முஸ்லிம் சமுதாயத்தின் இயல்புகளும் புனரமைப்பும்
இறைவனின் தூதர்கள் அனைவரும் கொண்டு வந்த தூது:
இறைவனின் தூதுவர்கள் அனைவரும் கொண்டு வந்த செய்தி ஒன்றே ஒன்று தான் அது லா இலாஹ இல்லல்லாஹ_. அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதே. முஹம்மத் (ஸல்)அவர்கள் வரிசையாக வந்த இறைவனின் தூதர்களில் இறுதித் தூதர் ஆவார்கள். வரலாற்றில் அன்றுமதல் இன்றுவரை இந்தத் தூது மாறாமல் இறைவன் ஒருவனே என்பதாய்த்தான் இருந்து வந்தது. மனிதர்கள் தங்களைப் படைத்தவனும் தங்களுக்கு உணவளிப்பவனும் அந்த அல்லாஹ் ஒருவனே என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அந்த அல்லாஹ்வுக்கு மட்டுமே தலைதாழ்த்த வேண்டும். அடிபணிந்திட வேண்டும். வேறு எந்தச் சக்தியையும் அடிபணிந்திடக்கூடாது. மனிதனுக்கு அடிபணியவோ அவனை எஜமானனாக ஏற்றுக் கொள்ளவோ கூடாது என்பதே இதன் சிறு விளக்கம். மனித இனம் அன்றுமதல் இன்றுவரை இறைவன் இருக்கின்றான் என்பதை மறுத்ததில்லை. இந்தப் பொதுவிதிக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விதிவிலக்குகள் இருக்கலாம். அற்ப சொற்பமான இந்த விதிவிலக்குகளை விலக்கி விட்டுப்பார்த்தால், மனிதன் வரலாறு நெடுகிலும் இறைவன் இருக்கின்றான் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றான். அதே போல் இந்தப் பிரபஞ்சத்தை அடக்கியாளும் ஆற்றல் பெற்றவனும் அவனே என்பதையும் மனிதன் ஏற்றுக்கொண்டே இருக்கின்றான். அவன் தவறு செய்ததெல்லாம் அந்த இறைவனின் உண்மையான பண்புகள் எவை எவை என்பதைப் புரிந்து கொள்வதிலே தான். இன்னொரு தவறையும் அவன் செய்தான் அது: இன்னும் சில கடவுள்களைக் கண்டுபிடித்து அந்த இறைவனுக்குத் துணைக்கு அமர்த்தினான். இப்படி இறைவனுக்குத் துணை வைத்தக் கடவுள்களைப் பல நேரங்களில் ஆத்மார்த்தமாக வழிபட்டான். பல நேரங்களில் வெறும் நம்பிக்கையாகவே தன் இதயத்தில் இருத்திக்கொண்டான். இன்னும் சில நேரங்களில் அந்த இறைவனைப் போலவே அந்தத் துணைக் கடவுள்களுக்கும் ஆளுமையும் அதிகாரமும் உண்டு என நம்பி வழிபட்டு வாழ்ந்தான். எந்த உருவில் எந்த வடிவில் இறைவனுக்குத் துணை வைத்தக் கடவுள்களைப் பல நேரங்களில் ஆத்மார்த்தமாக வழிபட்டான். பல நேரங்களில் வெறும் நம்பிக்கையாகவே தன் இதயத்தில் இருத்திக் கொண்டான். இன்னும் சில நேரங்களில் அந்த இறைவனைப் போலவே அந்தத் துணைக் கடவுள்களுக்கும் ஆளுமையும் அதிகாரமும் உண்டு என நம்பி வழிபட்டு வாழ்ந்தான். எந்த உருவில் எந்த வடிவில் இறைவனுக்குத் துணை வைத்தாலும் அது ஷிர்க் என்ற இணைவைப்பில் தான் சேரும். ஒவ்வொரு இறைத்தூதருக்குப் பின்னரும் ஓர் காலக்கட்டம் இருந்தது. அந்தக் கால இடைவெளியில் மக்கள் இந்த மார்க்கத்தைப் புரிந்து கொண்டார்கள். ஆனால் காலப்போக்கில் மக்கள் மறந்தார்கள். இறைவனுக்கு இணைவைத்தார்கள். பொய்யான இந்த இணைகளை வழிபட ஆரம்பித்தார்கள். காலங்களின் ஓட்டத்தில் ஜாஹிலிய்யா என்ற அஞ்ஞானப் பழக்கவழக்கங்களில் முற்றாக வீழ்ந்தார்கள். அதாவது இணைவைப்பில் தங்கள் வாழ்வை மூழ்கடித்துக் கொண்டார்கள். இறைவனுக்கு வைக்கப்பட்ட இந்த இணை பல நேரங்களில் வழிபாடுகளோடு நின்றது. பல நேரங்களில் அந்த இணைத் தெய்வங்களின் பெயரால் வந்த ஆட்சி அதிகாரங்களுக்குக் கட்டுப்படுவது என்றும் ஆனது. இன்னும் சில நேரங்களில் வெற்று நம்பிக்கை என்ற அளவோடு நின்றது. வரலாறு நெடுகிலும் இறைவனின் பக்கம் மக்களை அழைத்திடும் மகத்தான பணியில் ஓர் தனிப்பட்ட இயல்பு தொனித்திருக்கின்றது. இந்தத் தனி இயல்பு இஸ்லாம் என்பதாகும். இதன் பொருள் மனிதர்கள் இறைவனுக்கு மட்டுந்தான் கீழ்ப்படிய வேண்டும் என அழைப்பதாகும். மனிதர்கள் தங்களைப் போன்ற ஏனைய மனிதர்ளுக்குக் கீழ்ப்படியாமல் பார்த்துக் கொள்வது. இதையே உண்மையான இறைவனின் பார்வையில் சொன்னால் மனிதர்களை எல்லாவிதமான அடிமைத்தனங்களிலிருந்தும் விடுவிப்பது என்று பொருள்படும். இந்த