சிரியாவின் அலெப்போவில் அடைந்த தோல்வியை அடுத்து ரஷ்யா, முஸ்லிம்களுக்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது .
ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிரியா மற்றும் ரஷ்ய ராணுவதாள் அலெப்போவில் ஏற்படுத்தப்பட்ட முற்றுகையை அங்குள்ள பல இஸ்லாமிய போராட்ட குழுக்கள் இனைந்து உடைத்தார்கள். இதில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து ரஷ்யா மதியதரைகடலில் நிறுதிவைத்துள்ள போர்க்கப்பல் மூலமாகவும், ஈரனிலுள்ள விமானதளத்தை பயன்படுத்தி விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும் தனது தாக்குதலை சிரியாவிலுள்ள முஸ்லிம்கள் மீது தீவிரப்படுத்தியுள்ளது.
சிரியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்காக போராடும் முஸ்லிம்களை எதிர்த்து முதல் முறையாக ரஷ்யா போற்கப்பல் மூலம் ஏவுகணை தாக்குதலை தெடுத்துள்ளது.
இது போன்ற பலமுனை தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் ரஷ்யா தனது ராணுவ திறனை நிரூபித்து சிரியாவில் தனது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்த முயல்கிறது. இதற்கு முன் சிரியாவில் லடாகியவில் உள்ள தனது ராணுவதளத்திலிருந்தும், காஸ்பியன் கடலில் நிறுத்தி வைத்துள்ள போர்க் கப்பல்கள் மூலமும் சிரியாவின் கொடுங்கோல் அரசுக்கு ஆதரவாக அங்குள்ள முஸ்லிம்கள் மீது போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது கூடுதலாக மத்திய தரைகடலில் நிறுதிவைத்துள்ள போர்க்கப்பலில் இருந்து ஏவுகணைகள் மூலமும், ஈரானின் விமான தளங்கலில் இருந்து போர் விமானங்களை பயன்படுத்தி குண்டுமலைகலை பொழிந்தும் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்காவின் முழு அனுமதியின் பெயரில் நடந்துவருகிறது, சிரியாவில் இஸ்லாத்திற்கு ஆதரவான போராட்டத்தை ஒடுக்க ஈரானின் ராணுவதளத்தை ரஷ்யா பயன்படுத்தும் அளவிற்கான ஒரு சுமூக போக்கையும் அமெரிக்கா அனுமதித்துள்ளது.
சிரியாவில் இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ரஷ்யா ஒருபுறம் அமெரிக்காவின் கொள்கைக்கு இணங்க செயல்படுவதால். கிரிமியா தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு வழிவிட்டுள்ளது.
உக்ரைனுடைய எல்லைகளுக்கு அருகில் பத்தாயிரம் வீரர்களை உள்ளடக்கிய ரஷ்யபடை நகர்த்தப்பட்டிருப்பதை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை, மேலும் பென்டகனோரஷ்யாவின் இந்த நகர்வை வழக்கமான பயிற்சி நடவடிக்கை தான், அதனால் உக்ரைனின் இறையாண்மைக்கும், எல்லைக்கும் பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளது.
செய்தி பார்வை 20.08.16
No comments:
Post a Comment