல்கும் விதத்தில் அமைந்தது. [4] எர்துகானின் ஆட்சி காலத்தில் அவர் அமெரிக்கா மற்றும் துருக்கி இடையேயான உறவை பலப்படுத்தினார் அது ஈராக்கை நிலைபெற செய்வதாக இருப்பினும், குர்திஸ்தான் பிராந்திய அரசுக்கு (KRG) நிதியுதவி அளிப்பதாக இருப்பினும், இரண்டு நாடுகள் அமைத்து தீர்வு காண்பது எனும் அடிப்படையில் பாலஸ்தீன குழுக்களை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதாகினும் மற்றும் சிரிய எதிர்ப்பு படைகளில் ஊடுருவது போன்று எர்துகான் அமெரிக்காவின் திட்டங்களுக்கு அடிமட்ட அளவிற்கு உதவி புரிந்துள்ளார். 

ஏ.கே.பி யின் ஒரு குழு ஒன்று கூடுதலில் அமெரிக்காவுடனான தனது செயலை சுட்டிக்காட்டினார்: “உலகெங்கும் உள்ள நாடுகளில் இன்று அமெரிக்கா கொண்டிருக்கும் விருப்பங்களில் துருக்கியும் அதன் பெரும்பாலான விஷயங்களில் விருப்பம் கொண்டுள்ளது. நாம் அப்கானிஸ்தானிலிருந்து ஈராக், பாலஸ்தீனம் மற்றும் பால்கன் நாடுகள் போன்று பரந்த விஷயங்களில் பொதுவான பார்வையை கொண்டுள்ளோம். ஆனால் மிக முக்கியமாக ஒரு வலுவான ஒத்துழைப்பில் நாம் இருக்கின்றோம். மிஸ்டர் ஒபாமா இங்கு வருகை தந்த போது கூறியது போன்று நாம் ஒரு மாதிரி பங்கு கொள்ளும் படி நிலையில் நுழைந்திருக்கிறோம் மேலும் நாம் அதற்கு ஏற்றவாறு செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இதில் சில விஷயங்கள் நாம் வெளியே கூறும் வண்ணமும் சில விஷயங்கள் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாததாகவும் இருக்கின்றது.

துருக்கி மற்றும் அமெரிக்க உறவை துண்டாட நினைப்பவர்கள் இந்த உறவின் பல்முனை தரம் மற்றும் ஆழத்தை உதாசீன படுத்துகிறார்கள்.” எர்துகானின் தேர்தல் வெற்றி மற்றும் பிரித்தானிய வட்ட பாதையிலிருந்து துருக்கியை நீக்குவதற்கான துணிவான நகர்த்தல்கள் ராணுவத்தை கவலைக்குள்ளாக்கியது ஏனெனில் அவர்கள் அதுவரை எப்போதும் ஒரு ராணுவத்தை சாராத ஒரு ஆட்சியாளர் இவ்வளவு பொது ஜன ஆதரவை பெற்றிருந்த நிலையை எதிர் கொண்டதில்லை. குர்திய பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக எர்துகான் தொடங்கிய பேச்சுவார்த்தைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் குர்திய பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ராணுவம் முன்வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக துருக்கியின் அதிகார பலத்தை மாற்றும் முயற்சியில் எர்துகான் ஈடுபட்டார். அவர் அரசில் தலையிடும் உச்ச ராணுவ மன்றத்தின் சட்ட அதிகாரத்தை சுருக்கலானார். இந்த மன்றத்தின் அமைப்பில் ராணுவத்தினர் அல்லாதவரும் பங்கு பெறும் வகையில் எரதுகான் மாற்றி அமைத்தார். உச்ச ராணுவ மன்றம் ராணுவ தளபதி, அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் மற்றும் குடியரசின் ஜனாதிபதி – இவரே ராணுவ தளபதியும் ஆவார் போன்றவர்களை உள்ளடக்கியதாக உள்ளது. 