அடிமைத்தளைகளிலிருந்து அவர்களை விடுவிப்பதன் நோக்கம் அவர்களை அல்லாஹ்வுக்கு மட்டுமே அதாவது அந்த உண்மையான இறைவனுக்கு மட்டுமே கீழ்ப்படியச்செய்வதாகும். எல்லாவிதமான அடிமைத்தனங்களிலிருந்தும் விடுவிப்பது என்பது மனிதர்களால் இயற்றப்பட்ட சட்டங்களின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவது மனிதர்களால் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் சிந்தனைப் போக்குகள் பண்பாடுகள் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவது என்றெல்லாம் பொருள்படும். இவற்றிலெல்லாமிருந்து மனிதனை விடுவித்து அல்லாஹ்வின் உண்மையான இறைவனின் சட்டங்களுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவனைக் கீழ்ப்படிய வைப்பதே இஸ்லாம். முஹம்மத்(ஸல்)அவர்கள் இதற்காகவே இறைவனின் திருத்தூதராக நியமிக்கப்பட்டார்கள். இது தான் முஹம்மத்(ஸல்)அவர்களுக்கு முன்னால் வந்த அத்தனை இறைத்தூதர்களும் செய்தத் திருப்பணியாகும். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தின் கீழ் இயங்கி வருகின்றது. மனிதன் இந்தப்பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கும் ஒரு சிறுபகுதியே. ஆவன் தன்னுடைய பௌதீக வாழ்க்கையில் புற உலக வாழ்க்கையில் தனது கட்டுப்பாட்டில் இல்லாதவற்றின் விவகாரங்களில் அவன் அந்த அல்லாஹ்வின் விதிகளுக்கே கட்டுப்பட்டு வாழ்கின்றான். (மனித வாழ்க்கையின் இயக்கத்தில் நடக்கும் செயல்களை இரண்டாகப் பிரிக்கலாம்.
1. அவனுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட இச்சைச் செயல்
2. அவனுடைய கட்டுப்பாட்டுக்கு உட்படாத அனிச்சைச் செயல்
அவனது கட்டுப்பாடுகளுக்கு உட்படாத செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் விதிகளின் படியே நடைபெறுகின்றன. அதே போல் மனிதன் தன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட செயல்களிலும் அல்லாஹ்வின் விதிப்படிச் செயல்படுவதே நியாயம்) உண்மை இவ்வாறிருக்க மனிதன் தன் கட்டுப்பாட்டிலுள்ள வாழ்க்கைப் பகுதிகளிலும் அந்த அல்லாஹ்வின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதே நியாயம் - இயற்கையின் நியதி. ஆகவே மனிதன் வாழ்க்கையை வழிநடத்தும் கட்டுப்படுத்தும் முறைப்படுத்தும் சட்டங்களாக அந்த அல்லாஹ்வின் சட்டங்களைப் பணிந்து வாழ்ந்திட வேண்டும். அதுவே பண்பான பாதையாகும். இதை விடுத்து மனிதன் அல்லாஹ்வின் அதிகாரங்களுக்கும் பிடிகளுக்கும் அப்பாற்பட்டவனாகத் தன்னை நினைத்துக் கொள்ளக் கூடாது. இந்தத் தவறான சிந்தனையின் அடிப்படையில், அவன் சட்டங்களை இயற்றிடும் அதிகாரத்தை வளைவும் நெளிவும் நிறைந்த தன் வாழ்க்கையை நெறிப்படுத்திடும் விதிகளை வகுத்திடும் அதிகாரத்தை அபகரித்திடக்கூடாது. மனிதனின் பிறப்பு அவனது வளர்ச்சி அவனது ஆரோக்கியம் வாழ்வு இறப்பு இத்தனையும் அல்லாஹ்வின் பிடியிலிருக்கின்றது. அதைப் போலவே மனிதன் கொண்டுவர விரும்பும் மாற்றங்கள் புரட்சிகள் இவற்றின் விளைவும் முடிவும் அல்லாஹ்வின் பிடியில்தான் இருக்கின்றன. இவற்றிலெல்லாம் மனிதன் ஆற்றலற்றவனாக இருக்கின்றான். இவற்றிலும் இன்னும் இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் ஏனையவற்றின் செயல்களிலும் மனிதன் எந்தப் பிடிப்பும் அற்றவன். இவற்றிலெல்லாம் அவன் அல்லாஹ்வின் சட்டங்களை நியதிகளை விதிகளை மாற்ற இயலாதவனாக இருக்கின்றான். இவற்றில் அல்லாஹ்வின் சட்டங்களை விதிகளை மாற்றிடவோ திரித்திடவோ அவனால் முடிவதில்லை. இப்படி அவன் எல்லாவற்றிலும் அல்லாஹ்வின் அதிகாரத்தைக் காண்கின்றான். அவனுடைய வாழ்க்கையை நெறிபடுத்தும் சட்டங்களையும் அந்த அல்லாஹ்விடமிருந்து எதிர்பார்ப்பதே நியதி. மனித வாழ்வின் பிற பகுதிகளையும் அல்லாஹ்வின் சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படிய வைப்பதில் ஒரு மகத்தான பலன் இருக்கின்றது. அந்தப் பலன் அவனது