CIA உளவாளி விடுதலை பாகிஸ்தான் மக்கள் கோபத்தின் உச்சியில்
ஹிஸ்புத் தஹ்ரீர் சூடான அறிக்கை:
இரு பாகிஸ்தான் பிரஜைகளை சுட்டு கொன்ற அமெரிக்க உளவாளி பாகிஸ்தான் அரசால் விடுதலை செய்யப்பட்டுள்ளமை பலத்த கண்டனங்களை பெற்று வருகின்றது இரு பாகிஸ்தான் பிரஜைகளை சுட்டு கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க தூதரக அதிகாரி ரய்மொன்ட் டேவிஸ்- Raymond Davis- விடுதலை செய்யப்பட்டு விசேட அமெரிக்க இராணுவ விமானம் மூலம் ஆப்கானிஸ்தான் நோக்கி பறந்துள்ளார்.
இந்த விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் பொது அமைப்புகள் பல சர்தாரி பாகிஸ்தான் மக்களுக்கு எதிராக செயலபடும் இரகசிய உலகில் அங்கம் வகிக்கும் அமெரிக்காவின் மிக தெளிவான ஏஜென்ட் என்று தெரிவித்துள்ளன பாகிஸ்தானில் இயங்கும் பிரதான பொது மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் பாரிய ஆர்பாட்டங்களை நடாத்தி வருகின்றது பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமி, பாகிஸ்தான் ஹிஸ்புத் தஹ்ரீர் என்பனவும் ஆர்பாட்டங்களை நடத்தியுள்ளன ஆர்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் டாக்டர் ஆபியா சித்தீக்கீயை அமெரிக்க சிறையில் இருந்து விடுவிக்க முடியாத கையாலாகாத பாகிஸ்தான் அரசு பல ஆயிரம் பாகிஸ்தானியர்களை கொலை செய்த கொலை காரனை விடுதலை செய்துள்ளது , கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் பணத்தை அல்ல துப்பாக்கியை காட்டி அடக்க பட்டுள்ளனர் என்றும் ஆர்பாட்டத்தில் ஈடு பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாகிஸ்தான் ஹிஸ்புத் தஹ்ரீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் -ரய்மொன்ட் டேவிஸ்- இவர் தான் அமெரிக்காவின் புலனாய்வு வலையமைப்பை -பாகிஸ்தானில்- விரிவாக்கிவர் இந்த மனிதர்தான் அதிகமான குண்டு வெடிப்புகள் , உளவு விமான தாக்குதல்கள் ஆகிய வற்றில் சமந்தபட்டவர் இந்த மனிதர்தான் தனது உளவு கூட்டாளிகளுடன் இணைத்து மத்ரசாக்களிலும் பாடசாலைகளிலும், மஸ்ஜிதுக்களிலும் நகர் பகுதிகளிலும் குண்டுகளின் மூலம் பல்லாயிரம் முஸ்லிம்களை கொலை செய்தவர்,
இந்த குண்டு தாக்குதல்களினால் கிராம புறங்களில் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் இவ்வாறான இந்த மனிதனுக்கு ஒரு மோசமான கிரிமினலுக்கு 20 ஆயிரம் ரூபா ‘இரந்த தொகைக்கும்’ சில நாட்கள் தடுப்புகாவலும் நீதியானதா ?
இந்த தீர்ப்பின் ஊடாக துரோகிகளான ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் இரகசிய வலையமைப்புக்கு எத்தனை முஸ்லிம்களை அவர்கள் கொன்றாலும் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் அவர்களை பாகிஸ்தான் மக்களின் கோபத்தில் இருந்து பாதுகாப்பார்கள் என்ற தெளிவான செய்தியை வழங்கியுள்ளார்கள்
டாக்டர் ஆபியா சித்தீக்கீயின் வழக்கின் நடந்தது போன்று இதுவும் பாகிஸ்தான் துரோகிகளான ஆட்சியாளர்கள் முகத்தில் விழுந்துள்ள மற்றுமொரு அடி இந்த தீர்ப்பு இந்த ஆட்சியாளர்களின் சவப்பெட்டிக்கு அடிக்கும் கடைசி ஆணியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் இந்த துரோக ஆட்சியாளர்கள் அமெரிக்காவுக்கான மலிந்த முகவர்களாகவும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான கிரிமினல்களாகவும் இருப்பது மீண்டும் தெளிவாகியுள்ளது அவர்களை அவர்கள் விரும்பும் முடிவுக்கு கிலாபா கொண்டு செல்லும் என்று தொடர்கின்றது அந்த அறிக்கை ரய்மொன்ட் டேவிஸ் பாகி்ஸ்தானில் கடந்த ஜனவரி மாதம் 27-ம் திகதி லாகூரிலிருந்து காரில் சென்று கொண்டிருந்த அமெரிக்க தூதரக அதிகாரி ரய்மொன்ட் டேவிஸ் வயது 37 தன்னை இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்தனர் என்று கூறி தனது துப்பாக்கியால் அவர்களை சுட்டுக் கொன்றார். அதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ரய்மொன்ட் டேவிஸ் மீது லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
இவர் அமெரிக்காவின் உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்டார் இந்நிலையில் கொலையான இரு பாகிஸ்தானியர்களின் முக்கிய உறவினர்கள் நீதிமன்ற விசாரணயின் போது வந்து தாம் சுட்டவரை மன்னித்துவிட்டதாகவும், அதற்கு இழப்பீடாக 200 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் இதைத்தொடர்ந்து ரய்மொன்ட் டேவிஸ் விடுதலை செய்யபடுவதாக லாகூர நீதிமன்றம் கூறியுள்ளது.
இது குறித்து கெய்ரோவில் இருந்த கருத்து வெளியிட்ட அமெரிக்க வெளிநாட்டு செயலாளர் ஹிலாரி கிளின்டன் ரய்மொன்ட் டேவிஸ் விடுதலை செய்வதற்ககு அமெரிக்க அரசு , 200 மில்லியன் நஷ்ட ஈடு கொடுக்கவில்லை என தெரிவித்தார். இது மேலும் நிலையை பாகிஸ்தானில் மோசமாக்கியுள்ளது டேவிஸ் விடுதலையை எதிர்த்து பாகிஸ்தானில் பல்வேறு அமைப்புகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது .
No comments:
Post a Comment