Mar 10, 2014

இஸ்லாத்தில் பெண்களது கண்ணியம் எவ்வாறு பேணப்படவேண்டும்...?

நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் மக்களை நோக்கி ஆற்றிய உரையின் ஒரு பகுதி இஸ்லாத்தில் பெண்கள் எவ்வாறு கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பேருரையில் இன்றைய பெண்ணியம் கதைக்கும் மேற்குலகிற்கு மிகச்சிறந்த படிப்பினைகள் உள்ளது. இவற்றை ஒவ்வொரு முஸ்லிமான ஆண்களும் பெண்களும் மிகவும் அக்கறையுடன் தமது வாழ்வில் ஒழுகிட கடமைப்பட்டுள்ளனர்.

“ஓ மக்களே! உங்கள் பெண்கள் குறித்து குறிப்பிட்ட உரிமைகள் உங்களுக்கு உண்டு என்பது உண்மை. ஆனால் அவர்களுக்கும் உங்கள் மீதான உரிமை உள்ளது. அல்லாஹ்வுடைய அனுமதியுடன் அவனை நம்பியநிலையில் அவர்களை உங்கள் மனைவியர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டீர்கள் என்பதனை நினைவு கூறுங்கள்! அவர்கள் உங்களுக்கு உரிமையானவர்களாக உள்ள நிலையில் அவர்கள் கருணையுடன் உணவூட்டப்படவும் ஆடையணிவிக்கப்படவும் உரிமைபெற்றவர்கள். நீங்கள் அவசியம் உங்கள் பெண்களை நல்லமுறையில் நடத்தவேண்டும். மேலும் அவர்கள் அர்பணிப்புள்ள உங்கள் பங்காளிகளாகவும் உதவியாளர்களாகவும் இருப்பதால் நீங்கள் அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும். மேலும் நீங்கள் அனுமதிக்காத எவருடனும் அவர்கள் சகவாசம் கொள்ள உரிமை பெற்றவர்கள் அல்ல. அத்துடன் அவர்கள் தங்கள் கற்பை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது.”

No comments:

Post a Comment