வாழ்க்கை இயற்கையின் ஏனையப் பகுதிகளோடு பொருந்தி யதார்த்தமானதொரு வாழ்க்கையாக ஆகிவிடுகின்றது. இதனால் இந்தப் பிரபஞ்சத்தை உலகை கட்டுப்படுத்தும் சக்தியும். ஆதாவது மனிதனின் பௌதீக வாழ்க்கையை புறவாழ்க்கையை கட்டுப்படுத்தும் சக்தியும் அவனது வாழ்க்கையின் இதரப் பகுதிகளைக் கட்டுப்படுத்தும் சக்தியும் ஒன்றாகவே ஆகிவிடுகின்றது. இஸ்லாத்திற்கு எதிரானது ஜாஹிலிய்யா என்ற அஞ்ஞானம் மௌட்டிகம் மடத்தனத்தை முதலாகக் கொண்ட கொள்கைகள். இந்த அஞ்ஞானத்தின் முதல் வெளிப்பாடு மனிதனை மனிதன் ஆதிக்கம் செலுத்துவதாகும். இது இந்த உலகில் இருக்கும் எல்லா இயற்கை விதிகளுக்கும் யதார்த்தங்களுக்கும் எதிரானது. இந்த அஞ்ஞான பழக்கங்கள்தாம், இந்த இயற்கைக்கு எதிரான அடாவடித்தனங்கள்தாம், இறைவனின் திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக எழுந்து நின்றன. இவைதான் அத்தனை திருத்தூதர்களையும் எதிர்த்து நின்றவை. இவற்றின் எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு அவர்கள் எந்தப் பெரிய தவறையும் செய்திடவில்லை. அவர்கள் செய்ததெல்லாம் இந்த அஞ்ஞானத்தில் தங்களைப் பறிகொடுத்து அடிமைத்தளைகளில் சிக்க வைத்திருந்த மக்களை அவற்றிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் பக்கம் வாருங்கள் என அழைத்ததுதான். இந்த அஞ்ஞானம் ஜாஹிலிய்யா மௌட்டீகம் என்பது ஒரு வெற்றுக் கோட்பாடல்ல. பல நேரங்களில் அது ஒரு கோட்பாடாகவே இருந்ததில்லை. இந்த ஜாஹிலிய்யா மனித வாழ்வை இயக்கிக் கொண்டிருந்த ஒரு பேரியக்கமாகும். அதற்கென ஒரு தலைமை இருந்தது. அதற்கென வாழ்க்கை வழிமுறைகளும் சட்டங்களும் திட்டங்களும் இருந்தன. அதற்கென தனியான பண்பாடுகள் கலாச்சாரங்கள் உணர்வுகள் விருப்பு வெறுப்புகள் பழக்கவழக்கங்கள் எல்லாம் இருந்தன. அதற்கென ஒரு சமுதாயம் தன் மௌட்டிகங்களை மடமைகளைக் காத்திட எப்போதும் தயாராக இருந்தது. இந்தச் சமுதயாம் தன் மௌட்டிகங்களை மடமைகளைக் காத்திட எப்போதும் தயாராக இருந்தது. முடிந்த போதெல்லாம் அந்த மடமைகளைக் கொண்டு உண்மையை அழிக்க முழு முயற்சியையும் மேற்கொண்டது. ஜாஹிலிய்யா என்ற அஞ்ஞானம் தன்னையொரு சமுதாயத்தின் மூலம் பிரதிபலித்துக்கொண்டு (நடைமுறை)வாழ்க்கை நடப்பு என்ற அளவில், சத்தியத்தைப் போருக்கிழுத்திடும் போது இந்த அஞ்ஞானத்தை எதிர்த்து மனிதர்களைப் ப10ரண அறிவின் பக்கம் உண்மையின் பக்கம் அழைத்திடும் இஸ்லாம் மட்டும் ஒரு வெற்றுக் கோட்பாடு என முடங்கிக் கிடந்தால் வாய்மை எவ்வாறு வெல்லும்? இந்தப் புரட்டுக் கொள்கையின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து அவர்களை உண்மையின் பக்கம் நிலைபெறச் செய்ய வேண்டிய இஸ்லாமும். துன்னை ஒரு நடைமுறைக் கொள்கையாக ஓர் சமுதாய அமைப்பில் பிரதிபலித்து அந்தச் சமுதாயத்தைக் கொண்டு தான், சமருக்கிழுக்கும் அஞ்ஞானக் கொள்கைகளோடு பொருந்திடப் போந்திட வேண்டும். இன்றைய உலகில் பெரும்பாலான மக்களையும் இந்த அஞ்ஞான கொள்கைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. அவற்றிற்கு பக்கத்துணையாக ஒரு பெரும் பட்டாளமும் தயார் அழிவை ஏற்படுத்துவதைத் தங்கள் மூளையின் முழுவேலை என ஆக்கிக்கொண்டவர்களின் நச்சு மூளை தயாரித்துத் தந்த ஆயுதமும் இந்த ஜாஹிலிய்ய சக்திகளின் கட்டுப்பாட்டில், இத்தனையும் வாய்க்கப்பெற்ற குதர்க்க கொள்கைகளைக் கெல்லி எறிந்துவிட்டு அந்த இடத்தில் சத்தியத்தை (இஸ்லாத்தை)அமர்த்திட விழைவோர், வேதாந்த சித்தாந்தம் என தர்க்கவாதங்களையும் சித்தாந்தங்களையும் நம்பி இருந்தால் சத்தியம் வெல்லுமா? இன்றைக்கிருக்கின்ற வாழ்க்கை முறைகளை முற்றாகத் துடைத்தெறிந்துவிட்டு அந்த இடத்தில் இஸ்லாத்தை நிலைநாட்டிடுவதுதான் அறுதியான இலட்சியம் என்ற பின்னர் இந்தச் சத்திய இஸ்லாமும் தன்னையொரு வாழும் கொள்கையாக ஆக்கிக் கொண்டு, அந்தக் கொள்கை, வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சும் சமுதாயத்தைக் கொண்டுதான் களத்தில் இறங்கிட