Oct 11, 2010

கலீபாக்களின் ஆட்சி எங்கே? எம். சீனிவாசன், சென்னையிலிருந்து எழுதுகிறார்

கலீபாக்களின் ஆட்சி எங்கே? எம். சீனிவாசன், சென்னையிலிருந்து எழுதுகிறார்:

நம் நாட்டுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கு முன், "சுதந்திரம் கிடைத்த பின், இந்தியாவில் எப்படிப்பட்ட ஆட்சி நடக்க வேண்டும்' என, காந்தியிடம் நிருபர்கள் கேட்டபோது, "கலீபாக்களின் ஆட்சி போன்று இருக்க வேண்டும்' எனக் கூறினார்.ஆம்... கலீபாக்கள் யாருமே, பத்தடுக்கு மாளிகையிலும், பஞ்சு மெத்தையிலும், குளு குளு அறையிலும் உட்கார்ந்து லஞ்சம், ஊழலில் புரண்டு ஆட்சி நடத்தியதாக வரலாறு இல்லை. ஒவ்வொரு கலீபாவும், ஏழையோடு ஏழையாக, எந்த பிரதிபலனும் பார்க்காமல், மக்களுக்காக அல்லும், பகலும் உழைத்தனர்.ஏன்... தன் வீட்டு உணவிற்குக் கூட மூட்டைத் தூக்கிய கலீபாக்களும் உண்டு. அப்படிப்பட்ட கலீபாக்களை போன்ற ஆட்சியாளர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும் என, காந்தி விரும்பினார்.

ஆனால், காந்தி ஜெயந்தியன்று மட்டும் அவருடைய புகழ்பாடும் இன்றைய ஆட்சியாளர்கள், அவருடைய கொள்கையை நினைக்க மறுக்கின்றனர்.அன்று விட்டுச் சென்ற அதே காங்கிரஸ் தான், இன்றும் ஆட்சி செய்கிறது. இதில் வித்தியாசம் என்னவென்றால், அன்று தியாகிகள் இருந்தனர்; இன்று, மக்கள் பணத்தை மனிதாபிமானமே இல்லாமல் திருடும் துரோகிகள் உள்ளனர். காந்தியும், கடவுளும் சேர்ந்து இவர்களை மன்னிக்கவே போவதில்லை.


இளைஞர்களே... இந்த கருப்பு ஆடுகளை துரத்தி, கலீபாக்களின் ஆட்சியமைப்போம். நம்மால் முடியாதது எதுவுமே இல்லை. நாளைய வரலாறு நம்மை போற்ற போராடுவோம்.

நன்றி; தினமலர்.

குறிப்பு; அன்றைய காந்தி முதல் இன்றைய சீனிவாசன் அவர்கள் வரை நேர்வழி பெற்ற கலீபாக்களை, அவர்களின் ஆட்சியை புரிந்து சிலாகித்து சொல்லும் நிலையில், கலீபாக்களின் ஆட்சியிலும் குறைகாணும் 'குறுமதியாளர்கள்' நமது சமுதாயத்தில் உள்ளது வேதனைக்குரியதாகும். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டுவானாக!-

முகவைஅப்பாஸ்.

Oct 10, 2010

தாருல்-இஸ்லாம் என்பது என்ன?

கிலாஃபத் என்றால் என்ன?

கிலாஃபத் என்பதாவது உலகளாவிய முறையில் முஸ்லிம்கள் அனைவருக்குமான தலைமைத்துவமும், இஸ்லாமிய ஆட்சி முறையுமாகும் .அது அல்லாஹு (சுபு) அருளிய சட்டதிட்டங்களின் படி ஆட்சிபுரிவதாகும்.

கிலாஃபத் என்பது இமாராஹ் எனவும் அழைக்கப்படும். இரண்டும் ஒரே பொருளைக் குறிக்கின்ற வெவ்வேறு வார்த்தைகளாம்.

தாருல்-இஸ்லாம் என்பது என்ன?


வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அல்லாஹ்(சுபு) அருளிய இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் நிலப்பகுதியே தாருல் இஸ்லாம் எனப்படும். அப்பகுதியின் சட்டதிட்டங்கள், பாதுகாப்பு அனைத்தும் இஸ்லாமிய முறைப்படியே அமையும். மேலும் முஸ்லிம் அல்லாதோர் அதிகம் வாழ்ந்தாலும், சட்டங்கள் அனைத்தும் இஸ்லாமிய முறைப்படி அமைவதால் அது தாருல் இஸ்லாம் ஆகும்.

தாருல்-குஃப்ர் என்பது என்ன?

அப்பகுதியில் வாழும் மக்கள் அனைவருமே முஸ்லிம்களாக இருந்தாலும் அங்கு நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களும் பாதுகாப்பும் இஸ்லாமிய முறைப்படி அமையப்பெறாவிடில் அது தாருல் குஃப்ர் ஆகும். ஏனெனில் ஒரு நிலப்பகுதியை தாருல் இஸ்லாம் அல்லது தாருல் குஃப்ர் எனப் பிரித்தரிய அங்கு நடைமுறைப்படுத்தப்படும் சட்டதிட்டங்களே முக்கியக்காரணியாகும். அங்கு வாழும் மக்கள் பின்பற்றும் மதத்தினைக் கொண்டு தாருல் இஸ்லாம் அல்லது தாருல் குஃப்ர் எனக் கூறுதல் இயலாது.

இன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது?

வாழ்வினை நெறிப்படுத்தும் சட்டதிட்டங்களும், பாதுகாப்பும், ஆட்சியமைப்பும் அல்லாஹ்(சுபு) அருளிய சட்டதிட்டங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட எந்த ஒரு நிலப்பகுதியும் இவ்வுலகில் இல்லை. இஸ்லாமிய சட்டதிட்டங்கள் 99சதவீதமும், இஸ்லாத்திற்கு மாறான குஃப்ர் சட்டதிட்டங்கள் 1 சதவீதமும் இருந்தாலும் அது தாருல் குஃப்ர் என்பதே ஆகும். எனவே முஸ்லிம்கள் அதிகமான அளவு வாழும் வளைகுடா பகுதியிலும் சட்டதிட்டங்களாவன இஸ்லாத்திற்கு மாறான குஃப்ர் முறையிலும் அமைக்கப்பட்டிருப்பதனால் அப்பகுதிகள் தாருல்-குஃப்ர் ஆகும்.

அப்படியானால் இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் தத்தம் நாடுகளில் என்ன செய்ய வேண்டும்?

இஸ்லாம் நடைமுறையிலில்லாத இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் தமது நாட்டை தாருல் இஸ்லாமாக மாற்றுவதே அப்படி மாற்றுவதற்கான ஒரே வழி இஸ்லாமிய ஆட்சியான கிலாஃபா ஒன்றை நிலைநாட்டுவதே ஆகும். கிலாஃபா ஆட்சியின் பிரதிநிதியான கலீஃபாவால் மட்டுமே தஆவாவின் மூலமும் ஜிஹாதின் மூலமும் அனைத்து நாடுகளையும் தாருல் இஸ்லாமாக மாற்ற முடியும்.