Jun 12, 2011

இம்மை மற்றும் மறுமையின் வெற்றி படிகட்டுகள்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்


உலக வாழ்வில் உங்களுக்கு அமைதியும் நிம்மதியும் வேண்டுமா ?

உங்கள் வாழ்வியல் சிக்கல்கள் அனைத்துக்கும் நீதியின் அடிப்படையில் தீர்வுகள் வேண்டுமா?

இம்மையை துறக்காதே, மறுமையை மறக்காதே எனும் அடிப்படையில் உலகியலோடு ஆன்மிகமும் இணைக்கப்பட்ட ஒரு சமநிலை வாழ்வியல் நெறி வேண்டுமா?

உலக வெற்றிக்கு உறுதியளிக்கும் அதே சமயம் மறுமையின் ஈடேற்றத்திற்கும் உத்தரவாதம் தரும் வாழ்க்கை முறை வேண்டுமா?

அப்படியானால் உங்களுக்காக உங்களின் ஈடேற்றத்திற்க்காக உங்களிடம் அனுப்பப்பட்ட இறுதித்தூதரை ஏற்று அவரின் வழிமுறையை பின்பற்றுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் இதோ திருமறை குர்ஆன் கூறுகிறது பாருங்கள்.

‘’ இவர் (இந்த தூதர்)நன்மை செய்யுமாறு மக்களை ஏவுகிறார். தீமைகளிலிருந்து அவர்களை தடுக்கிறார். அவர்களுக்கு தூய்மையானவற்றை அனுமதிக்கிறார். தூய்மையல்லாதவற்றைத் தடை செய்கிறார். மேலும் அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகிறார். அவர்களைப் பினைத்திருந்த விலங்குகளை உடைத்தெறிகிறார் எனவே எவர்கள் இந்த நபி மீது நம்பிக்கை கொண்டு, இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் அருளப்பட்ட ஒளியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்.’’(அல் குர்ஆன் 7: 157)

ஹராமை தடைசெய்வதும் மற்றும் ஹலாலை அனுமதிப்பதும் அதிகாரம் மூலம் செய்வதே. ஹராமை அதிகாரம் இல்லாமல் தடுக்க முடியாது. மேற்க்கண்ட வசனம் அதிகாரத்தை குறிக்கக்கூடியதாகவும் உள்ளது.

Sources from quraanisfinalrevolution.blogspot.com

No comments:

Post a Comment