அல்லாஹவின் தூதரின் (ஸல்) மிக முக்கியமான அரசியல் நகர்வுகளில் ஒன்றுதான் தாயிப்
சம்பவமாகும். இந்த நிகழ்வு கூட முஸ்லீம் உம்மாவின் கருத்தறையில் வெறும் சோகத்துடன்
கூடிய வரலாற்று நிகழ்வாகவே பதியப்பட்டுள்ளத ு. இஸ்லாத்தை ஒரு நடைமுறை செயல் நிலமாக்க வேண்டி (நுஸ்ரா) உதவி தேடிய ஒரு சித்தாந்த மயமாக்களுக்கான பயணமே இந்த
தாய்ப் சம்பவமாகும்.
மக்காவில் அல்லாஹவின் தூதரும் (ஸல்) அவரை சார்ந்திருந்த மிகச் சிறுபான்மையான அந்த
பலவீனமான இலட்சியக் கூட்டமும் குப்ரியத்தின் மிகக் கொடூரமான வன்முறைத் தாக்குதல்
களுக்கு முகம் கொடுத்த தொடரில் தாய்பின் குப்ரியத் தரப்பின் ஏளனம் , நக்கல் , நையாண்டி
புறக்கணிப்பு , அவமதிப்பு , இறுதியான கல்லெறித் தாக்குதல் என்பன ஒப்பீட்டளவில் இரு
வேறு பட்ட நிலைகள் அல்ல.
குப்ரியத்தின் மேலாதிக்கம் சமூக வாழ்வியலில் எல்லாத் துறைகளிலும் மேலோங்கி நின்ற அந்தப் பொழுதுகளில் ஏதோ ஒரு மாற்றுத் தெரிவாக இஸ்லாத்தை அல்லாஹவின் தூதர்
(ஸல்) முன்வைத்து பேசவில்லை. ஒரு தலைகீழ் மாற்றம் பற்றிய உதவி தேடலே அவரின்
இலக்காக இருந்தது. அதன் பிரதி விளைவே தாயிப் சம்பவமாகும்.
அந்த குப்ரிய கூட்டம் சிலைகளின் மீதான கடவுள் நம்பிக்கையை கொண்டிருந்தாலும ் யூத,
கிறிஸ்தவ , மத நிலைப்பாடுகளை புரிந்தவர்களாகவ ும் அவைகள் சார் சமூகங்களின்
கூட்டு வாழ்வையும் தமக்கு மத்தியில் அனுமதித்தவர்களா கவும் இருந்தார்கள் என்பது அப்பட்டமான உண்மை. இது ஏன் என்றால் அந்த மதங்கள் வாழ்வியலை தீர்மானிக்கும் , தரத்தில் இருந்து ஒதுங்கி நின்று தமக்கான ஒரு இனக்குழு வடிவத்தை கட்டமைப்பதோடு
தம்மை தக்க வைத்தன. பாவம் , தீமை , அநீதி, போன்ற நிகழ்வுகளில் இந்த மதம் சார்
மனிதர்களும் பங்காளிகளாக அந்தக் குட்டையில் ஊறிய மட்டைகளாகவே காணப் பட்டார்கள்.
இப்படி அகம்பாவம் , தான் தோன்றித்தனம், சுயநலம் , என்பன சிந்தனா வாதமாகி உலகை ஆட்டிய போதுதான் இஸ்லாம் தனது ஒட்டு மொத்த மாற்றம் வேண்டிய தீர்வோடு வந்தது.
அல்லாஹவின் தூதரின் (ஸல்) (நுஸ்ரா) உதவி தேடல் குப்ரிய சிந்தனா வாதத்தில் ஊறிய
சமூகத் தளமைகளை இலக்கு வைப்பதாகவே ஆரம்பம் தொட்டு அமைந்திருந்தது. அந்த தளமைகளின் மாற்றம் இஸ்லாம் தடையின்றி பிரயோகிக்க வசதியாக ஒரு செயல் நிலத்தையும்
ஒரு மனிதக் கூட்டத்தையும் அமைத்துத் தரும் என்ற ஒரு தெளிவான எதிர் பார்ப்பே. அந்த வகையில் தாயிப் சம்பவம் வரலாற்று தெளிவோடு சற்று ஆழமாக அலசப் பட வேண்டியது.
