Jan 23, 2013

வரலாற்றுச் சுவடுகளில் பலஸ்த்தீனப் போராட்டம் ... ஒரு குறும் பார்வை .

அது 1980 களின் இனவாத யுத்தத்தின் அச்சம் மிகுந்த காலப்பகுதி .விடயங்கள் யாவும் முற்றிலும் இராணுவ மயத்தால் ஆக்கிரமிக்கப் பட்டுக்கொண்டிருந்தது .தரையில் ஆட்லறி தாக்குதல் தொடங்கி வான் வெளிகளில் 'சியா 
மாசெட்டி' ரக இத்தாலிய தாக்குதல் விமானங்களின் பிரசன்னமும் ,50 கலிபர் ரக இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்திய 
'பெல் 212' ரக ஹெலிகொப்டர்களின் ரோந்து மற்றும் தாக்குதல்கள் 'வியட்நாமின் ' கடந்த காலத்தை நினைவு படுத்த
முற்றிலும் யுத்த பூமியாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாறிக் கொண்டிருந்தது .
ஈழப் போராட்டத்தின் நியாயத்தையும், அவசியத்தையும் , வலியுறுத்தி போராட்ட
இயக்கங்கள் மீதான கவர்ச்சிகர ஆட்சேர்ப்புக்கள் வேறு நடந்து கொண்டிருந்தது .அதற்காக பல்வேறு வெளியீடுகள் ,பிரசூரங்கள் சஞ்சிகைகள் பரவலாக வெளிவிடப் பட்டுக்கொண்டிருந்தது . அப்படியான வெளியீடுகளில் உயர்ந்த உதாரண போராட்டமாகவே பாலஸ்தீனப் போராட்டம் எனக்கு அறிமுகமானது .
பாரபட்சமற்ற ஒப்பீடு என்பது இரண்டு வரலாற்றையும் ஆராய்வதிலும் ,தெளிவாக இனம் காண்பதிலும் ஊடான அதன் ஒற்றுமையை முன்வைத்து ,தெளிவான வரைவிலக்கனங்களின் ஊடாக நிரூபித்தலே ஆகும் . இடைக்கால செயட்கலங்களின் அமைப்பு மாதிரிகளை மட்டும் வைத்து செய்யப்படும்
ஒப்பீட்டு நியாயம் சந்தர்ப்ப வாத குறை மதிப்பீடு ஆகும் .
தமிழர் போராட்டத்தின் அன்றைய தேவை உணர்ச்சி மிகு போராளிகள் ! பாலஸ்தீன் அன்று(ம் இன்றும் ) சூடான ஒரு கெரில்லா போராட்ட களம் ,அந்த இதமான சூடு இவர்களின் போரியல்
வேட்கைக்கு ஒத்தடமனது . அது மட்டும்தான் உண்மையே தவிர வேறு குறிப்பிடும் படியான நியாயங்கள் இந்த இரு
போராட்டங்களிலும் இருக்கவில்லை . அதைவிட சற்று அதிகமாக பாலஸ்தீனின் கெரில்லா பயிற்சி தளங்களில்
சிலர் பயிற்சி பெற்றிருக்கலாம் .
ஒரு சிலவேளை தேச, தேசிய துர்நாற்றச் சகதியில் தடுக்கி விழுந்த பாலஸ்தீன போராட்டத்தின் இடைக்கால தவறுகள் ஒப்பீட்டு மாதிரிக்கு அதாரமாய் இருக்கலாம் .அதில் கூட P .L .O , P .F .L .F போன்ற இயக்கங்கள் பிரித்து எடுக்கப்பட்டு ஒப்பிடப்படலாம் தவிர பாலஸ்தீன் போராட்டத்தை ஒரு தேச ,தேசிய
விடுதலை பார்வையோடு பார்க்க முடியாது .
யாசிர் அரபாத் , அபூஜிஹாத் , அபூநிடால் , ஜோர்ஜ் ஹப்பாஸ் , லைலா காலித் என்பவர்களைத்தான் மனக்கண் முன் நிறுத்தி பாலஸ்தீன் அவதானிக்கப் பட்டதன் தவறு அன்று திருத்தி சொல்லப் படவில்லை ! அல்லது 'இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் ' யூத ஆக்கிரமிப்பு என்பவற்றோடு மட்டும் வரலாற்றை பார்ப்பதும்
ஒரு இடைக்கால வரலாற்று சுருக்கம் தான் என்பதும் அன்று உணர்த்தப் படவில்லை .
ஆனால் அதற்கும் முன்னாள் சலாகுதீன் ஐயூபி(ரஹ் ) ,சிலுவைப்போர் எனவும் ,அதற்கும்
முன்னாள் கலீபா உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் தொடர்பு ,மிஹ்ராஜில் குறிப்பிடப்பட்ட ரசூல் (ஸல் ) அவர்களின் பைத்துல் முகத்திஸ் சம்பவம் ,பின் சுலைமான் (அலை ) இப்படி தொடர்ச்சியாக பின்னோக்கி சென்றால் எமக்கெல்லாம் முஸ்லீம் என பெயரிட்ட எம் தந்தையாக உதாரணப் படுத்தப்படும் இப்ராகிம் (அலை ) வரை
பாலஸ்தீனின் வரலாறு நீளமானது ,ஆழமானது .
உண்மை என்னவென்றால் பாலஸ்தீன் பூமி குறிப்பிட்ட ஒரு இன, கோத்திர
சார் துண்டங்களாக ,தேசங்களாக ,தேசியங்களாக பிரிக்கும் உரிமை யாருக்குமில்லை .அது புனித பூமி ,இஸ்லாத்தின்
பூமி ,அந்த வகையில் வரலாற்றின் ஒரு காலப் பகுதியில் இறை தூதுத் துவம் மூலம் வேதம் அருளப் பட்டவர்களான
யூத ,கிறிஸ்தவர்களுக்கு அதன் அதிகாரத்தில் உரிமை இருந்தது . இறுதி வேதமான புர்கானோடு முஹம்மது (ஸல் )
வருகையின் பின் யார் அவர்களை பின்பற்றினார்களோ அவர்களுக்கே அந்த புனித பூமியின் அதிகார உரிமை என்பதே
இறைவனின் தீர்ப்பு . அந்த தீர்ப்பின் மீதான யூத , கிறிஸ்தவர்களின் காழ்ப்புணர்வே இன்று வரை தொடரும் சூடான
போராட்டங்கள் .
அந்த நிலத்தில் வாழ்வியல் அனுமதி என்பது வேறு ,அதிகார உரிமை என்பது வேறு அங்கு யூதர்களும்
வாழலாம் ,கிறிஸ்தவர்களும் வாழலாம் ஆனால் இஸ்லாம் அதிகார ஆளுமையில் இருக்க வேண்டும் என்பதே அதன்
உண்மையான போராட்ட வடிவம் . இந்த உண்மை உணரப்படாது தவறான தேசிய சந்தையில் பங்கு போடப்படும் அதன் உரிமையில் எம் பங்கு என போராடுவதும் தவறான போராட்டவடிவமே .
மேலும் சுலைமான் (அலை ) அவர்களால் கட்டப்பட்ட மஸ்ஜிதுல் அக்சா தொடர்பிலும்
யூதர்களின் அழுத்தமான உரிமைகோரல் காணப்படுவதையும் முஸ்லீம்களாகிய நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
தற்போதும் அதன் உரிமை அவர்களின் கைகளில் தான் இருக்கின்றது . அவர்களின் நீண்ட கனவு 'temple of sulaiman ' என்பதை அவர்களின் சாம்ராஜ்யத்தில் உட்படுத்துவதே . இந்த கனவுக்கு முட்டுக்கட்டையாக இருந்த மிகப்பெரிய தடை இஸ்லாமிய கிலாபா அரசே . சியோனிச சக்திகள் திட்டமிட்டு கிலாபா அரசுக்கு எதிராக சதிகள் பல செய்ததற்கான அதை திட்டமிட்டு வீழ்த்தியதட்கான காரணமும் இதுதான் .

