டெல்லி உயர்நீதிமன்றம் 2009 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம்
தேதி ஓரினச்சேர்க்கை என்னும் அருவருக்கத்தக்க செயலை அங்கீகரித்தும், இந்திய
குற்றவியல் சட்டத்தின் 377 ஆவது பிரிவு செல்லுபடியாகாது என்றும் வழங்கிய தீர்ப்பை
எதிர்த்து சமூக அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்
செய்திருந்தன.இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து
டிசம்பர் 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளான சிங்வி, முகோபாத்தியாய
ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர்.ஒருபால் உறவிற்கு உளப்பூர்வ ஆதரவு அளிப்போர்களின்
கண்டனக் குரல்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தும் இவ்வேளையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை
வரவேற்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை
இதுபோன்ற நீதிமன்ற தீர்ப்புகளை வரவேற்க வேண்டியதில்லை.ஏனெனில் இதே உச்சநீதிமன்றம்
கடந்த மாதம்,திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றம்
அல்ல என்று தீர்ப்பளித்திருந்தது.மனித சிந்தனையிலிருந்து தோன்றிய சட்டங்களை வைத்து
இவர்கள் தீர்ப்பளித்துவருவதால் மனித சமூகத்தின் மாண்புகள் சீர்குலைந்துவருகிறது .ஒருபால் உறவு,திருமணம் செய்யாமல் உறவுகொள்ளல் போன்ற
இழிசெயல்கள் தடுக்கப்பட்ட பெரும்பாவங்கள் என்பதை உரக்கக்கூறும் முஸ்லிம்கள்,
ஆண்-பெண் திருமண உறவு குறித்த இஸ்லாமிய கண்ணோட்டத்தை தெளிவாக சொல்வதும்
அவசியமாகும்.
அல்லாஹ் سبحانه وتعالى கூறுகிறான்:-
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا
خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ
لِتَعَارَفُوا
மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு
பெண்ணிலிருந்தும் படைத்தோம்.பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ளும்
பொருட்டு உங்களை (பல்வேறு)சமுதாயங்களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.
(அல்ஹுஜுராத் : 13)
அல்லாஹ்سبحانه وتعالى மனித இனத்தை
படைத்திருக்கிறான்;அவர்களை ஆண்களாகவும் பெண்களாகவும் படைத்து விலங்கினங்களிலிருந்து
வேறுபட்ட குறிப்பிட்ட தனித்தன்மையை அவர்களுக்கு வழங்கியுள்ளான்.மனிதர்கள் என்ற
முறையில் அல்லாஹ் سبحانه وتعالى இவ்விரு பாலரையும் வாழ்க்கைப் பயணத்தில்
ஈடுபடும்படியும் தவிர்க்க இயலாத வகையில் மனித சமுதாயம் என்ற ஒரே சமுதாயமாக
வாழும்படியும் அவர்களை தயார்படுத்தியிருக்கிறான்.ஆண்-பெண் ஆகிய இருபாலரும்
சமுதாயத்தில் இடம்பெற்றிருப்பதையும் அவர்களுக்கு மத்தியில் சந்திப்புகளும்
உறவுகளும் ஏற்படுவதையும் மனித இனம் நிலைத்து உயிர் வாழ்ந்திருப்பதற்கு அடிப்படையாக
ஆக்கியுள்ளான்.மனிதர்கள் என்ற முறையில் இவ்விருபாலரும் மனிதப்பண்புகளையும்
வாழ்வியலுக்கு அவசியமான அம்சங்களையும் பெற்றிருக்கிறார்கள்.அவர்கள்
ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்سبحانه وتعالى ஜீவஆற்றலை(طاقة حيوية-vital
energy)படைத்துள்ளான்.ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இத்தகைய ஜீவஆற்றலை
அவர்களுக்குள் அமைத்துள்ளான்.எனவே பசி,தாகம், இயற்கைத்தேவை போன்ற உயிரியல்
தேவைகளை(الحاجات العضوية - organic needs) அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும்
அமைத்துள்ளான். மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் உயிர்வாழும் உள்ளார்ந்த(غريزة
البقاء – survival instinct), இனவிருத்தி உள்ளார்ந்த உணர்வு(غريزة النوع
-procreation instinct), அடிபணியும் உள்ளார்ந்த உணர்வு அல்லது ஆன்மீக உள்ளார்ந்த
உணர்வு (غريزة التدين -reverance instinct)ஆகிய உணர்வுகளை படைத்துள்ளான்.ஆண்-பெண்
ஒவ்வொருவருக்கும் உயிரியல் தேவைகளையும்(الحاجات العضوية- organic needs)
உள்ளார்ந்த உணர்வுகளையும்(الغرائز-instincts) சிந்திக்கும் ஆற்றலையும்(العقل)
அமைத்துள்ளான்.