வேண்டும். இதுதான் எதிரியை எதிர்கொள்ளும் யதார்த்தமான பாதை. அந்தச் சத்திய சமுதாயத்தில் தங்களை அங்கங்களாக ஆக்கிக்கொள்ளும் அத்தனை தனி மனிதர்களும் இந்தக் கொள்கையின் உண்மையான நடைமுறைப் பிரதிநிதிகளாக வாழ்ந்திட வேண்டும். அவர்களின் எண்ணமும் வாழ்வும் இந்த இஸ்லாத்தின் சத்தியத்தின் சட்ட திட்டங்களையும் வழிகாட்டுதல்களையும் எடுத்து நடப்பதும் எதிர்கொள்கைகளை இந்த நடைமுறையைக் கொண்டே எதிர் கொள்வதாயும் இருந்திட வேண்டும். இந்தச் சத்தியத்தின் மேல் அவர்களுக்கிருக்கும் பிடிப்பும் பிணைப்பும் அசத்தியத்தின் மேல் அதனைப் பின்பற்றுவோருக்கு இருக்கும் பிணைப்பையும் பிடிப்பையும் விட அழுத்தமானதாக இருந்திடவேண்டும். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையும் ஆரம்பக் கொள்கையும் லா இலாஹ இல்லல்லாஹ_ என்பதேயாகும். அதாவது அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பது இதன் பொருள் : அல்லாஹ் தான் இறைவன் என்பதற்குச் செயல்முறையில் வாழ்க்கை நடப்பில் சாட்சியம் வழங்கிட வேண்டும். அந்த அல்லாஹ் தான் உணவளிப்பவன் அல்லாஹ்தான் ஆட்சியாளன். அவனுக்கே அனைத்து அதிகாரங்களும் உண்மையாகச் சொந்தம். அவனையே வணங்கிட வேண்டும் அவனுடைய சட்டங்;களையே கீழ்ப்படிந்திட வேண்டும். இப்படி வாழ்க்கையை முற்றாக லா இலாஹ இல்லல்லாஹ_ என்ற அடிப்படையின் கீழ் அமைத்துக்கொள்வது தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது என்று பொருள். இதுதான் முஸ்லிம் எனத் தன்னை அழைத்துக் கொள்பவனை முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து பிரித்துக் காட்டுவது. லா இலாஹ இல்லல்லாஹ_ என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டாவிட்டால் இதனை ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை. மனிதன் தன்னுடைய முழுவாழ்வையும் தனது வாழ்வின் ஒவ்வொரு அங்க அசைவையும் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்ததாக ஆக்கிட வேண்டும் என்பதாகும். அவன் தன்னுடைய பிரச்சனைகளை விவகாரங்களை தனது விருப்பம் போல் முடிவு செய்திடக்கூடாது. அவைகளை அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களையும் சட்டதிட்டங்களையும் நாம் முஹம்மத்(ஸல்)அவர்கள் வழியாகத்தான் அறிவோம். ஆகவே நாம் சாட்சியம் தந்திட வேண்டிய இரண்டாவது பகுதி. வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் அதாவது நான் முஹம்மது(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என சாட்சியம் அளிக்கின்றேன்.
இஸ்லாம் எடுத்த எடுப்பிலேயே செயல் மயமானதோர் பேரியக்கமாகும். உண்மையான இறைவனை நம்பி ஏற்று அவன் வழங்கிய வழிகாட்டுதல்கள் வழிவாழ்ந்து உண்மைக்கும் அந்த உண்மைத் தூதருக்கும் சாட்சியங்களாகவும் அத்தாட்சிகளாகவும் இலங்கிடும் இந்த இஸ்லாமிய சமுதாயம் அதற்கு நேர் எதிரான அஞ்ஞான சமுதாயத்தின் ஆதிக்கத்திலிருந்தும் தாக்கங்களிலிருந்தும் விடுபட்டிட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில் உண்மைக்கு நேர் எதிரான இந்த இதரக் கொள்கைகளின் அடிப்படை இயல்பே இஸ்லாத்தை எதிர்ப்பதாகும். உண்மையின் வாய்மையின் உண்மையான சொரூபமாகத் திகழும் இந்த இஸ்லாமிய சமுதாயம் ஒரு தலைமையின் கீழ் ஒன்றாய்ப் பிணைந்து நின்றிட வேண்டியதாகும். வாய்மையும் நேர்மையும் நிறைந்த இந்தச் சமுதாயத்தின் முதல் தலைமை முஹம்மது(ஸல்) அவர்களிடமிருந்து வருவதாகும். