Sep 6, 2016

முஸ்லீம் பெண்கள் மாட்டு இறைச்சி எடுத்து சென்றதால் தாக்கப்பட்டனர்

“மத்திய பிரதேச மாநிலத்தில் முஸ்லீம் பெண்கள் மாட்டு இறைச்சி எடுத்து சென்றதால் தாக்கப்பட்டனர்”
மாட்டு இறைச்சி வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தால் இரண்டு முஸ்லிம் பெண்கள் மத்திய பிரதேசத்தில் ஒரு ரெயில் நிலையத்தில் தாக்கப்பட்டனர். அப்பெண்களிடம் அதிக அளவிலான மாட்டு இறைச்சி இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பெண்களை கைது செய்யும் தருணத்தில் ஒரு கும்பல் அவ்விரு பெண்களையும் “கோமாதா வாழ்க” என்ற குரலோடு காவல் துறை முன்னிலையில் தாக்கினார்கள் (NDTV செய்தி அறிக்கை).
மத்திய பிரதேசத்தில் உள்ள மண்ட்ஸுர் ரயில் நிலையத்தில் முஸ்லீம் பெண்கள் தாக்கப்பட்ட வீடியோ காட்சி உள்ளூர் தொலைக்காட்சியிலும், NDTV செய்தியிலும் ஒளிபரப்பானது . காவல் துறையினர் அந்த பெண்களிடம் பறிமுதல் செய்த இறைச்சியை சோதனை செய்ததில் அது பசு இறைச்சி அல்ல எருமை மாட்டின் இறைச்சி என்றும் தெரிய வந்தது . ( இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி)
ஆனாலும் அப்பெண்களிடம் தகுந்த உரிமம் இல்லாததால் அவர்கள் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வாழும் இந்து மக்கள் பசு மாட்டை புனிதமாக கருதுகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் பசுவை அறுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
சென்ற மாதம் பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் பசுவை அறுத்ததாக கூறி 4 தலித் இனத்தை சேர்ந்தவர்களை ஆடைகளை அவிழ்த்து காரில் கட்டிவைத்து ஒரு இந்து கும்பல் கடுமையாக தாக்கியதால் தலித் மக்கள் போராட்டத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தி கண்ணோட்டம்:
இந்திய அரசியல் வாதிகள் இந்தியாவை மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறி பெருமை கொள்கின்றனர். ஆனால் உண்மையோ இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மூன்றாம் தர குடிமக்களாக தான் கருத படுகின்றனர். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்து வெறியர்களால் தாக்கப்படுவது மட்டுமின்றி, அரசாங்கத்தின் முறையற்ற நடவடிக்கையால் முஸ்லிம்கள் வரிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் 14.4% சதவிகிதத்திற்கும் மேல் முஸ்லிம்கள் இருகின்றனர், ஸச்சார் அறிக்கை படி 31% சதவிகித முஸ்லிம்கள் அதாவது மூன்று முஸ்லிம்களில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதாக கூறுகின்றது..
http://sindhanai.org/

செய்தி பார்வை 29.07.16

No comments:

Post a Comment