இந்த நிலை எதுவரை என்றால் இஸ்லாத்தின் அரசியல் இராஜ தந்திர பின்புலமான கிலாபா அரசு மீண்டும் உருவாகும் வரையே . எனவேதான் அது மீண்டும் உருவாகாமல் தடுக்க ஆகுமான எல்லா வழிகளிலும் சியோனிஸ்டுகள் போராடுகிறார்கள் . அவர்கள் உணர்ந்த உண்மை என்னவென்றால் இஸ்லாமிய கிலாபா அரசு
தோன்றும் பட்சத்தில் அடுத்த கட்டாமாக அமீருல் ஜிஹாத் தனக்கு முன் இருக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கும்
மத்தியில் பலஸ்தீனை மீட்க ஒரு படை நடத்தல் செய்வது கட்டாயமானதாக இருக்கும் என்பதே . அதன் முடிவு
மீண்டும் ஒரு கைபரை அவர்கள் சந்திக்க வருமா ? என்ற அச்சமே முஸ்லீம்கள் ஒரே தலைமையில் ஒன்று சேர விடாமல் தடுப்பதற்கான காரணமாகும்.

எங்களுக்கு தற்போது நாடென்று ஒன்று உள்ளது: பாலஸ்தீன அதிபர் அப்பாஸ்(புதிய கண்டு பிடிப்பு )!!

எங்களுக்கு தற்போது நாடென்று ஒன்று உள்ளது: பாலஸ்தீன அதிபர் அப்பாஸ்(புதிய கண்டு பிடிப்பு )!!

(கீழ்வரும் செய்தியை படியுங்கள் புதிய ஹிஜ்ரி வருடத்தின் முஸ்லீம்களுக்கான சிறந்த ஜோக் ......)

பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையிலுள்ள தனது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றியுள்ள பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், "எங்களுக்கு தற்போது நாடென்று ஒன்று உள்ளது" எனக் கூறியுள்ளார்.

நியுயார்க்கில் ஐநா தலைமையகம் சென்று திரும்பிய அப்பாஸுக்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டிருந்தது.


உறுப்பு நாடல்லாத கண்காணிப்பாளர் நாடு என்ற ஒரு அந்தஸ்து பாலஸ்தீனர்களுக்கு வழங்கப்படுவது தொடர்பான ஐநா வாக்கெடுப்பில் வென்று அப்பாஸ் நாடு திரும்பியுள்ளார்.


தாங்கள் கடக்க வேண்டிய பாதை நெடியதாக இருந்ததென்றும், கடுமையான அழுத்தங்களை சந்திக்க வேண்டியிருந்தது என்றும் ஆனாலும் மனம் தளராமல் போராடி இந்த அந்தஸ்தை பாலஸ்தீனர்கள் வென்றுள்ளனர் என்றும் ரமல்லாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்கள் அனைவரும் நல்லிணக்கம் காணவேண்டும் என்று அப்பாஸ் கேட்டுக்கொண்டார்.

மேற்குக்கரையின் பாலஸ்தீன நிர்வாகமும், காஸாவின் ஹமாஸ் நிர்வாகமும் பிளவுபட்டு நிற்பதை அவர் இதன் மூலம் சுட்டிக்காட்டியதாகக் கொள்ளலாம்.

இஸ்ரேல் கண்டனம்

ஐநாவில் பாலஸ்தீனர்களின் அந்தஸ்து உயர்த்தப்பட்டிருப்பதன் பின்னணியில், அந்த மக்களுக்காக அறவிடப்பட்டிருக்கின்ற இந்த மாதத்துக்கான வரிவருமானங்களை அவர்களிடம் கையளிக்கப்போவதில்லை என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

12 கோடி டொலர்கள் பெறுமதியான இந்த வரிவருமானத்தை பாலஸ்தீன அதிகாரசபை இஸ்ரேலிய மின்சார கம்பனியொன்றுக்கு செலுத்தவேண்டிய கடனுக்காக செலுத்தவுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ஐநாவில் பாலஸ்தீனர்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் இஸ்ரேலின் பிரதமர் பென்யமின் நெதென்யாஹு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

முன்னைய ஒப்பந்தங்களை முழுமையாக மீறுகின்ற நடவடிக்கை இதுவென்று சுட்டிக்காட்டியுள்ள அவர், பாலஸ்தீனத்தின் பகுதிகளில் தொடர்ந்தும் தமது குடியிருப்புகள் நிர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். (BBC TAMIL)

( யாரின் சொத்தை யார் அங்கீகரிப்பது ? இல்லாத நாட்டை இருப்பதாக அங்கு யூதனின் போராட்டம் இருக்க , சொந்த நிலத்தின் துண்டத்தை பிச்சை வாங்குவது முஸ்லீம்களின் போராட்டம் !!! அதுவும் துப்புக் கெட்ட U .N இல் இதை விட நாக்கை பிடுங்கிக் கொண்டு இவர்கள் சாகலாம் .)

மதச் சார்பின்மை மார்க்க ஆதாரத்தோடு 'பராக் பராக் ' !! முஸ்லீம்களே ஏற்க தயாரா ?

