May 15, 2011

இறை நம்பிக்கை கொள்வதற்கு இஸ்லாம் காட்டும் வழிமுறை:..இறுதிப் பகுதி!

இறைதூதர்கள் தேவை என்பதற்கான ஆதாரத்தை பார்ப்போமானால், மனிதன் அல்லாஹ்(சுபு)வினால்தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதையும், சன்மார்க்க உள்உணர்வு அல்லது பக்தி உள்உணர்வு (ஆன்மீக உள்ளுணர்வு )(Instinct of Religiousness) என்பது மனிதனின் இயற்கை தன்மையான உள்ளார்ந்த உணர்வுகளில் (Human Insticts) ஒன்றாக இருக்கிறது என்பதும் முன்பே நிரூபனமாகி விட்டது. ஆகவே இது மனிதனுடைய படைப்பாளனான அல்லாஹ்(சுபு)வை புனிதப்படுத்த அவனை து}ண்டுகிறது எனலாம் இதனால் அவன் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறான். இந்த வணக்க வழிபாடுதான் படைப்பாளனான அல்லாஹ்(சுபு)வுக்கும், மனிதனுக்கும் இடையிலுள்ள தொடர்பாக (Relation) இருக்கிறது. இந்த தொடர்பு சரியான வகையில் வழிநடத்தப்படாவிடில் குழப்பம் ஏற்பட்டு படைப்பாளனை விட்டுவிட்டு வேறு ஒன்றை வணங்கும் நிலைக்கு (வழிகேட்டின்பால்) மனிதனை இட்டுச் சென்றுவிடும். ஆகவே சரியான ஒரு வழிமுறையைக் கொண்டு இந்த உள்உணர்வு ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும். இத்தகைய வழிமுறை (System) மனிதனிடமிருந்து வர முடியாது. ஏனெனில், படைப்பாளனான அல்லாஹ்(சுபு)வின் எதார்த்த நிலையை அறிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனிடம் இல்லை. இதனால் படைப்பாளனுக்கும், மனிதனுக்கும் இடையில் உள்ள தொடர்பை மனித வழிமுறையைக் கொண்டு நிலை நிறுத்த இயலாது. ஆகவே நிச்சயமாக இதற்குரிய வழிமுறை (System) படைப்பாளனிடமிருந்துதான் வந்தாக வேண்டும். படைப்பாளனான அல்லாஹ்(சுபு) இந்த வழிமுறையை மனிதனிடம் எத்தி வைக்க வேண்டியதாயிருப்பதால் அவனுடைய (சுபு) மார்க்கத்தை (Deen of Allah) மனிதர்களிடம் எடுத்துச் செல்ல ஒரு து}தர் நிச்சயம் வேண்டியிருக்கிறது. இறைது}தர்களுக்கு ஆதாரமாக மேற்கூறிய விஷயங்கள் இருக்கின்றன.

மனிதன் தன் உள்ளார்ந்த உணர்வுகளையும் (Instincts) இயற்கை தேவைகளையும் நிறைவு செய்து கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கும் நிலை, மனிதர்களுக்கு வழிகாட்டுவதற்கு இறைது}தர்கள் நிச்சயம் அவசியம் என்பதற்கு கூடுதலான ஆதாரமாக இருக்கிறது. சரியான வழிமுறையின்படி இந்த நிறைவு செய்யும் செயல் வழிகாட்டப்படாவிடில் தவறான வழியிலும் இயல்புக்கு புறம்பான வழியிலும் இவை நிறைவு செய்யப்பட்டு மனிதனை பெரும் துன்பத்தில் வீழ்த்திவிடும். ஆகவே, மனிதனின் உள்ளார்ந்த உணர்வுகளையும் இயற்கை தேவைகளையும் (Organic Needs) நிறைவு கொள்வதற்கு சரியான வழிமுறை தேவைப்படுகிறது. இந்த வழிமுறை மனிதனிடமிருந்து வர இயலாது. ஏனெனில் மனிதன் வாழும் சூழலின் ஆதிக்கத்தினால் நிறைவு செய்யும் செயலின் வழிமுறைகளை அவன் புரிந்து கொள்வதில் பாகுபாடுகளும், வேறுபாடுகளும் முரண்பாடுகளும் இயல்பாக ஏற்பட்டுவிடும். எனவே ஒழுங்குபடுத்தும் காரியத்தை மனிதனிடம் ஒப்படைத்தால் அவனிடமிருந்து கிடைக்கும் வழிமுறை பாகுபாடுகளும், வேறுபாடுகளும், முரண்பாடுகளும் நிறைந்ததாக ஆகிவிடும். இதனால் மனிதன் பெரும் துயரங்களுக்கு ஆளாகிவிடுவான். ஆகவே இந்த வழிமுறை (முறைமை) (System) அல்லாஹ்(சுபு)விடமிருந்து மட்டுமே வர வேண்டும்.

