Jul 3, 2016

உலக நிதி நெருக்கடிக்கு பிறகு கிரேக்கத்தை விட்டு வெளியேறிய அரை மில்லியன் மக்கள்

2008 ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட பிறகு சுமார் அரை மில்லியன் (5 லட்சம்) மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கிரேக்க வங்கி வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

ஆரம்பத்தில் சிறிய எண்ணிக்கையில் தொடங்கிய , வெளியேறியோர் எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டு 100 ஆயிரத்திற்கு (ஒரு லட்சம்) மேலானோராக அதிகரித்து, தொடர்ந்த ஆண்டுகளில் மேலும் வளர்ச்சி கண்டது.

ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உள்பட வெளிநாடுகளில் நல்ல வாய்ப்புகளை பெற்று, பலரும் வெளியேறியுள்ளதாக நம்பப்படுகிறது.

கிரேக்கத்தின் வேலையில்லா திண்டாட்டம் ஏறக்குறைய 25 சதவீதமாக இருக்கிறது. இளைஞர்களின் மத்தியில் இந்த சதவீதம் இன்னும் அதிமாகும்.

செய்தி BBC

எமது சரியான பார்வை:

தனி மனிதனின் தேவையைக் கணக்கில் கொள்ளாமல், சமதர்மத்தை நிலைநிறுத்துவதுபற்றியும், மொத்த தேசிய உற்பத்தியை பெருக்குவது பற்றியும் மட்டுமே குடியேற்றநாடுகள் வலியுறுத்துகின்றன. இதன் தொடர்பாக, மேலை நாடுகள், பொருளாதாரத்தைப்பற்றி புத்தகங்கள் பலவற்றை பிரசுரித்து, தொழில் முன்னேற்றம் கண்ட தங்களுடன் சரிநிலையை அடைய, இஸ்லாமிய நாடுகள் தங்களுடைய பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கின்றன.

மொத்த தேசிய உற்பத்தியை பெருக்கி-அதன் அடிப்படையில் பொருளாதாரத்தை அமைக்கும் வழிமுறையும் சமதர்மக் கொள்கையும், சமூக நீதி திட்டமும், சமூகத்திற்கு எவ்வித பயனும்தராமல் உண்மை நிலையிலிருந்து விலகியே நிற்கின்றன. சமூக நீதி கொள்கையானது, முதலாளித்துவக்கொள்கைக்கு கைகொடுக்குமெயன்றி வேறொரு பயனும் அளிக்காது என்பதை சம கால வரலாறு கூறிநிற்கின்றது.

இஸ்லாமிய சட்டங்களை மாற்ற முடியாத காரணத்தினாலும், அவை மட்டுமே மனிதசமூகம் உயர வழி கோலும் என்பதாலும், முஸ்லீம்கள் நிலையற்ற அல்லது பிற நாட்டைச்சார்ந்த பொருளாதாரத்திட்டத்தை பின்பற்றுவது உபயோகமற்றதாகும்.

இஸ்லாமியர்களின்பொருளாதார அமைப்பு திருக்குர்ஆன் கூறும் ஷரியத் சட்டப்படியும், சுன்னாஹ் எனப்படும்நபிகளாரின்(ஸல்) வழிகாட்டுதலின் படியும், சஹாபாக்களின் ஒருங்கிணைந்த தீர்வின்படியும்(இஜ்மா-அஸ்-ஸஹாபா), கியாஸ்(ஒப்புநோக்குதல்) படியும் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.

இந்த அடிப்படையில் பின்வரும் நான்கு கருத்துக்கள் அமைந்திருக்கின்றது.

1. ஒரு தனி நபருக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தனிப்பட்ட தேவைகள் உண்டு எனஇஸ்லாம் கருதுகிறது.


2. ஒரு மனிதன் வாழ அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என இஸ்லாம்கருதுகிறது.


3. தொழில் சுதந்திரத்தையும், வேலையில் யாவரும் சமம் என்ற நிலையையும்,இறைவனின் வளங்களிலிருந்து பயனடைதலின் மூலம் பெற முடியும் என இஸ்லாம்கருதுகிறது.


4. உறவு முறைகளின் முக்கியத்துவத்தையும், மனிதர்களிடையே உள்ள தொடர்பையும்இஸ்லாம் இதற்காக நிர்வகிக்கிறது.


ஆகவே, மனிதன் உழைப்பதின் மூலமும், மனிதர்களிடையே உள்ள தொடர்பைஉறுதிப்படுத்துவதின் வாயிலாகவும், தனி நபரின் முக்கியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், அவனுடைய வாழக்கைத் தரத்தை உயர்த்தவும், அவனை முன்னேற்றமடையச்செய்யவும் இஸ்லாம் வழி சொல்கிறது.

எனவே உற்பத்தியைப் பெருக்குவதோ, சமதர்மக்கொள்கையோ, சமூக நீதி திட்டமோ-இவை அனைத்தும் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையாகாது. முஸ்லிம்உம்மாவிடையே, அல்லாஹ்வின் வளங்களை சமமாக பங்கிடுதலின் மூலமாக, ஒவ்வொருமனிதனின் அடிப்படைத் தேவைகளையும், அதிகப்படியான தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும் என இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை கூறுகிறது.


No comments:

Post a Comment