தேசியவாதம் என்பது மனிதர்களுக்குள் காணப்படுகின்ற ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு ஆகும்.
தேசியவாதம் மனிதாபிமானமற்றதும் இனவாதத்திற்கு வழி கோலுவதும் தரக்குறைவான சிந்தனையின் வெளிப்பாடுமாகும். இஸ்லாத்திற்கு முரணான ஒரு கருத்து ஆகும்.
இரண்டாம் உலக மகாயுத்த காலங்களின்போது முதன் முறையாக அரபுத் தேசியவாதம் தலை தூக்கியது.
இன்று எமது உம்மத்தின் மீட்சிக்குத் தடையாக உள்ள மிகக் கெட்ட பிணைப்பு இதுவாகும்!
உம்மத்தை பிரித்துள்ள பிணைப்பாகும்!
பிரித்தாளும் தந்திரத்தை கொண்ட மேற்கு மற்றும் அமெரிக்காவின் மிகவும் பலம்வாய்ந்த கருவியாகும்!
இன்று நாம் உடைத்தெறிய வேண்டிய ஒரு சிந்தனை!
நாளைய இஸ்லாமிய உலக ஒழுங்கு உருவாவதற்கான தடைக்கல்லாகும். உம்மத் எனும் சிந்தனையும் சகோதரத்ததுவ பிணைப்பும் வலுவுறும் போதே இந்த கீழ்த்தரமான சிந்தனை தகர்க்கப்பட முடியும்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“பிரிவினைவாதம் கெடுதியானது. அதை விட்டு விடுங்கள். பிரிவினை கோருபவன் அதற்காகப் போராடுபவன் அதற்காக உயிர் கொடுப்பவன் எவனும் எம்மைச்சார்ந்தவர்களல்ல.”
எனவே மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துகின்ற தேசியவாதம் என்பது மிகவும் பின்னடைவானதும் இஸ்லாத்திற்கு முரணானதுமான ஒரு வாழ்க்கைப்பிணைப்பு ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் இது குறித்து கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
ReplyDelete“எவர் ஒருவர் அஸபிய்யாவிற்காக (தேசியவாதம்) மக்களை அழைக்கிறாரோ, அஸபிய்யாவிற்காக போராடுகிறாரோ, அஸபிய்யாவிற்காக மர ணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல”. (அபூதாவூது).