Sep 7, 2015

முஸ்லீம்கள் மீதான தாக்குதல் 70% அதிகரிப்பு

 
கண்களைத் தவிர முழு முகமும் உடலும் மறைக்கும் நிகாப் அணிந்த பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
               
கடந்த ஓராண்டு காலத்தில் லண்டன் நகரில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்களின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்திருப்பதாக பிரிட்டிஷ் காவல்துறை தெரிவித்துள்ளது.
 
ஜூலை வரையிலான ஓராண்டு காலத்தில் இஸ்லாமிய எதிர்ப்புத் தாக்குதல் சம்பவரங்களின் எண்ணிக்கை 800க்கும் மேலாக பதிவாகியிருப்பதாகவும், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை 500க்கும் குறைவான அளவே பதிவானதாகவும் காவல்துறையின் சார்பில் ஒப்பிடப்பட்டிருக்கிறது.

பிரிட்டனின் மற்ற பகுதிகளிலும் இதே மாதிரியான நிலைமையே காணப்படுவதாக, மத நம்பிக்கை குழுக்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் நடந்த முஸ்லிம் எதிர்ப்புத் தாக்குதல் சம்பவ காட்சி (ஆவணப்படம்)
ஐக்கிய ராஜ்ஜியத்தில் நடந்த முஸ்லிம் எதிர்ப்புத் தாக்குதல் சம்பவ காட்சி (ஆவணப்படம்)                
நிகாப் என்றழைக்கப்படும் கண்கள் தவிர முழுமுகத்தையும் உடலையும் மூடும் விதமான அங்கியை அணிந்திருக்கும் பெண்கள் மீதே பெருமளவிலான உடல்ரீதியிலான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

Thanks BBC

 

No comments:

Post a Comment