இறைவேதமான குர்ஆன் அல்லாஹ்(சுபு)வினால்தான் அருளப்பட்டது என்பதற்கு ஆதாரமாக முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த வேத நு}லான குர்ஆன் அரபி மொழியில் உள்ளது என்பது அனைவராலும் அறியப்பட்ட ஒன்று. ஆகவே இந்த வேதநு}ல் முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்தோ, அல்லது அரபு மக்களிடமிருந்தோ அல்லது அல்லாஹ்(சுபு)விடமிருந்தோ வந்திருக்க வேண்டும். இந்த மூன்று மூலங்களைத் தவிர வேறு எந்த வழியிலும் அது வந்திருக்க முடியாது. காரணம் அது அரபி மொழியிலும் அசலாக அதன் பாங்கிலும் (Styles) உள்ளது.

அரபு மக்களிடமிருந்து அது வந்திருக்கக் கூடும் என்பது முற்றிலும் தவறானதாகும். ஏனெனில் திருமறை குர்ஆன் அதுபோன்ற ஒன்றை கொண்டு வருமாறு அரபு மக்களுக்கு அறைக்கூவல் விடுக்கிறது.

கூறுவீராக! இதுபோன்ற பத்து வசனங்களை யாராவது நீங்கள் கொண்டு வாருங்கள். (குர்ஆன் 11:13)

கூறுவீராக! இதுபோன்ற ஒரு வசனத்தையேனும் நீங்கள் கொண்டு வாருங்கள். (குர்ஆன் 10:38)



அரபு மக்கள் குர்ஆன் வசனம் போன்ற ஒன்றை கொண்டு வருவதற்கு முயற்சி செய்தும், அவர்களால் அதைக் கொண்டு வர முடியவில்லை. ஆகவே திருமறை குர்ஆன் அரபிகளிடமிருந்து வந்திருக்க முடியாது. ஏனெனில், அது அவர்களுக்கு அறைகூவல் விடுத்தும், அதை போன்ற ஒன்றை கொண்டு வர அவர்கள் முயற்சி செய்தும், அதைப் போன்ற ஒன்றை அவர்களால் கொண்டு வர இயலவில்லை. திருமறை குர்ஆன் முஹம்மது(ஸல்) அவர்களிடமிருந்து வந்திருக்கக் கூடும் என்பதும் தவறானதாகும். ஏனெனில் அவரும் அரபு சமூகத்தின் உறுப்பினர்தான். அவருடைய அறிவாற்றல் எவ்வளவுதான் உச்சத்தில் இருந்தாலும் அவர் மானிட இனத்தைச் சார்ந்தவராகவும், அரபு சமுதாயத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். அரபு மக்கள் குர்ஆன் வசனத்தைப் போன்ற ஒன்றை கொண்டு வர இயலாதவர்களாக இருந்த காரணத்தினால் இந்த கூற்று பொருத்தமற்றதாகும். மேலும் முஹம்மது(ஸல்) அவர்களுடைய (பேச்சான) ஸஹீ ஹதீஸ்களும், முத்தவாத்திர் ஹதீஸ்களும் இருக்கின்றன. இவைகளின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. இந்த ஹதீஸ்களில் எந்த ஒன்றையும் திருமறை குர்ஆன் வசனம் ஒன்றோடு ஒப்பிட்டுப் பார்ப்போமானால் அவைகளுக்கிடையிலுள்ள நடையில் (ளுவலடந) எந்த ஒற்றுமையையும் காண முடியாது. முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனால் அருளப்பட்ட (இறை) வசனங்களையும், ஹதீஸ்களையும் ஒரே நேரத்தில் கூறுவார். எனினும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ள நடையில் அல்லது பாணியில் பெரும் வேறுபாடு இருந்தது. எவரேனும் தன்னுடைய பேச்சை வேறுபடுத்தி காட்ட முற்படும்போதும் கூட, அவரின் மொழிநடை ஒரே மாதிரியாகவேயே இருக்கும். ஏனென்றால் அது அவரில் ஒரு பகுதியாகும். ஹதீஸ்களுக்கும், குர்ஆன் வசனங்களுக்கும் அதன் பாங்கில் எந்தவித ஒற்றுமையும் இல்லாத காரணத்தினால் திருமறை குர்ஆன் நிச்சயமாக முஹம்மது(ஸல்) அவர்களுடைய பேச்சாக இருக்க முடியாது. மேலும் அரபு சமுதாயத்தைச் சார்ந்த அரபு மொழியில் புலமையுள்ள எந்த மனிதரும் திருமறை குர்ஆனை, முஹம்மது(ஸல்) அவர்களின் பேச்சு என்றோ அல்லது அவரது (ஸல்) பேச்சை ஒத்து இருக்கிறது என்றோ குற்றம் சாட்டவில்லை. ஜப்ர் என்ற கிருஸ்தவ இளைஞனிடமிருந்து முஹம்மது(ஸல்) அவர்கள் அதைக் கற்றுக் கொண்டு வந்தார் என்ற ஒரே குற்றச்சாட்டை மட்டும் அரபு மக்கள் கூறி வந்தார்கள். அவர்களுடைய குற்றச்சாட்டை அல்லாஹ்(சுபு) மறுத்துக் கூறுகின்றான்.

