PLC எனப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் (public limited companies) பங்குச்சந்தை இஸ்லாத்தின் அடிப்படையில் ஹராம் என்பதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன,
அவற்றில் பிரதான காரணம் முதலீடுசெய்பவர்கள் நிறுவனநடவடிக்கைகளிலும் லாபநஷ்டத்திலும் எந்தவித பொறுப்பும் ஏற்காதது.
அதாவது ஒருவேளை நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது என்றால் பங்குப்பத்திரங்கள் மூலமாக முதலீடு செய்துள்ளவர்களிடமிருந்துஎந்தவிதமான நஷ்டயீடோ அல்லது ஈட்டுத்தொகையோ கோரமுடியாது,
அந்தமுதலீட்டாளர் எவ்வளவு சொத்துக்களைப் பெற்றவராக இருந்தாலும் சரியே! இது ஒவ்வொரு அம்சத்திலும் ஷரியாவிற்கு முரண்பாடானதாகும்,
ஆனால் கடன் கொடுத்தவரைப் பொறுத்தவரை அவருக்கு முழுத்தொகையையும் பட்டுவாடா செய்யவேண்டும் என்பதையும் அதில் எந்தவிதமான தள்ளுபடியும் செய்யமுடியாது என்பதையும் ஷரியா கட்டாயம் ஆக்கியிருக்கிறது.
அபூஹரைரா(ரளி) அறிவித்ததாக புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.
"மற்றவர்களிடமிருந்து வாங்கும் கடன்தொகையை நிச்சயம் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் கடன் வாங்குகிறவர்களுடைய கடனை அல்லாஹ்வே திருப்பிக்கொடுப்பான், ஆனால் மற்றவர்களிடமிருந்து கடன் பெறும்போது விரயம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு வாங்குகிறவர்களை அல்லாஹ் விரயம்செய்வான்."
No comments:
Post a Comment