Nov 8, 2015

இஸ்லாம் ஆட்சிமுறையை பெற்றுள்ளதா? – பாகம் – 2

 
 
 
அறிஞர்களின் கருத்துக்களை தவறாக மேற்கோள்காட்டுதல் :
     உண்மைக்கு புறம்பானவற்றை கூறி மக்களை ஏமாற்றுவதற்கும் கொடுங்கோண்மை ஆட்சியாளர்களை அங்கீகரிப்பதற்கும் முக்கியமான சிலஅறிஞர்களின் பெயர்களையும் அவர்கள் எழுதிய நூற்களின் பெயர்களையும் மேற்கோள் காட்டுதல் என்பது எப்போதும் பயனளிக்கும் தந்திரமாகவே இருந்துவருகிறது. அந்த அறிஞர்களின் கருத்துக்களில் சிலவற்றை இங்கு குறிப்பிடுவது அவசியமானது என்று கருதுகிறேன், அவர்களின் பெயர்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் பட்சத்தில் மிகுந்த வருத்தம் அடைவார்கள்!
     அவர்களின் சில கூற்றுகள் தெளிவான முறையில் தவறாக வியாக்ஞானம் செய்யப் பட்டுள்ளன. ‘கிலாஃபா என்பது அறிவுரீதியான தேவையாக இருக்கிறதே ஒழிய அது ஷரீஆ உரையின் மூலமாக நிரூபிக்கப்படவில்லை’ என்ற கூற்றை அல்மாவர்தி அல்லது மற்ற சில அறிஞர்கள் கூறியுள்ளார்கள் என்று மேற்கோள் காட்டுவது போன்றவை இதிலடங்கும். இத்னா அஷரி அஷ்ஷியா என்ற அறிஞர் கலீஃபா என்பவர் அல்லாஹ்வினால் தெய்வீகமான முறையில் நியமனம் செய்யப்படுகிறார் என்று நம்பிக்கை கொண்டுள்ளது போன்றும், கலீஃபாவை நியமனம் செய்வது வாஜிபு என்பது தொடர்பான நிரூபனம் அறிவுரீதியானது என்று சில தத்துவ அறிஞர்கள் கருதுவது போன்றும் அல்மாவர்தி போன்ற சில அறிஞர்கள் கிலாஃபா குறித்து மாறுபட்ட கண்ணோட்டத்தை கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையே! எனினும் இந்த கண்ணோட்டங்கள் சட்டரீதியானவை என்று அவர்கள் கூறுகிறார்கள் என்று இதற்கு பொருளல்ல. கலீஃபா அல்லாஹ்வினால் நியமனம் செய்யப்படுகிறார் என்பதால் அவர் மாசற்றவராக (மஃஸும்) இருக்கவேண்டும் என்ற இத்னா அஷரி அஷ்ஷியாவின் கண்ணோட்டத்தை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதற்காக அது சட்டரீதியான கண்ணோட்டம் என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா?!
இப்னு கல்துன்(ரஹ்) கூறுவதாவது :
     ‘இமாம் பதவி என்பது அவசியமான ஒன்றாகும். முஹம்மது(ஸல்) அவர்களுடன் இருந்த மனிதர்களின் ஒருமித்த கருத்தும் அவர்களை பின்தொடர்ந்து வந்த இரண்டாவது தலைமுறை மனிதர்களின் ஒருமித்த கருத்தும் மார்க்க சட்டங்களின் அடிப்படையில் இமாமத் இருக்க வேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. நபி(ஸல்) அவர்களின் மரணத்தின்போது அவர்களை சூழயிருந்த மனிதர்கள் அபூபக்கருக்கு(ரளி) பைஆ கொடுப்பதற்கும் மக்களின் விவகாரங்களை மேற்பார்வையிடும் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பதற்கும் முனைந்தார்கள். அதற்கடுத்து வந்த காலகட்டத்திலும் இவ்வாறே நிகழ்ந்தது. எந்தவொரு காலகட்டத்திலும் குழப்பமான நிலையில் வாழுமாறு மக்கள் விட்டுவிடப்படவில்லை! மக்களின் ஒருமித்த கருத்து அடிப்படையில் நிலைமை இவ்வாறு இருந்துது என்பது இமாம் பதவி அவசியமானது என்பதை நிரூபனம் செய்கிறது’