அவருக்கு கற்றுக் கொடுப்பதெல்லாம் ஒரு மனிதர்தான் என்று அவர்கள் கூறுவதையும் நிச்சயமாக நாம் அறிவோம். எவரோடு இணைத்துக் கூறுகிறார்களோ அவருடைய மொழி அரபி அல்லாத மொழியாகும். ஆனால் இவ்வேதமோ மிக தெளிவான அரபி மொழியில் உள்ளதாகும். (குர்ஆன் 16:103)

திருமறை குர்ஆன் அரபு மக்களின் பேச்சாகவும் இல்லை, முஹம்மது(ஸல்) அவர்களுடைய பேச்சாகவும் இல்லை என்று தெளிவாக நிரூபிக்கப்பட்டு விட்டதால், நிச்சயமாக அது அல்லாஹ்(சுபு)வின் பேச்சாக மட்டுமே இருக்க முடியும். மேலும் அது அதைக் கொண்டு வந்தவருக்கான அற்புதமாகும்.

முஹம்மது(ஸல்) அவர்களுக்கு திருமறை குர்ஆன் அருளப்பட்டிருப்பதாலும் அது அல்லாஹ்(சுபு)வின் வார்த்தையாக, இறை சட்டங்களாக இருப்பதாலும், அல்லாஹ்(சுபு)வின் து}தர்களையும், தீர்க்க தரிசிகளையும் தவிர வேறு எவரும் அல்லாஹ்(சுபு)வின் ஷரிஆவை கொண்டு வர முடியாது என்ற காரணத்தாலும் இந்த அறிவார்ந்த ஆதாரங்களின் அடிப்படையில் முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்(சுபு)வின் து}தராகவும் (Razool-Messenger) தீர்க்கதரிசியாகவும் (Prophet - Nabee) இருக்கிறார் என்பது இங்கு தெளிவாக நிரூபனம் ஆகிறது.