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. எம்பெருமானார் முஹம்மது(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள் என்று சாட்சியம் சொல்லுகின்றவர்கள். இந்த அல்லாஹ்வுக்கு எதிரான புறம்பான அஞ்ஞான கொள்கைகளிலிருந்து தங்களை முழுமையாக விடுவித்துக் கொள்ள வேண்டும். அதே போல் அஞ்ஞானத்தின் பிரதிநிதிகளாக நிற்கும் தலைமையிலிருந்தும் விடுவித்துக் கொள்ள வேண்டும். அந்தத் தலைமை மதகுருமார்கள் என்ற அளவில் வந்தாலும் சரி, இல்லை மந்திரவாதிகள், விஞ்ஞானவாதிகள் என்ற மாற்று வடிவங்களில் வந்தாலும் சரி அந்தத் தலைமை அரசியல் தலைமை அரசியல் நிர்ணய சபையின் தலைமை பொருளாதார புரட்சியின் தலைமை என்று எந்த உருவங்களில் வந்தாலும் சரியே. இத்தகையதொரு தீர்க்கமான முடிவை ஒரு முஸ்லிம் லா இலாஹ இல்லல்லாஹ_ முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று சொன்னவுடனேயே எடுத்தாக வேண்டும். இப்படியொரு முடிவை எடுக்காதவரை முஸ்லிம் சமுதாயம் வாழ்விலும் வழக்கிலும் வராது. இந்தத் திருக்கலிமாவை ஏற்றுக் கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் முழுமையாக ஒத்துழைத்து ஒரு தனிப்பெரும் இயக்கமாக இயங்கிட வேண்டும். இல்லையேல் இந்தச் சமுதாயம் ஓர் முஸ்லிம் சமுதாயமாகத் தன்னை அழைத்திட இயலாது. ஒருங்கிணைக்கப்பட்ட இந்தச் சமுதாயம் இஸ்லாத்திற்கு எதிரான முரட்டுக் கொள்கைகளின் முரட்டுத்தனங்களை முழு மூச்சயர் எதிர்கொண்டிட வேண்டும். இஸ்லாம் இப்படித்தான் இந்த உலகில் வழக்கில் வந்தது. அது இரத்தின சுருக்கமான ஒரு முழுக்கத்தை முன்வைத்துத்தான் இந்த உலகையே அறியாமையிலிருந்து விடுவித்தது. இந்த முழக்கம் (லா இலாஹ இல்லல்லாஹ_) முன் வைக்கப்பட்டவுடனே ஒரு சமுதாயம் இதனைப் பிரதிபலித்துத் தன் வாழ்வை முன்னிறுத்தி இயங்கத் துவங்கிற்று. செயற்களத்தில் முன்னே நின்ற இந்தத் திருக்கூட்டம் அத்தனை அஞ்ஞானப்பழக்க வழக்கங்களையும் தன்னை விட்டுத் தூக்கி எறிந்துவிட்டது. தூக்கி எறிந்தது மட்டுமல்ல தன் வாழ்க்கையை முன்னிறுத்தி அந்த அறியாமைக் காலத்துப் பழக்க வழக்கங்களை அந்த அஞ்ஞான காலத்து நம்பிக்கைகளை அறைகூவி அழைத்தது. எந்த நிலையிலும் இந்த முழக்கம் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற இந்த முழக்கம் நடைமுறைக்கு வராத ஓர் வெற்றக் கோட்பாடாய் முடங்கிக் கிடந்ததில்லை. இதேபோல் தான் இந்தக் கொள்கையை மீண்டும் நிலைநாட்டிட முடியும். இந்தக் கொள்கையை கருத்தரங்குகளிலும் சொல்லரங்கங்களிலும் மணி மண்டபங்களிலும் விவாதம் செய்து வெல்லுகின்ற ஒரு கொள்கையாக எடுத்துக் கொள்டோம் என்றால் இஸ்லாத்தை நிலைநாட்டிடும் பெரும் பணியில் நாம் வெற்றி பெற்றிட இயலாது. இஸ்லாம் அதனை ஏற்றுக் கொண்டோர் அனைவரது வாழ்விலும் வாழும் செயல்முறைக் கொள்கையாக ஆகிவிட வேண்டும். குறிப்பாக ஜாஹிலிய்யா என்ற இந்த அறியாமை உலகம் தன்னை உலகமெலாம் வாழும் கொள்கையாகவும் ஆளும் கொள்கையாகவும் ஆக்கிக்கொண்டு பணபலம், படைபலம், விஞ்ஞான அறிவுபலம், அத்தனையையும் ஒன்று திரட்டி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்கக் கங்கணங்கட்டிச் செயல்படுமு; இந்நாளில் இஸ்லாம் வெற்றுக் கொள்கையாக மட்டுமே முடங்கிக் கிடந்தால் தோல்வி மட்டுமல்ல அழிவும் வந்து விடலாம். (அல்லாஹ் நம்மைக் காப்பாற்றி உறுதிப்படுத்துவானாக) நம்பிக்கை, நம்பிக்கையின் வழிவந்த செயல் இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு சமுதாயம் வாழ்ந்தது என்ற அடிப்படையில் இஸ்லாம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபின், இந்த நம்பிக்கையை வாழ்வில் செயல்படுத்திக் கொண்டிருந்த அந்தச் சமுதாய அங்கங்களின் உறவுகளையும் பிணைப்புகளையும் முடிவு செய்வது இந்த நம்பி;க்கையாகவே இருந்தது. இதில் இஸ்லாம் மனிதர்களிடம் இயல்பாகவே அல்லாஹ் வழங்கியிருந்த மாண்புகளைகத் தட்டி எழுப்பிற்று. அந்த நல்ல பண்புகளைத் தூசுதட்டி பட்டை தீட்டி பளபளக்க வைத்தது. பலம்பெற வைத்தது. இந்தப் பண்பு நலன்களின் உயர்வில் அவனை வானளாவ உயரச்செய்தது. இந்த நற்பண்புகளில் அவைதரும் நல்ல பண்பாட்டில் அவன் வளரவும், வாழவும் போதனைகளையும் சட்டங்களையும் நெறிமுறைகளையும் வகுத்துத்தந்தது. சில பண்புகளில் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையில் சில