இன்றைய ஜாஹிலீய மேலாதிக்க உலகு, முஸ்லீம்கள் விடயத்தில் இறைவனோடு நேரடி தொடர்புள்ள அழுத்தமான ஆன்மீக தொடர்பு பற்றியோ , இபாதாக்கள் பற்றியோ அச்சம் கொள்ளவில்லை . மாறாக அது அச்சம் கொள்வதெல்லாம் ஒரு முஸ்லீம் வாழ்க்கையையே வணக்கமாக்கி தனது(அரசியல் ,பொருளியல் ,சமூகவியல் ,கலாச்சாரவியல், சிவில் கிரிமினல் சட்டவியல் போன்ற ) எல்லா விடயங்களிலும் இஸ்லாத்தின் வழிகாட்டளின் கீழ் வாழ விரும்பும் போதுதான் எவ்வித பாரபட்சமும் இன்றி தனது கடுமையான எதிர்ப்பை காட்டத் தொடங்கும் .

அந்த வகையில் இஸ்லாத்தின் ஆன்மீக அகீதா தவிர்ந்த வாழ்வியல்
அகீதாவை விட்டும் முஸ்லீம் சமூகத்தை தூரப்படுத்துவதும் ,அந்த விடயங்களை பிரதான விடயமாக்காது சாதாரண கிளை விடயமாக எடுத்துக் காட்டப்படுவதும் , இஸ்லாம் கூறும் (அரசியல் ,பொருளியல் ,சமூகவியல் ,கலாச்சாரவியல், சிவில் கிரிமினல் சட்டவியல் போன்ற ) எல்லா அம்சங்களும் நடைமுறை சாத்தியமற்றதாக எடுத்துக் காட்டுவதும் ஜாஹிலீய அதிகாரங்களுக்கு ஒரு
கடமையாகவே ஆகிவிடுகின்றது .

மேற்குலகு கிறிஸ்தவ அதிகார மேலாதிக்கத்தில் இருந்தபோது வாழ்வியல்
விவகாரங்களிலும் ,அறிவியலிலும் தவறான சிந்தனைத்தரத்தைக் கொண்டு தீர்ப்புக் கூறத் தொடங்கியதே மதம் வேறு ,உலகியல் விவகாரம் வேறு என்ற தீர்மானத்தோடு மதச் சார்பின்மை எனும் கோட்பாடு நடைமுறைப் படுத்துவதற்கு ஏதுவாக அமைந்தது தெரிந்தோ தெரியாமலோ முஸ்லீம்களும் பின்பற்றி வருகின்றனர் . ஆனால் இன்று கிறிஸ்தவம் கூறும் அதே சிந்தனைத்தரமே இஸ்லாத்தின் மீதும் பதியப்பட்டு முஸ்லீம்களுக்கு மத்தியில் உலாவிடப் பட்டுள்ளது . ஆனால் இந்த (மகத்தான )பணியை செய்வது கிறிஸ்தவ பாதிரிகளோ ,சந்நியாசிகளோ ,யூத ரப்பிகளோ அல்ல மாறாக முஸ்லீம் உம்மத்தில் இருந்து உதித்த புத்திஜீவிகளே !!!

அதிர்ச்சியும் ஆச்சரியமுமான சில பிரச்சாரங்களை, பதிவுகளை நான்
சந்தித்தேன். அதில் குப்ரிய அதிகாரங்களின் கீழான , அவர்கள் தரும் ஜாஹிலீய சட்டங்களை பின்பற்றியவர்களாக முஸ்லீம்கள் வாழ்வது நியாயப்படுத்தப் பட்டிருந்தது . அந்த நியாயத்துக்கு அச்சமோ ,நிர்ப்பந்தமோ காரணமாக்கப் படவில்லை . இஸ்லாம் அதை அங்கீகரித்த ஒன்றாக குர் ஆனிய ஆதாரமாக
யூசுப் (அலை ) அவர்கள் சம்பந்தப் பட்ட வசனங்களும் எடுத்தாளப் பட்டிருந்தது .

அதாவது யூசுப் (அலை ) நிராகரிப்பாளனான ஒரு மன்னனிடம் அமைச்சராக இருந்தது ஆதாரமாக்கப் பட்டிருந்தது . முதலாவது இந்த கருத்தியல் கண்ணோட்டமே பிழையானது. ஏனென்றால் 1. நபி யூசுப் (அலை )அவர்களின் 'சரீஆ' எமக்கு 'சரீஆ' அல்ல என்ற சாதாரண
வாதத்தை இங்கு முன்வைக்கலாம் . 2. குறித்த மன்னன் நீதி தவறியதாக குர் ஆன் குறிப்பிடுகிறதே தவிர
'குப்ரில்' இருந்ததாக சொல்லவில்லை . இந்த இரண்டு காரணங்களும் அவர்களின் தவறான கருத்தியலை
உடைக்கப் போதுமானதாகும் .

அபத்தமான குர் ஆன் விளக்க அறிவின் மூலம் இஸ்லாமிய 'சரீஆ' வின் கீழ்
தான் முஸ்லீமின் வாழ்வு கட்டாயமானது எனும் கருத்தியலை விழுங்கி ஏப்பம் விட்டு 'குப்ரை 'அங்கீகரித்த வாழ்வு இஸ்லாம் அங்கீகரித்தது எனும் ஒரு நூதன விளக்கத்தை நாக்கூசாமல் எடுத்து வைத்துள்ளார்கள் .அதாவது ஆன்மீகத்துக்கு இஸ்லாம், வாழ்வியலுக்கு குப்ர் !! இது தான் (கிறிஸ்தவம் வரையறுத்த) அதே மதச்சார்பின்மை; இனி இது முஸ்லிமுக்கும் வழிமுறையாகும் . என்ன சற்று வித்தியாசமாக திரிக்கப் பட்ட இஸ்லாத்தின் ஆதாரத்தோடு !

' பேசினால் நல்லதை பேசுங்கள் அல்லது வாய் மூடி மௌனமாக இருங்கள் '
( நபிமொழி ) என்று இவர்களிடம் சொல்வதைத் தவிர வேறெதுவுமில்லை .

அருவருப்பானது இந்த அயல் நாட்டின் இறக்குமதி .

இனத் துவேச துரோக வரிகளில் 
எனக்கும உன் அடக்கு முறை 
அடிமை சாசனம் தயார்தான் 
என்பது நான் அறிந்ததே !