(இந்த ஆதாரம்) அல்லாஹ்(சுபு) மீதும், முஹம்மது(ஸல்) அவர்கள் கொண்டு வந்த செய்தி (Message) மீதும், திருமறை குர்ஆன் அல்லாஹ்(சுபு)வின் வார்த்தை (Speech of Allah) என்பதன் மீதும், ஈமான் கொள்வதற்கு (மனிதர்களுக்கு) அறிவார்ந்த ஆதாரமாக இருக்கின்றன.
ஆகையால் அல்லாஹ்(சுபு)வின் மீதுள்ள ஈமான் அறிவார்ந்த வழியின் மூலம் ஏற்பட வேண்டும். மேலும் அந்த ஈமான் அறிவார்ந்த வழியில் மட்டுமே இருக்க வேண்டும். நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டவைகள் மீதும், அல்லாஹ்(சுபு) அறிவித்துக் கொடுத்தவைகள் மீதும் நாம் ஈமான் கொள்வது இந்த அடிப்படையின் மீதுதான் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் அல்லாஹ்(சுபு) மீது ஈமான் கொள்கிறோம். அவனுடைய(சுபு) தெய்வீக பண்புகள் மீதும் நாம் ஈமான் கொள்கிறோம். அவன்(சுபு) நமக்கு அறிவித்துக் கொடுத்தவைகளை நாம் கண்டிப்பாக நம்ப வேண்டும். அவை நமது அறிவாற்றலுக்கு உட்பட்டவையாக இருந்தாலும் அல்லது நமது அறிவாற்றலுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும் சரியே. ஏனெனில் அவற்றை அல்லாஹ்(சுபு) நமக்கு அறிவித்துள்ளான். உயிர்த்தெழும் நாள், சுவனம், நரகம், கேள்வி கணக்கு, தண்டனை, மலக்குகள், ஜின்கள், ஷைத்தான்கள் ஆகியவற்றின் மீதும் திருமறை குர்ஆன் மற்றும் முத்தவாத்திர் ஹதீஸ் ஆகிய இரண்டும் குறிப்பிட்டுள்ளவற்றின் அனைத்தின் மீதும் நாம் ஈமான் கொள்ள வேண்டும். இந்த ஈமான் வார்த்தை மற்றும் எழுத்து மூலமாக வந்தாலும் அது அறிவுப்ப10ர்வமானதுதான். ஏனெனில் அவைகளின் மூலங்கள் அறிவினால் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே முஸ்லிம்களின் அகீதா பகுத்தறிவு சார்ந்ததாக இருக்க வேண்டும் அல்லது அதன் மூல ஆதாரம் பகுத்தறிவு ரீதியில் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு, அறிவார்ந்த அடிப்படையில் அறிவு ரீதியாக நிரூபிக்கப்பட்ட விஷயங்கள் அல்லது நிச்சயமாகவும் நம்பகத்தன்மையுடனும் கூடிய திருமறை குர்ஆன் மற்றும் முத்தவாத்திர் ஹதீஸ் ஆகியவற்றின் மூலம் நிரூபிக்கப்பட்ட விஷயங்கள் ஆகியவை மீது மட்டும்தான் முஸ்லிம்கள் ஈமான் கொள்ள வேண்டும். அறிவார்ந்த ரீதியில் நிரூபிக்கப்பட்டவை மற்றும் குர்ஆன், முத்தவாத்திர் ஹதீஸ் இந்த இரண்டு வகையில் நிரூபிக்கப்பட்ட விஷயங்களைத் தவிர மற்றவற்றின் மீது நம்பிக்கை கொள்வதிலிருந்து முஸ்லிம்கள் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் மிகமிக உறுதியான முறையில் அல்லாமல் அகீதா அமைக்கப்பட மாட்டாது.

ஆகவே, இந்த உலக வாழ்க்கைக்கு முன்னதாக அல்லாஹ்(சுபு) இருக்கின்றான் என்பதிலும், உலக வாழ்க்கைக்கு பின்பு நியாயத்தீர்ப்பு நாள் உள்ளது என்பதிலும் நாம் ஈமான் கொள்ள வேண்டும். இந்த உலக வாழ்க்கைக்கும் அதற்கு முன்பு உள்ள நிலைக்கும் இடையிலுள்ள தொடர்பையும், இந்த உலகத்திலுள்ள படைப்பினங்களுக்கு இடையிலுள்ள தொடர்பையும் உள்ளடக்கியதுதான் அல்லாஹ்(சுபு)வின் கட்டளைகள் (commands of Allah) என்பதாலும், இந்த உலக வாழ்க்கையில் ஒருவர் செய்யும் செயலுக்கும் மறுமை நாளுக்கும் இடையிலுள்ள தொடர்பு கேள்வி கணக்காக இருப்பதாலும், இந்த உலக வாழ்க்கைக்கும் இதற்கு முன்பாக இருப்பதற்கும் (அல்லாஹ் சுபு) அதற்கு பின்பாக இருப்பதற்கும் (மறுமை நாள்) நிச்சயமாக ஒரு தொடர்பு இருந்தாக வேண்டும். மேலும் இந்த தொடர்பு மனிதனுடைய உலக வாழ்க்கையை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. வேறு வகையில் கூறுவதென்றால், இந்த உலக வாழ்க்கையில் மனிதன் அல்லாஹ்(சுபு)வின் வழிமுறை (system) படிதான் இயங்க வேண்டும். இன்னும் நியாயத்தீர்ப்பு நாளன்று அல்லாஹ்(சுபு) மனிதர்களின் செயல்களுக்கு கேள்வி கணக்கு கேட்பான் என்பதையும் நம்ப வேண்டும்.