பொருத்தங்கள் இருக்கின்றன. இந்தப் பொருத்தங்களைப் பார்த்த இந்த விஞ்ஞான அஞ்ஞானம் (மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையேயுள்ள சில ஒற்றுமைகளைப் பார்த்த மனிதன், மனிதன் குரங்கிலிருந்துதான் அதாவது விலங்கிலிருந்து தான் தோன்றினான் என விதிவகுத்தான். இறைவன் ஒருவன் இருக்கின்றான். அவன்தான் மனிதனைப் படைத்தான் என்ற உண்மைகளை விஞ்ஞானம் கண்டுகொள்ளத் தவறிவிட்டது. இதுபோன்ற விஷயங்களில் விஞ்ஞானம் அஞ்ஞானமே) மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபட்டவனல்ல எனக் கணக்கிட ஆரம்பித்துவிட்டது. சில செயல்களிலும் நடத்தைகளிலும் மனிதனுக்கும் மிருகங்களுக்குமிடையே சில பொருத்தங்கள் இருந்தாலும் எத்தனையோ எண்ணிலடங்காத விஷயங்களில் மனிதன் மிருகங்களை விட உயர்ந்தவன் உன்னதமானவன். இந்த உயர்ந்த உன்னதமான பண்புகள் அவனை ஒரு தனித்தன்மை வாய்ந்த படைப்பாக பரிணமிக்கச் செய்கின்றது. விஞ்ஞான அஞ்ஞானத்திற்கு வால் பிடிப்பவர்களால் கூட இதை மறுக்க இயலுவதில்லை. அவர்களும் வேறு வழியில்லாமல் இதை ஒத்துக் கொள்கின்றார்கள். இதில் இஸ்லாம் செய்த மகத்தான சேவையினால் மனித இனம் பயங்கரமானதோர் ஆபத்திலிருந்து விடுபட்டது. இஸ்லாம் கொண்டுவந்த தூய்மையான வாழ்க்கை நெறி மகா உன்னதமான மாற்றங்களையும் பலன்களையும் விளைவித்தது. இஸ்லாம் மனிதர்களை அவர்களுக்குள் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும் மிருக இயல்புகளைக் கொண்டு கட்டுப்படுத்தாமல் அவர்களை மனித மாண்புகளைக் கொண்டு இறுகப்பிணைத்தது. அவர்களின் பிணைப்புகளுக்கு இறைவனை நம்புவதை (ஈமானை) அடிப்படையாய் அமைத்துத்தந்தது. மனிதர்கள் தங்களுக்குள் பிணைப்புகளை ஏற்படுத்துவதைப் போல் பிளவுகளை வளர்த்திடும் கீழான அடிப்படைகளான குலம் கோத்திரம் நிறம் நிலம் மொழி தேசீயம் வட்டார பிராந்திய உணர்வுகள் இவற்றை கண்டித்து மறுத்தது எதிர்த்தது தடுத்தது. மனிதனுக்குள்ளிருக்கும் மிருகத்தன்மைகளை விடுத்து அவனுள் குடியிருக்கும் மனிதத்தன்மைகளைக் கூர்மைப்படுத்தியது இஸ்லாம். அவற்றை அனைத்தையும் விட மேலோங்கச் செய்தது. இதனால் விளைந்த மிகப் பெரிய பலன் என்னவெனில் இஸ்லாமிய சமுதாயம் எல்லா நிறங்களையும் எல்லாக் குலங்களையும் எல்லாக் கோத்திரங்களையும் எல்லா இனங்களையும் எல்லா தேசங்களையும் எல்லா மொழிகளையும் உள்ளடக்கியதோர் உலகமகா சமுதாயமாக ஆனது. மொழி, இனம், குலம், நிறம், தேசீயம் என்ற குறகிய வாதங்களுக்கு அப்பாற்சென்று மனிதர்களை மனிதர்களாக ஆக்கி ஒன்றிணைக்கும் ஒரே கொள்கையாக இஸ்லாமே நின்று நிலவுகின்றது. எல்லா நிறத்தவர்களுடைய திறமைகளும் எல்லா குலத்தவர்களுடைய திறமைகளும் எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராக இருந்தாலும் அவர்களுடைய திறமைகளும் அறிவுகளும் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய திறமைகளும் அறிவுகளும் வந்து சங்கமித்துச் சாதனை புரியும் மகா சமுததிரமாக இஸ்லாம் உருவாயிற்று. இதனால் மனித மாண்புகளில் உயர்ந்து நின்ற ஓர் ஒப்பற்ற சமுதாயமும் பாரோர் போற்றும் ஓர் இலட்சியக் குழுவும் பண்பாடும் கலாச்சாரமும் உருவாயிற்று. இந்த இலட்சிய சமுதாயம் மிகக் குறகியதொரு காலகட்டத்தில் வையமெல்லாம் விரிந்து பரவிற்று. மக்கள் தொடர்பு கருவிகள் எதுவுமில்லாத ஒரு காலத்தில் அது அகிலமெல்லாம் விரிந்து உயர்ந்தது. அதன் கொள்கை கார் உள்ளளவும் கதிர் உள்ளளவும் இந்தப் பார் உள்ளளவும் நிலைத்து நிற்கும் வன்மையும் திண்மையும் பெற்றது. இஸ்லாமிய சமுதாயம் என்ற இந்த மகாக் கடலில் அரபுக்கள்ஈ பாரசீகர்கள், சிரியா நாட்டைச் சார்ந்தவர்கள், எகிபது நாட்டைச் சார்ந்தவர்கள், மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர்கள், துருக்கியைச் சார்ந்தவர்கள், சீனா தேசத்தைச் சார்ந்தவர்கள், இந்தியாவைச் சார்ந்தவர்கள், ஆப்பிரிக்க