Mar 12, 2014

முஸ்லிமின் அரசியல் அகீதா என்ன ?

இஸ்லாம் தனித்துவமானதும் இயற்கையானதுமான
ஒரு வாழ்வியல் ஒழுங்காகும் . அது தன்னை அமுல் படுத்துவதற்கும் பிரயோகிப்பதற்கும் ,அதற்கான அதிகாரம் அதன் கீழ் கட்டுப்படும் மக்கள் என்ற கட்டமைப்பை உடைய சாம்ராஜ்யமாக விரிந்து செல்லக்கூடிய நிலத் தொகுதியை வேண்டி நிற்கின்றது. அது ஏனென்றால் மனித சமூகம் அத்தகைய ஒரு இயற்கையான கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மட்டுமே சீரான சுப...ீட்சமான வாழ்வு ஒழுங்கை பெற்றுக் கொள்ள முடியும் என்ற தெளிவான முடிவினால் ஆகும்.

(பித்னா) குழப்பம் முற்றிலும் இல்லாமல் ஒழிந்து ,(தீன்)மார்க்கம் முழுவதும் அல்லாஹ்வுக்கே என ஆகி விடும்வரை நீங்கள் இந்த நிராகரிப்பாளர்களுடன் சமர் புரியுங்கள் . ( அத்தியாயம் 8 வசனம் 39)

என்ற தெளிவான வஹி மூலம் இஸ்லாம் அல்லாத அனைத்தும் (பித்னா) குழப்பம் என்ற முடிவையும் ,இத்தகு சூழ்நிலையில் ஒரு முஸ்லிமின் நடத்தை எவ்வாறு அமைய வேண்டும் என்ற கட்டளையையும் ஆணித்தரமாக அகிலத்தின் அதிபதி அல்லாஹ் (சுப) எடுத்துக் கூறுகிறான் ; இதை எவ்வித மாறுபாடும் இன்றி ஏற்றுக் கொள்வது முஸ்லீம்களின் அகீதா ஆகும்.

இயற்கை பலவீனங்களும் , மிகத் தெளிவான தூர தரிசனமும் அற்ற மனிதனால் மனிதனுக்கு வாழ்வியல் ஒழுங்கையும் , சட்ட திட்டங்களையும் வழங்க முடியாது . எனவே இந்த பிரபஞ்சத்தின் அதிபதியும் படைப்பாளனும் ஆகிய இறைவனுக்கு மட்டுமே அந்த ,தகுதியும் தரமும் உண்டு என்பதும் முஸ்லீம்களின் அசைக்க முடியாத (ஈமான் ) நம்பிக்கையாகும். இந்த அடிப்படையில் இருந்தே முஸ்லீம்களின் அரசியல் அகீதா தோற்றம் பெறுகிறது.

No comments:

Post a Comment