இப்போதுள்ள இஸ்லாமிய வங்கியமைப்பு இஸ்லாமிய நிதியியல் ஆகியவற்றிற்கு மேலாக இஸ்லாமிய பொருளாதாரம் என்பது முழுமையான இஸ்லாமிய செயலாக்கஅமைப்பாகும்.
இஸ்லாமிய பொருளாதாரஅமைப்பை (Islamic economic system)முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஷரியாசட்டங்களின் அடிப்படையில் இயங்கும் இஸ்லாமியஅரசு இருக்கவேண்டும்.
ஆனால் இன்று முஸ்லிம் உலகத்திலள்ள அரசுகள் மேற்குலகின் கைப்பாவை அரசுகளாக தன்னிச்சையாக இயங்குகின்றன.
நிதிச்சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தங்கள் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக அமெரிக்காவும் பிரிட்டனும் மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடிகோடியாக வாரியிறைக்க தணிந்துவிட்டன.
அவர்கள் எவ்வளவு டாலர்களை கொட்டிஅணை போட்டாலும் இந்தநெருகடியிலிருந்து மீளவேமுடியாது.
ஏனெனில் முறையற்ற அடித்தளத்தில் அவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
இந்தநேரத்தில் இஸ்லாம் மட்டுமே உண்மையான நடைமுறைக்கு ஏற்றதான ஒரு மாற்றுவழியாக இருக்கிறது என்பதை நாம் மக்களுக்கு உணர்த்தவேண்டும்.
பொருளாதாரஅமைப்பை மட்டுமல்லாமல் இஸ்லாத்தை முழுமையான அமைப்பில் அதன் ஆட்சிமுறை அதன் குற்றவியல்சட்டம் போன்ற அனைத்து செயலாக்கஅமைப்புகளையும் அதன் சரியான சட்டவிதிமுறைகளையும் (system of Islam) மக்களிடம் எடுத்துக்கூறவேண்டும்.
No comments:
Post a Comment