Oct 9, 2013

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ள ஐந்து விசயங்கள்



...அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

அல்லாஹ் தனக்கு கட்டளையிட்டுள்ள ஐந்து விசயங்களை நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்று கூறினார்கள். அவை

1.ஜமாத் - ஒன்றினைந்து வாழ்தல் 

2. அஸ்ஸம்உ – தலைமையின் ஆணையைச் செவியேற்றல்

3. தாஅத் - தலைமைக்குக் கட்டுபடுதல்

4. ஹிஜ்ரத் - தியாகப்பயணம் மேற்க்கொள்தல்

5. ஜிஹாத் - அல்லாஹ்வின் பாதையில் போர் புரிதல்.

ஒருங்கினைந்து வாழூம் சமுதாய அமைப்பிலிருந்து ஒருவர் ஒரு சாண் அளவு வெளியே சென்றாலும் அவர் தனது கழூத்திலிருந்து இஸ்லாத்தின் கட்டை அவிழ்த்து விட்டார். மீண்டும் தீரும்பிவரும்வரை இதே நிலையில்தான் இருப்பார்.

யார் ஜாஹிலிய்யாவை செயல்படுத்திட அழைப்பு விடுகிறாரோ முழந்தாளிட்டவராக நரகத்தில் நுழையும் கூட்டத்திலிருப்பார்.

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதும் நபித்தோழர்கள் கேட்டனர். அவர் தொழூதாலும் நோன்பு நோற்றாலும் இதே நிலைதானா?

அதற்கு ஆம் அவர் தொழூபவராக நோன்பு நோற்பவராக தன்னை முஸ்லிம் என்று கருதிக் கொள்பவராக இருப்பினும் சரிதான் என்று கூறிய நபி (ஸல்) தொடர்ந்து சொன்னார்கள்.

ஆனால் (உண்மையான) முஸ்லீம்களை அல்லாஹ் அவர்களுக்குச் சூட்டிய பெயரான முஸ்லிம்கள், முஃமின்கள் அல்லாஹ்வின் அடியார்கள் என்று அழையுங்கள்.

(அறிவிப்பாளர்: அல்ஹாரிஸ் அல் அஷ்அரீ (ரலி) (அஹ்மத், இப்னு கதீர்)

No comments:

Post a Comment