நாட்டைச் சார்ந்தவர்கள், ரோமாபுரியைச் சார்ந்;தவர்கள், கிரேக்கத்து மக்கள், இந்தோனேசியாவினர் அத்தனைபேரும் ஒன்றாய்க் கலந்து ஓரினம் மனித இனம் (இஸ்லாமிய சமுதாயம்)என்றானார்கள். இந்த மக்கள் அனைவரும் ஒன்றாய் வாழ்ந்து அல்லாஹ் ஒருவனே இறைவன் என நம்பி கலந்து வாழ்ந்த பண்பாட்டின் பெயர் அரபு பண்பாடு என்பதல்ல, அல்லது அதற்கு அரபு நாகரிகம் என்றும் பெயரல்ல. இவர்கள் அனைவரும் இஸ்லாத்தின் வழிகாட்டுதலின் வழி வாழ்ந்ததால் அதற்குப் பெயர் இஸ்லாமியப் பண்பாடு அல்லாது இஸ்லாமியக் கலாச்சாரம் அது ஒரு தேசீயமல்ல இறை நம்பிக்கையாளர்களின் சமுதாயம். இந்த நம்பிக்கையை ஏற்றுக் கொண்டவுடன் அத்தனை தேசத்தவரும் அத்தனை இனத்தவரும் அத்தனை மொழியினரும் அத்தனை குலத்தவரும் அத்தனை நிறத்தவரும் எந்த ஏற்றத்தாழ்வுமின்றி சரிசமமாகி விட்டார்கள். அத்தனை பேருடைய சிந்தனையும் செயலும் ஒரே நிலையாய் நிலைத்தது. அது இந்த இறைவன் ஒருவனே என்ற நம்பிக்கை அந்த நம்பிக்கையின் வழி வாழ்வு. இவர்கள் அத்தனைபேரும் அதாவது அத்தனை நிறத்தவரும் மொழியினரும் தேசத்தவர்களும் தங்கள் திறமைகளையும் உழைப்பையும் அறிவையும் இந்த இறை நம்பிக்கையாளர்களின் சமுதாயம் பெருகவும் பரவவும் வாழவும் முழுமையாகப் பயன்படுத்தினார்கள். இந்தச் சமுதாயத்தில் அவர்கள் அனைவரும் உறுப்பினர்கள். எந்த உயர்வு தாழ்வும் இல்லாத சரிசமமான உறுப்பினர்கள். இத்தகையதொரு மனிதமகா சமுத்திரத்தை சமுதாயத்தை மனித வரலாறு எப்போதும் கண்டதில்லை. வரலாற்றின் முந்தைய காலக் கட்டங்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட இன்னும் சொல்வதானால் புகழப்பட்ட ஒரு சமுதாயம் ரோமர்களின் சமுதாயம். அதை ரோமர்களின் சமுதாயம் என்பதைவிட ரோமர்களின் சாம்ராஜ்யம் என்பதே பொருந்தும். இந்த ரோமர்களின் சாம்ராஜ்யத்தில் பல்வேறு இனத்தவர்களும் பல்வேறு மொழிகளைப் பேசுவோரும் ஒன்றாய்க்கலந்தனர். ஆனால் இந்தப் பல்வேறு மக்களின் உறவுகளை ஒழுங்குபடுத்தும் ஒரு நிறைவான கொள்கை அங்கே இருக்கவில்லை. அவர்களின் உறவுகள் மனிதப் பண்புகளின் மாட்சி என்ற அளவில் அமைந்திடவில்;லை. இன்னும் சொன்னால் மனித உறவுகளே அங்கே நிலைத்திடவில்லை. மாறாக அங்கே இருந்தது ஆண்டான அடிமை என்ற உறவே. ரோமர்கள் தாம் அங்கே பொதுவாக தலைமை வகித்தார்கள். ஏனைய எல்லா சமுதாயத்தவர்களும் அங்கே அவர்களுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்திட வேண்டும் என்றொரு நிலையையே பெற்றிருந்தார்கள். இதனால் இந்தச் சமுதாயம் இஸ்லாமிய சமுதாயத்தின் அளவுக்கு உயர முடியவில்;லை. அதே போல் இஸ்லாமிய சமுதாயம் அடைந்த சாதித்த உயர்ந்த சாதனைகளைச் சாதிக்கவோ அடையவோ இயலவில்லை. இன்றைய நாள்களிலும் பல்வேறு சமுதாயங்கள் தோன்றின. எடுத்துக்காட்டாக பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் என்ற ஆங்கிலேயர்களின் சாம்ராஜ்யத்தைப் பார்ப்போம். இது அன்றைய ரோம சாம்ராஜ்யத்தைப் போன்றது. இந்த ரோம சாம்ராஜ்யத்தின் வழி வந்தவர்கள் தாம் தாங்கள் எனச் சொல்லிட இவர்கள் தயங்குவதே இல்லை. இந்த ஆங்கிலேயர்களின் சாம்ராஜ்யம் பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் தேசீயப் பெருமை என்ற அடிப்படையில் எழுப்பப்பட்டது. இந்தப் பெருமையின் மமதையில் ஆங்கிலேயர்கள் ஆளுகின்றார்கள். பல்வேறு நாடுகளையும் தங்கள் காலனி என்ற அடிப்படையில் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்கள். இவர்கள் இந்த நாடுகளைச் சுரண்டி சுகம் காண்கின்றார்கள். ஐரோப்பிய் சாம்ராஜ்யம் எனப் பேசப்படுவதும் இதேபோல்தான். இன்னும் ஸ்பெயினின் பேராட்சி போர்த்துக்கீசியர்களின் பேரரசு என்பவையெல்லாம் தங்கள் ஆதிக்கம் நிலைக்க அண்டை நாடுகளைப் பயன்படுத்திக் கொண்டவைதான். இவை எதுவும் தங்களுக்குக் கீழிருந்த நாடுகளுக்கு எந்த உரிமையையும் வழங்கிடவில்லை. அங்கே சம உரிமை சரிசமமான கண்ணியம் என்பனவற்றிற்குப் பேச்சே