Mar 19, 2014

சிறுபான்மை 'பிக்ஹை' நம்பிய பயணங்கள் முடிவதில்லை !!


('மைனோரிட்டி பிக்ஹ் ' ஒரு கொல்லை நோய் ஆக முஸ்லீம் உம்மத்தை பீடித்திருக்கும்ஒரு சாபக்கேடு . அது பாவத்தை நன்மையாக்கி விடுகிறது . குப்ரின் கீழ் அடிமை வாழ்வில் நிர்ப்பந்தத்தை காரணம் காட்டி முஸ்லிமை பணிந்து போக அது அழைக்கிறது . 

இறை திருப்தி ,தாகூத்தின் திருப்தி என்ற முரண்பட்ட எதிர் சக்திகளுக்கு இடையில் ஒரு சமரச தீர்வாக அது ஆகிவிடுகிறது .இப்போது ஒரு முஸ்லிம் தான் யாருக்காக ? எதற்காக ? வாழ்கிறேன் ? எனக்கான வாழ்வியல் விவகார சட்டங்களை யார் தீர்மானிக்கிறார்கள் ? என்ற கேள்விகளுக்கு பதிலை தேடும் தேடும் போது . கசப்பான பதிலாக 'குப்ர்' என்ற கொடுமை விடையாகி விடுகிறது . இந்த உண்மையை புலப்படுத்த ஒரு சிறு பதிவு . - அபூ ருக்சான் - )

ஹுப்புத் துன்யாவின் அவசியமும் அவசரமும் வேகத்தை அதிகரிக்க 
ஆரம்பமானது ஓட்டம் ! சில கோஷங்களாலும் வசனங்களாலும் 
கண்கள் கட்டப்பட அசையாத நம்பிக்கையில் 
ஒரு பந்தயக்குதிரை போல ! 
கொடுத்த விலைகள் அதிகம்தான் 
இன்னும் கொடுப்பேன் என் இறைவனுக்காக . 
இலக்கை தெளிவாய் சொன்னார்கள் . 


பாதையினை தான் அடிக்கடி மாற்றினார்கள் 
நேற்று பிழை என்றது இன்று சரியாகும் ! 
குப்ரிய கொல்லைப்புரங்களிலும் 
'ஹிக்மத் ' மேச்சல்கள் !!! 


பன்றிக்கு ஒட்டகத் தோல் போர்த்தி 
குர்பான் கொடுத்தால் ஹலாலாம் !!! 
ரகீப் ,அதீதே(அலை ) 
குழம்பி போய் விடுவார்கள் 
நான் என்ன செய்ய ?! இந்த புதிய 
இஜிதிஹாத் எனக்கும் புரியவில்லை !! 
செக்கில் இருந்தாலும் சிலையில் இருந்தாலும் 
நக்கித்தான் ஆகவேண்டுமாம் !!?? 

ஆர்வம் மட்டும்தான் 
இலக்கை நோக்கி பாதை தெளிவற்று 
'குப்ரை ' குளிப்பாட்டி 
சத்திய ஆடை கொடுத்து !! 
அந்த சாக்கடைக்கு சந்தனம் பூசி 
தொடரும் எம் இலக்கு நோக்கிய 
பயணங்கள் தான் முடிவதில்லை !!

...............

No comments:

Post a Comment