சிறுபான்மை நசுக்களை அவசியமாக்கி 
பெரும்பான்மை சுகம் காட்டுவதில்தான் - உன் 
ஜனநாயக பெயர் தாங்கி வாக்கு வங்கிகளுக்கு 
கொளுத்த இலாபம் என்பது அறிந்த வரலாறே !

காலம் காலமான இந்த சதிகளில்
நேற்று 'எல்லாளன்' தெரியாத அரசியலை
'துட்டகைமுனுவின்' வரலாற்றில்
அநீதமாய் ஊடுருவி கற்றுக் கொடுத்தீர்கள் !

விளைவு மகாவலியை விட
இலங்கையில் ஒரு இரத்த ஆறு
முப்பது வருடங்கள் பேய்த்தனமாக ஓடியதே !
இன்னுமா தாகம் தீரவில்லை !

அச்சுறுத்தும் உன் கோஷங்களுக்கு அஞ்சி
அடிமைப் பட்டையை நெற்றியில் இட்டு
நீ கேட்கும் விலையில் தன்மானத்தை விற்க
தரங்கெட்ட பிண்டமல்ல - நான் முஸ்லிம் .

உன் நிகழ்கால நகர்வுகளில் போதி மரத்திலும்
அந்த இந்துத்துவா அல்லவா பளிச்சிடுகிறது !
அதே சீருடை காவி அழிப்புப் பனி ஒரே பாணி
அருவருப்பானது இந்த அயல் நாட்டின் இறக்குமதி .

Jan 22, 2013

வரலாற்றிலிருந்து...

மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக
நியமித்து விட்டு அணைத்துப் பொருப்புக்களிலிருந்தும் ஒதுங்கி தூர
இடம் ஒன்றிற்கு சென்று விடுகிறார். முஹம்மதோ அறிவு, வால் வீச்சு,
குதிரை ஓட்டம், போர் பயிற்சி என்று அணைத்திலும் சிறந்து விளங்கினும் போதிய அனுபவமற்றவனாக இருந்தான்.
இந்நிலையில் கிரீடம் தரித்து சில மாதங்கள் ஆவதற்குள் ரோம பேரரசு உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் மீது பாரியதொரு படையெடுப்பு மேற்கொண்டது.

இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது முஹம்மதுக்கு மிகக்கடினமாக
இருந்தது. எனவே தந்தையின் உதவியை நாட முடிவு செய்தான். விரைவாக
வந்து படைக்குத் தலைமை தாங்குமாறு தந்தைக்கு கடிதம் அனுப்பினான்.
தந்தையிடமிருந்து “இப்பொழுது நீ தான் சுல்தான், படைக்கும் நீயே தலைமை தாங்கு..! என்னால் வர முடியாது” என்று பதில் வந்தது.

இதற்கு முஹம்மதின் பதில் கடிதம் பின்வருமாரு இருந்தது. “ஆம் நான் தான்
சுல்தான். இப்பொழுது நான் கட்டளையிடுகிறேன், உடனடியாக
வந்து படையை வழி நடாத்துங்கள்..!” இந்த சிறுவன் தான் வரலாற்றில் சுல்தான் முஹம்மத் அல் பாதிஹ் என்று போற்றப்படும்.
நபிகளாரால் முன்னறிவுப்பு செய்யப்பட்டபடி இஸ்தான்பூலை (கொன்ஸ்தாந்திநோபில்) ரோமர்களிடமிருந்து கைப்பற்றிய மாவீரனாகும்.
நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்புச் செய்த அந்த ஹதீஸ். 

“கொன்ஸ்தாந்திநோபில் நிச்சயம் வெற்றி கொள்ளப்படும்.
அதை வெற்றி கொள்ளும் தலபதி எவ்வளவு சிறந்த தலபதி..!,
அதை வெற்றி கொள்ளும் படை எவ்வளவு சிறந்த படை..!” 
- ஹதீஸ்

அம்ரிப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை நாம் நபி(ஸல்) அவர்களைச் சூழஅமர்ந்திருந்தோம். அப்போது அண்ணலாரிடம் “கொன்ஸ்தாந்து நோபிள், ரோம் இவற்றில் எது முதலில் வெற்றிகொள்ளப்படும்?” என வினவப்பட்டது. அதற்கவர் “ஹிரகல் மன்னனின் நகரம் – கொன்ஸ்தாந்து நோபிள் – தான் முதலில் வெற்றிகொள்ளப்படும் என்றார்கள்.- முஸ்னத் அஹ்மத் : 6645

கொன்ஸ்தாந்து நோபிள் என்பது துருக்கியின் தற்போதைய இஸ்தான்பூல் நகரமாகும் இதை அரபு மொழியில் குஸ்தன்தீனியா என்றழைக்கப்படுகிறது. அன்று இறுதி தூதரின் காலத்தில் பெரும் வல்லரசான ரோம் சாம்ராஜ்யம் பரந்த இரண்டு கிளைகளைக் கொண்டு அமைந்திருந்தது . ஒன்று; ரோமைத் தலைநகராகக்கொண்ட மேற்கு ராஜ்யம். மற்றையது; கொன்ஸ்தாந்து நோபிளைத் தலைநகராகக்கொண்ட கிழக்கு ராஜ்யம். அக்கிழக்கு ராஜ்யம்தான் பைஸாந்தியப் பேரரசு எனப்பட்டது. பெரும் வல்லரசாகத் திகழ்ந்த இந்நகரம் ஒரு நாள் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்படுமென நபியவர்கள் கூறினார்கள் ‘கொன்ஸ்தாந்து நோபிள் ஒரு வீரனால் வெற்றிகொள்ளப்படும். அத் தளபதிதான் சிறந்த தளபதி. அந்த படைதான் சிறந்த படை என்றார்கள். -முஸ்னத் அஹ்மத்

தர்மச் சக்கரத்தின் புதிய 'வெர்சன் '(Version) இதுதான் .

சிலுவைகளின் சிந்தனைகளில் தான் இப்போது சீனப் பெருஞ் சுவர் தொடராக சர்வதேசத்தில் கட்டப்பட , இந்த போட்டிச் சந்தையில் அதே சிலுவைகளின் சிந்தனைகளில் சிந்து நதியும் காவித்தன காழ்ப்புணர்வோடு அரசியல் பாய்ச்சல் நடத்த , இனவாத போதையில் மூழ்கித் தவிக்கும் இந்த மாணிக்க தீவின் மனிதர்கள் ஆதிக்க பேயாக மீண்டும்ஆட்டப் படுவது தவிர்க்க முடியாதது தான் .