இனவிருத்தி உள்ளார்ந்த உணர்வை(غريزة النوع
-procreation instinct) ஓர் ஆண் மற்றொரு ஆணின் மூலமாகவோ அல்லது மிருகத்தின்
மூலமாகவோ அல்லது பெண் மூலமாகவோ நிறைவுசெய்துவிடுகிறார்கள்.அதுபோலவே ஒருபெண் தனது
இனவிருத்தி உள்ளார்ந்த உணர்வை மற்றொரு பெண் மூலமாகவோ அல்லது மிருகத்தின் மூலமாகவோ
அல்லது ஆன் மூலமாகவோ நிறைவுசெய்து விடுகிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும்
இடையிலுள்ள உறவு என்பது அசலான உறவாகும்;எனவே திருமண பந்தத்தின் மூலமாக மட்டுமே
மனித இனம் இனவிருத்தி உள்ளார்ந்த உணர்வை நிறைவு செய்யவேண்டும். மனித இனத்தின்
இருப்பிற்கும் அதன் உயிர்வாழ்தலுக்கும் இது அவசியமான விஷயமாக இருக்கிறது. எனினும்
மனிதனிடம் இடம்பெற்றுள்ள உள்ளார்ந்த உணர்வுகளை(الغرائز -instincts) அதன்
போக்கிற்கு கட்டுப்பாடில்லாமல் இயங்குவதற்கு அனுமதிக்கும் பட்சத்தில் அது மனித
இனத்திற்கும் மனிதர்களின் சமூக வாழ்விற்கும் மிகுந்த தீங்குகளை ஏற்படுத்திவிடும்.
மனிதன் தனக்கு சந்ததிகளை உருவாக்கிக் கொள்வதின் மூலம் மனித இனத்தை தொடர்ந்து உயிர்
வாழச்செய்வதுதான் இனவிருத்தி உள்ளார்ந்த உணர்வு (غريزة النوع) கொடுக்கப்பட்டதின்
உண்மையான நோக்கமாக இருக்கிறது. எனவே இந்த உணர்வு என்ன நோக்கத்திற்காக
கொடுக்கப்பட்டுள்ளதோ அந்த நோக்கத்தை நிறைவுசெய்யும் வகையில் அதை நிறைவேற்ற வேண்டும்
என்பதுதான் இவ்வுணர்வைப் பொறுத்த மனித இனத்தின் கண்ணோட்டமாக இருக்கவேண்டும்.
இவ்விஷயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தகைய தனிப்பட்ட சிறப்பான படித்தரமும்
கிடையாது. பாலியல் உள்ளார்ந்த உணர்வை(غريزة النوع) நிறைவுசெய்து கொள்வதின் மூலம்
பெற்றுக்கொள்ளப்படும் இன்பத்தை பொறுத்தவரை அதை மனித சமுதாயம் பொருட்டாக கருதினாலும்
கருதாவிட்டாலும் அது இயல்பானதும் தவிர்க்க இயலாததுமாக இருக்கிறது.ஆண்–பெண்
இருபாலருக்கு மத்தியில் பாலியல் ரீதியாக ஏற்படும் உறவு தொடர்பான தெளிவான
கண்ணோட்டமாக இது மனிதனிடம் நிலைத்திருக்க வேண்டும்.அப்போதுதான் இந்த உணர்வு
அமைக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் அதனை இயக்குவது சாத்தியமாகும்.
மானுட இனத்திலுள்ள எந்தவொரு சமுதாயமும் ஆண்-பெண்
ஆகிய இருபாலருக்கு மத்தியிலுள்ள பாலியல் உறவிற்கு மகிழ்ச்சி மற்றும் உடலின்பம்
ஆகியவைதான் பிரதானம் என்ற கருத்தாக்கத்தை கொண்டிருந்தால், அந்த கண்ணோட்டம் மாற்றி
அமைக்கப்படவேண்டும்.மகிழ்ச்சியும் உடலின்பமும் இயல்பானதும் அவசியமானதும்
என்றபோதும்,இனவிருத்தி உள்ளார்ந்த உணர்வு (غريزة النوع -procreation
instinct)எந்தநோக்கத்திற்காக வழங்கப்பட்டிருக்கிறதோ அந்த நோக்கத்திற்கு பிரதான
முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். இத்தகைய தெளிவான கண்ணோட்டம் பாலியல் உணர்வை அது
ஏற்படுத்தப்பட்ட நோக்கத்திற்கு இணக்கமாக சரியான முறையில் வழிநடத்துவதோடு இதர
செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கும் மகிழ்ச்சியளிக்கும் மற்ற விஷயங்களை
தேடிக்கொள்வதற்கும் மனிதர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.