எனவே தாய்ப் நிகழ்வையும் அதன் மூலம் எமக்கு கிடைக்கும் படிப்பினைகள் தொடர்பாகவும்
இன்ஷா அல்லாஹ் மறுமுறை எழுதுகிறேன். (தொடரும்)
சம்பவமாகும். இந்த நிகழ்வு கூட முஸ்லீம் உம்மாவின் கருத்தறையில் வெறும் சோகத்துடன்
கூடிய வரலாற்று நிகழ்வாகவே பதியப்பட்டுள்ளத
தாய்ப் சம்பவமாகும்.
மக்காவில் அல்லாஹவின் தூதரும் (ஸல்) அவரை சார்ந்திருந்த மிகச் சிறுபான்மையான அந்த
பலவீனமான இலட்சியக் கூட்டமும் குப்ரியத்தின் மிகக் கொடூரமான வன்முறைத் தாக்குதல்
களுக்கு முகம் கொடுத்த தொடரில் தாய்பின் குப்ரியத் தரப்பின் ஏளனம் , நக்கல் , நையாண்டி
புறக்கணிப்பு , அவமதிப்பு , இறுதியான கல்லெறித் தாக்குதல் என்பன ஒப்பீட்டளவில் இரு
வேறு பட்ட நிலைகள் அல்ல.
குப்ரியத்தின் மேலாதிக்கம் சமூக வாழ்வியலில் எல்லாத் துறைகளிலும் மேலோங்கி நின்ற அந்தப் பொழுதுகளில் ஏதோ ஒரு மாற்றுத் தெரிவாக இஸ்லாத்தை அல்லாஹவின் தூதர்
(ஸல்) முன்வைத்து பேசவில்லை. ஒரு தலைகீழ் மாற்றம் பற்றிய உதவி தேடலே அவரின்
இலக்காக இருந்தது. அதன் பிரதி விளைவே தாயிப் சம்பவமாகும்.
அந்த குப்ரிய கூட்டம் சிலைகளின் மீதான கடவுள் நம்பிக்கையை கொண்டிருந்தாலும
கிறிஸ்தவ , மத நிலைப்பாடுகளை புரிந்தவர்களாகவ
கூட்டு வாழ்வையும் தமக்கு மத்தியில் அனுமதித்தவர்களா
தம்மை தக்க வைத்தன. பாவம் , தீமை , அநீதி, போன்ற நிகழ்வுகளில் இந்த மதம் சார்
மனிதர்களும் பங்காளிகளாக அந்தக் குட்டையில் ஊறிய மட்டைகளாகவே காணப் பட்டார்கள்.
இப்படி அகம்பாவம் , தான் தோன்றித்தனம், சுயநலம் , என்பன சிந்தனா வாதமாகி உலகை ஆட்டிய போதுதான் இஸ்லாம் தனது ஒட்டு மொத்த மாற்றம் வேண்டிய தீர்வோடு வந்தது.
அல்லாஹவின் தூதரின் (ஸல்) (நுஸ்ரா) உதவி தேடல் குப்ரிய சிந்தனா வாதத்தில் ஊறிய
சமூகத் தளமைகளை இலக்கு வைப்பதாகவே ஆரம்பம் தொட்டு அமைந்திருந்தது.
ஒரு மனிதக் கூட்டத்தையும் அமைத்துத் தரும் என்ற ஒரு தெளிவான எதிர் பார்ப்பே. அந்த வகையில் தாயிப் சம்பவம் வரலாற்று தெளிவோடு சற்று ஆழமாக அலசப் பட வேண்டியது.
எனவே தாய்ப் நிகழ்வையும் அதன் மூலம் எமக்கு கிடைக்கும் படிப்பினைகள் தொடர்பாகவும்
இன்ஷா அல்லாஹ் மறுமுறை எழுதுகிறேன். (தொடரும்)
No comments:
Post a Comment