     ‘இமாமத் அவசியமானது என்பதை அறிவு சுட்டிக்காட்டுகிறது என்றும் இதில் நிலவும் ஒருமித்த கருத்து என்பது அறிவிற்குரிய அங்கீகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே ஏற்படுகிறது என்றும் சிலர் அபிப்ராயம் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது போல, சமூகம் என்ற ரீதியில் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய தேவை மனிதர்களுக்கு இருக்கிறது என்பதும் அவர்கள் தாங்களாகவே வாழ்வதும் நிலைத்திருப்பதும் சாத்தியமற்றது என்பதும் இமாமத்தின் தேவையை அவர்களுக்கு அறிவுரீதியாக உணர்த்துகிறது. மனிதர்கள் சமூகரீதியாக ஒருங்கிணைக் கப்படும்போது ஏற்படும் ஒத்திசைவற்ற பரஸ்ப்பர நோக்கங்களின் காரணமாக அவர்களுக்குள் உடன்பாடற்ற போக்குகள் நிலவுதல் என்பது தவிர்க்கமுடியாத விளைவுகளில் ஒன்றாக இருக்கிறது. அடக்கியாளும் ஆதிக்கத்தை கொண்டுள்ள ஓர்ஆட்சியாளர் இல்லாவிடில் குழப்பம் விளைவதற்கும் பெரும் இடர்பாடுகள் ஏற்படுவதற்கும் வழியேற்படுத்தி இறுதியில் மனித இனத்தை பேரழிவின்பால் இட்டுச்சென்றுவிடும்! எனவே மனித இனத்தை பாதுகாத்தல் என்பதே மார்க்க சட்டங்களின் பிரதானமான நோக்கமாக விளங்குகிறது!’
     ‘அல்லது (கிலாஃபா என்பது அறிவுரீதியான தேவையாக இருக்கிறது என்ற குற்றச் சாட்டிற்கு எதிராக) அறிவின் ஆளுமை அடிப்படையில் அநீதி தடுக்கப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு தனிமனிதரும் அறிந்துகொள்ளுதல் சமூகத்தில் நிலவும் உடன்பாடற்ற சூழலை நீக்குவதற்கு போதுமானது என்று நாம் கூறலாம். இவ்வாறு கூறினால் பிறகு, உடன்பாடற்ற சூழலை நீக்குதல் என்பது ஒருதருணத்தில் மார்க்க சட்டங்களின் மூலமாகவும் மற்றொரு தருணத்தில் இமாம் பதவியின் மூலமாகவும் ஏற்படுகிறது என்ற அவர்களுடைய கூற்று தவறானதாக ஆகிவிடும். அதிகாரமிக்க தலைவர் ஒருவர் இருப்பதின் மூலமாகவும் அல்லது இமாம் பதவியின் மூலமாக ஏற்படுவது போலவே, பரஸ்ப்பர அநீதத்தின் விளைவாக முரண் பாடான நிலையை ஏற்படுத்துவதிலிருந்து மக்கள் விலகியிருப்பதின் மூலமாகவும் உடன்பாடற்ற சூழல் நீக்கப்படலாம். எனவே இந்த கருத்தின் அடிப்படையில் ஏற்படும் அறிவு ரீதியான நிரூபனம் உறுதியான ஒன்றல்ல. (இமாம் பதவி) தேவை என்பது மார்க்க சட்டங்கள் அடிப் படையில் சுட்டிக்காட்டப்படுகிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது, அதாவது நாம் முன்பு குறிப்பிட்டிருப்பதை போல பொதுவாக ஏற்படும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இமாம் பதவி தேவை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது’  (நூல் : அல்முகதிமா, அத்தியாயம் 3)