சிறுபான்மை எதிர்ப்பு எனும் வரையறையை காட்டி முஸ்லீம் சமூகத்தின் மீது அதி உச்சமாக அத்துமீறுவது ஒரு அரசியல் 'பெசனாகவே' மாறிவிட்டது . முஸ்லீம்களின் உணர்வுகளை மிதித்து தங்கள் கொத்தடிமைகள் ஆக்குவதில் தான் தங்கள் அரசியல் வெற்றி தங்கியிருப்பதாக பெரும் பான்மைகள் கருதத் தொடங்கி விட்டன .

சிலுவைப்போர் தொடர்ந்து கொண்டிருந்த காலப்பகுதியில் மிக மோசமான தாத்தாரியர் படையெடுப்பு நிகழ்ந்த்தது அதன் போது கிறிஸ்தவ உலகம் தமது பணியை தமக்கு இழப்பின்றி இன்னொரு சமூகம் செய்கிறது என கிறிஸ்தவ சமூகம் பார்த்துக் கொண்டிருந்தது . அப்படி ஒரு நவீன 'தாத்தாரிசமாக ' இன்று வளர்ந்துள்ள மதவாதம் காட்டு மிராண்டித் தனமாக மியன்மாரில் முஸ்லீம்களை வேட்டையாடி நரமாமிசம் திண்ட போது மேற்குலகு இவ்வாறுதான் பார்த்துக் கொண்டிருந்தது .எமக்கும் அதுதான் .

தட்டிக்கேட்க இப்போது யாருமில்லை . நிலமைகள் கைமீறி சென்று கொண்டிருக்கின்றன . நாங்கள் முஸ்லீம்கள் 1990 களில் நாம் சந்தித்த 'பிரபாகரனிசம் ' நாம் தஞ்சமடைய
சில எல்லைகளோடு எம்மை அழித்தது ,விரட்டியது . இப்போது எம்முன் இருக்கும் ' அசோகனிசம் ' அதை
விட ஆபத்தானது அது 'இராமநிசத்தின் ' நேரடி வழிகாட்டலில் வளர்ந்தது . அழித்தலில் மட்டுமே அதீத
திருப்தி காணும் கொடிய 'வைரஸ் .

இவர்களுக்கு எதையும் புரிய வைக்க முடியாது . இவர்களின் கண்களுக்கு உணவுக்காக மாடருக்கும் முஸ்லீம் மட்டும் தான் தெரிவான் . மத வெறியில் மனிதக் கழுத்தறுக்கும் அவர்களின் கத்தி புனிதமானது . இவர்களின் தர்மச் சக்கரத்தின் புதிய 'வெர்சனில் ' முஸ்லீம் அற்ற உலகு
மட்டும்தான் புனிதமானது .

பஞ்சு மெத்தையில் போராட்ட வரலாறா !?


...................................................................................

தியாக வேர்கள் ஆழப் பதியும் போதே 
சத்திய விருட்சம் செழித்து வளர்கின்றது .
மண் செழிக்க மழைத்துளி வீழ வேண்டும் .
கொள்கை செழிக்க முயற்சியின் முழு மூச்சோடு 
சிந்தும் வியர்வைத் துளி சிதற வேண்டும் .
விதையாக வீழத் தயங்குபவன் மனித 
அடிமை விலங்கை அகற்ற தகுதியற்றவன் .

போராட்ட வரலாறு பஞ்சு மெத்தையில்
படிக்க திகட்டாத சுவையுடையது தான் .
யதார்த்தத்தில் அதன் ஓய்வு கூட சுமையாகி
நாளைய பொழுதை புலர்ப்பிக்க இன்று
முற்படுக்கையில் முகவுரை எழுதப் படலாம் .
தோல்விகளில் படிப்பினை காணாதவன்
இழப்புக்களில் விரக்தியை நிச்சயம் தழுவுவான் .

சோதனைகளை நிஜத்தில் சந்திக்க தயங்குபவன்
வேதனைகளில் அற்புத சுகத்தை காணாத் தயங்குபவன்
களத்தை பற்றி கற்பனை கதை பேசவே தகுதியற்றவன்
இலட்சிய வாதம் அலட்சியமாக்கப்படும் இவர்களால்
தூய புரட்சிகரத்தால் புத்துலகை படைக்க முடியாது .
கோழைத்தனத்தின் விலாசத்தை நெற்றியில் சுமந்து
இவன் கட்டில் சாவுக்கே கதி கலங்கியே சாவான் 

ஏகாதிபத்திய காலனித்துவ பிடிக்குள் ஆபிரிக்கா உணர வேண்டிய பிரதான உண்மை என்ன ?


' மாலி ' இன்று மீடியாக்களின் பார்வையில் அதிகம் உச்சரிக்கப்படும் ஆபிரிக்க நாடு . முதலாளித்துவ வல்லரசான 'பிரான்ஸ்' இன்று அதன் மீது ஒரு சண்டித்தனமான ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடுத்துள்ளது . ஒரு வலிமை பொருந்திய நாடு வறிய ஆபிரிக்க நாடொன்றில் அரசியல் இராஜ தந்திர ரீதியில் ஆக்கிரமிப்பு செய்வது இது தான் முதல் தடவையல்ல . ஆனால் சொல்லப் பட்ட காரணம் தான் சற்று சிந்திக்கத் தூண்டுவது. அது வழமை போலவே இஸ்லாமிய தீவிர வாதம் , பயங்கர வாதம் எனும் நொண்டிச் சாட்டாகும் . இதனடிப்படையில் இஸ்லாம் பற்றிய தவறான அச்சத்தில் திசை திருப்பப்பட்டிருக்கும் மனித சமூகம் இன்று மாலியின் நிகழ்வுகளை ஒருபக்கப் பார்வையிலேயே பார்க்கின்றது .

பொதுவாகவே அநேகமான ஆபிரிக்க தேசங்கள் முதலாளித்துவ காலனித்துவ ஏகாதிபத்தியத்தின் இரும்புக் கரங்களின் பிடியில் காலம் காலமாக இருந்து வருபவை . இந்த முதலாளித்துவம் தமது அதிகாரக் கடிவாளத்தை வறிய ,பின்தங்கிய , நாடுகள் என சர்வதேச அளவில் இனங்காட்டப்படும் இந்த நாடுகள் மீது போட நினைப்பது ஏன் ? என்ற உண்மையை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் .