இல்லை. இதேபோல் தான் பிரஞ்சுப் பேரரசும். இப்படி இந்தச் சமுதாயங்களெல்லாம் அடுத்து வந்தவர்களைக் கடித்துச் சாப்பிட்டவைதாம். சுரண்டலிலும் அடுத்துக் கெடுப்பதிலும் இவர்களின் சாதனையை விஞ்சுவாரில்லை. கம்ய10னிசமும் இனம் நிறம் நிலம் மொழி ஆகிய வேறுபாடுகளைக் களைந்து ஓர் சமுதாய அமைப்பை நிறுவிட விரும்பியது. ஆனால் அதுவும் மனித இனத்தை மனித இயல்புகள் மனிதப் பண்புகள் என்பனவற்றால் பிணைக்கவில்லை. மாறாக அது மனித இனத்தை வர்க்க பேதம் என்ற கோட்பாட்டால் பிளந்து போட்டது. இங்கே இந்தக் கம்ய10னிச சமுதாயம் வளரவும் காலூன்றவும் வர்க்க பேதம் அதாவது இருப்பவரை இல்லாதவர் வெறுக்க வேண்டும் என்பது அவசியமாயிற்று. மனித இனத்தை இருப்பவர் இல்லாதவர் என இரண்டாகப் பிளந்து இல்லாதவரை ஏவி இருப்பவர் மீது கோபமும் பொறாமையும் கொள்ளச் செய்ததுதான் கம்ய10னிச சமுதாயம் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இந்தச் சமுதாயங்கள் மனிதர்களின் கீழான மிருகக்குணங்களை இடறிவிட்டுத்தான் வாழவேண்டியதாயிற்று. இந்த மிருகக் குணங்களின் தன்மைகளான உணவு உறைவிடம் காமம் இவற்றையே இந்தக் கொள்கைகளைக் கொண்ட சமுதாயங்கள் பெரிதாகக் கருதின. இவற்றிற்கு அப்பாற் சென்று மனிதனுள் இருக்கும் புனிதமான பண்புகளையும் ஆன்மிக தெய்வீக குணாதிசயங்களையும் இவற்றால் பார்த்திட இயலவில்லை. இந்தக் கம்ய10னிச சமுதாயத்தின் பார்வையில் மனித வரலாறு என்பது சோற்றுக்குப் போடும் போராட்டத்தின் வரலாறேயல்லாமல் வேறொன்றுமில்லை. இஸ்லாம் மட்டுந்தான் மனிதனிடமுள்ள மனிதத்தன்மைகளை நல்ல ஒழுக்க மாண்புகளைத் தட்டிப் பேசிற்று. இந்த ஒழுக்க மாண்புகளைக் கொண்டு மனித இனத்தை உருப்படியான உருக்குலையாதோர் உன்னதமான சமுதாயமாகச் சமைத்திற்று. இன்றுவரை இஸ்லாம் மட்டுந்தான் இந்தத் தினத்தன்மையுடையதாக இருக்கின்றது. மனித இயல்புகளோடு முற்றிலும் பொருந்திப் போகும் இந்த இயற்கை வழியை இறைவழியை விட்டு விலகி வேற்று வழிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்பவர்கள் அதாவது தேசியம் பேசி மக்களிடையேயும் பல்வேறு தேசத்தவர்களிடையேயும் பேதங்களை ஊட்டி பகைமையை வளர்ப்பவர்கள், இனம், நிறம், மொழி இவற்றின் பெயரால் மக்களைப் பிரித்து பகை வளர்த்துச் சுகங்காண்பவர்கள். இருப்பவர் இல்லாதவர் என்று சமுதாயத்தைக் கூறுபோட்டுப் போராடிடச் செய்பவர்கள் இவர்களெல்லாம் மனித இனத்தின் எதிரிகள். இவர்கள் இறைவன் படைத்தவன் மனிதனுக்கு வழங்கி இருக்கும் மனத்தான பண்புகளின் வளர்ச்சியையும் மாட்சியையும் காண விரும்பாதவர்கள். இவர்கள் பல்வேறு இனத்தவரும் குலத்தவரும் மொழி பேசுவோரும் தேசத்தைச் சார்ந்தவர்களும் நிறத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாய் இணைந்து தங்கள் ஆற்றல்களையெல்லாம் ஒன்றாயச் சேர்த்து மானுடம் வாழ வகைசெய்வதைக் கண்டு மனம் பொறுக்காதவர்கள். இந்த மக்களைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகின்றான்.
(பாபமான)கருமத்தில் இவர்களை விட நஷ்டமடைந்தவர்களையும் நாம் உங்களுக்கு அறிவிக்கவா? என்று (நபியே)நீர் கேளும் அவர்கள் (யாரென்றால்)இவ்வுலக வாழ்க்கையில் தவறான வழியிலேயே முயற்சி செய்து கொண்டு தாங்கள் மெய்யாகவே நல்ல காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொள்வார்கள். இத்தகையோர்தாம் தங்கள் இறைவனின் வசனங்களையும் அவனைச் சந்திப்போம் என்பதையும் நிராகரித்து விட்டவர்கள். அவர்களுடைய செயல்கள் யாவும் அழிந்துவிட்டன. அவர்களுக்காக மறுமை நாளில் எடைக் கோலையும் நாம் நாட்ட மாட்டோம். அவர்கள் என்னுடைய வசனங்களையும் என்னுடைய தூதர்களையும் நிராகரித்து பரிகாசமாக எடுத்துக் கொண்டதன் காரணமாக நரகமே அவர்களின் கூலியாகும். (அல்குர்ஆன் 18 : 103 - 106)
ஆற்றல் மிக்க அல்லாஹ் உண்மையையே பேசுகின்றான்.
தொடர்ந்து வரும்..

Thanks Warmcall.blogspot.com
No comments:
Post a Comment