இஸ்லாம் சகல துறைகளிலும் முழுமையாக அமுலாக்கப்படும். குர்ஆன சுன்னா முற்று முழுக்க பின்பற்றப்படும்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :“இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.”(அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)
முஸ்லிம்கள் மீது காஃபிர்கள் ஆளுமை செலுத்துவதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:
முஃமின்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறைநிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான்.
(அந்நிஸா:141)
விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதகாவலர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.(ஆல இம்ரான்: 28)
முஸ்லிம்களின் ஒரே தலைமையாகவும், பாதுகாப்பு அரணாகவும் விளங்கிய கிலாஃபா இஸ்தான்புல் நகரில் முஸ்தஃபா கமால் பாஷா என்ற துரோகியால் ஹிஜ்ரி 1342 ரஜப் 28 (கி.பி.1924, மார்ச் 3) ல் வீழ்த்தப்பட்டது.அன்றைய தினம் உஸ்மானிய கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடுகடத்தப்பட்டார்.
முஸ்லிம்களின் தலைமை அழிக்கப்பட்டதன் காரணமாக முஸ்லிம் உம்மா அநாதையாக்கப்பட்டதோடு அவர்களின் விவகாரங்களை மேற்குலகம் தீர்மானிக்க வேண்டும் என்ற இழிநிலையும் உருவானது.கிலாஃபத்தை அழித்ததோடு மேற்குலகு ஆதிக்கவாதிகள் முஸ்லிம்களின் நிலப்பகுதிகளை துண்டாடி அவர்களின் ஒற்றுமையை சிதைத்தனர்.ஒரே உம்மத்தாக விளங்கிய முஸ்லிம்கள் மீது காலனியாதிக்க காஃபிர்களால் தேசியவாதம் என்ற இஸ்லாத்திற்கு மாற்றமான சிந்தனை திணிக்கப்பட்டு பல நாடுகளாக கூறு போடப்பட்டார்கள்.
முஸ்லிம் உம்மா மீது இஸ்லாத்திற்கு விரோதமான மக்களாட்சி முறையை ஏற்படுத்தி, அவர்கள் மீது ஜனநாயக கொடுங்கோலர்களையும் சர்வாதிகாரிகளையும் ஏற்படுத்தினர்.
முஸ்லிம்களே !
உலக அரங்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வல்லரசாக விளங்கிய இஸ்லாமிய அரசான கிலாஃபத்தின் மீள் வருகையே முஸ்லிம்களின் பிரச்சினைளுக்கான ஒரே தீர்வு என்பதை சிந்திக்க வேண்டாமா?இந்த ஆட்சிமுறையின் கீழ்தான் சுமார் 1300 ஆண்டுகள் முஸ்லிம் உம்மா தனது விவகாரங்களை தொடர்ந்து பராமரித்து வந்திருக்கிறது.கிலாஃபத்தின் மூலமாக இஸ்லாமிய ஆட்சிமுறை அன்றாட வாழ்வியல் விவகாரங்களில் பரிபூரணமாக அமல்படுத்துவதன் மூலமாகவே, முதலாளித்துவ ஆட்சிமுறையின் கொடுமையை அனுபவித்து வரும் மனிதகுலத்திற்கு விடிவு ஏற்படும்.
இன்று முஸ்லிம் உம்மத் இழந்துள்ள கிலாபா நபி வழியில் மீள உருவாவதற்கு தடைக்கற்கலாக உள்ள அடிப்படைச் சிந்தனைகளான தேசியவாதம் மற்றும் மேற்கினது ஆட்சிமுறையாகிய ஜனனாயகம் போனறவற்றில் உள்ள பற்றையும் பிணைப்பையும் தகர்த்தெறிவோம்!
No comments:
Post a Comment