ஒவ்வொருவரும் தமது மனதை தொட்டு பேசவேண்டும் எமக்குத் தெரிந்தவரை ஆபிரிக்க மக்கள் தொடர்பில் அவர்களது சமூக ,கலாச்சார ,அரசியல் ,பொருளாதார, நிலைகள் எவ்வாறு இனம் காட்டப் பட்டுள்ளன ?
#மிகக் கடுமையான வறுமையும் , பஞ்சமும் .
#உள்நாட்டு யுத்தங்கள் , கோத்திர வாத சண்டைகள் .
#பழங்குடி வாழ்க்கை .
#போசாக்கற்ற மக்கள் .
#அச்சகரமான சூழல் .
என்ற உருவங்களே மனக்கண் முன் வரும் . ஆனால் இவை யாவும் அதன் பூமிக்கு மேல் உள்ள உருவாக்கப் பட்டு சித்தரிக்கப் படும் வடிவமாகும் . ஆனால் இந்த உலகத்தையே விலை பேசும் செல்வங்கள் அதன் பூமிக்கு கீழேதான் இருக்கின்றன . அது ஆபிரிக்காவின் இயற்கை வளங்கள் . இன்னும் இந்த வல்லரசுகள் அஞ்சும் யுரேனியம் , புளுட்டோனியப் படிமங்களையும் அதிகமாகவே ஆபிரிக்கா கொண்டுள்ளது .

முதலாளித்துவ சுரண்டல் வர்க்கத்தின் அழுத்தமான பார்வை பதிந்த இடமும் இதுதான் .அதன் காரணமாக ஆபிரிக்க மக்கள் ஒரு மோசமான சித்தரிப்பு நோக்கி நகர்த்தப் பட்டார்கள் . தம்மைப் பற்றியும் ,தமது நிலத்தைப் பற்றியும் அவர்கள் சிறிதும் சிந்திக்க அவகாசம் கொடுக்கப் படவில்லை . முதலாளித்துவ காலனித்துவத்தின் குறைந்த விலையுடைய கைக்கூலிகளாக அவர்கள் மாற்றப் பட்டார்கள் .அங்கு வளங்கள் மீதான பகல் கொள்ளை சர்வ சாதாரணமாக மேற்கொள்ளப் பட்டது .

# காலனித்துவம் .
# நவ காலனித்துவம் .
# நாடுகளை அரசற்ற நிலைக்கு (அனார்க்கி ) ஆக்கி உள்நாட்டு கலவரங்களை தூண்டி யுத்தப் பிரபுக்களை ஏற்படுத்தி ஆயுத விற்பனைக்கு பதிலாக கனிய வளங்களை பரிமாறுதல் .

போன்ற பல்வேறு நடவடிக்கைகளை செய்து அதன் வளங்களின் ஆதிக்கத்தை தமது கையில் வைத்திருப்பதே உண்மையில் இந்த (பிரான்ஸ் உட்பட ) முதலாளித்துவம் ஆபிரிக்க விவகாரத்தில் கவனத்தை குவிக்கும் பிரதான நோக்கமாகும் . இந்த பின்னணியை உணர்ந்தவர்களாகவே நாங்கள் மாலியின் விவகாரத்தை ஆராயத் தொடங்க வேண்டும் . பிரதான உண்மை என்னவென்றால் போசாக்கின்மை என்று அடையாளப் படுத்தப்படும் இந்த ஆபிரிக்க தேசங்கள் தாம் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் அடிப்படையான போசாக்குகள் என்றால் அது மிகையான கருத்தல்ல .

Jan 21, 2013

Mali and the Treachery of the Rulers

Mali and the Treachery of the Rulers

It is with great anger that the great Ummah of Muhammad صلى الله عليه وسلم are witnessing another war against Muslims and another military campaign in Muslim lands. From the very start of this new assault reports have been coming in of about the killing of civilians and children by the French war machine which includes air bombardment and ground invasion. The French President Francois Hollande has stated clearly whilst visiting the Gulf States that he will not permit the establishment of an Islamic State in Mali.
France's hatred towards Islam is well known and just recently Francois Hollande during his visit to Algeria made it clear that neither he or France would ever apologise for the slaughter of one million Algerians at the hands in the second half of the 20th century in addition to the thousands of rapes and horrendous acts of torture committed in the name of the Republic. Although this hatred is blatant the real reasons for this attack is for France to maintain its influence within Africa which is rich with vital natural resources and minerals and it fears not only the loss of its influence and interests in Mali but other African states that may follow.
Indeed this Ummah has been attacked by its enemies and continues to be attacked by its clear enemies in many Muslim lands and Mali is an addition to a long list including Chechnya, Kashmir, Palestine, Afghanistan, Yemen, Pakistan and the collaboration of all the western countries in regards to the continuation of the spilling of innocent blood in Syria is a matter that hides no ambiguity.
This war against our Ummah and lands is not unexpected and it is only natural that the colonial western powers will target us not only for our vast natural resources which they desire to be theirs but also because we represent the only foreseeable challenge to them in the future, which they see drawing nearer and nearer. However what is not natural and disgusts us the most is the support that our Muslim rulers have given to France and its allies to conduct this campaign. During Francois Hollande's visit to the Gulf States after the bombs has already began to fall in Mali, he stated that he is expecting the full support of the Gulf States. Not only was this red carpet laid out for this colonial murderer of Muslim children and invader of Muslim lands but help and support was offered to him by these traitorous rulers to the point where vast amounts of money has been pledged to support the French campaign. This in addition to the support given by the North African States and acquiescence of all others.
Allah سبحانه وتعالى says:
إِنَّمَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ قَاتَلُوكُمْ فِي الدِّينِ وَأَخْرَجُوكُمْ مِنْ دِيَارِكُمْ وَظَاهَرُوا عَلَىٰ إِخْرَاجِكُمْ أَنْ تَوَلَّوْهُمْ ۚ وَمَنْ يَتَوَلَّهُمْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ
"Allah merely forbids you from taking as friends those who have fought you in the deen and driven you from your homes and who supported your expulsion. Any who take them as friends are wrongdoers."
(Al-Mumtahanah, 60:9)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَىٰ أَوْلِيَاءَ ۘ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
"Oh you who believe! Do not take the Jews and Christians as your friends; they are the friends of one another. Any of you who takes them as friends is one of them. Allah does not guide wrongdoing people."
(An-Nisaa, 5:51)
The betrayal and treachery of those who claim to rule us have no limits. Their loyalty is and has always been to their masters who made and established them after the destruction and removal of the Islamic State from existence in the international arena and the dissection of the Ummah into its many smaller parts, each with their own flags and national anthems.
It cannot be disputed that the loyalty of each and every one of these rulers is to the West and not to Allah Azza Wa Jalla and the believers. In this case, as made clear in the above Noble Aayah, Allah سبحانه وتعالى has declared that he is free of them and they are nothing to Him, so the question that follows is: Will we now free ourselves and clean our hands of them? And will we work to bring back the representation of the honour, might and power of this Ummah that the West broke and are working night and day along with their puppets in the Muslim world to prevent from coming back? Will we also work night and day to re-establish the Islamic State, the Khilafah upon the path of the Prophethood, leading to the resumption of the Islamic way of life in this Dunyaa? The Imaam who will stand in the way of the aggression, protect our lives, honour, wealth and sanctities?
The Messenger of Allah صلى الله عليه وسلم said:
"Verily only with the Imaam will you have a shield behind which we will fight and behind which we will be protected." (Saheeh Muslim)
Source
islamicsystem.blogspot.com