இந்த விரிவான விவாதத்தின் வாயிலாக மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவை பற்றியும், இந்த உலக வாழ்க்கைக்கு முன்பு உள்ளது (என்ன?) இந்த உலக வாழ்க்கைக்கு பின்பு உள்ளது (என்ன?) மேலும் வாழ்க்கைக்கு முன், பின் உள்ள நிலைகளுடன் இவ்வாழ்க்கைக்கான தொடர்பு என்ன? என்பதைப் பற்றியும் ஒரு ஞானமிக்க பிரகாசமான சிந்தனை (Enlightened Thought) நிறுவப்பட்டுவிட்டது. இவ்வாறாக, இஸ்லாமிய அகீதாவின் (Islamic Aqeedah) மூலம் மிகப்பெரிய பிரச்சினைக்கு முழுமையான தீர்வு எட்டப்பட்டுவிட்டது.இந்த தீர்வை எட்டிவிட்ட நிலையில் இப்போது மனிதன் அவன் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையின்பாலும் அதைப் பற்றிய உறுதியான மற்றும் ஆக்கப்ப10ர்வமான கருத்தின்பாலும் கவனம் செலுத்த முடியும். அவனுடைய வாழ்க்கையில் மறுமலர்ச்சியை கொண்டு வரக்கூடிய சித்தாந்தத்தின் அடித்தளமாக (Foundation of Ideology) இந்த தீர்வு விளங்குகிறது. இந்த சித்தாந்தத்திலிருந்து பிறக்கும் கலாச்சாரத்திற்கும் இதுவே அடித்தளமாக விளங்குகிறது. இன்னும் அனைத்து வழிமுறைக்கும் இஸ்லாமிய ஆட்சி அமைப்புக்கும் (system) இதுதான் அடித்தளமாக இருக்கிறது. இவ்வாறு சிந்தனை மற்றும் வழிமுறையை (fikrah and tareeqah) உள்ளடக்கிய இஸ்லாமிய அகீதாவின் அடித்தளத்தின் மீதுதான் இஸ்லாமிய மார்க்கம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய து}தரையும் அவன் தன்னுடைய து}தர் மீது இறக்கி வைத்த இவ்வேதத்தையும் முன்னர் அவன் இறக்கி வைத்த வேதங்களையும் ஈமான் கொள்ளுங்கள். இன்னும் எவர் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய து}தர்களையும் இறுதி நாளையும் நிராகரிக்கின்றாரோ நிச்சயமாக அவர் மிக து}ரமான வழிகேட்டில் வழிகெட்டுவிட்டார். (குர்ஆன் 4:136)

இந்த உண்மை இவ்வாறு நிரூபனம் ஆகிவிட்ட நிலையில், இதன் மீது நம்பிக்கை கொள்வது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டதால் ஒவ்வொரு முஸ்லிமும் முழு இஸ்லாமிய ஷரிஆவின் மீது நம்பிக்கை கொள்வது கட்டாய கடமையாகி விடுகிறது. ஏனெனில் இந்த விஷயம் மகத்துவமிக்க திருமறை குர்ஆனில் கூறப்பட்டிருக்கிறது. மேலும் இறைது}தர்(ஸல்) அவர்கள் இதனை நமக்கு எத்தி வைத்துள்ளார்கள். இதை நம்ப மறுப்பவர் காஃபிர் ஆவார். ஆகவே முழு அஹ்காம் ஷரிஆவையோ (Ahkam Sharia’h) அல்லது அதனுடைய உறுதியாக விளக்கப்பட்ட கட்டளைகளையோ மறுப்பது என்பது குஃப்ர் ஆகும். வணக்க வழிபாடு (Ibaadat) , கொடுக்கல் வாங்கல் (Muamalat) தண்டனை (Uqoobaat) உணவுகள் ஆகிய எந்த விஷயமானாலும் இதே நிபந்தனைதான் இருந்துவரும். எனவே இந்த வசனத்தை நிராகரிப்பது.

மேலும் நீங்கள் தொழுகையை நிறைவேற்றுங்கள் (குர்ஆன் 2:43) இந்த வசனத்தை நிராகரிப்பதற்கு சமமாகும்.

அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியை தடுத்து விட்டான் (குர்ஆன் 2:275)

மேலும் பின்வரும் வசனங்களை நிராகரிப்பதற்கும் சமமாகும்.திருடனோ, திருடியோ அவ்விருவரின் கைகளை துண்டித்து விடுங்கள். (குர்ஆன் 5:38)

இறந்தவைகளும், இரத்தமும், பன்றியின் இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட வில்லையோ அவைகளும் உங்கள் மீது (உண்ணுவதற்கு) தடுக்கப்பட்டுள்ளன. (குர்ஆன் 5:3)
ஷரிஆவின் மீதான ஈமான் அறிவு சார்ந்தது அல்ல, மாறாக அல்லாஹ்(சுபு)விடமிருந்து அருளப்பட்ட அனைத்திற்கும் கட்டாயமாக ஒருவன் முழுமையாக சரணடைவது ஆகும்.

உமது இரட்சகன் மீது சத்தியமாக அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக்கி நீர் செய்யும் தீர்ப்பை தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியையும் பெறாமல் முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில் அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆக மாட்டார்கள். (குர்ஆன் 4:65)

warmcall.blogspot.com

No comments:

Post a Comment