ஆண்-பெண் ஆகியவர்களுக்கு மத்தியில் ஒத்துழைப்பை
உறுதிப்படுத்தக்கூடிய ஒரு செயலாக்க அமைப்பை (نظام-systems)மனித சமுதாயம்
பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும். இத்தகைய செயலாக்க அமைப்பின் வழிகாட்டுதல்
மூலமாக பாலியல் வேட்கையின் விளைவாக ஏற்படும் அலைபாயும் சிந்தனைகளும் மற்ற
எல்லாவற்றைக் காட்டிலும் பாலியல் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தும் போக்கும்
மக்களிடமிருந்து நீக்கப்படவேண்டும். ஏனெனில் ஆண்-பெண் ஆகிய இருபாலரும் பரஸ்பரம்
அன்பும் நேசமும் கொண்டவர்களாக, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும் இருசகாக்கள் என்ற
முறையில் அவர்களுக்கு மத்தியில் ஒத்துழைப்பு இல்லையெனில் பிறகு அந்த சமுதாயம்
எத்தகைய மதிப்பபையும் பெற்றிருக்காது. இக்காரணத்தை முன்னிட்டு ஆண்-பெண் ஆகிய
இருபாலருக்கு மத்தியிலுள்ள உறவு குறித்து மனித சமுதாயத்தில் நிலவும் தற்போதைய
கண்ணோட்டத்தை மாற்றவேண்டியதின் அவசியத்தை நாம் அழுத்தமாக வலியுறுத்த
வேண்டும்.அதன்மூலம் பாலியல் வேட்கை தொடர்பான சிந்தனைகளின் ஆதிக்கத்திற்கு முடிவு
கட்டவேண்டும்; அதன்மூலமாக பாலியல் நடவடிக்கையை இயல்பானதாகவும் இனவிருத்தி
உள்ளார்ந்த உணர்வை(غريزة النوع) நிறைவுசெய்வதற்கு அவசியமானதாகவும் கருதும் சரியான
சிந்தனையை நிறுவவேண்டும். மேலும் ஆண், பெண் ஆகிய இருபாலருக்கு மத்தியிலுள்ள உறவை
உடலின்பம் பாலியல்சுகம் என்ற வரையறைக்குள் ஏகபோகமாக கட்டுப்படுத்தும் நிலையை
மாற்றவேண்டும்.
இதற்குமாற்றமாக, சமுதாயத்தின் நன்மையை நாடுகின்ற
கண்ணோட்டத்தின் அடிப்படையில் பாலியல் நடவடிக்கைள் நெறிபடுத்தப்படவேண்டும். இத்தகைய
சமுதாயம் இறையச்சம் கொண்டதாவும் காமத்தையும் காம உணர்வின் அடிப்படையிலுள்ள பாலியல்
கேளிக்கைகளையும் இலட்சியமாக கொள்ளாத சமுதாயமாகவும் இருக்கும்.எனினும் பாலியல்
தொடர்பான இத்தகைய கண்ணோட்டம் மகிழ்ச்சியையும் பாலியல் இன்பத்தையும் மனிதனுக்கு
மறுக்காது;மாறாக அதை சட்டரீதியானதாக (legitmate)ஆக்குவதின் மூலம் மனித இனம் உயிர்
வாழ்வதை உறுதிப்படுத்தி இப்பிரபஞ்சத்தில் அதன் இருப்பை பாதுகாக்கும்.அல்லாஹ்سبحانه
وتعالىவின் உவப்பை பெறுதல் என்ற ஒரு மூஃமினின் இறுதி இலட்சியத்திற்கு இணக்கமாகவும்
அதற்கு பொருத்தமாகவும் அவனை வாழ்வியலில் வழிநடத்தும்.
பாலியல் உணர்வை அல்லாஹ்سبحانه وتعالىதிருமணம் என்ற
நோக்கத்திற்காகவே படைத்துள்ளான்.ஆண்-பெண் ஆகியவர்களுக்கு மத்தியிலுள்ள உறவு குறித்த
சமுதாயத்தின் கண்ணோட்டம் திருமணம் என்ற நடவடிக்கையின் மீது கவனம் செலுத்துவதை
உறுதிப்படுத்தும் வகையிலும் பாலியல் இன்பத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துவதை
மறுக்கும் வகையிலும் குர்ஆன் கூறுகின்றது.
