இஸ்லாமிய அரசு இவை இரண்டையும் கொண்டிருக்காது.
மேற்கத்திய காலனியாதிக்க சக்திகள் தேர்தல் முறைதான் ஜனநாயகம் என்று தொடர்பு
படுத்திவிட்டார்கள், ஆனால் இந்த விஷயத்தின் உண்மை நிலை அதுவல்ல. கிலாஃபத்தில்
கலீஃபா உட்பட பல்வேறு பதவிகளுக்கு நபர்களை தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடைபெறும்,
ஆனால் இவர்களில் ஒருவருக்கு கூட ஜனநாயகத்தில் இருப்பது போன்று தனி நபராகவோ அல்லது
ஓரு கூட்டாகவோ சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்காது. அஃதாவது இது மக்கள்
தங்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும் என்றும் அதே சமயம் அவர்களால்
ஷரீ’ஆவிற்கு மாறுபட்டு ஆட்சியாளர்கள் எவ்வித விசாரணைக்கும் தண்டனைக்கும்
ஆளாவதிலருந்து விடுவிப்பது போன்ற கறைபடிந்த சட்டங்களை அவர்களால் இயற்ற முடியாது
என்பதை விளக்குகின்றது. 6
நடைமுறை உபயோகத்தில், சர்வாதிகார ஆட்சி அமைப்பு
என்பது அதன் தலைமையை சட்டமோ, அரசியல் அமைப்போ அல்லது இதர உள்நாட்டிலுள்ள சமூக
மற்றும் அரசியல் காரணங்களும் அதன் வரையறைக்கு கட்டுப்படுத்தாத ஒரு ஏகாதிபத்திய
தன்மையுடையதை குறிக்கின்றது. இது இஸ்லாமிய சட்டத்திற்கு மாற்றமானதாக இருக்கின்றது
ஏனெனில் கலீஃபா தனது செயல்பாடுகளை சில வரையறைக்குள் அமைத்து கொள்ளும்படியும் அதில்
ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதை சரிகாணும் செயல்பாட்டை கொண்டிருக்கும் அது அவரின்
அதிகாரத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும். கலீஃபா சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக
இருக்க மாட்டார், அவரும் மற்ற எல்லா குடிமக்களை போன்று அதற்கு கட்டுப்பட்டவராகவே
இருப்பார்.
No comments:
Post a Comment