Jun 4, 2011

ஷிர்க்


ஷிர்க் எனப்படுவது பகிர்ந்து கொள்ளுதல், இணைந்து கொள்ளுதல் அல்லது கூட்டமைத்தல் என்று அர்த்தப்படும். இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஷிர்க் என்றால் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் செயல் ஆகும். ஷிர்க்கை மன்னிக்க முடியா பெரும் பாவம் என்று அல்லாஹ் கீழ்வரும் திருமறை வசனத்தில் கூறுகிறான் :
"அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுக்கு எதையும் இணை வைக்காதீர்கள்” (திருக்குர் ஆன் 4 :36)

“”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்க மாட்டான். இதை தவிர மற்றதை தான் நாடியவர்களுக்கு மன்னிக்கிறான். யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக பெரும் பாவத்தையே கறபனை செய்கிறார்கள்” (திருக்குர்ஆன் 4 :48)

ஷிர்க்கின் வகைகள்

ஷிர்க் அர்ருபூபியா – அல்லாஹ்வின் ஆளுமையில் செய்யப்படும் இணைவைப்பு

ஷிர்க் அல் அஸ்மாஃவஸ்ஸிஃபாத் – அல்லாஹ்வின் குணங்கள் மற்றும் தன்மைகளில் செய்யப்படும் இணைவைப்பு

ஷிர்க் அல் இபாதா – அல்லாஹ்வுக்கு உரித்தான வணக்க வழிபாடுகளில் செய்யப்படும் இணைவைப்பு

sources from islamiyakolgai.blogspot.com

No comments:

Post a Comment