     இப்னு கல்துனும் மற்ற சில அறிஞர்களும் இமாம் ஒருவர் தேவை என்ற வாஜிபு தொடர்பாக அறிஞர்களின் மாறுபட்ட கண்ணோட்டத்தை குறிப்பிட்டுள்ளார்கள் என்பதற்கு அவர்கள் இந்த கண்ணோட்டத்தை சட்டரீதியானது என்று ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று பொருளல்ல.
இதுபற்றி இப்னு கல்துன்(ரஹ்)ஹ மேலும் கூறியிருப்பதாவது :
     ‘அறிவு ரீதியாகவோ அல்லது மார்க்க சட்டங்கள் ரீதியாகவோ இமாம் பதவி தேவை யில்லை என்று கூறுவதின் மூலமாக சில அறிஞர்கள் விதிவிலக்கான நிலையை மேற்கெண்டு இருக்கிறார்கள்.ஹஹ இத்தகைய நிலையை மேற்கொண்டுள்ளவர்களில் முஃதஸிலா, அல்அஸாம், ஆகிய குழுவினரும், காரிஜாக்களில் சிலரும் மற்றவர்களும் அடங்குவார்கள். இவர்கள் மார்க்க சட்டங்களை கடைபிடித்தல் மட்டுமே போதுமானது என்று கருதுகிறார்கள். முஸ்லிம்கள் நீதியை ஏற்றுக்கொண்டு இறைசட்டங்களை கடைபிடித்து ஒழுகும்போது இமாம் இருப்பது தேவையற்றது என்பதோடு அவருடைய பதவியும் தேவையற்றதாக ஆகிவிடுகிறது என்று இவர்கள் கருதுகிறார்கள். பொதுவான ஒருமித்தகருத்து அபடிப்படையில் (இவ்வாறு வாக்கு வாதம் செய்யும்) இவர்களின் கருத்திற்கு மறுப்பு கூறப்படுகிறது’(நூல் : அல்முகதிமா, அத்தியாயம் 3)
 மேலும் இப்னு கல்துன்(ரஹ்) குறிப்பிட்டிருப்பதாவது :
     ‘இமாமத் அவசியமானது என்பதை அறிவு சுட்டிக்காட்டுகிறது என்றும் இதில் நிலவும் ஒருமித்த கருத்து என்பது அறிவிற்குரிய அங்கீகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே ஏற்படுகிறது என்றும் சிலர் அபிப்ராயம் கூறுகிறார்கள். ஒருமித்த கருத்து என்பதை அவர்கள் மறுஹக்கவில்லை மாறாக அறிவு ரீதியாக அறிந்து கொள்ளப்படுவதற்கு அது இணக்கமாக இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்’
        ‘ஸஹாபாக்கள் மற்றும் தாபியீன்கள் ஆகியவர்களின் ஒருமித்த கருத்து அடிப்படையில் இமாமை நியமனம் செய்வது வாஜிபு என்பதை ஒவ்வொருவரும் அறிந்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்னர் அவர்களின்(ஸல்) தோழர்கள் அபூபக்கரை(ரளி) தங்களின் கலீஃபாவாக நியமனம் செய்வதில் விரைந்து செயல்பட்டார்கள். அதன்பின்னர் ஒவ்வொரு காலகட்டத்திலும் முஸ்லிம்கள் கலீஃபா ஒருவரை பெற்றிருந்தார்களே ஒழிய எந்தவொரு கால கட்டத்திலும் குழப்பான நிலையில் அவர்கள் விட்டுவிடப்படவில்லை. இது இமாம் (கலீஃபா) ஒருவரை நியமிக்கவேண்டியது கட்டாயம் என்பதற்குரிய அறிஞர்களின் ஒருமித்தகருத்து என்றே கருதப்படுகிறது’ (நூல் :  அல்முகதிமா, பக்கம் 210)
 
 
Sources

No comments:

Post a Comment