Jan 20, 2013

(தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 08) )

'குரங்கு கையில் பூமாலை ' என்றால் என்ன ?
(தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு
என்ன ? (பகுதி 08) )

1961 இல் இந்த சம்பவம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடந்தது. இந்த சம்பவத்தோடு சம்பத்தப் பட்டவர் ஒரு அமைச்சர் .சாதாரண அமைச்சர் அல்ல பிரித்தானிய பாதுகாப்புத் துறையோடு சம்பத்தப் பட்ட அமைச்சர் . அவரின் பெயர் 'JOHN PROFUMO ' . அவரின் கேவலமான நடத்தைக்கு உதாரணமான சம்பவமே கீழேவருகின்றது .இது ஒரு தனி மனித தவறு என்பதால் சுட்டிக்காட்டவில்லை ஆனால் அந்த சமூகத்தின் பிரதானிகள் , அந்த சமூகத்திற்கு சட்டம் இயற்றக் கூடியவர்கள் . இது சம்பந்தமாக என்ன தீர்ப்பைக் கூறினார்கள் என்பதை எடுத்துக் காட்டவே ஆகும் .

இந்த அமைச்சருக்கும் 'கிரிஸ்டைன் கீலர் ' என்ற மொடல் அழகிக்கும் இடையில் தவறான பாலியல் தொடர்பு இருந்தது . இந்த கள்ளத் தொடர்பு வெளியே தெரிந்தது . கோபத்தோடு
அந்த பாராளுமன்றம் சம்பவத்தை பற்றி கடுமையாக விசாரிக்கத் தொடங்கியது . (சில நேரம் தங்களுக்கு அந்த காம சுகம் கிடைக்க வில்லையே ! என்ற கவலையாக கூட இருக்கலாம் .) காரணம் இது தான் .

அவர்கள் கோபப்பட்ட காரணம் 'கிரிஸ்டைன் கீலர் ' என்ற அந்தப் பெண் ஒரு ரஷ்ய உளவாளி .ஒரு ரஷ்ய கடற்படை அதிகாரியுடனும் அவளுக்கு 'செக்ஸ்' உறவு இருந்தது,பிரித்தானிய இராணுவ இரகசியங்களை அவளது உடலைக் காட்டி இந்த அமைச்சரிடம் இருந்து வாங்கி , அந்த கடற்படை அதிகாரி மூலம் ரஷ்யாவிற்கு கடத்தப்பட்டதும் தெரிய வந்தது .

அந்த அமைச்சர் தான் தப்பிக்கொள்ள பல பொய்களை கூறினார் . ஆனால் சம்பவங்கள் யாவும் ஆதாரத்தோடு நிரூபிக்கப் பட்டது .பிரித்தானிய பாராளுமன்றம் என்றால் இன்றைய சர்வதேச ஜனநாயக வடிவத்தின் தந்தை என்று கூட கூறலாம் . இந்த சம்பவம் தொடர்பில் கொடுத்த தீர்ப்பு என்ன ?அது இதுதான் .

" குறித்த சம்பவத்தில் அமைச்சர் 'JOHN PROFUMO' 'கிரிஸ்டைன் கீலர் ' உடன் 'செக்ஸ்' உறவு வைத்துக் கொண்டது தவறில்லை . அது அவரது தனிப்பட்ட விடயம் . அத்தோடு அது எமது பண்பாட்டு எல்லைகளுக்கும் உட்பட்டது ! ஆனால் இராணுவ இரகசியங்கள் வெளியிடப் பட்டது தான் தவறானது !எனவே அதற்காக அவர் தண்டிக்கப் பட வேண்டும் "

# இங்கு அந்த அமைச்சரின் தவறான 'செக்ஸ்' உறவு அவர்களின் பண்பாட்டு எல்லைகளுக்கு உட்பட்டதாம் !

# தவறு கண்டு பிடிக்கப் பட்டும் தன்னை நிரூபிக்க அமைச்சர் 'JOHN PROFUMO' பொய் சொன்னது கூட தவறில்லையாம் !!

# உலகத்திற்கே ஒளி கொடுத்த ஐரோப்பா என சொல்லப்பட்டாலும் , பெண் தொடர்பில் தனது வரலாற்று மனப் பாங்கை மாற்றிக் கொள்ளவில்லை !!!

இப்படி இங்கே கவனிக்க வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன . ஆனால் இந்த உதாரண சம்பவத்தோடு ஒத்துப் போகக் கூடிய பல சம்பவங்கள் . இன்னும் பல நாடுகளிலும் நடந்துள்ளன . எல்லா பாராளு மன்றங்களும் இத்தகு துப்புக்கெட்ட தனத்தோடுதான் இருக்கின்றன . இப்படிப் பட்டவர்கள் தான் மனிதனுக்காக சட்டம் இயற்றப் போகிறார்களாம் !!! இவர்களின் மூலம் தான் பெண்கள் மீது தொடரப்படும் வன்முறைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கப் போகிறதாம் !!! இதை 'குரங்கு கையில் பூமாலை ' என்று நாம் சுருக்கமாக கூறலாம் .

(தொடரும் ...)

இது சத்தியத்தின் முகவரியில் இருந்து ..

இது சத்தியத்தின் முகவரியில் இருந்து ..

மரத்துப் போன மனதில் இருந்து 
விறைத்துப்போன விரலுக்கு 
வரும் வாத்தைகள் இந்த 'உம்மாவின்'
சோகங்களால் கண்ணீர் வடிப்பினும்
மீண்டும் இஸ்லாம் ச
க்தியாய் மாறி 
கிலாபாத்தின் கேடயத்தில்
விடுதலைக்கதவுகளை
தட்டித்திறக்கும் நாள் வெகுதூரமில்லை .

