ஒரு கலீபா நியமிக்கப்படும் போது….?
ஒரு கலீபா நியமிக்கப்படும் போது அந்த பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் ஒப்பந்த பைஅத்தை நிறைவேற்றுவார்கள். மற்ற பிரதேசத்தில் உள்ளவர்கள் கீழ்ப்படியும் பைஅத்தை கொடுப்பது கடமையாகும். அத்துடன் கீழ்கண்ட நான்கு நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
1.அப்பிரதேசயம் சுயநிர்ணயம் பெற்றதாகவும் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதாகவும் இருக்க வேண்டும். அதாவது அது அந்நிய அரசுகளின் ஆதிக்கத்தில் இல்லாத முஸ்லிம் நாடாக இருக்க வேண்டும். காபிர்களின் தலையீடோ அவர்களின் ஆதிக்கமோ கொஞசம் கூட இருக்க கூடாது.
2.இஸ்லாமிய அரசு என்ற அந்தஸ்தில் அதன் பாதுகாப்பு அதிகாரம் மற்றும் பாதுகாவல் பொறுப்பு முஸ்லிம்களது கையில் மட்டும் இருக்க வேண்டும். அதில் காபிர்களின் தலையீடோ பங்களிப்போ ஆதிக்கமோ அறவே இருக்கக்கூடாது.
3.இஸ்லாத்தை முழுமையாகவும் நிறைவாகவும் நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டை அந்த அரசு உடனே துவக்கிவிடவேண்டும். மேலும் இஸ்லாத்தின் தஃவத்தை உலக முழுவதற்கும் எடுத்துச் செல்லும் பணியை உடனே துவக்கிவிடவேண்டும்.
4.தேரந்தெடுக்கப்பட்ட கலீபா உபரியான நிபந்தனைகளை நிறைவேற்றா விட்டாலும் கிலாபா ஒப்பந்தத்திற்குரிய அடிப்படை நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். இது அவர்மீதான கட்டாயக் கடமையாகும்.
No comments:
Post a Comment