இந்த மன்றம் ஒரு பாதுகாப்பு மன்றம் என்பதிலிருந்து வெறுமெனே அலோசனை மன்றமாக மாறியது. அதன் வருடாந்திர கூட்டம் பணி உயர்வு, பணி நியமனம், பணி காலத்தை நீன்டிப்பது மற்றும் ராணுவ வீரர்களை ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணி நீக்கம் செய்வது போன்றவற்றிற்காக ஒப்புதல் பெறுவதற்காக வேண்டி சமர்பிக்க படுகிறது. மூத்த படைத்தளபதிகளை ஓய்வில் அனுப்பவும் மற்றும் சிறையில் அடைக்கவும் 2007ல் அரசை ராணுவத்தை கொண்டு வெளியேற்றும் ’எர்கெனெகான்’ எனும் சூழ்ச்சியை எர்துகான் பயன் படுத்தி கொண்டார். 

அதேபோல் 2010ல் ’Sledgehammer’ எனும் சூழ்ச்சியை பணியிலிருக்கும் மூத்த ராணுவ அதிகாரிகளை ஒய்வு பெற்ற அதிகாரிகளுடன் சேர்த்து வழக்குகளில் சிக்க வைக்க உபயோகப்படுத்தப்பட்டது. துருக்கி வரலாற்றில் முதன் முறையாக ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்படுவது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும் மேலும் இது நாட்டில் ராணுவத்தின் பிடி பெருமளவில் தளர்ந்திருப்பதை காட்டுகிறது. இறுதியில் இரு விசாரணைகளிலும் அனைத்து பிரதிவாதிகளும் விடுவிக்கப்பட்டனர் இருப்பினும் அதற்கு சேதம் ஏற்படுத்தியாகிவிட்டது. 

எர்துகான் வெற்றிகரமாக ராணுவத்திலுள்ள மதசார்பின்மை அடிப்படைகளை நலிவடைய செய்து தனக்கு விசுவாசமாக உள்ளவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினார். ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் அதாவது 2015 நவம்பர் மாதத்தில் விமானப்படை தன்னிச்சையாக சிரியாவில் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது, ராணுவத்தின் விசுவாசம் எர்துகான் நம்பிக்கை கொள்ள முடியாத வேறு எங்கோ இருப்பதை உணர்த்துகிறது. இது சிரயாவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் துருக்கி உள்ளிட்ட அனைவரும் ஒரே குறிக்கோளை கொண்டிருக்கும் வேலையில் நடந்தேரியுள்ளது.

ஆகஸ்து மாதம் 1ம் தேதி உச்ச ராணுவ மன்றத்தின் வருடாந்திர ஒன்று கூடல் நடக்க வேண்டியுள்ளது இதனூடே இராணுவத்தின் ஒரு பிரிவினருக்கும் எர்துகானுக்கும் இடையே பதற்றம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவில் இருப்பதை காண முடிகிறது. இதன் காரணமாக மூத்த ராணுவ வீரர்கள் உட்பட பல அதிகாரிகள் தங்களின் பணிக்காலம் விரைவில் முடித்து வைக்கக்கூடும் என்ற காரணத்தால் எர்துகானை எதிர்கொள்ள தன்னிச்சையாக இந்த ராணுவ புரட்சியை மேற்கொண்டுள்ளனர்.

கேனி டோருன் எனும் ஏ.கே.பி எம.பி கூறுகையில், இந்த குழுவினர் மீது தேச துரோகம் மற்றும் ஸ்லெட்ஜ் ஹேமர் வழக்குகளின் தொடர்ச்சியாக விசாரணை தொடங்கப்பட்டது. ராணுவ புரட்சி மேற்கொள்வதற்கு சற்று முன்னர் தான் குற்றவாளிகள் பிராசிக்யூடர்களால் அழைக்கப்பட்டு நீதிமன்றத்தால் கைது செய்யப்படுவதாக இருந்தது,“ என டோருன் அல் ஜசீராவிடம் கூறனார்.[6] “அவர்கள் இந்த முன்னேற்றத்தை அறிந்த காரணத்தால் வழக்கமாக இது போன்ற ராணுவ புரட்சியை நடத்தும் நேரத்திற்கு மாற்றமாக இரவு 10 மணிக்கு மேற்கொண்டுள்ளார்கள் என நம்புகிறோம். அவர்கள் திட்டமிட்டதை போன்று அதை காலை பொழுதி்ல் செயல்படுத்தி இருப்பார்களேயானால் அவர்கள் பெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும்”. ராணுவத்திற்குள் ராணுவ புரட்சி மேற்கொள்ள திட்டமிடும் நபர்களை கடந்த பல மாதங்களாக துருக்கி அதிகாரிகள் கண்காணித்து வந்தனர் என மற்றுமொரு ஏ.கே.பி அதிகாரி குறிப்பிட்டார். “தாங்கள் புலனாய்வுக்கு உட்பட்டு இருக்கிறோம் என உணர்ந்ததன் காரணமாகவே இந்த குழு ஒரு அவசரத்தில் செயல்பட்டதாகவே கருதுகிறோம்.”[7]

