துரதிஷ்டவசமாக இன்றைய உலகில் முஸ்லிம்களே முஸ்லிம்களின் இரத்தத்தை மிகச்சாதாரணமாக ஓட்டுகின்ற சம்பவங்களை நாம் அதிகளவில் பார்த்து வருகின்றோம். அல்லது கேள்விப்படுகின்றோம். அண்மைக்காலங்களில் பாகிஸ்தான், சோமாலியா, யெமன், பலஸ்தீனம் போன்ற நாடுகளில் இந்நிலை விருத்தியடைந்து வருகின்றமையை நாம் கண்டோhம். அண்மையில் வெளிவந்த அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையில் சோமாலியாவில் இரு முரண்பட்ட முஸ்லிம் தரப்புக்கள் மோதிக்கொண்டதில் 12 முஸ்லிம்கள் இரு தரப்பிலும் கொல்லப்பட்டுள்ளனர். அவ்வறிக்கை இதற்கு கிஸ்மாயோ எனும் சோமாலிய துரைமுக நகரை கைப்பற்றிக்கொள்வதற்காக அஸ்ஸபாப் அணியினரும், கிஸ்புல் இஸ்லாம் அணியினரும் மோதிக்கொண்டதே காரணமாகும் எனத் தெரிவித்திருந்தது. மறுபக்கத்தில் சவூதி அரேபியா மற்றும் ஈரானின் பின்னணியில் யெமனில் முஸ்லிம்கள் தமக்கிடையே மோதிக்கொள்வதைப் பார்க்கிறோம். மேலும் பலஸ்தீனத்தில் அல்பதாஹ் இயக்கமும் ஹமாஸம் மோதிக்கொண்டு இரத்தம் சிந்தியதையும் நாம் மறக்க முடியாது. அதேபோல பாகிஸ்தானில் பாகிஸ்தானின் முஸ்லிம் அரச படைகள் தமது நாட்டையே சேர்ந்த ஸ்வாத் பிராந்தியி முஸ்லிம்களை இராணுவ hPதியாகத்தாக்குவதையும்,தலிபான்களும் பாகிஸ்தான் துருப்புக்களும் தமக்கிடையே இரத்தம் சிந்திக்கொல்வதும் அப்பிராந்தியத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திவருவதைப்பார்க்கிறோம். வளர்ந்து வரும் இந்த கொடிய செயலை அல்லாஹ்(சுபு) முற்றாக தடைசெய்திருந்தும் கூட அது உதாசீனம் செய்யப்படுகிறது. எமக்கிடையான பிணக்குகளை ஷாPஆவின் அடிப்பiயில் தீர்க்காமல் ஒருவருடன் ஒருவர் பொருதிக்கொண்டு இரத்தம் சிந்தி அவற்றை தீர்க்க முனையும் இந்த வழிமுறை இவ்வுலகில் மாத்திரமல்லாது மறுமையிலும் மிகவும் பாரது}ரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் மிக ஆழமாக உணர வேண்டும்.
முஸ்லிம்கள் முஸ்லிம்களைக் கொல்வது ஹராமாகும்!
முஸ்லிமை கொலை செய்வதன் விளைவுகள் குறித்து அல்லாஹ்(சுபு) கீழ்வரும் திருமறை வசனத்தில் எச்சரிக்கிறான்.
“ மேலும் எவர், விசுவாசியை வேண்டுமென்றே கொலை செய்தால், அவருக்குரிய கூலி நரகமாகும். அதில் அவர் நிரந்தரமாக(த்தங்கி)இருப்பவர். இன்னும் அல்லாஹ் அவர் மீது கோபங்கொண்டு, அவரைச் சபித்தும் விடுவான். மகத்தான வேதனையையும் அவன் அவருக்குத் தயாராக்கி வைத்திருக்கின்றான். ( 4:93)
மேலும் கீழ்வரும் ஹதீஸில் முஸ்லிம்களை கொலை செய்வதும், துன்புறுத்துவதும் ஹராமாகும் என்பதை முஹம்மத் (ஸல்) தெட்டத்தெளிவாக உரைத்துள்ளார்கள்.
“ ஓர் முஸ்லிமை களங்கப்படுத்துவது அத்துமீறலாகும். அவருடன் போராடுவது நிராகரிப்பாகும்.” (புஹாரி, முஸ்லிம்)
ரஸ}ல்(ஸல்) “ முஸ்லிம்களில் இருவர் போராடுவதற்காக எதிர்கொண்டு ஒருவர் மற்றவரை கொலை செய்து விட்டால் கொலை செய்தவரும், கொல்லப்பட்டவரும் நரகத்தையே சென்றடைவர்.” என்றார்கள். அதற்கு ஸஹாபிகள் கேட்டார்கள் “ அல்லாஹ்வின் து}தரே! நரகம் கொன்றவக்கென்றால் சரி, ஏன் கொல்லப்பட்டவருக்கும் நரகம்” என வினவினார்கள். நபி(ஸல்) சொன்னார்கள். “ அவரிடம் தனது தோழரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது” என்றார்கள்.
ஆகவே முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் நோக்குடன் யுத்தம் செய்தால் அவர்கள் மறுமையில் பாரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டியேற்படும். அதுமாத்திரமல்லாமல் ஒரு உயிரை, அது யாராக இருப்பினும் வீணாகக் கொலை செய்தால் இஸ்லாம் அதனை மிகப்பெரிய குற்றமாக நோக்குகிறது.ரஸ}ல்(ஸல்) கூறினார்கள்,
“ஒரு முஸ்லிமை கொலை செய்வதைவிட இந்த உலகம் அழிக்கப்படுவது அல்லாஹ்(சுபு) பார்வையில் மிகவும் அற்பமானதாகும்.” (திர்மிதி)
ஆகவே முஸ்லிம்களின் தலைமைகள் (ஆட்சியாளர்களோ அல்லது இயக்கத்தலைவர்களோ) ஆளுக்காள் போட்டிபோட்டுக்கொண்டு முஸ்லிம்களுடன் முஸ்லிம்கள் போரிடுவதற்காக அழைப்புவிடுக்கும் இக்காலப்பகுதியில் அத்தகைய பாரது}ரமான செயலிலிருந்து முஸ்லிம்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு கட்டுப்படாமல், அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் முஸ்லிம்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும். தமது தலைமைகளை இத்தகைய கொடிய பாவத்தில் ஈடுபட வேண்டாம் என முஸ்லிம்கள் எச்சரித்து இந்தத்தீமையை முற்றாக ஒழிக்க வேண்டும். மாறாக தமது தலைமைகளும், தலைவர்களும் சொன்னார்கள் என்பதனால் இத்தகைய தீமையில் ஈடுபட்டுவிட்டு பின்னர் மறுமையில் அல்லாஹ்(சுபு)விடம் தமது செலுக்காக தலைவர்களை பொறுப்புச்சாட்டுவதில் எத்தகைய பயனுமில்லை. அல்லாஹ்(சுபு) தனது திருமறையில் கீழ்வருமாறு கூறுகிறான்.
“ அவர்களுடைய முகங்கள் (நரக) நெருப்பில் புரட்டப்படும் நாளில், “ நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே! (அவனுடைய) து}தருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே” என்று கூறுவார்கள். மேலும் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், எங்கள் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம், ஆகவே அவர்கள் எங்களை வழி தவறச் செய்து விட்டார்கள்.”(33:66-67)
warmcall.blogspot.com