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا
رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا
وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً
மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த
உங்கள் இறைவனுக்கு நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். மேலும் அதிலிருந்து அவன் அதன்
துணையை படைத்தான்; இன்னும் அவை இரண்டிலிருந்தும் எண்ணற்ற ஆண்களையும் பெண்களையும்
(படைத்து பூமியில்) பரவச்செய்தான். (அந்நிஸா :
1)
هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ
نَفْسٍ وَاحِدَةٍ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا فَلَمَّا
تَغَشَّاهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًا فَمَرَّتْ بِهِ فَلَمَّا أَثْقَلَتْ دَعَوَا
اللَّهَ رَبَّهُمَا لَئِنْ آَتَيْتَنَا صَالِحًا لَنَكُونَنَّ مِنَ
الشَّاكِرِينَ
அவன்தான் உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான்
மேலும் அதனிடம் அது அமைதி பெறுவதற்காக அதிலிருந்து அதன் துணையை படைத்தான். பின்னர்
ஆண் பெண்ணுடன் கூடியபோது அவள் இலேசான கர்ப்பத்தைத் தரித்தாள், இன்னும் அதனை
சுமந்தபடி அவள் நடமாடிக்கொண்டிருந்தாள்.பின்னர் (அக்கரு வளர்ச்சியுற்று) கனமானபோது
அவ்விருவரும் தங்கள் இறைவனான அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்;(அல்லாஹ்வே!) நீ
எங்களுக்கு (ஸாலிஹான) நற்குழந்தையை அளிப்பாயானால்,திண்ணமாக நாங்கள் உனக்கு நன்றி
செலுத்துவோராய் இருப்போம்.
(அல்அஃராஃப் : 189)
وَلَقَدْ
أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً
நிச்சயமாக! உமக்கு முன்பும் நாம் து£தர்கள் பலரை
அனுப்பியுள்ளோம் மேலும் அவர்களை மனைவி-மக்கள் உள்ளவர்களாகவே நாம்
ஆக்கியிருந்தோம். (அர்ரஃது : 38)
وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ
أَنْفُسِكُمْ أَزْوَاجًا وَجَعَلَ لَكُمْ مِنْ أَزْوَاجِكُمْ بَنِينَ
وَحَفَدَةً
மேலும் உங்களிலிருந்து உங்களுக்கு அல்லாஹ்
துணைவியரை ஆக்கினான், இன்னும் அத்துணைவியர் மூலமாக உங்களுக்கு புதல்வர்களையும்
பேரர்களையும் ஆக்கினான். (அந்நஹ்ல் : 72)
وَمِنْ آَيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ
مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ
مَوَدَّةً وَرَحْمَةً
மேலும் அவர்களைக்கொண்டு நீங்கள் மனஅமைதி
பெறவேண்டும் என்பதற்காக உங்களிலிருந்து உங்களுக்கு துணைவியரை ஆக்கியிருப்பது
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாக இருக்கிறது. இன்னும் அவன் உங்கள் மத்தியில்
நேசத்தையும் பரிவையும் உண்டாக்கினான். (அர்ரூம் : 21)
وَأَنَّهُ خَلَقَ
الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى مِنْ نُطْفَةٍ إِذَا تُمْنَى
மேலும் நிச்சயமாக! குதித்து வெளியேரும் விந்துத்
துளியிலிருந்து ஆண் மற்றும் பெண் ஜோடிகளை அவன் படைத்தான். (அந்நஜ்ம் : 45,46)
இவ்வாறாக, அல்லாஹ்سبحانه وتعالىஆண்-பெண் படைப்பை
திருமண பந்தத்துடன் கட்டுப்படுத்தி இருக்கிறான்.ஆண்-பெண் பற்றிய கண்ணோட்டம் திருமண
பந்தத்துடன் இணைந்திருப்பதை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் இச்செய்தியை
அல்லாஹ்سبحانه وتعالىமீண்டும் மீண்டும் அருள்மறை குர்ஆனில் குறிப்பிட்டுக்
கூறியுள்ளான். மனித இனம் இப்பிரபஞ்சத்தில் தொடர்ந்து உயிர் வாழ்ந்திருக்கும்
பொருட்டு மனிதன் தனக்கு சந்ததிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் வாழ்க்கை துணையை
பெற்றுக்கொண்டு மனஅமைதியுடன் வாழ்வியல் பயணத்தை மேற்கொள்வதற்கும்தான் அல்லாஹ்سبحانه
وتعالىஆணையும் பெண்ணையும் படைத்துள்ளானே ஒழிய பாலியல் இன்பத்தை மட்டும் நோக்கமாகக்
கொண்டல்ல என்பதை முஸ்லிம்களாகிய நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும்.
[ஷேக் தகியுதீன் நபஹானி (ரஹ்) அவர்கள் எழுதிய
இஸ்லாத்தின் சமூக அமைப்பு(النظام الاجتماعي في الإسلام) என்ற நூலிலிருந்து இந்த
ஆக்கம் பெறப்பட்டது]
No comments:
Post a Comment