Sep 6, 2016

முஸ்லீம்கள் அகதிகளாக புலம் பெயர் வதை ஐரோப்பிய யூனியன் அனுமதிக்கக் கூடாது

“ஐரோப்பாவிற்கு முஸ்லீம்கள் அகதிகளாக புலம் பெயர்வதை ஐரோப்பிய யூனியன் அனுமதிக்கக்கூடாது என்று டச்சு (நெதர்லாண்டு) வலதுசாரி தலைவர் கீர்ட் வில்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்”.

சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்த அகதிகளின் ஒருவர் ISISயின் பெயரால்- அண்மையில் ஜெர்மனியிலுள்ள அன்ஸ்பாக் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலையொட்டி, நெதர்லாண்டின் சுதந்திர கட்சியின் தலைவரான கீர்ட் வில்டர்ஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் கட்டுப்பாடுகளை விதிக்காமல் இருப்பது தீவிரவாதிகள் நுழைவதற்கு வழிவகுக்கக் கூடியதாக இருக்கிறது என்று கூறி நெதர்லாண்டின் பிரதமர் மார்க் ரூட் மற்றும் ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கள் ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

சென்ற மாதம் அமெரிக்க ஊடகத்தில் (Breitbart) வெளிவந்த கட்டுரை ஒன்றில் வில்டர்ஸ் கூறுகையில், முஸ்லிம்கள் இஸ்லாத்தை புறம் தள்ளுமாறும், மேற்குலகின் சுதந்திரப்போக்கை ஏற்று செயல்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அவர் அக்கட்டுரையில் குறிப்பிடுகையில் ‘இஸ்லாம் சர்வாதிகார போக்கை கொண்ட மார்க்கம், அதன் தாக்கத்தால் பாதிப்பிற்குள்ளானவர்கள் தான் முஸ்லிம்கள்.

மேலும் அக்கட்டுரையில் அவர் எழுதுகையில், முஸ்லிம் குடும்பத்தில் உள்ளவர்கள் ஓரின சேர்க்கையாளராக மாறுவதை பற்றி சிந்திக்க வேண்டும். முஸ்லிம் பெண், முஸ்லிம் அல்லாத ஆண்களை திருமணம் செய்ய முன் வருவதற்கு கற்பனை செய்ய வேண்டும். முஸ்லிம்கள், கிறிஸ்துவத்திற்கோ, வேறு மதத்திற்கோ அல்லது இறைமறுப்பாளராகவோ மாற முன் வர வேண்டும்.

இது போன்று முஸ்லிம்கள் சிந்திக்க தொடங்கினால் அது அவர்களுக்கு மட்டுமன்றி மேற்கத்திய கலாச்சாரத்தின் நலனிற்கும் உகந்ததாகும்.

முஸ்லிம்கள் தங்களது இஸ்லாமிய மார்க்கத்திற்கு புறமுதுகு காட்டி விட்டு, கிறிஸ்துவராகவோ, இறை மறுப்பாளராகவோ அல்லது வேறு கொள்கைகளை நோக்கி விரைய வலியுறுத்துகிறோம்.

முஸ்லிம்கள் தங்களை இஸ்லாம் மற்றும் முஹம்மதின் கடிவாளத்திலிருந்து விடுவித்து கொள்வதே அவர்களுக்கு சிறந்ததாகும். இவ்வாறு வில்டர்ஸ் தனது கட்டுரையில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான கருத்தை பதிவு செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு நெதர்லாண்டில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான தேர்தலுக்கான கருத்து கணிப்பில் இவர் முன்னிலையில் உள்ளார். இவர் வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி மற்றும் வலதுசாரிகளின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான போக்கை கையாளுபவர் என்பது பலரும் அறிந்ததே.

வில்டர்ஸ்யின் எழுத்தில் 2008 ஆம் ஆண்டு ‘பித்னா” எனும் ஆவணப்படம் வெளிவந்தது அதில் இஸ்லாத்தையும், குர்ஆனையும் தவறான கண்ணோட்டத்தில் சித்தரித்தது முஸ்லிம்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

செய்தி கண்ணோட்டம்:

முஸ்லிம்கள் இஸ்லாத்தை முழுமையாக வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பின்பற்ற முயல்வதும், அதை நிலைநிறுத்தும் உண்மையான இஸ்லாமிய அரசான கிலாபாவை நோக்கி முயற்சிகள் நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாததால் இஸ்லாத்திற்கெதிரான இவர்களது கருத்துக்களும், செயல்பாடுகளும் அப்பட்டமாக வெளிபடுவதை காணமுடிகிறது. போர் காரணமாக முஸ்லிம்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுவதை தடுக்கும் வகையிலான இவரது கருத்துக்கு ஐரோப்பியர்களிடையே ஆதரவு கிடைத்து வருகிறது.

http://sindhanai.org

செய்தி பார்வை 29.07.16



No comments:

Post a Comment