Oct 8, 2013

சற்று சிந்தியுங்கள்…….?

ஒரு தடவை நபி(ஸல்) இவ்வாறு கூறினார்கள். 'உன்னிடம் நான்கு பண்புகள் இருப்பின் இந்த உலகத்தையே இழந்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவையாவன:

1. அமானிதம் பேணல்
2 உண்மை பேசுதல்
3 மனிதர்களுடன் நற்பண்புகளுடன் நடத்தல்
4 ஹலாலைப் பேணுதல்

இன்று "இஸ்லாம் எனும் அமானிதத்தை" நாம் எமது சக அன்னிய சகோதர்களுக்கு எடுத்தியம்பி நபிகளார் எமக்கு விட்டுச்சென்ற மிகப்பெரிய அமானிதத்தை நாம் நிறைவேற்றியுள்ளோமா?

"சத்திய மார்க்கம் எனும் உண்மையை" எல்லா சந்தர்பத்திலும் எடுத்தியமபுகிறோமா? இன்று மேற்கினது வாழ்கைமுறை குறித்த தாவா எமக்கு வழங்கப்படுகின்ற துர்பாக்கிய நிலைக்கு யார் காரணம்?

முஸ்லிமாகிய நாம் "நபிகளாரின் வாழ்வின் முன்மாதிரிகளை" எமது அன்னிய சமூகங்களுக்கு எடுத்துக்காட்டும் படி வாழ்கிறோமா?

"ஹலால் ஹறாம் வாழ்வின் சகல துறைகளிலும் பேணுவதற்கான அதிகாரத்தை" இழந்துள்ள நிலையில் நாம் வாழ்கிறோம்.

இந்த உன்னதமான நான்கு பண்புகளையும் நாம் எமது வாழ்வில் பெறுவதற்கு ஆக்கபல தஃவாக்களை முன்னெடுப்போம்! சிந்திப்போம்; செயற்படுவோம்!



Mohideen Ahamed Lebbe

No comments:

Post a Comment