Apr 19, 2011

சொத்துரிமை சுதந்திரம் ( Freedom of Ownership)

இஸ்லாத்தை வீழ்த்த அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கைகள் என்ற ஆங்கில நூலிலிருந்து- பகுதி 08

சொத்துரிமை சுதந்திரம் ( Freedom of Ownership)

முதலாளித்துவ கோட்பாட்டின் அடிப்படையில் சொத்துரிமை சுதந்திரம் என்பது.ஒரு மனிதர் எந்தஒரு சொத்தையும எந்த வழியின் மூலமாகவும் அடைந்து கொண்டுஅதை எந்த வகையில் வேண்டுமானாலும் தன் விருப்பம் போல பயன்படுத்தஉரிமை உடையவர் என்பதாகும், இதில் ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால்முதலாளித்துவ கோட்பாடு கூறும் அடிப்படையில் மற்ற மனிதர்களின் உரிமையில்வரம்பு மீறக்கூடாது என்பதுதான், இந்த அடிப்படையில் அல்லாஹ்(சுபு)அனுமதித்து இருந்தாலும் அல்லது அனுமதிக்காவிட்டாலும் ஒரு மனிதன்எத்தகைய சொத்துக்களையும் அடைந்து கொள்ளலாம், மேலும் அல்லாஹ்(சுபு)அனுமதித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த சொத்துக்களை அவன் விருப்பப்படிபயன்படுத்தலாம்.

இந்த சுதந்திரத்தின் அடிப்படையில் ஒரு தனிநபர் எண்ணெய் வளம். கனிமவளம்ஆகிய பொது சொத்துக்களை அடைந்து கொள்ளலாம், இன்னும் கடற்கரைகள்.ஆறுகள். சமூகத்துக்கு அவசியமான நீர்வளங்கள் ஆகியவைகளையும்சொந்தமாக்கிக் கொள்ளலாம், மேலும் அல்லாஹ்(சுபு) அனுமதித்துள்ள குடியிருப்புவீடு. தோட்டம். வர்த்தக நிறுவனம். தொழிற்சாலை ஆகியவைகளையும்.அல்லாஹ்(சுபு) அனுமதி மறுத்துள்ள நாய்குட்டிகள். வட்டித் தொழில் செய்யும்வங்கிகள். பன்றி பண்ணைகள். விபச்சார விடுதிகள். ஆபாச நடன அரங்கங்கள்.நிர்வாண விடுதிகள். சூதாட்ட விடுதிகள். மதுபான விடுதிகள் ஆகியவைகளையும்வைத்துக் கொள்ளலாம், இன்னும் இதன் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவழிகளான வாரிசு உரிமை. அன்பளிப்பு. வியாபாரம். விவசாயம். வேட்டையாடுதல்மற்றும் பொருள் உற்பத்தி ஆகிய வழிகள் மூலமாக பணம் சம்பாதிக்கலாம், முதலீடுசெய்யலாம்.

அதே சமயத்தில் தடுக்கப்பட்ட வழிகளான சூதாட்டம். வட்டித் தொழில்.மதுபான விற்பனை. போதை பொருள் விற்பனை இன்னும் இதுபோன்ற எண்ணற்றவழிகள் மூலமாகவும் பணம் சம்பாதிக்கலாம், முதலீடு செய்யலாம்,இத்தகைய சுதந்திரம் முற்றாக இஸ்லாத்திற்கு முரண்படுவதால் இதைஏற்றுக்கொள்வதை இஸ்லாம் தடை செய்கிறது, இந்த சொத்துரிமை சுதந்திரத்தைஏற்றுக் கொண்டதின் மூலம் முதலாளித்துவ நாட்டுமக்கள் பல்வேறு நோய்களுக்குஆளாகியிருக் கிறார்கள், ஒழுக்கக்கேடு. திட்டமிட்ட குற்றங்கள். சுயநலம். அடுத்தவர்கஷ்டத்தில் தனது இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வேட்கை ஆகியவைகள்நிறைவு பெற்ற சம்பிரதாயங்களின் வடிவமாக ஆகிவிட்டன, கொடிய நோய்கள்கடுங்குற்றங்கள். சமூக கட்டமைப்பான குடும்ப வாழ்க்கை சீர்கேடுகள். தொற்றுநோய்போல பரவும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவை மிகுதமாக மிகைத்து விட்டன,இதன் விளைவாக மக்களுக்கு நன்மையானதோ அல்லது போதை பொருள் போன்றதீமையானதோ அதன் விற்பனைகள் ஊக்குவிக்கப்படுகின்றன, இத்தகையசுதந்திரங்களின் விளைவாக தொழில் அதிபர்கள் என்று அழைக்கப்படுகின்ற சிறுஎண்ணிக்கையினர் வசம் சொத்துக்கள் குவிகின்றன, இப்பெரும் செல்வத்தினால்ஏற்பட்ட செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகள்செயல்பாட்டிலும் சமூக விவகாரங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் இவர்கள்ஆதிக்கம் செலுத்துகின்றார்கள், முதலாளித்துவ ஆட்சி அமைப்பு என்ற பெயர் இதற்கு பொறுத்த மானதுதான், அதன் முக்கியமான அம்சத்தின் விளக்கவெளிப்பாடாகவே இந்த பெயர் அமைந்துள்ளது, இந்த வியாபாரிகளாகவும் இருந்துகொண்டு தங்கள் நாட்டு அரசையும் உலக நாடுகளின் அரசுகளையும் தூண்டிவிட்டுயுத்த முஸ்தீபுகளை தோற்றுவிக்கிறார்கள், இத்தகைய யுத்தங்களால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் இல்லை, ஆனால் இவர்களுக்கு தங்கள் லாபம்ஒன்றே குறிக்கோளாக உள்ளது, இவர்களின் ஆயுத வியாபாரம் மூலம் ரத்தம்சிந்தப்படுவது குறித்தோ உள்ளது, இவர்களின் தங்கள் லாபம் ஒன்றே குறிக்கோளாகஉள்ளது, இவர்களின் ஆயுத வியாபாரம் மூலம் ரத்தம் சிந்தப்படுவது குறித்தோஅதனால் விளையும் கொரும் துயரங்கள் குறித்தோ இவர்களுக்கு எந்த கவலையும்கிடையாது.

Sources From Warmcall.blogspot.com

No comments:

Post a Comment