விமானப்படை, ராணுவ புலனாய்வுத்துறை மற்றும் தளவாடப்படையில் உள்ள சிறு குழு ஈடுபட்டது. இந்த ராணுவ சதிப்புரட்சியை ஒரு சிறு குழுவினரே மேற்கொண்டுள்ளனர் இதில் ராணுவ தளபதியின் பங்கு சற்றும் இல்லாமல் இருந்தது, ராணுவ தளபதி சூழ்ச்சியாளர்களால் சிறை பிடிக்கப்பட்டார் மற்றும் சிலர் ஊடகத்தின் வாயிலாக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். ராணுவ தலைமையிடத்தில் இருந்து ஆதரவு கிடைக்காதது தான் இந்த ராணுவ சதிப்பரட்சி தோற்று போனதற்கான முக்கிய காரணமாகும்.

இந்த தோல்வியுற்ற ராணுவ சதிப்புரட்சி குறிப்பாக இந்த ராணுவ சதிப்புரட்சியில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மக்கள் திரண்டு வந்தது எர்துகானை மேலும் வலுவடைய செய்துள்ளது, இப்போது எர்துகான் ஒரு ஆழமான சுத்தகரிப்பை செய்ய போகிறார் இது நம்பகத்தன்மையை இழந்த தங்களது விசுவாசத்தை வேறு இடத்தில் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களை பலவீனப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் இந்த தோல்வியுற்ற ராணுவ புரட்சியை காரணம் காட்டி எர்துகான் சர்வாதிகார போக்குடையவராக மாறி வருகிறார் என குற்றம் சாட்டி கண்டனம் தெரிவித்து வருவதை காண முடிகிறது. அவரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போதும், ஐரோப்பா தங்களுடைய நிலையை எர்துகான் மற்றும் அவருடைய செயல்களை நோக்கியே கவனம் செலுத்தி வருகின்றது. இதற்கு இன்னொரு பக்கம் அமெரிக்காவுடைய நிலையானது இந்த ராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும் சட்டத்தின் விதிகளை மதிக்குமாறு கோரிக்கை விடும் வண்ணம் இருந்தது, இது கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எர்துகானுக்கு ஆதரவான நிலையாகும்.

Reference: http://www.revolutionobserver.com/2016/07/the-politics-of-turkeys-coup.html


[1] http://www.nytimes.com/live/turkey-coup-erdogan/erdogan-they-will-pay-a-heavy-price-for-their-treason-to-turkey/

[2] http://in.reuters.com/article/turkey-security-judges-idINKCN0ZW0OZ

[3] https://www.rt.com/news/351630-erdogan-turkish-military-relationships/

[4] http://www.hurriyetdailynews.com/turkey-us-invest-hopes-in-shared-vision-document.aspx?pageID=438&n=turkey-us-invest-hopes-in-shared-vision-document-2006–07-07

[5] AK Party Group Meet­ing, Jus­tice and Devel­op­ment Party web­site, June 29 2010,http://www.akparti.org.tr/english/haberler/ak-party-group-meeting-june-29–2010/25721

[6] http://www.aljazeera.com/news/2016/07/turkish-putschists-acted-early-fear-arrests-160718131344577.html

[7] http://www.aljazeera.com/news/2016/07/turkish-putschists-acted-early-fear-arrests-160718131344577.html
http://sindhanai.org/
Reactions:

0 comments:

Post a Comment

வாசித்தவர்கள்

Blog Archive

தொகுப்புகள்

'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்
Powered by Blogger.

Map IP Address
Powered byIP2Location.com

Follow by Email

Enter your email address:

Delivered by FeedBurner

இஸ்லாமிய மறுமலர்ச்சி

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

About Me

My photo
“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com