ஓ சபிக்கப்பட்ட சமூகமே !
ஓ வழிதவறிய சமூகமே !
சமரசத்தின் பெயரில் மனித அடிமை
நீ தரும் சாசனம் தான் நீ தரும் ஜனநாயகம் !
பூகோள மய பூச்சாண்டியில்
முஸ்லிம் பூமிகளை மயானமாக்க
எம்மவரைக்கொண்டே எம் நிலத்திலே
எமக்கான கபுறு தோண்டி நீ
சாதிக்க நிணைக்கும் சாத்தானிய இராஜ்ஜியம்
உன் நிரந்தரக் கனவுதான் !!

சத்திய வாசனையும் ஜாஹிலிய துர்நாற்றமும்
ஒன்றாகிவிட்ட எம் கழுதைகள்
சற்று அரசியல் கொட்டமடிக்கட்டும்!
விரைவில் இஸ்லாத்தின் கட்டுத்தறியில்
கட்டுண்டு விடும் !
ஆதிக்க கதிரை காக்க துவக்கு குதிரைகளை
தட்டுவது உன் வரலாற்று வழிமுறைதான்
உன் ஈனத்தனமான ஈயங்கள்
எமக்கு முடிவுரை எழுதிடாது !!

இனி நீ சந்திக்கப்போவது எம் கிலாபாத்தின்
உதயத்தில் சஹாதத்தின் வேட்கையில்
தோல்வியின் சமாதியில் துயரத்தின்
அழிவினைத்தான்!!
மீண்டும் நாம் உனக்கு கைபரை நினைவு கூர்வோம் !!
ஸ்பெயினை நினைவு கூர்வோம் !!
உங்களிருவருக்கும் சமாதியா
அல்லது "ஜிஸ்யா" வா அது உங்கள் தெரிவு !
என்னென்றால் சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது !
இனியும் சத்தியம் உள்ளதால் அசத்தியம்
அழிந்தே தீரும் !

Jan 19, 2013

இது ஒரு பகிரங்கக் கொலைகாரன் பற்றிய அறிமுகம் .

#Palestine: Why are we scared in saying the truth and being labelled as anti-semetic?? Are we the terrorists??

இது ஒரு பகிரங்கக் கொலைகாரன் பற்றிய அறிமுகம் .

மரணமே இவனைக் கண்டு அஞ்சும் .
கர்ப்பிணிகள் இவனது நாமத்தை கூறினால் .
கருச்சிதைவு 100% நிச்சயம் !
துப்பாக்கிகள் கூட இவன் கையில் சிக்காமல் 
தூக்கில் தொங்கவும் தயாராம் !
மனித வரலாறு இவனது பதிவிற்கு
பக்கங்கள் வைக்கவில்லை காரணம்
கொடிய மிருகத்தை அதில் சேர்ப்பதில்லையாம் !
சொல்லகராதியில் கொலை என்ற வார்த்தை
தன்னை புரிய வைக்க இவனை
சந்திக்கச் சொல்கிறதாம் !

நமக்குள் முரண் பட ஒரு சில காரணங்கள் இருக்கலாம் அனால் ஒன்று பட பலநூறு காரணங்கள் இருக்கின்றன !

Inamullah Masihudeen
நமக்குள் முரண் பட ஒரு சில காரணங்கள் இருக்கலாம் அனால் ஒன்று பட பலநூறு காரணங்கள் இருக்கின்றன !

கருத்து வேறுபாடுகளை உள்வீட்டு விவகாரங்களாக பண்போடும் பரிவோடும் பக்குவமாக கையாள்வோம் -

தப்லீக் ஜமாஅத், ஜமாத்தே இஸ்லாமி, இக்வான் முஸ்லிமூன், தவ்ஹீது ஜமாஅத், தரீக்காக்கள் ஆகிய சமூகத்தில் செல்வாக்கு மிக்க சகல இயக்கங்களும் போதிக்கும் மார்க்கத்தின் அடிப்படை விஷயங்களில் உதாரணமாக ஷஹதாத் தவ்ஹீத் , ஸலாத் ,சகாத்து நோன்பு, ஹஜ்ஜு குடும்ப வாழ்வு சமூக வாழ்வு ,ஹலால் ஹராம் ,பொருளாதார வாழ்வு என எவரும் ஒருவருக்கொருவர் முரண் படவில்லை, தங்களுக்கிடையில் பலநூறு விடயங்களில் ஒருமைப்பாடு இருக்கிறது, ஒரு சில விடயங்களில் முரண்பாடு இருக்கலாம்.

இவர்கள் சகலரும் நேர் வழியிலேயே இருக்கிறார்கள், எவரும் எவரையும் வழிகேடர்கள் என அடையாளப் படுத்தவோ ,நிராகரிப்பவர்களை அல்லது அக்கிரமக் காரர்களை வெறுப்பது போல் ஒரு தரப்பினர் மற்ற தரப்பினர் மீது வைராக்கியத்தையும் குரோதத்தையும் காழ்ப்புணர்வையும் வளர்த்துக் கொள்ளவோ கூடாது அது இஸ்லாமும் ஆகாது.

கருத்து வேறுபாடுகளை நாம் பிணக்கு களாக பெரும் சர்ச்சைக் குரிய முரண் பாடுகளாக வளர்த்துக் கொள்ளக் கூடாது, தவ்ஹீதுல் கலிமா எனும் ஏகத்துவ கோட்பாடு போல் தவ்ஹீதுல் ஸாப் எனும் உம்மத்தின் ஐக்கியமும் இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றாகும்.

இன்ஷா அல்லாஹ் பொறுமையும் சகிப்புத் தன்மையும் விட்டுக் கொடுப்பும் சமயோசிதமும் எங்களிடம் முதலில் வந்தால் மாத்திரமே நாம் ஒட்டு மொத்த சமூகத்திற்கு எதிராக இன்று விடுக்கப் படும் சவால்களுக்கு முகம் கொடுக்கலாம், இன்றேல் நாம் எல்லோரும் தோற்றுப் போய்விடுவோம்,
சமாதான சக வாழ்விற்காக நாம் ஒவ்வொருவரும் பிரிந்து நின்று வகுக்கின்ற சகல் வியூகங்களும் அரத்தமற்றதாய் போய் விடும்.

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடுகளால் பிணங்கிக் கொள்ளாதீர்கள்; அவ்வாறு கொண்டால் பலமிழந்து கோழைகளாகி விடுவீர்கள்; நீங்கள் தோற்றுப் போய் விடுவீர்கள் ; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அன்பால் : 46)